Sunday, July 31, 2016

சக்கரத்தாழ்வார்

  திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார்.  இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.  இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர்.  திருமால் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு.  இவர் பதினாறு, முப்பத்திரண்டு போன்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்
      சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.  அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்கினி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை.  இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவை.
பெருமாள் கையை அலங்கரிப்பவர்
     சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.
--விக்னேஷ் ஜி.ஐயர்.  ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை, 3, 2014.  

No comments: