Wednesday, August 24, 2016

தெரிஞ்சுக்கோங்க!

ஹிரோஷிமா தினம்  (  ஆகஸ்ட் 6ம் தேதி ).
     இரோசிமா அல்லது ஹிரோஷிமா ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும்.  இது ஹோன்ஷு தீவில் உள்ளது.  இந்த நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலில் அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது.  இந்த அணுகுண்டின் பெயர் சின்னப் பையன்.
      இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, அமெரிக்கா நாடு அணுகுண்டு வீசி தாக்கியது.
     முதல் அணுகுண்டு 'லிட்டில் பாய்' எனும் சின்னப் பையன் என்ற 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்தது 'பி - 29 ரக எலோலாகேய்' என்ற அமெரிக்க விமானம் ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் உலகின் முதல் அணுகுண்டை வீசியது.  இந்த அணுகுண்டு வெடிப்பால் ஏற்பட்ட அழிவு அப்பகுதியில் 4 சதுர மைல் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியது.  அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள் தொகை 3 லட்சத்து 59 ஆயிரம்.  ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர்.  அணுகுண்டின் கதிவீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப் பட்டனர்.
     குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார்.  ( அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா  இதனை செய்தது எனவும் கூறப்படுகிறது.
     இந்த கோரமான சோக நாளினை நினைவு கூர்வதற்காகவும், பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணுஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்துவதற்காகவும், இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
-- தினமலர் . சிறுவர்மலர். ஆகஸ்ட் 1, 2014.                        1.8.14.  

No comments: