Wednesday, October 26, 2016

சூரிய சக்தி விமானம்

* பெயெர்னெ *
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் தயாரித்த முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கும் விமானத்துக்கு 'சோலார் இம்பல்ஸ்' என்றே பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் சோலார் பேனல்கள் மூலம் இவ்விமானம் பறப்பதற்கான எரிசக்தி பெறப்படுகிறது. முந்தைய சோலார் கண்டுபிடிப்புகளால் இரவில் பறப்பது சிரமம். அந்தத் தடையையும் தகர்த்து இரவிலும் பறக்கும் திறனை 'சோலார் இம்பல்ஸ்' பெற்றிருக்கிறது.
வரும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அபுதாபியில் தன் பயணத்தைத் தொடங்கும் 'சோலார் இம்பல்ஸ்' - முதல் நாடாக இந்தியாவுக்குப் பயணிக்கிறது.
இந்தியாவில், ஆமதாபாத், வாரணாசி ஆகிய இரு இடங்களில் 'சோலார் இம்பல்ஸ்' தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ள இது, ஒற்றை விமானியால் இயக்கப்படவுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்பயணம் அமையும். விமானத்தின் எடை 2.750 கிலோ. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
135 மைக்ரான் தடிமன் ( மனித மயிரிழையில் தடிமன் ) கொண்ட 12 ஆயிரம் சூரிய சக்தித் தகடுகள் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. 144 பக்கவரிசைகளில் 50 செ.மீ. இடைவெளியில் நேர்த்தியாக இத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்புறம் சூரியசக்தித் தகடுகளாலும், அடிப்பாகம் மின் இலகுவான செயற்கை இழைகளாலும் ( அல்ட்ரா லைட் பேப்ரிக் ) வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இறகுப் பகுதி முழுக்க கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பகலில் சூரிய சக்தி மூலம் பறந்தபடி , உபரி மின்சாரம் பேட்டரிகளில் சேமிக்கப்படும். அந்த பேட்டரி மூலம் இரவில் தொடர்ந்து பறக்கும். இவ்விமானத்தின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு பேட்டரிகளாகும். 'சோலார் இம்பல்ஸ்' தொடர்ந்து 120 மனி நேரம் இயக்கலாம்.
-- பிடி ஐ. ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். புதன், அக்டோபர் 29, 2014.

No comments: