Monday, June 19, 2017

எஸ்எம்எஸ் மூலம் செல்போன் சார்ஜ்.

  மின்  இணைப்பு  இல்லாத  கிராமங்களில்  செல்போன்  சார்ஜ்  தீர்ந்துவிட்டால், எஸ்எம்எஸ்  மூலம்  இயங்கும்  சூரிய  ஒளியில்  தயாரிக்கப்பட்ட  மின்சாரத்தை  கொண்டு  செல்போனை  சார்ஜ்  செய்யும்  மையங்களை  இங்கிலாந்தைச்  சேர்ந்த  'புபல்லோ  கிரிட்'  நிறுவனம்  வடிவமைத்துள்ளது.
     மின்  இணைப்பு  இல்லாத  கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள  செல்போன்  சார்ஜ்  மையத்தில்  உள்ள  பேட்டரி,  சூரிய  ஒளியில்  இருந்து  மின்சாரம்  தயாரிக்கும்  பேனலுடன்  இணைக்கப்பட்டிருக்கும்.  சூரிய  ஒளியின்  அளவு  மற்றும்  வெப்பத்தின்  அளவை  பொருத்து  உற்பத்தியாகும்  மின்சாரம்,  பேனலுடன்  இணைக்கப்பட்ட  பேட்டரியில்  சேமிக்கப்படும்.  இப்படி  ஒரு  முறை,  பேட்டரியின்  முழு  அளவுக்கு  மின்சாரம்  உற்பத்தி  செய்யப்பட்டு  சேமிக்கப்பட்டால்  அதிலிருந்து  3  நாட்களுக்கு  செல்போன்களை  சார்ஜ்  செய்து  கொள்ள  முடியும்.
     அந்த  பேட்டரியுடன்  செல்போனை  சார்ஜ்  செய்யும்  'சாக்கெட்'  இணைக்கப்பட்டிருக்கும்.  சார்ஜ்  செய்ய  வேண்டிய  செல்போனில்  இருந்து  அந்த  நிறுவனம்  அறிவித்துள்ள  முறையில்  ஒரு  எஸ்எம்எஸ்  அனுப்பினால்,  சாக்கெட்டின்  மேல்புறத்தில்  இருக்கும்  எல்.ஈ.டி. லைட்  எரியும்.  இதையடுத்து  அந்த  சாக்கெட்டில்  நமது  செல்போனை  பொருத்தி  சார்ஜ்  செய்துகொள்ளலாம்.
     சார்ஜ்  செய்வதற்காக  நமது  செல்போனில்  இருந்து  எஸ்எம்எஸ்  அனுப்பியதும்,  ஒரு  குறிப்பிட்ட  தொகை  நமது  போனில்  உள்ள  டாக்  வெல்யூவில்  இருந்து  கட்டணமாக  கழிக்கப்படும்.  ஒரு  போனில்  இருந்து  ஒரு  முறை  எஸ்எம்எஸ்  அனுப்பினால்,  அந்த  போனை  ஒன்றரை  மணி  நேரம்  வரை  சார்ஜ்  செய்து  கொள்ளலாம்.
     செல்போன்  சார்ஜ்  செய்யும்  மையத்தில்  உள்ள  டவரில்   10  சார்ஜ்  பாயின்ட்கள்  பொருத்தப்பட்டிருக்கும்.  அதில்  இரு  நாளைக்கு  30ல்  இருந்து  50  செல்போன்கள்  வரை  சார்ஜ்  செய்யலாம்.
-- தினமலர்  திருச்சி  12-3-2013.        

No comments: