Sunday, July 17, 2016

ஃபிரிட்ஜ் விபத்து

விபத்தை தடுக்க என்ன வழி?
     வீடுகளில் தற்போது உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் அனைத்தும் பொதுவாக இரண்டு அடுக்குகளை கொண்டது.  ஒன்று ரெப்ரிஜிரேட்டர் ( Refrigerator).  மற்றொன்று ப்ரீசர் ( Freezer ).  இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டவை.  இதில் ரெப்ரிஜிரேட்ட்டர் என்பது நீரின் உறைநிலைக்கு மேல் ( 3 to 5 டிகிரி C ) வெப்பநிலையை கொண்டது.  நீரின் உறைநிலைக்கு கீழே ( 0 to 18 டிகிரி C ) வெப்பநிலையை கொண்டது ப்ரீசர்.  முன்பெல்லாம் குளிருக்காக அமோனியா ( anhydnous Ammonia ) வாயு பயன்படுத்தப்பட்டது.  இது விஷத்தன்மை கொண்டது என்பதால் சல்பர் டை ஆக்ஸைடு ( Sulfur dioxide ) பயன்படுத்தப்பட்டது.  இதுவும் பாதுகாப்பற்றது என கருதப்பட்டதால் CFC - 12  எனப்படும் டை குளோரைடை புளூரோ மீத்தேன் ( Di - chloro - di - fluoro - methane ) என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.
     குளிர்சாதன பெட்டியை காற்றோட்டமான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.  சமையல் அறைகளில் அடுப்பு அருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து கசியும் வாயு மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியாகும் சிறு தீப்பொறி ஆகியவை சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.  அதுபோல, சூரிய ஒளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது.  ப்ரிட்ஜுக்கு நில இணைப்புகள் ( Earth ) கொடுக்க வேண்டும்.  ஃபிரிட்ஜ் வித்தியாசமான ஓசை வந்தால் மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
-- ஃபிரிட்ஜ் மெக்கானிக் எம்.சரவணன்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன் ஜூலை 2, 2014. 

No comments: