Monday, September 19, 2016

உயிர்காத்த காற்புள்ளி

ஆங்கிலத்திலிருந்து பெறப்பட்ட நிறுத்தற்குறியீடுகள் வாசிப்பையும் புரிந்துகொள்வதையும் மேம்படுத்த உதவுபவை. ஒரு தேசத்தின் உணவு மானியக் கொள்கையில் இன்று பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு காற்புள்ளிக்கு, உயிரைக் காத்த வரலாறும் உண்டு. சைப்பீரியாவை மரண தண்டனையை நிறைவேற்றும் பகுதியாக வைத்திருந்த காலத்தில், அரசரின் கருணை வேண்டி வந்த ஒரு விண்ணப்பத்தின் கீழ் அரசர், 'Pardon imposible, send to Siberia _ மன்னிக்க முடியாது. சைபீரியாவுக்கு அனுப்புக' என்று எழுதி ஆணை பிறப்பித்தார். அந்த மரண தண்டனைக் கைதியைக் காப்பாற்ற நினைத்த அரசியோ, அந்த ஆணையில் அரசருக்குத் தெரியாமல் imposible என்ற சொல்லை அடுத்திருந்த காற்புள்ளியை அழித்துவிட்டு,Pardon என்ற சொல்லை அடுத்து காற்புள்ளியை இட்டு, 'Pardon, imposible send to Siberia _ மன்னிக்கவும், சைபீரியாவுக்கு அனுப்ப முடியாது' என்று ஆணையை... அதன் பொருளையும்தான் மாற்றிச் சிறை அலுவலருக்கு அனுப்பிவிட்டார். அதனால், மரண தண்டனையிலிருந்து ஒருவர் தப்பினார். இந்தச் செய்தி வெளிப்பட்டபோது காற்புள்ளிக்கு வரலாற்றில் ஓர் இடம் கிடைத்தது.
-- ஏம்பல் தஜம்முல், சென்னை - 68. ( t f. இப்படிக்கு இவர்கள் ). கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ், திங்கள் , ஆகஸ்ட் 18, 2014.

No comments: