Friday, July 29, 2016

தெரியுமா?

மரமா, புல்லா?
     பனை, மரம் என்று தமிழில் அழைக்கப்பட்டாலும் தாவரவியல் ரீதியாக புல் இனத்தைச் சேர்ந்த தாவரமே. இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிஃபேரா.  பனைகள் பொதுவாக பயிரிடப்படுவதில்லை.  தானாகவே வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகும்.  30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
நீளமான பாதை.
     ரஷ்யாவில் டிரான்ஸ் சைபீரியன் ரயில் பாதைதான் உலகிலேயே மிக நீளமான ரயில் பாதை.  9,200 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாதை தலைநகர் மாஸ்கோவையும் ஐரோப்பாவை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பிற பகுதிகளையும் இணைக்கிறது.
அந்தரத்தில் ஆய்வு
     உலகைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம் ஆண்டு நிறுவப்பட்டது.  இது நீண்ட காலம் விண்ணில் நிலைத்து இயங்கக்கூடியது.  பூமியில் இருந்து 360 கிலோமீட்டர் உயரத்தில் காற்று மண்டலத்தைத் தாண்டிச் செயல்பட்டுவருகிறது.  இது 92 மணி நேரத்துக்கு ஒரு முறை உலகைச் சுற்றி வருகிறது.  அப்போது பூமியைப் பல கோணங்களில் படம் பிடித்து அமெரிக்கா, ரஷ்யா உள்பட நாடுகளின் விண்வெளி மையத்துக்கு அனுப்புகிறது.
-- ஆர்.கீர்த்தனா, திருச்சி.  மாயாபஜார் .
-- 'தி இந்து' நாளிதழ். புதன், ஜூன் 4, 2014. 

No comments: