Sunday, March 19, 2017

தகவல் பலகை

*     மூங்கில்  24  மணிநேரத்தில்  3  அடி  உயரம்  வளரும்.  இவ்வளவு  வேகமான  வளர்ச்சியை  கொண்ட  மரம்  வேறு  எதுவும்  இல்லை.
*     சிவப்பு  நிறத்தின்  அலை  நீளம்  அதிகம்.  இதனால்  இந்த  நிறத்தின்  கதிர்கள்  சிதறாமல்  தொலைதூரம்  செல்லும்.  எனவேதான்
       வாகனங்களின்  பின்புறமும்,  உயர்ந்த  கட்டிடங்களிலும்  சிவப்பு  விளக்குகளை  பொருத்துகின்றனர்.
*உலகில்  முதன்முதலாக  அஞ்சல்தலை  வெளியிட்ட  நாடு  இங்கிலாந்து.  1840ம்  ஆண்டில்  வெளியான  இந்த  அஞ்சல்தலையில்
   அந்த  நாட்டின்  பெயர்  பொறிக்கப்படவில்லை.
*   இந்தியாவின்  முதல்  தொலைக்காட்சி  நிலையம்  1959ம்  ஆண்டு  செப்டம்பர்     15ம்  தேதி  டில்லியில்  தொடங்கப்பட்டது.
    சென்னை  தொலைக்காட்சி  நிலையம்  1975ல்  தொடங்கப்பட்டது.
*   டாக்டர்  பட்டம்  பெறுபவர்கள்  மருத்துவ  தந்தை  'ஹிப்போகிராட்டீஸ்'  பெயரிலும்,  நர்ஸ்  தொழிலுக்கு  வருபவர்கள்  'பிளாரன்ஸ்
    நைட்டிங்கேல்'  பெயரிலும்  சத்தியப்  பிரமாணம்  எடுக்கின்றனர். 

No comments: