Wednesday, November 23, 2016

படியளக்கும் பரமசிவம்.

சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை, எறும்பு போன்ற ஜீவராசிகள் தாமாகவே வந்து எடுத்துக் கொள்ளும். பின், அந்த அன்னத்தின் ஒரு பகுதியை மேள தாளத்துடன் அப்பகுதியிலுள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று, அதில் கரைப்பர். இவ்வேளையில், நீரில் வாழும் ஜீவராசிகளுக்கும் சிவனுக்கு படைத்த உணவு கிடைக்கும். அன்னாபிஷேக அன்னத்தில் தயிர்
சேர்த்து கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவர். எல்லா உயிர்களுக்கும் பரமசிவனே படியளப்பதாக ஐதீகம். அன்று தரிசிப்பவர்களுக்கு உணவுக்கு குறைவிருக்காது.
சிந்தாமல் சாப்பிடணும்!
இறைவனே அன்னத்தின் வடிவமாக இருக்கிறார். எனவே, சாப்பிடும் உணவை தரையில் சிந்தக்கூடாது. இதனால், பெரியவர்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே அரிசி, உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்குவர். அன்னத்தை வீண்டிப்பது, இறைவனையே அவமதிப்பது போலாகும். உணவின் பெருமையை 'அன்னம் பரப்பிரம்மம் சொரூபம்' என்ற ஸ்லோகம் உனர்த்துகிறது. 'உண்ணும் உணவு கடவுளின் வடிவம்' என்பது இதன் பொருள். நல்ல உணவின் மூலம் நல்ல உணர்வும் உண்டாகிறது.
-- பக்திமாலை. கோவை பதிப்பு .
-- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

No comments: