Tuesday, March 28, 2017

கையடக்க ஹெல்மெட்!

 வாகனத்தில்  பூட்டிவிட்டுச்  சென்றாலும்,  வாகனத்தோடு  ஹெல்மெட்டும்  வெயிலில்  காய்ந்தால்,  அதை  உடனே  போட்டுக்  கொண்டு  கிளம்ப  முடியாது.  அதனுள்  எறும்பு  உள்ளிட்டவை  சென்று,  நாம்  தலையில்  மாட்டிக்கொண்டு  செல்லும்போது  தொந்தரவு  தரும்.  இதைப்  போக்கும்  வகையில்  மடக்கி  எடுத்துச்  செல்லக்  கூடிய  ஹெல்மெட்டை  லண்டனைச்  சேர்ந்த  ஜெஃப்  உல்ப்  வடிவமைத்துள்ளார்.  மடக்கி  எடுத்துச்  செல்லும்  வகையிலான  இந்த  ஹெல்மெட்  2.5  அங்குலம்  தடிமந்தான்  இருக்கும்.  புத்தகம்  போல  இதை  கையோடு  எடுத்துச்  செல்ல  முடியும்.  காப்புரிமை  மற்றும்  தரப்  பரிசோதனைக்குப்  பிறகு  இது  சந்தைக்கு  வரும்.  நம்  நாட்டிற்கும்  இது  விரைவிலேயே  வரலாம்.
--   ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.  

No comments: