Monday, August 22, 2016

எள்ளின் மகிமை

  நீத்தார் வழிபாட்டில் எள் முக்கிய இடம் பெறுகிறது.  ஒரு முறை மகாவிஷ்ணு தன் தேவியரான லட்சுமியை தேடித் திரிய வேண்டியதாயிற்று.  அப்போது அவர் உடம்பில் வியர்வை பெருக்கெடுத்தது.  அந்த வியர்வைத் துளிகளிலிருந்து எள் உண்டாயிற்று என்று புராணங்கள் சொல்கின்றன.
     எள் இருக்குமிடத்தில் பூதம், பிசாசு முதலான தீய சக்திகள் விலகிவிடும்.  எள்தானம் செய்தால் எல்லா வகையான தோஷங்களும் விலகும்.  நவக்கிரக தோஷங்களில் சனீஸ்வர தோஷத்தை நீக்கும் சக்தி எள்ளுக்கு உண்டு.
     இப்படிப்பட்ட பலன்களை உடைய எள்ளினை திவசங்களிலும் தர்ப்பணங்களிலும் பயன்படுத்துவார்கள்.  திவசம் மற்றும் தர்ப்பணத்துக்கு கருப்பு எள்ளைத் தான் பயன்படுத்த வேண்டும்.  எள்ளைத் தண்ணீருடன் கலந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இதனால் முன்னோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
-- அர்த்தமுள்ள சாஸ்திரங்கள்.
--   தினமலர். பக்திமலர். ஜூலை, 24, 2014.   

No comments: