Tuesday, February 28, 2017

வெற்றியாளன் யார்?

 குருகுலத்தில்  பாடம்  நடந்து  கொண்டிருந்தது.
     ஒரு  சீடன், "எதிர்ப்பு,  வெறுப்பு,  துன்பம்,  வறுமை,  சபலம்,  தோல்வி,  கோபம்,  சோம்பல்  இவை  ஒரு  மனிதனுக்கு  வந்தால்  இதிலிருந்து  விடுதலை  பெறுவது  எப்படி?"  என்று  குருவிடம்  கேட்டான்.
"எதிர்ப்பு  வந்தால்  அது  உன்  துணிவுக்கு  வந்த  சோதனை.
வெறுப்பு   வந்தால்  அது  உன்  பிடிப்புக்கு  வந்த  சோதனை.
துன்பம்   வந்தால்  அது  உன்  திறமைக்கு  வந்த  சோதனை.
வறுமை   வந்தால்  அது  உன்  நேர்மைக்கு  வந்த  சோதனை.
சபலம்   வந்தால்  அது  உன்  மன  உறுதிக்கு  வந்த  சோதனை.
தோல்வி   வந்தால்  அது  உன்  வலிமைக்கு  வந்த  சோதனை.
கோபம்   வந்தால்  அது  உன்பொறுமைக்கு  வந்த  சோதனை.
சோம்பல்   வந்தால்  அது  உன்  சுறுசுறுப்புக்கு  வந்த  சோதனை.
      மனிதர்களுள்  'வெற்றியாளன்  யார்?'  என்று  கேட்டால்,  இது  போன்ற  வேகத்  தடைகளை  விவேகமென்னும்  விழிப்பு  உணர்வினால்  களைந்து  சாதனை  படைப்பவன்தான்!"  என்றார்  குரு.
      குருவின்  இந்த  விளக்கத்தைக்  கேட்டு  சீடர்கள்  தெளிவுபெற்றனர்.
-- பக்தி  கதைகள்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர்  16-- 31,  2013.     

Monday, February 27, 2017

அறிவியல்

  அறிவியல்  என்பது  ஆழ்ந்த  நுட்பமான  பார்வையில்,  நுண்ணறிவிலோ ( observation )  அல்லது  சோதனையிலோ  (experimental )  விளைவது.  இரண்டில்  எந்த  வடிவில்  அறிவியல்  பெறப்பட்டாலும்,  எப்போது  கணக்கிட்டாலும்,  சோதித்தாலும்  ஒரே  முடிவைத்  தரக்கூடியதாக  ( REPRODUCIBILITY )  இருக்க  வேண்டும்.
     நம்மவரின்  நுண்ணறிவுக்கு  இன்னோர்  உதாரணம்  ராமானுஜனின்  எண்கணித  நுட்பம்.  உலகப்  புகழ்பெற்ற  கணித  மேதை  ஹார்டி,  நோய்வாய்ப்பட்டிருந்த  ராமானுஜனை  மருத்துவமனையில்  சந்தித்தபோது,  'தான்  வந்த  கார்  எண்  1729  அவ்வளவாக  ராசி  இல்லாத  எண்'  எனச்  சொல்ல;  அடுத்த  கணத்தில்,  'No.  It  is  the  smallest  number  expressible  as the  sum  of  two  cubers  in  two  different  ways!'  என  ராமானுஜன்  சொன்னதை,  மாபெரும்  விஞ்ஞானி  ஹார்டி  புரிந்துகொள்ளவே  சில  மணி  நேரங்கள்  ஆனது.  இதற்குக்  காரணம்,  கணித  மேதை  ராமானுஜனின்  அசாத்தியமான  நுண்ணறிவுதான்.
--  மருத்துவர்  கு.சிவராமன்.  (  ஆறாம்  திணை )  தொடரில்.
-- ஆனந்த விகடன்.  14-5-2014. 

Sunday, February 26, 2017

ஸ்மார்ட் வாட்ச்

   மைக்ரோசாஃட்  நிறுவனம்  விரைவிலேயே  ஸ்மார்ட்  வாட்ச்சை  அறிமுகப்படுத்த  உள்ளது.  1.5  அங்குலம்  திரை  கொண்ட  இந்த  கடிகாரத்தின்  பேட்டரிகள்  2  நாட்கள்  வரை  நீடிக்கும்.  இந்த  கடிகாரத்தை  அணிந்திருப்பவரின்  இதயதுடிப்பை  அளவிடும்  தொழில்நுட்பம்  இதில்  உள்ளது.
காபி  விற்கும்  ரோபோ
     ஜப்பானின்  சாஃப்ட்பேங்க்  நிறுவனம்  பெப்பர்  என்ற  பெயரில்  ரோபோவை  உருவாக்கியுள்ளது.  காபி  விற்பனை  மையத்தில்  நிறுத்தப்பட்டுள்ள  இந்த  ரோபோவின்  மார்பில்  உள்ள  தொடு  திரை  கணினியில்  தேவையானதை  பதிவு  செய்தால்  காபி  உங்கள்  கைகளுக்கு  வரும்.
குரல்  கொடுத்தால்  தண்ணீர்  கொதிக்கும்
     குரல்  கொடுத்தால்  போதும்  சமையலறையில்  தண்ணீர்  கொதிக்கும்,  சமையல்  நடக்கும்   இதற்கான  தொழில்நுட்பத்தை  ஆராய்ந்து  வருகிறது  பானசோனிக்.  இந்த  இயந்திரங்களை  குரல்  மூலம்  செயல்படுத்தலாம்.  மேலும்  மேஜிக்  கண்ணாடி  ஒன்றையும்  அறிமுகப்படுத்த  உள்ளது.  இந்த  கண்ணாடி  முன்  நின்றால்  உங்கள்  உடல்நிலை  குறித்த  புள்ளிவிவரங்களை  சேகரித்துக்  கொள்ளும்.  அனிந்திருக்கும்  ஆடை  எந்த  வண்ணத்தில்,  ஒளியில்  எப்படி  இருக்கும்  என்பதையும்  விளக்கும்.  முழுவதும்  குரல்வழியில்  செயல்படும்  சமையலறையை  உருவாக்கும்  ஆராய்ச்சியில்  இந்நிறுவனம்  ஈடுப்பட்டுள்ளது.    
-- வணிக  வீதி.
-- 'தி இந்து'  நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர் 15,2014.

Saturday, February 25, 2017

வலிமையான லேப்டாப்!

    கம்ப்யூட்டர்,  செல்போன்,  ஸ்மார்ட்போன்  உள்ளிட்டவற்றின்  செயல்பாடுகளுக்கு  அதிகபட்ச  உத்தரவாதம்  யாரும்  தர  முடியாது.  இருந்தாலும்  நிறுவனங்கள்  அதிகபட்சம்  ஓராண்டு  உத்தரவாதம்  அளிக்கின்றன.  கம்ப்யூட்டர்  தயாரிப்பில்  ஈடுபட்டுள்ள  டெல்  நிறுவனம்  மிகவும்  வலிமையான  லேப்டாப்பை  உருவாக்கியுள்ளது.
     எத்தகைய  சூழலிலும்  செயல்படக்கூடிய  வகையில்  இது  உருவாக்கப்பட்டுள்ளது.  தொடர்  மழை,  பாலைவனப்  புழுதி  போன்ற  சூழலிலும்  இது  பாதிக்கப்படாமல்  செயல்படும்.  நீர்  புகா  வண்ணம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதேபோல  தூசி  உள்ளிட்டவற்றாலும்  பாதிக்கப்படாது.
     எண்ணெய்,  எரிவாயு  உள்ளிட்ட  பகுதிகளில்  பணியாற்றுவோர்  மற்றும்  சுரங்கங்களில்  பணி  புரிவோருக்கு  ஏற்றதாக  இது  இருக்குமாம்.  ராணுவத்தினருக்கு  மிகவும்  ஏற்றது.
     இதன்  வலிமையை  தாங்கும்  திறனை  சோதிக்க  இதன்  மீது  ஒருவர்  ஏறி  நின்று  விளம்பரப்படுத்தியுள்ளார்.  இதன்  விலை  ரூ. 2.39  லட்சம்  முதல்.
     60  கிலோ  எடையைத்  தாங்கும்  என்பதால்  இதன்மீது  60  கிலோ  எடைக்கல்லை  தூக்கிப்  போட்டு  இதன்  தாங்கும்  திறனை  சோதித்துப்  பார்க்கக்  கூடாது.  கடினமான  சூழலிலும்  இது  செயலாற்றும்  என்பதை  இந்நிறுவனம்  நிரூபித்துள்ளது.
-- தொழில் நுட்பம்.   வணிக  வீதி.
-- 'தி இந்து'  நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர் 15,2014.  

Friday, February 24, 2017

f இணைய வெளியிடையே t

*   அரசு  அலுவலகத்தில்  இருக்க  வேண்டிய  வாசகம்  அரசு  பேருந்தில்  இருக்கிறது  --  கைகளை  நீட்டாதீர்.
    raavan181 @ twitter.com
*   மரத்தை  வெட்ட  ஆரம்பித்தவன்  இடையிடையே  அம்மரநிழலில்  ஓய்வெடுத்துக்கொண்டான்.  மரம்
    மறுப்பேதும்சொல்லாமல் முடிந்தவரை  அசைந்து  காற்றளித்துக்  களித்தது,
   megalapugazh@twitter.com
*  மல்டிபிள்  பெர்சனாலிட்டி  என்பது,  நாம்  வேகமாக  போகும்போது  சாலையை  கடப்பவனை  திட்டுவதும்,  நாம்  சாலையை
   கடக்கும்போது  வேகமாக  செல்பவனை  திடுவதுமேயாகும்!
    indrajithguru@twitter.com
*   அள்ள  முடியாத  அளவுக்கு  சோகங்கள்  குவிந்து  கிடக்கின்றன.  அதைவிடுத்து  சிதறிக்கிடக்கும்  சந்தோஷங்களை  மட்டும்
    பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்.
    araikurai@twitter.com
*   சமையக்கட்டுல  எங்கம்மா  இன்னும்  பிரிட்ஜுக்குள்ள  வைக்காதது  அரிசி  மூட்டைய  மட்டுந்தான்.
    navin iv@twitter.com
*   சில  புத்தகங்கள்  அறிவை  தருகின்றன.  சில  புத்தகங்கள்  தூக்கத்தை  தருகின்றன.  சில  பல  புத்தகங்கள்  பேரீச்சம்பழத்தை
    தருகின்றன.
    Mr vandu@twitter.com
--  சண்டே  ஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி.  21-12- 2014.  

Thursday, February 23, 2017

ராகங்கள்

ராகங்களின்  பிரிஸ்கிரிப்ஷன்  டயரி...
நீலாம்பரி  ராகம்  --  கேட்டாலே  தூக்கம்  வருடும்.
ஸ்ரீராகம்  --  ஜீரணத்துக்கு  பலன்  உண்டு.
சாமா  ராகம்  --  மனக்கலக்கம்  போகும்.  அமைதி  கிடைக்கும்.
பூபாளம்  --  விடியற்காலையில்  கேட்டால்  உற்சாகம்.
அஸாவேரி  --  தலைவலி  பறந்துவிடுமாம்.
கரகரப்பிரியா  --  பசியை  மறக்குமாம்.
பைரவி  --  காச  நோயை  தீர்க்குமாம்.
தோடி  --  ஆஸ்துமா,  உயர்  ரத்த  அழுத்தத்தை  குணப்படுத்துமாம்.
சாரங்கா  --  பித்தக்  கொதிப்பை  தணிக்குமாம்.
ஆனந்த  பைரவி,  ஸ்ரீரஞ்சனி,  கமாஸ்,  காபி,  நாயகி,  சஹானா,  நீலாம்பரி  முதலிய   ராகங்களைத்  தொடர்ந்து  கேட்டு  வந்தால்,  மனதை  வாட்டும்  பல  இன்னல்களின்  பளு  வெகுவாகக்  குறையுமாம்.
-- சண்டே  ஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி.  21-12- 2014. 

Wednesday, February 22, 2017

'அமிழ்தம்'

உப்பு  தமிழர்  வாழ்க்கையில்  இன்றியமையாத  ஒரு  உணவுப்  பொருளாக  இருந்துள்ளது.  பொழுது  சாய்ந்த  பின்னர்  உப்பைக்  கடனாகக்  கேட்கின்ற,  கொடுக்கின்ற  வழக்கமில்லை  என்பதை  இன்றைக்கும்  கிராமத்தில்  காணமுடியும்.  பெண்  பிள்ளைகளுக்கு  வரதட்சணையாகக்  கொடுக்கும்  பொருளிலும்  உப்பு  சேர்க்கப்படுவதில்லை.  மனித  வாழ்க்கையின்  மையப்  பொருளாகக்  கருதியதன்  காரணத்தால்தான்  உப்பைச்  சங்கப்  புலவர்கள்  'அமிழ்தம்'  என்று  அழைத்து  மகிழ்ந்துள்ளனர்.  நல்லத்துவனார்  'கடல்விளை  அமுதம்'  என்றும்,  சேந்தன் பூதனார்  'வெண்கல்  அமிழ்தம்'  என்றும்  உப்பைப்  புகழ்ந்து  பாடியுள்ளனர்.  உப்பை  அமிழ்தமாகத்  தமிழர்கள்  கருதியுள்ளனர்.
-- முனைவர்  இரா. வெங்கடேசன்.  ( கருத்துப் பேழை)
-- 'தி இந்து' நாளிதழ்.  ஞாயிறு,  டிசம்பர்  14, 2014.    

Tuesday, February 21, 2017

மெட்ராஸ் ஐ ! தடுப்பது எப்படி ?

*   பாதித்த  கண்ணை  கசக்கக்  கூடாது.
*   கறுப்புக்  கண்ணாடி  அணியலாம்.
*   மருத்துவர்  ஆலோசனைப்படி  'ஐ  டிராப்'  போடலாம்.  முடிந்தவரை  கண்களுக்கு  ஓய்வு  கொடுக்கலாம்.
*   அவ்வப்போது  குளிர்ந்த  நீரில்  கைகளைக்  கழுவி  சுத்தமாக  வைத்திருப்பது  அவசியம்.
*   பாதித்தவர்  பயன்படுத்தும்  கர்ச்சிப்,  தலையணை  பயன்படுத்தக்  கூடாது.
*   நோய்  பாதிக்காத  கண்ணில்  மருந்து  அல்லது  'ஐ டிராப்'  விட  வேண்டாம்.
ஷாம்பூ  ஜாக்கிரதை!
     கண்  அழற்சி  என்பது  இன்ஃபெக் ஷன்,  அலர்ஜி,  கெமிக்கல்  என  மூன்று  வகைகளில்  வரும்.  வைரஸ்,  பாக்டீரியா  மூலம்  பரவுவது  முதல்  வகை.  அதாவது  'இன்ஃபெக்ட்டிவ்,'  ஷாம்பூ,  நீச்சல்  குளத்தில்  இருக்கும்  குளோரின்,  புகை  உள்ளிட்டவற்றால்  ஏற்படுவது  அலர்ஜி.  மூன்றாவது  வகை  தூசு,  துரும்பு,  தாவரங்களின்  மகரந்தங்களால்  உண்டாவது.
--  எஸ்.அன்வர்.
-- குமுதம்  வார இதழ்.  5-11-2014.  
--  இதழ் உதவி :  P. சம்பத் ஐயர்.  திருநள்ளாறு.  

Monday, February 20, 2017

மெட்ராஸ் ஐ !

மெட்ராஸ் ஐ  தானாகவே  குணமாகிவிடும்!
     மெட்ராஸ் ஐ !  மருத்துவ  ரீதியில், கொஞ்சம்  சுருக்கமாக  கண்  அழற்சி.
     கோடை  முடிந்து  மழை  சீசன்  தொடங்கியவுடன் 'மெட்ராஸ் ஐ'  ஆட்டம்  ஆரம்பமாகிவிடும்.
     அதற்கு  'அடினோ  வைரஸ்'  என்கிற  நுண்ணியிரிதான்  அடிப்படைக்  காரணம்.
     1970களில்  நடந்த  வங்கதேசப்  போரின்  போது  அந்நாட்டு  வீரர்களுக்கு  ஏற்பட்ட  இந்த  பாதிப்பு  சென்னை  உட்பட  பல்வேறு  இந்திய  நகரங்களுக்குப்  பரவியது.  திடீரென  கண்களில்  உண்டான  இந்தப்  புதிய  வகை  நோய்க்கு  என்ன  பெயர்  என்று  தெரியாததால்  காலப்போக்கில்  'மெட்ராஸ் ஐ (  சென்னை  கண் )  என்றே  அழைக்கப்பட்டதாகச்  சொல்கிறது  வரலாற்றுச்  சான்று.
    மெட்ராஸ் ஐ  வயது  வித்தியாசமில்லாமல்  அனைவரையும்  படுத்தி  எடுப்பது  சோகத்தின்  உச்சம்.  உடனே  கண்  சிவந்துவிடும்.  வலி  இருக்கும்.  இரவில்  படுக்கப்  போனவர்  காலையில்  எழும்போது  கண்களின்  ஓரத்தில்  வெள்ளைத்  திரவம்  போல்  திரண்டு  நிற்கும்.  கண்களைத்  திறக்க  முடியாமல்  சிரமப்படுவார்.
     தொடர்ந்து  அன்றாட  வாழ்க்கையில்  ஒருவித  அசதியை  ஏற்படுத்தும்  இந்த  பாதிப்பு.  பொதுவாக  'மெட்ராஸ் ஐ   வருவது  வாடிக்கை.  இரண்டு  நிலைகளில்  இந்நோய்க்கான  அறிகுறிகள்  தோன்றும்.  முதல்  வகையில்  கண்  சிவக்கும்.  வெளிச்சத்தைப்  பார்த்தால்  கண்  கூசும்.  பார்வை  மங்கும்.  கண்ணை  மட்டுமல்லாமல்  உடலின்  மற்ற  உறுப்புகளில்  உண்டாகும்  பாதிப்புகளை  வைத்தும்  அறிகுறியைக்  கண்டுபிடிக்கலாம்.  அதன்படி , தொண்டை  கரகரப்பாக  இருக்கும்.  கழுத்தில்  நெரி  கட்டும்.  சிலருக்கு  தொண்டையில்  புண்  வரும்.  இமைகளில்  வீக்கம்  உண்டாகி  கண்ணைத்  திறக்க  குடியாமல்  போகலாம்.
     இரண்டாவது  வகையில்  வைரஸுடன்  பாக்டீரியா  நுண்கிருமியும்  சேர்ந்து  கொள்ளும்.  நோய்  எதிர்ப்பு  சக்தி  குறைவாக  இருப்பவர்களுக்கு  இந்த  வகை  ஆபத்து  அதிகம்.  கண்களில்  இருக்கும்  ரத்த  நாளங்களில்  பாதிப்பு  உண்டாவது  தவிர்க்க  முடியாது.
-- எஸ்.அன்வர்.
-- குமுதம்  வார இதழ்.  5-11-2014.
-- இதழ் உதவி :  P. சம்பத் ஐயர்.  திருநள்ளாறு.    

Sunday, February 19, 2017

Vape 2014.

  2014ம்  ஆண்டின்  சிறந்த  சொல்லாக  வேப்  எனும்  வார்த்தையை  ஆக்ஸ்போர்ட்  அகராதி  அங்கீகரித்துள்ளது.    ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகத்தால்  நிர்வகிக்கப்படும்    ஆக்ஸ்போர்டு  அகராதி  ஆண்டுதோறும்  புதிய  வார்த்தைகளை  சேர்த்து  வருவதுடன்  இவற்றில்  முன்னிலை  பெறும்  வார்த்தைக்கு  ஆண்டின்  சிறந்த  சொல்லாக  மகுடமும்  சூட்டுகிறது.  இந்த  ஆண்டு  மொத்தம்  900 -க்கும்  மேற்பட்ட  புதிய  வார்த்தைகள்  அகராதியில்  இடம்பெற்றுள்ளன.  இவற்றில்  வேப்  எனும்  வார்த்தைக்கு  இ- சிகரெட்டால்  உண்டாகும்  புகையை  நுகர்வது  என்று  ஆக்ஸ்போர்டு  அகராதி  பொருள்  தருகிறது.
     புகைத்தல்  எவ்விதத்திலும்  தீமையானது.  புகைத்தலின்  பரிணாம  வளர்ச்சியே  வேப்.  இது  இந்த  ஆண்டின்  சிறந்த  சொல்லாகி  உள்ளது.
     Vape
     Word  of  the  year  2014.
--   தினமலர்  சிறுவர் மலர்.  டிசம்பர்  19, 2014. 

Saturday, February 18, 2017

தேசிய ஆற்றல்

தேசிய  ஆற்றல்  சேமிப்பு  தினம்.
     நாம்  அன்றாடம்  பயன்படுத்தும்  பல  பொருட்கள்  ஆற்றல்  சக்தியினால்  இயங்குகிறது.  ஆற்றல்  பெரும்பாலும்  புதுப்பிக்க  இயலாதவையாகவே  உள்ளன.  நிலக்கரி,  கச்சா எண்ணெய்,  மின்சாரம்  போன்ற  ஆற்றல்  சக்திகளும்  குறைந்து  கொண்டே  வருகின்றன.  எதிர்காலத்தில்  ஆற்றல்  தட்டுப்பாடு  ஏற்படும்  என  ஆராய்ச்சியாளர்கள்  எச்சரிக்கின்றனர்.  ஆற்றல்  சக்திகளை  சிக்கனமாக  பயன்படுத்த  வலியுறுத்தியும்,  விழிப்புணர்வு  ஏற்படுத்தவும்  டிசம்பர்  14ம்  தேதி  தேசிய  ஆற்றல்  சேமிப்பு  தினம்  கடைபிடிக்கப்படுகிறது.
*   மின்சாரத்தை  அவசியத்துக்கு  மட்டுமே  பயன்படுத்த  வேண்டும்.
*   சூரியசக்தி  மின்சாரம்  முக்கியப்  பங்கு  வகிக்கும்.
*   வாகனத்தை  தேவைக்கு  மட்டுமே  பயன்படுத்த  வேண்டும்.
*   சமையல்  எரிவாயு  சிக்கனம்  அவசியம்  வேண்டும்.
-- தினமலர்  சிறுவர் மலர்.  டிசம்பர்  12, 2014. 

Friday, February 17, 2017

சூரியன்

    பூமிப்  பந்தின்  வடக்கு  பகுதிக்கு  அருகேயுள்ள  பகுதிகளில்  டிசம்பர்  மாத  நடுப்பகுதி  வரை,  தினசரி  சூரியன்  சீக்கிரம்  மறைந்துவிடும்.  வழக்கமாக,  டிச . 21 -ம்  தேதிக்குப்  பிறகே  சூரியன்  அதிக  நேரம்  தெரியத்தொடங்கும்.  அதனால்,  அன்றைக்குச்  சூரியன்  மறுபிறப்பு  எடுப்பதாக  அந்தக்  காலத்தில்  நம்பப்பட்டது.
     டிசம்பர் 21-ம்  தேதிக்கு  மேலும்  சில  சிறப்புகள்  உண்டு.    பூமிப்  பந்தின்  வடக்கு  நாடுகளில்  ஆண்டின்  குறுகிய  பகல் -  நீண்ட  இரவு  அன்றைக்குத்தான்  வருகிறது.  ஆங்கிலத்தில்  இதன் பெயர் Winter Solstice.  தமிழில்  மகராயனம்.   வடக்கு  நாடுகளில்  இது  கடும்  குளிர்காலத்தின்  தொடக்கம்.  அதனால்  குளிர்கால  -  கிறிஸ்துமஸ்  விடுமுறைக்  காலம்  விடப்படுகிறது.
     மகரயானம் நீண்ட  காலமாக  யூல் ( Yule - juul )  என்ற  பெயரில்  கொண்டாடப்பட்டு  வந்திருக்கிறது.
-- ஆதி.  மாயாபஜார் .
--   'தி இந்து' நாளிதழ். புதன்,  டிசம்பர் 17, 2014.  

Thursday, February 16, 2017

Google

தேவையற்ற  கோடுகளைத்  தவிர்க்க.
     வேர்ட்  தொகுப்பில்  தாமாகவே  இயங்கும்  பார்மட்  சம்பந்தமான  பல  செயல்பாடுகள்  உள்ளன.  இதில்  நாம்  அடிக்கடி  சந்திப்பது  படுக்கைக்  கோடு  அமைவது  தான்.  அதாவது  ஹைபன்  அல்லது  அடிக்கோடு  அல்லது  சிறிய  வளைவு  கோடு  அமைக்கும்  முயற்சியில்  ஈடுபட்டால்  உடனே  வேர்ட்  அதை  அந்த  அளவிற்கான  படுக்கைக்கோடாக  மாற்றிவிடும்.  
     இது  நமக்கு  வசதி  என்றாலும்  இதை  நீக்குவது  எளிதல்ல.  ஏனென்றால்  இது  வேர்ட்  ஏற்படுத்திய  பார்டர்  லைனாகும்.
     இப்போது  பயன்படுத்தப்படும்  வேர்ட்  தொகுப்புகளில்  இதற்கு  ஒரு  வழி  தரப்பட்டுள்ளது.  எந்த  கோட்டை  அழிக்க  வேண்டுமோ  அந்த கோட்டின்  தொடக்கத்திற்குச்  கர்சரை  கொண்டு  செல்லவும்.  பின் Format மெனு  சென்று  Borders  and  Shading  என்ற  பிரிவைத்  தேர்ந்தெடுத்து, அதில்  உள்ள  None  பிரிவைக்  கிளிக்  செய்யவும்.
     இந்த  பிரச்னை  தொடர்ந்து  வராமல்  இருக்க  Tools  மெனுவிற்கு  செல்லுங்கள்.  அதில்  Auto  Correct  Options  என்ற  பிரிவைத்  தேர்ந்தெடுங்கள்.  பின்  அதில்  Auto  Format  As  You  Type  என்ற  டேபிற்குச்  சென்று  Apply  as  you  type  என்ற  இடத்தைத்  தேடிக்  கண்டுபிடித்து, அதில்  Border  Lines  என்ற  இடத்திற்கு  எதிரே  உள்ள  டிக்  அடையாளத்தை  எடுத்து  விட்டு  அனைத்திற்கும்  ஓகே  டிக்  செய்து  மூடுங்கள்.
-- தினமலர்.  திங்கள்.  16-12-2014 . 

Wednesday, February 15, 2017

மாணவர்களுக்கு..

மாணவர்களுக்கான  வலைத்  தளங்கள்.
1.   ஹாப்.காம் ( half.com ).  இது  புகழ்பெற்ற  ஈபே  தளத்தின்  சேவை.  ஈபே  தளத்தின்  மூலம்  உபயோகித்த  பொருட்களை
      வாங்கவோ,  விற்கவோ  முடியும்.  அது  போல,  இந்தத்  தளம்  மானவர்கள்  தாங்களோ  அல்லது  மற்றவர்களோ
      உபயோகித்த  பாடப்  புத்தகத்தைக்  குறந்த  விலைக்கு  வாங்கவோ,  விற்கவோ  முடியும்.
2.   கூபெர்ஸ்.காம் ( Koofers.com ).  இத்தளத்தில்  மாணவர்கள்  ஆன்  லைனிலோ  தங்கள்  திறங்களைப்  பரிசோதித்துக்
      கொள்ள  எளிய  தேர்வுகளும்  உள்ளன.  போட்டித்  தேர்வுகளுக்குச்  செல்பவர்களுக்கு  இது  வரப்பிரசாதம்.
3.   ஆடிபிள்.காம் ( audible.com).  மாணவர்கள்  புத்தகங்களைக்  கையில்  தூக்கிச்  செல்லும்  சிரமத்தை  தவிர்க்கும்  தளம்.
      அமேசான்  தளத்தில்  இருந்து  வரும்  சேவை  இது.  இலவசமாக  30  நாட்களுக்கு  நமக்கு  வேண்டும்  புத்தகத்தைப்
      பதிவிறக்கம் செய்து  பார்க்கலாம்.  பின்  தேவைப்பட்டால்  பணம்  செலுத்தி  உபயோகிக்கலாம்.
4.   க்விஸ்லட் . காம் (  quizlet.com ) --  இத்தளம்  ஆன்லைனில்  க்விஸ்  பயிற்சி  செய்வதற்கு  ஏற்ற  தளம்.  நாம்  விரும்பும்
      பாடத்தில்,  க்விஸ்  பயிற்சி  செய்யலாம்.
-- எம்.விக்னேஷ்,  மதுரை.  ( வாசகர் பக்கம் ).  வெற்றிக்கொடி .
--  'தி இந்து' நாளிதழ். செவ்வாய்,  டிசம்பர் 16, 2014. 

Tuesday, February 14, 2017

வினா - விடை!

*   "தமிழக  முன்னாள்  முதல்வர்  கருணாநிதி,  இந்நாள்  முதல்வர்  ஜெயலலிதா  வயது  என்ன?"
    --" கருணாநிதியின்  வயது 90...  ஜெயலலிதாவின்  வயது  66".
*   "நாடாளுமன்றத்  தேர்தலில்  வாக்களிக்க  வரிசையில்  நிற்காமல்  நேரடியாக  வாக்குப்பதிவு  மையத்துக்குள்  செல்ல
     முயன்று,  வரிசையில்  நின்ற  இளஞர்  ஒருவரால்  தடுத்து  நிறுத்தப்பட்டு  வரிசையில்  சென்று  நின்ற  அரசியல்  பிரபலம்
      யார்?"
    --"அரசியல்  பிரபலம்  சிரஞ்சீவி.  அவரை வரிசையில்  நிற்கச்  சொன்னவர்  ராஜா  கார்த்தி  என்கிற  லண்டனில்  வசிக்கும்
      இந்தியர்."
*   "தமிழக  அரசின்  தலைமைக்  கருவூலம்  எங்கு  செயல்படுகிறது?"
     --"பனகல்  மாளிகை,  சைதாப்பேட்டை!"
*   "நோக்கியா  நிறுவனத்தின்  புதிய  சி.இ.ஓ -ஆக  நியமிக்கப்பட்டிருக்கும்  இந்தியரின்  பெயர்  என்ன?"
    --ராஜிவ்  சூரி.  நோக்கியா  நிறுவனத்தை  வாங்கியிருக்கும்  மைக்க்ரோசாஃட்  நிற்வாகம்.  நிறுவனத்தின் நல்லெண்ணத்தைத்
      தக்கவைக்க  இந்த நடவடிக்கையை  எடுத்ஹுள்ளது!"
-- -ஆனந்த விகடன்.  14-5-2014.  

Monday, February 13, 2017

ஜோக்ஸ் !

*  " பேரீச்சம்  பழத்திலே  என்ன  சத்தி  இருக்கு?
    "இரும்புச்  சத்து!"
    " ஓ... அதுதான்  இரும்பு  சாமனை  எடைக்குப்  போட்டா  காசுக்குப்  பதிலா  பேரீச்சம்பழம்  தர்றாங்களா!"
*   "சாப்பாட்டுக்கு  முன்னாடி  சாப்பிட  வேண்டிய  மருந்தை,  சாப்பாட்டுக்குப்  பின்னாடி  சாப்பிட்டுட்டேன்..."
     "அடடா... அப்புறம்?"
     "மறுபடியும்  ஒரு  முறை  சாப்பிட  வேண்டியதா  ஆயிடுச்சு!"
*    "யார்  பேருக்கு  அர்ச்சனை  பண்ணணும்?"
     "என்  மனைவி  பெயருகு... நீங்களாவது  பண்ணுங்க!"
*    "நீதிமன்றத்துல  இருந்து  வெளியே  வந்த  தலைவர்  ஒரு  மாதிரியா  இருக்காரே  ஏன்?"
     "செய்தீர்களா...?  ஊழல்  செய்தீர்கலா...?னு  நீதிபதி  கேட்டாராம்!"
*    "உங்களை  ஜெயிக்கவெச்ச  தொகுதி  மக்களுக்கு  நீங்க  என்ன  சொல்ல  விரும்புறீங்க?"
      "பை...பை...ஸீ  யூ...!"
--ஆனந்த விகடன்.  14-5-2014.  

Sunday, February 12, 2017

அருந்ததி

மணமக்கள்  அருந்ததி  பார்ப்பதின்  நோக்கம்  என்ன?
     வசிஷ்டரின்  தர்ம  பத்தினி  அருந்ததி.  மனைவி  என்ற  சொல்லுக்கு  இலக்கணமாகத்  திகழ்ந்தவர்.  வசிஷ்டர்  மனதில்  நினைப்பதை  அருந்ததி  செயலில்  காட்டுவர்.  நீண்ட  வம்ச  விருத்தி  உடையவர்.  பராசர  முனிவருக்குப்  பாட்டி.  வியாச  முனிவருக்குக்  கொள்ளூப்பாட்டி  என்றால்  பார்த்துக்  கொள்ளுங்களேன்.  இவரது  ஒழுக்கத்தின்  மாண்பினைக்  கண்டு  என்றும்  தீர்க்க  சுமங்களியாக  இருக்கும்  பாக்கியத்தைப்  பெற்று  நட்சத்திரமாக  இவர் ஒளி  வீசுபவர்.  அருந்ததி  போல்  வாழ  வேண்டும்.  பிள்ளைப்  பேறு  பெற  வேண்டும்.  தீர்க்கசுமங்கலி  பாக்கியம்  பெற  வேண்டும்  என்ற  அடிப்படையில்  மணமக்கள்  இம்மாதரசியை  கண்டு  வணங்கி ஆசி  பெறுதல்  அவசியமான  ஒரு  நிகழ்ச்சியாகும்.
--  (  அறிவோம் !  தெளிவோம் ! )  மயிலாடுதுறை  ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் பக்திமலர்.  டிசம்பர் 11, 2014.      

Saturday, February 11, 2017

ஸ்மார்ட் போன்கள்

இரவில் ஸ்மார்ட்  போன்களை அனைதுவிட்டுப்  படுங்கள்
*  அணைத்துக்கொண்டு  அல்ல!  *
     இரவா,  பகலா  என்று  அனிச்சையாக  நாம்  உணர்வதில்  வெளிச்சத்தின்  பங்கு  முக்கியமானது.  பொதுவாகவே,  மாலை  நேரம்  ஆகஆக  புறச்சூழலில்  சிவப்பு  நிறம்  அதிகரிக்கிறது.  கண்ணின்  ஆழப்பகுதியில்  இருக்கும்  செல்களில்  உள்ள  மெலனாப்சின்  என்ற  புரோட்டீன்  மீது  இந்த சிவப்பு  நிறம்  விழும்போது,  'பொழுது  போய்விட்டது.  படுக்கப்  போ'       என்று  அந்த  செல்கள்,  மூளைக்கு  உத்தரவிடுகின்றன.  ஆக,  இரவு  நேரம்  என்றால் கண்ணில்  சிவப்பு  நிற  ஒளிதான்  படவேண்டும்.
     இந்த  லாஜிக்கை  ஸ்மார்ட்போன்கள்,  டேப்லட்கள்  குளறுபடி  செய்கின்றன.  அவற்றில்  இருந்து  வெளியேறும்  நீல  நிற  ஒளியானது  தொடர்ந்து  கண்ணில்  பட்டுக்கொண்டே  இருந்தால்  'இன்னும்  இரவு  நேரம்  வரவில்லை'  என்ற  தவறான  தகவலைத்தான்  கண்  செல்கள்  மூளைக்குக்  கடத்தும்.  ஏனென்றால், நீலநிறம்  என்பது  அதிகாலை  நேரத்துக்கானது.  'தூங்கியது  போதும்'  என்று  படுக்கையில்  இருந்து  நம்மை  எழுப்பிவிடுவதற்கானது.  எனவே,  தொந்தரவு  இல்லாத  ஆழ்ந்த  உறக்கம்  கிடைக்க  வேண்டும்  என்றால்  ஸ்மார்ட்போன்,  டேப்லட்களை  அணைத்துவிட்டுப்  படுங்கள்.  இல்லாவிட்டால்  கண்ணில்  படாத  வகையில்  தூர  வைத்துவிட்டாவது  படுங்கள்.
--ஊர் வலம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், மே 21,  2014.   

Friday, February 10, 2017

பஞ்ச தந்திரங்கள்

பஞ்ச  புராணம் :  தேவாரம்,  திருவாசகம்,  திரு விசைப்பா,  திருப்பல்லாண்டு,  பெரியபுராணம்.
பஞ்ச  கங்கை :  ரத்ன கங்கை,  தேவ கங்கை,  கயிலாய கங்கை,  உத்ர கங்கை,  பிரம்ம கங்கை.
பஞ்ச  ரிஷிகள் :  அகத்தியர்,  புலஸ்தியர்,  துர்வாசர்,  ததீசி,  வசிஷ்டர்.
பஞ்ச  குமாரர்கள் :  விநாயகர்,  முருகர்,  வீரபத்திரர்,  பைரவர்,  சாஸ்தா.
பஞ்ச  நந்திகள் :  போக நந்தி,  வேத நந்தி,  ஆத்ம நந்தி,  மகா நந்தி,  தர்ம நந்தி.
பஞ்ச  மூர்த்திகள் :  விநாயகர்,  முருகர்,  சிவன்,  அம்பாள்,  சண்டிகேசுவரர்.
பஞ்சாபிஷேகம் :  வில்வ இலை கலந்த நீர்,  ரத்தினங்கள் இடப்பட்ட நீர்,  பச்சைகற்பூரம், குங்குமப்பூ, கிராம்பு, விளாமிச்சை வேர்
                               ஆகிய வாசனை பொருட்கள் கலந்த தோதகம்,  தர்ப்பைப்புல் இடப்பட்ட நீர்,  பழச்சாறு கலந்த நீர்.
பஞ்ச  பல்லவம் :  அரசு,  அத்தி,  வில்வம்,  மா,  நெல்லி.
பஞ்ச  இலைகள் :  வில்வம்,  நொச்சி,  விளா,  மாவிலங்கு,  கிளுவை.
பஞ்ச   உற்சவம் :  நித்திய உற்சவம்,  வார உற்சவம்,  பட்ச உற்சவம் ( மாதம் இரு முறை ),  மாதாந்திர உற்சவம்,  வருடாந்திர
                               உற்சவம்.
பஞ்ச  பருவ உற்சவம் :  அமாவாசை,  பவுர்ணமி,  தேய்பிறை அஷ்டமி,  தேய்பிறை சதுர்த்தி,  மாதப் பிறப்பு.
பஞ்ச  பூதங்கள் :  நிலம்,  நீர்,  நெருப்பு,  காற்று,  ஆகாயம்.
பஞ்ச  சபைகள் :  ரத்தின சபை,  கனக சபை,  வெள்ளி சபை,  தாமிர சபை,  சித்திர சபை.
பஞ்ச  ஆரண்யம் :உஷக் காலம்,  கால சந்தி,  உச்சிக் காலம்,  சாயரட்சை,  அர்த்த ஜாமம்.
பஞ்ச  சிவனின் சிரசு :  தத்புருஷம்,  அகோரம்,  ஸத்யோஜாதம்,  வாமதேவம்,  ஈசானம்.
பஞ்ச  மாலகள் :  இண்டை,  தொடை,  தொங்கல்,  கண்ணி,  தாமம்.
பஞ்சாங்கம் :  திதி,  வாரம்,  நட்சத்திரம்,  யோகம்,  கரணம்.
பஞ்சாம யக்ஞம் :  பிரம்ம  யக்ஞம் ,  பிதுர்  யக்ஞம்,  தேவ  யக்ஞம்,  பூத  யக்ஞம் ,  மானுஷ  யக்ஞம் .
பஞ்ச  ரத்தினங்கள் :  வைரம்,  முத்து,  மாணிக்கம்,  நீலம்,  மரகதம்.
பஞ்ச தந்திரங்கள் :  மித்திர பேதம்,  சுகிர் லாபம்,  சந்திவிக்கிரகம்,  லப்தகானி,  அசம்ரேசிய காரித்வலம்.
-- தினமலர் பக்திமலர்.  டிசம்பர் 11, 2014.   

Thursday, February 9, 2017

தள்ளாமை தவிர்க்கும் வாழையிலை

*   வேப்பிலைக்  கொழுந்தை  அரைத்துத்  தயிருடன்  கலந்து  சாப்பிட்டால்  பருத்தொல்லை  நீங்கும்.
*   காலையில்  சத்துள்ள  உணவும்  இரவில்  அரை  வயிறு  உணவும்  சாப்பிட்டு  வந்தால்  ஆயுள்  அதிகரிக்கும்.
*   வாழையிலையில்  தொடர்ந்து  சாப்பிட்டு  வந்தால்  முதுமை,  தலை  நரைத்தல்,  தள்ளாமை  ஆகியவை  காலம்  தாழ்த்தி வரும்.
 *  வெந்தயத்தை  தினமும்  பச்சையாகச்  சாப்பிட்டு  வந்தால்  வயிற்றிலுள்ள  கிருமிகள்  அழிந்துவிடும்.
*   எண்ணெய்  தேய்த்துக்  குளிக்கும்போது  வெந்நீரில்  சிறிதளவு  வினிகர்  கலந்து  குளித்தால்  தலைமுடி  மிருதுவாகும்.
*   காய்ச்சல்  குணமாக  மிளகைப்  பொடி  செய்து  கஷாயமாகக்  குடித்துவரலாம்.
*   புதினா  இலைகளை  வெயிலில்  காயவைத்துப்  பொடி  செய்து  வைத்துக்  கொண்டு  தனமும்  பல்  துலக்கும்போது  அந்த
    பொடியுடன்  உப்பு  சேர்த்துத்  துலக்கினால்  பல்  நோய்கள்  வராது.
-- சொ.மு.முத்து.  ஓமலூர்.  ( குறிப்புகள்  பலவிதம் ). .
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று  இணைப்பு. ஞாயிறு , டிசம்பர்  7 , 2014. 

Wednesday, February 8, 2017

பிணந்தின்னிக் கழுகுகள்

  தமிழகத்திலுள்ள  திருக்கழுக்குன்றத்தில்  கழுகுகள்  தினசரி  உணவுக்கு  வருவதை, அந்த  ஊரில்  வாழும்  மக்கள்  கதைகதையாய்ச்  சொல்வார்கள்.  கோயில்  நிர்வாகம்  கழுகுகளுக்கு  உனவளிப்பதற்காகவே  தனி  மானியம்  வழங்கிவந்தது.  பல்வேறு  அச்சுறுத்தல்களால்  1994-ம்  ஆண்டிலிருந்து  அங்குக்  கழுகுகள்  வருவதில்லை.  கோவில்  கோபுரத்தில்  கழுகுகள்  வரும்  வழியில்  கூடு  போன்ற  அமைப்பை  1994-ம்  ஆண்டு  நடந்த  குடமுழுக்கின்போது  அடைத்துவிட்டதே,  கழுகுகள்  வராததற்குக்  காரணம்  என்று  பலரும்  சொன்னாலும்  சூழலியல்  காரணங்களை  யாரும்  முன்னிறுத்துவதில்லை.  கோவில்  தூணில்  கழுகுக்கு  உணவளிப்பதைப்  போன்ற  சிற்பம்  மட்டுமே  அங்கு  எஞ்சி  உள்ளது.
     காடுகளிலுள்ள  கழுகுகளைப்  பற்றி  நாம்  பேசுகிறோம்.  காட்டைத்  துப்புரவு  செய்து  தூய்மையாக  வைத்திருக்கும்  உயிரினம்தான்  கழுகுகள்.  நமது  வீடுகளில்  ஒரு  சுண்டெலி  சந்து,  பொந்துகளில்  சிக்கி  இறந்து  போனால்  வீடெங்கும்  வீசும்  கெட்ட  வாடையைப்  பொறுத்துக்கொள்ள  முடியாமல்  அதைத்  தேடி  எடுத்துத்  தூக்கி  எறிந்து,  வீட்டைச்  சுத்தப்படுத்திய  பிறகுதானே  நிம்மதியடைகிறோம்.
      ஆட்கள்  நுழைய  முடியாத  ஒரு  அடர்ந்த  காட்டில்  யானை  இறந்து  போனால்  அதைச்  சுத்தப்படுத்துவது  யார்?  கழுகுகள்தான்!  காட்டில்  கழுகுகள்  அற்றுப்போனால்  யானையின்  உடல்  மக்கி  மறைய  வெகு  நாட்கள்  ஆகும்.  அதன்  உடலில்  இருந்து  வெளியேறும்  நோய்க்  கிருமிகள்  காட்டில்  வாழும்  மற்ற  உயிரிங்களுக்கும்  தொற்றும்.  காட்டுக்குள்  மேய்ந்து  வரும்  நமது  கால்நடை களையும்  பாதிக்கும்.
     கழுகுகள்  வாழும்  பகுதியைச்  சுற்றிலும்  100  கி.மீ. சுற்றளவுக்கு  டைகுளோஃபிளாக்  மருந்தின்  பயன்பாடு  அறவே  கூடாது  எனச்  சுற்றுச்சூழல்  அமைச்சகம்  நெறிமுறை  வகுத்துள்ளது.
-- கோவை  சதாசிவம்.  (  உயிர் பாதுகாப்பு )  உயிர் மூச்சு.
--   'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்.,ஜனவரி 21, 2014.  

Tuesday, February 7, 2017

கிரகங்கள்

  ஜோதிடம்  என்பது  வானிலுள்ள  நட்சத்திரங்கள்,  கிரகங்கள்  இவற்றின்  அவ்வப்போதைய  நிலையை  வைத்துக்  கணக்கிட்டுக்  கூறப்படுகிறது.
     சூரியனைச்  சுற்றித்தான் கிரகங்கள்  வலம்  வருகின்றன.  குரு,  சுக்கிரன்,  புதன்,  செவ்வாய்,  சந்திரன்,  சனி  ஆகிய  கிரகங்கள்  சூரியனை  வலப்புறமாகச்  சுற்றிவருகின்றன.  ஆனால், ராகு,  கேதுக்கள்  சூரியனை  இடப்புறமாக  சுற்றிவருகின்றன.  சந்திரன்  சூரியனைச்  சுற்றுவதோடு  பூமியையும்  சுற்றிவருகிறது.
     வான்  மண்டலத்தில்  முட்டை  வடிவப்  பாதையில்  கிரகங்கள்  சுற்றிவருகின்றன.  இவை  சுற்றிவரும்  பாதையில்தான்  27  நட்சத்திரங்களும்  உள்ளன.  வான்  மண்டலத்தில்  எண்ணற்ற  கோடி  நட்சத்திரங்கள்  இருப்பினும்  அஸ்வினி  முதல்  ரேவதி  வரையிலும்  உள்ள  27  நட்சத்திரங்கள்தான்  ஜோதிட  ரீதியாகக்  கணக்கிடப்படுகின்றன.
     இந்த  27  நட்சத்திரங்கள்  உள்ள  ஓட்டப்  பாதையை  12  ராசிகளாகப்  பிரிந்துள்ளன.  சந்திரன்  இரண்டேகால்  நாட்கள்  ஒரு  ராசியில்  சஞ்சரிப்பார்.  இந்தச்  சந்திரனின்  ஓட்டத்தைக்  கொண்டே  ஒருவரது  ஜாதகம்  கணிக்கப்படுகிறது.  சூரியனை  வைத்து  லக்னத்தையும்  சந்திரனை  வைத்து  ராசியும்  கணிக்கப்படுகிறது.
     ஜோதிட  விதிப்படி  நாழிகை  கணக்கு  முக்கியமானது.  ஒரு  நாள்  என்பது  24  மணி  நேரம்.  24  மணி  நேரம்  என்பது  60  நாழிகை.  ஒரு  மணி  நேரத்துக்கு  இரண்டரை  நாழிகை  எனக்  கணிக்கப்படுகிறது.
     ஒருவரது  ஜாதகத்தில்  லக்னம்  எங்கு  குறிக்கப்பட்டுள்ளதோ  அதனை  ஒன்றாம்  வீடாக  கொண்டு  எண்ணுதல்  வேண்டும்.
     உதாரணமாக  மேஷம்  1-வது  வீடு  எனக்  கொண்டால்  மிதுனம்  3-ம்  இடம்.  சிம்மம்  5-ம்  இடம்.  ராசி  வேறு  லக்னம்  வேறு  என்று  ஜோதிடவியலில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒருவரது  ஜாதகத்தில்  சந்திரன்  இருக்கும்  வீடு  எதுவோ  அதுவே  அவரது  ராசி  வீடு.
     லக்னத்துக்கு  1,5, 9-ம்  வீடுகளுக்கு திரிகோண  ஸ்தானங்கள்  என்று  பெயர்.
     சந்திரன்  இருக்கும்  இடத்திலிருந்து  அப்போதைய  நேரத்துக்குக்  கிரகங்கள்  எங்குள்ளன  என்று  கண்டறிந்து  பலன்  சொல்லும்  முறைக்கு  கோட்சாரப்பலன்  என்று  பெயர்.
--  ( ஜோதிடம் தெளிவோம் )  பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று . ஞாயிறு , டிசம்பர்  7 , 2014. 

Monday, February 6, 2017

விதியும் மதியும்

  இஸ்லாமியக்  கலிபாக்களில்  ஒருவரான  ஹஜ்ரத்  அலியைச்  சந்தித்த  யூத  இளஞன்  விதிக்கும்,  பகுத்தறிவுக்கும்  உள்ள    வித்தியாசத்தைச்  சொல்ல  முடியுமா?  என்று  கேட்டான்.   ஹஜ்ரத்  அலி  அவனிடம், "உன்  வலதுகாலைத்  தூக்கு"  என்றார்.  அவனும்  தனது  வலதுகாலைத்  தூக்கியபடி  நின்றான்.
    "சரி... இப்போது  உன்  வலது  காலை  கீழிறக்காமலேயே  இடது  காலையும்  தூக்கு"  என்றார்.
    "அது  எப்படி  முடியும்?"  என்றான்  இளஞன்.
    "ஒற்றைக்  காலை  மட்டும்  தூக்கு  என்றதும்  உன்னால்  முடியும்  என  நினைத்துச்  செய்தாய்  அல்லவா?  அதுதான்  பகுத்தறிவு.  இன்னொரு  காலையும்  தூக்கச்  சொன்னபோது  அது  முடியாது  என உணர்ந்தாய்  அல்லவா?  அதுதான்  விதி"  என்றார்.  அந்த  வித்தியாசத்தை  உணர்ந்தாலேபோது.
     விதியை  மதியால்  வெல்லுங்கள்.  வாழ்வு  வசப்படும்.  மகிழ்ச்சி  உங்களைத்  தேடி  வரும்.
-- மு.கோபி சரபோஜி,  ராமநாதபுரம்.  ( வெற்றிக்கொடி  இணைப்பு ).
-- 'தி இந்து' நாளிதழ் .  செவ்வாய்,  டிசம்பர் 9, 2014.

Sunday, February 5, 2017

டயர் பஞ்சர்ஸ்

டயர்  பஞ்சர்  ஆனாலும்  கவலையில்லை.
     திருச்சி  நெ.1  டோல்கேட்டில்  பஞ்சர்  கடை  நடத்திவரும்  கே.அக்தர் அலி ( 54 ), தான்  தயாரித்த  பவுடரைப்  பயன்படுத்தி  டிராக்டர்,  ஜே.சி.பி., கார்,  லாரி,  டூ  வீலர்  உட்பட  ஆயிரத்து  500  வாகனங்களை  பஞ்சர்  ஆனாலும் பாதிக்காத  நிலையில்  ஓடவிட்டிருக்கிறார்.
     இந்த  பவுடரை  பயன்படுத்துவது  எளிது.  டயரில்  இருக்கும்  டியூப்பை  கழற்றி  எடுத்துவிட்டு,  பவுடரை  சாதாரண  தண்ணீருடன்  கலந்து  டயரின்  உட்புறம்  செலுத்தினால்  போதும்.   டிஸ்க்குடன்  சேர்ந்து டயரில்  அப்ளை  ஆகிவிடும்.   அப்புறம்  வழக்கம்போல  காற்று  நிரப்பி  ஓட்ட  வேண்டியதுதான்.  இதை  அப்ளை  செய்வதால்  மைலேஜ்  குறையாது.  காற்றின்  அளவு  சரியாக  இருந்தால்  போதும்.  டயரில்  முள்,  ஆணி  முதலியவை  குத்தியிருந்தால், அப்படியே  ஓடுகிறது.
     முள்ளை  வெளியே  எடுத்தால்  அந்த  இடத்தில்  உள்ளே  இருக்கும்  பவுடர்  கரைசல்  அந்த  இடத்தை  அடைத்துக்கொள்கிறது.  இதனால்  பஞ்சரைப்  பற்றி  கவலையில்லை.
--  ஜி.ஞானவேல்முருகன்.  ( ஊர் வலம் ).
--  'தி இந்து' நாளிதழ் .  செவ்வாய்,  டிசம்பர் 9, 2014. 

Saturday, February 4, 2017

சோலார் பவர் ஸ்கூல் பேக்!

  கிராமப்புற  மாணவர்களுக்கு  பயன்படக்கூடிய  வகையில்  சோலார்  ஸ்கூல்  பேக்  தயாரிக்கப்பட்டுள்ளது.  புத்தகத்தை  வைத்து  தூக்கிச்  செல்வது  மட்டுமல்லாமல், டெஸ்க்  போலவும்  பயன்படுத்தலாம்.  இரவு  நேரங்களில்  படிக்க  எல்இடி  விளக்கு  உள்ளது.  மின்சாரம்  இல்லை  என்றாலும்  படிக்கலாம்.
அதிவேக  கேமரா.
     ஒரு  விநாடியில்  100  பில்லியன் ( 10,000 கோடி )  பிரேம்களில்  படம்  பிடிக்கும்  உலகின்  அதிவேக  கேமராவை  கண்டுபிடித்துள்ளனர்.  தற்போது  விநாடிக்கு  10  மில்லியன் ( 1 கோடி )  படங்களைப்  பிடிக்கும்  கேமராதான் உலகின்  அதிவேக  படம்பிடிக்கும்  கேமராவாக  உள்ளது.
ஜொலிக்கும்  ஹோட்டல்.
     தங்குவதற்குத்தான்  ஹோட்டலைத்  தேடுவோம்.  ஆனால்,  வளமைமிக்க  துபாயில்  7  நட்சத்திர  ஹோட்டல்  தங்கத்தகடுகளால்  ஜோலிக்கிறது.  இந்த  ஹோட்டலில்  இருக்கைகள்  கைப்பிடிகள்  எல்லாம்  24  காரட்  தங்கத்தால்  செய்யப்பட்டுள்ளது.  இந்த  ஹோட்டல்  பகலிலேயே  தக தகவென  மின்னுகிறது.
--  வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள் 8,  2014.   

Friday, February 3, 2017

புத்திசாலி ஐ - போன் !

  பல  ஆயிரம்  கொடுத்து  ஆசை  ஆசையாய்  வாங்கும்  ஸ்மார்ட்  போன்கள், ஒரு  நொடிப்பொழுதில்  கைதவறி  கீழே  விழும்போது  ஏற்படும்  தவிப்பு  சொல்லி  மாளாது.  மேலும்  அதில்  நாம்  சேமித்து  வைத்திருந்த  செல்போன்  எண்கள்  உள்ளிட்டவை  அனைத்தையும்  மீட்க  முடியுமா  என்ற  பரிதவிப்பு  பலருக்கும்  ஏற்படுவதுண்டு.  இதைப்  போக்கும்  வகையில்  புதிய  வகை  புத்திசாலி  ஐ - போன்களை  உருவாக்குகிறது  ஆப்பிள்  நிறுவனம்.
     இந்த  ஸ்மார்ட்டபோன்கள்  கீழே  விழும்போது  அதிலுள்ள  சென்சார்கள்  செயல்பட்டு  முக்கியமான  பகுதிகள்  சேதமடைவதைத்  தடுத்துவிடும்.  கீழே  விழுவதில்  ஏற்படும்  சேதத்தைக்  கணக்கிட்டு  முக்கியமான  பகுதிகளை  போனின்  மையப்பகுதிக்கு  நகர்த்திவிடும்.
     இப்போது  வரும்  ஐ - பேட்  மற்றும்  ஐ - போன்களில்  ஆக்சிலரோமீட்டர்கள்,  கைரோஸ்கோப்ஸ்  மற்றும்  ஜிபிஎஸாகியன  உள்ளன.  போன்  கீழே  விழும்போது  அதிலுள்ள  சென்சார்கள்  போனின்  முக்கிய  பகுதிக்குத்  தகவல்  அனுப்பு  விடும்.  அப்போது  அதிலுள்ள  மோட்டார்  விரைவாக  செயல்பட்டு  ஐ - போன்  பக்கவாட்டில்  விழும்படி  செய்து  சேதத்தின்  அளவைக்  குறைத்துவிடும்.
     நாம்  வாங்கும்  ஐ -போன்  புத்திசாலித்தனமாகச்  செயல்பட்டால்  நல்லதுதானே!
--  (  தொழில்  நுட்பம் ).  வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள் 8,  2014.  

Thursday, February 2, 2017

ஆடைகள்

உடல்  நலனைக்  கண்காணிக்கும்  ஆடைகள்.
     தட்ப  வெப்பத்திலிருந்து  நம்மைக்  காப்பதில்  ஆடைகளுக்கு  பெரும்  பங்குண்டு.
     கடும்  கோடைக்கு  ஏற்றது  பருத்தி.  அதேபோல்  குளிருக்கு  ஏற்றது  கம்பளி.  ஆனால்  இப்போது  உடல்நலனைப்  பற்றி  டாக்டருக்கு  தகவல்  தெரிவிக்கும்  ஆடைகளும்  தயாராகி  வருகின்றன.  அணிந்திருக்கும்  ஆடையில்  உள்ள  இழைகள்  உங்கள்  உடலின்  செயல்பாடு  மற்றும்  மூளையின்  செயல்பாடுகளை  டாக்டருக்குத்  தெரிவிக்கும்.  இதற்கேற்ப  இவை  செல்போன்  நெட்வொர்க்  மூலம்  இணைக்கப்பட்டிருக்கும்.  இந்த  ஆடைகளில்  பன்முக  தாமிரம், பாலிமர், கண்ணாடி,  வெள்ளி  இயழைகள்  உள்ளன.
--   (  தொழில்  நுட்பம் ).  வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள் 8,  2014.    

Wednesday, February 1, 2017

பாம்புகள்

பாம்புக்கு  நாக்குதான்  மூக்கு.
*   பாம்புகள்  மாமிச  உண்ணிகள்.  மனிதனின்  மூதாதையர்களாகக்  குரங்குகள்  கருதப்படுவதைப்  போல  பாம்புகளுக்கு
    மூதாதையர்  பல்லிகள்  என்று  கருதப்படுகின்றன.
*   பாம்புகளுக்குப்  பற்கள்  கிடையாது.  அதனால்  இரையை  அப்படியே  முழுமையாக  விழுங்க  வேண்டும்.  அதற்கேற்ற  மாதிரி
    பாம்புகளின் கபாலத்தில்  பலவகை  இருக்கும்.  ஏனெனில்  தனது  தலையை  விடப்  பெரிய  உயிர்களைத்  தின்பதற்கும்,
    வேகமாக  விழுங்குவதற்கும்  தசைகள்  தேவை.
*   பாம்புகள்  ஒல்லியான  உடலமைப்பைப்  பெற்றிருப்பதால்  அவற்றின்  சிறுநீரகங்கள்  பக்கவாட்டில்  இல்லாமல்  ஒன்றன்  பின்
    ஒன்றாக  அமைந்திருக்கும்.
*   பாம்புகளுக்குக்  கால்கள்  கிடையாது.  ஆனாலும்  உடலால்  நிலத்தில்  ஊர்ந்து  வேகமாக  நகரும்.  சில  பாம்புகள்  நீரிலும்
    வேகமாக  நீந்தும்.
*   பாம்புகளுக்குக்  கண்  இமைகள்  கிடையாது.
*   அண்டார்டிகா  கண்டத்தைத்  தவிர  உலகின்  சகல  பகுதிகளிலும்  பாம்புகள்  உள்ளன.
*   பாம்பின்  தோல்  மென்மையாகவும்  உலர்வாகவும்  இருக்கும்.  அது  சட்டை  என்று  அழைக்கப்படும்.
*   பாம்பு  தனது  தோல்  சட்டையை  ஆண்டுக்குப்  பல  முறை  உரிக்கும்.
*   பாம்பு  தனது  நாக்கின்  மூலம்  வாசனையை  அறிகிறது.
-- ஷங்கர்.  ( உயிரினம் ).  மாயாபஜார்.
--  'தி இந்து' நாளிதழ். புதன்,  ஜூன் 11, 2014.