Saturday, June 10, 2017

கொடிமரம்

"கோயிலில்  கொடிமரம்  இருப்பதன்  தத்துவம்  என்ன?"
     "ஆலயம்  புருஷாகரம்  என்று  சாஸ்திரம்  கூறுகிறது.  இந்த  வார்த்தையின்  அர்த்தம்  என்னவென்றால்,  ஒரு  மனித  உடலைப்  போன்றதே  ஆலயம்.  கோயிலில்  கருவறை  என்பது  மனிதனின்  தலை  பகுதியைப்  போன்றது.  அதுபோல,  அர்த்தமண்டபம்  மார்புப்  பகுதி.  மார்பின்  இடப்புறம்  இதயம்  துடிப்பதுபோல்  அங்கு  நடராஜர்  பெருமான்  நடமாடிக்கொண்டிருப்பார்.  அதனைத்  தொடர்ந்து  வயிற்றுப்  பகுதியில்  நாடி  எனப்படும்  தொப்புள்  பகுதியாக  இருப்பது  கொடிமரம்.  ராஜகோபுரம்  இறைவன்  திருவடிகளாகும்.  இது  ஆலய  அமைப்பின்படி  கொடிமரம்  நாடி  பிரதேசமாகும்.  பொதுவாக  திருவிழாக்களில்  கொடியேற்றம்  செய்வதற்கும்  பயன்படுகிறது.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத  சிவாச்சாரியார்.  ( அறிவோம்!  தெளிவோம் ! ).
-- தினமலர்  பக்திமலர்.  8-1-2015    

No comments: