Monday, June 12, 2017

இது 'கரடி விடுறது' இல்லே !

*   சைபீரியர்கள்  கரடிகளைத்  தங்கள்  முன்னோர்களாக  வணங்குகின்றனர்.
*   பின்லாந்தின்  தேசிய  விலங்கு  கரடி.
*   கருப்புக்   கரடிகள்  அற்புதமாக  மரம்  ஏறும்,  அழகாக  நீச்சலடிக்கும்.
*    கரடிகளுக்கு  மோப்பச்  சக்தி  அதிகம்.  ஒரு  இடத்தில்  மனிதன்  கடந்து  சென்ற  14  மணி  நேரத்துக்குப்  பிறகும்
     கண்டுபிடிக்கும்.  சுமார்  64  கிலோ  மீட்டர்  தூரத்தில்  இருக்கும்  உணவையும்   கரடிகள்  கண்டுபிடித்து  விடும்.
*   குகைகளில்  இருக்கும்போது   கரடிகள்  நீர்  குடிக்காது.  உணவு  உட்கொள்ளாது,  மலம்  மற்றும்  சிறுநீர்  கழிக்காது.
*    கரடிகளின்  பாதம்  மிக  வலுவானது;  எதையும்  எளிதாக  உடைத்து  விடும்.
*    கரடிகள்  வட அமெரிக்கா,  தென் அமெரிக்கா,  ஐரோப்பா  மற்றும்  ஆசியாவில்  காணப்படும்.
*   பத்துக்கும்  மேற்பட்ட  கரடி  இனங்கள்  உண்டு.
-- கல்கி.  10- ஆகஸ்ட்  2014.
-- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன். 

No comments: