Tuesday, July 19, 2016

சமய வினா விடை.

  மிகப்பழமை வாய்ந்த சிவலிங்கங்கள் எவை?
    கஜின் முகமதுவால் அழிக்கப்பட்ட சோமநாதபுரத்து லிங்கம், அல்டமஷ் என்பவரால் அழிக்கப்பட்ட உஜ்ஜயினியில் இருந்த மகா காள லிங்கம், ஸ்ரீசைல லிங்கம், நருமதைக் கரையிலுள்ள ஓங்காரநாத லிங்கம், வங்கத்திலுள்ள வைத்தியநாத லிங்கம், நாசிக்கிலுள்ள திரயம்பகேசுவர லிங்கம், கௌதமேசலிங்கம், காசி விசுவேசுவர லிங்கம், திருக்கேதார லிங்கம், தச்சனியிலுள்ள பீமசங்கரலிங்கம், இராமேசுவரலிங்கம் எனும் பனிரண்டு லிங்கங்களும் மிகப்பழமை வாய்ந்தவை என நூல்கள் கூறுகின்றன.
*  ஐம்படைத்தாலி என்றால் என்ன ?
    குழந்தைகளுக்கு காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஐந்தின் வடிவமாக அமைத்து அணிவிக்கும் அணிகலனுக்கு ஐம்படைத்தாலி என்று பெயர்.
*  சைவ சமயம் எத்தனை ஆண்டுகள் பழமையானது ?
    சைவ சமயம் உலகின் பழைய சமயங்களுள் ஒன்றாகும்.  இது இந்தையாவில் சிந்து சமவெளி நாகரிக காலமான 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
-- சேக்கிழார் குரல்.  ஆகஸ்ட் , 2013.
-- இதழ் உதவி : புலவர் மா. கணபதி, மாத்தூர்.  சென்னை. 68.  

No comments: