Friday, June 16, 2017

பொருட்களின் விலையை போனில் பார்க்க

 சில  பொருட்களில்  அதன்  விவரங்களை  பார்கோடுகளில்  எழுதியிருப்பார்கள்.  அதை  நாம்  சாதாரணமாக  புரிந்து  கொள்ள  முடியாது.  இதற்கு  தீர்வாக  இருக்கிறது  இந்த  குட்டி  கருவி.  கடைகளில்  பொருட்களை  வாங்குகிறோம்  அல்லது  அந்த  பொருட்களைக்  குறித்த  விவரம்  அறிந்து  கொண்டு  வாங்க  வேண்டும்  என்றால்,  இந்த  கருவியைக்  கொண்டு  பார்  கோடை  ஸ்கேன்  செய்தால்  போதும்.  நமது  ஸ்மார்ட்  போனுடன்  இணைக்கப்பட்டிருப்பதால்  அனைத்து  விவரங்களும்  ஸ்மார்ட்  போனுக்கு  வந்துவிடும்.  பிறகு  தேவையெனில்  வாங்கிக்கொள்ளலாம்.
எக்கோ  ஏடிஎம்
     வங்கி  கணக்கிலிருந்து  பணம்  எடுக்க  ஏடிஎம்  பயன்படுத்துவோம்.  ஆனால்  ஏதாவது  பொருட்களை  விற்று  பணம்  வாங்க  வேண்டும்  என்றால்  வங்கி  அல்லது  அடகு  கடைகள்தான்  நமது  தேர்வாக  இருக்கும்.  ஆனால்  இதற்கும்  ஒரு  இயந்திரம்  வந்துவிட்டது.  கையில்  செல்போன்தான்  இருக்கிறது.  அதை  வைத்து  பணம்  வாங்க  வேண்டும்  என்றால்  இந்த  இயந்திரத்தில்  வைத்துவிட்டால்  போதும்.  இந்த  பொருளுக்கு  இவ்வளவு  கிடைக்கும்  வாங்கிக்  கொள்கிறீர்களா  என  கேட்கிறது.  ஓகே  என்றால்  போனை  எடுத்துக்  கொண்டு  பணம்  கொடுத்துவிடுகிறது.  இனி  பொருட்களை  விற்க  அடகு  கடைக்கு  அலைய  வேண்டிய  தேவையில்லை.
--  - வணிக வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள்,  ஜனவரி  26, 2015.     

No comments: