Monday, October 10, 2016

துளசி செடி

உலகில் நாள் முழுவதும் ஆக்ஸிஜனைத் தரும் தாவரங்கள் அரசமரம், மூங்கில் மற்றும் துளசி ஆகியவை. இதில் அரசமரம் வளந்து பயன்தர குறைந்தது 10 வருடங்கள் ஆகும். மூங்கில் வளர்ந்து பலன்தர 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், துளசிச் செடி 2 மாதங்களில் வளர்ந்து சுவாசப்பலன் தரத் துவங்கிவிடும். வீட்டு மொட்டை மாடியில் கூட துளசிச்செடிகளை வளர்க்கலாம். மற்ற எந்த செடிக்கும் இல்லாத அறிவியல் தன்மை துளசிச் செடிக்கு உண்டு என்பதை அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.
பிற செடிகளில் நாள் ஒன்றுக்கு 0.06 லிட்டர் வரை மட்டுமே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யமுடியும். ஆனால், துளசிச்செடி ஒரு குறு மரத்திற்கு இணையாக ஒரு லிட்டருக்கு மேலும் கூட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. இதனால்தான் தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளில் துளசிச் செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் உயரிய மருத்துவ குணமும் துளசிக்கு உண்டு. தினமும் 4 துளசி இலைகளை உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்துள்ள உண்மை. ஒரு மனிதன் சராசரியாக நாள் ஒன்றுக்கு 16 லிட்டர் கார்பன் -டை- ஆக்ஸைடை வெளிவிடுகிறான். வளர்ந்த மரம் 3 முதல் 8 லிட்டர் வரை ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. துளசிச்செடியோ 24 மணினேரத்தில் ஒரு லிட்டர் ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. ஒரு வீட்டில் 16 துளசிச் செடிகளை வளர்த்தால் வளி மண்டலத்தில் வெளிவிடப்படும் கரியமில வாயு மாசுவை ஓரளவிற்காவது ஈடு செய்ய முடியும். எனவே வீடுகளில் துளசிச் செடிகளை வளர்ப்போம், காற்றில் 'பிராணவாயு' எனப்படும் ஆக்ஸிஜன் அளவை நிலை நிறுத்துவோம்.
--தினமலர். திருச்சி 26-10-2014.

No comments: