Wednesday, May 17, 2017

நீரின் நிழலே ஆகாயம்

   நீருக்கு  நிழல்  இருக்கிறதா?  என்று  கேட்டால், 'இல்லை'  என்றுதான்  சொல்வர்.  ஆனால்,  நீருக்கு  நிழல்  இருக்கிறது.  நிழல்  இல்லை  என்றால்  ஆகாயமே  இல்லை  என்றாகி  விடும்.  நீரின்  நிழக்  அதனுள்ளேயே  அடங்கி  விடுவதால்,  வெளீயில்  தெரிவதில்லை.  சிவனும்  நீரைப்  போல  அருள்  செய்கிறார்.  அவரை  வணங்கும்போது,  ஆன்மாவிற்கு  முக்தி  கிடைக்கிறது.  அது  அவருக்குள்ளேயே  ஒடுங்குகிறது.  இதனை  உனர்த்தும்  விதமாக  சைவ  சித்தாந்தத்தில், 'நீரார்  நிழல்'  என்று  சிவனை  வேண்டி  பாடப்பட்டுள்ளது.
மலர்  வேண்டாம்  மனம்  போதும்!
     சிவப்ருமானுக்கு  பூஜை  செய்ய  புன்னை,  வெள்ளெருக்கு,  செண்பகம்,  நந்தியாவட்டை,  நீலோத்பவம்,  பாதிரி,  அரளி,  செந்தாமரை  ஆகிய  எட்டு  வகையான  மலர்களை  பயன்படுத்தலாம்.  இம்மலர்கள்  'அஷ்ட  புஷ்பங்கள்'  எனப்படுகின்றன.  இவற்றில்  சில  இப்போது  கிடைப்பதில்லை.  இம்மலர்களை  படைத்து  மட்டும்தான்  சிவனை  வழிபட  வேண்டுமென்பதில்லை.  'நமச்சிவாய'  என  அவர்  திருநாமத்தை  உச்சரித்து,  மனம்  என்னும்  பூவால்  வழிபட்டாலே  போதும்.  மலர்களால்  அர்ச்சித்து  வணங்கிய  பலன்  கிடைத்து  விடும்.
--   தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

No comments: