Sunday, September 11, 2016

கணபதி ஹோமம்!


தடை ஏதும் இல்லாமல் நாம் நினைத்தது நிறைவேற கணபதி ஹோமம் செய்கிறோம். கணபதி ஹோம மந்திரங்களை இயற்றியவர் கனகரிஷி. முதன் முதலாக கணபதி ஹோமம் செய்தவரும் அவரே.
தம்பதி கோயில் !
திருவையாறு அருகே திருக்கண்டியூர் தலத்தில் உள்ள சிவன் கோயிலில் மூலவருக்கு அருகில் பிரம்மாவும், சரஸ்வதியும் தம்பதி சமேதராக தரிசனம் தருகிறார்கள்.
ஆகமக் கோயில் !
சிவபெருமான் அருளிய ஆகமங்கள் 28. விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் ஆலயத்தில் உள்ள கைலாய பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் மேற்கண்ட 28 ஆகமங்களும் லிங்கமூர்த்திகளாக எழிலுற அமைக்கப்பட்டுள்ளனர். இந்த 28 ஆகமங்களையும் முருகப்பெருமான் பூஜித்து வந்ததாக தல புராணம் கூறுகிறது.
நட்சத்திர மண்டபம் !
கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் நட்சத்திர மண்டபம் உள்ளது. ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு.
ஆறு கிணருகள் !
மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊரிலுள்ள முருகன் கோயிலில் ஆறு கினறுகள் உள்ளன. இவற்றில் உள்ள தண்ணீர் உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு வகை சுவைகளைக் கொண்டுள்ளது சிரப்பு.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். மே 16 - 31, 2014.

No comments: