Sunday, July 31, 2016


சக்கரத்தாழ்வார்

  திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார்.  இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.  இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர்.  திருமால் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு.  இவர் பதினாறு, முப்பத்திரண்டு போன்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்
      சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.  அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்கினி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை.  இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவை.
பெருமாள் கையை அலங்கரிப்பவர்
     சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.
--விக்னேஷ் ஜி.ஐயர்.  ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை, 3, 2014.  

Saturday, July 30, 2016

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு.

  பூமியை விட 17 மடங்கு எடையும், இரு மடங்கு அளவும் கொண்ட கடின பாறைகளால் ஆன புதிய வகை கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
     மிகப்பெரும் பூமி ( மெகா எர்த் ) என்று கூறப்படும் இந்த கிரகம் 'கெப்ளர் - 10சி என்று பெயரிடப்பட்டுள்ளது.  சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை 45 நாள்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது இந்த கிரகம்.  ட்ராகோ நட்சத்திர மண்டலத்தில், பூமியில் இருந்து 560ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.  முழுவதும் பாறைகள் மற்றும் திடப் பொருள்களால் ஆன இந்த கிரகம், இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை விட பெரியது.  அதனால் இது மிகப்பெரும் பூமி என்று கூறப்படுகிறது.  இந்த கிரகத்தை சுற்றிலும் அடர்த்தியான வாயு மண்டலம் இருப்பது தெரியவந்துள்ளது.  இந்த கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்புளது.
     வியப்பூட்டும் இந்த கண்டுபிடிப்பால் உலகத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞானிகளின் கருத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூன் 5, 2014.  

Friday, July 29, 2016

தெரியுமா?

மரமா, புல்லா?
     பனை, மரம் என்று தமிழில் அழைக்கப்பட்டாலும் தாவரவியல் ரீதியாக புல் இனத்தைச் சேர்ந்த தாவரமே. இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிஃபேரா.  பனைகள் பொதுவாக பயிரிடப்படுவதில்லை.  தானாகவே வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகும்.  30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
நீளமான பாதை.
     ரஷ்யாவில் டிரான்ஸ் சைபீரியன் ரயில் பாதைதான் உலகிலேயே மிக நீளமான ரயில் பாதை.  9,200 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாதை தலைநகர் மாஸ்கோவையும் ஐரோப்பாவை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பிற பகுதிகளையும் இணைக்கிறது.
அந்தரத்தில் ஆய்வு
     உலகைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம் ஆண்டு நிறுவப்பட்டது.  இது நீண்ட காலம் விண்ணில் நிலைத்து இயங்கக்கூடியது.  பூமியில் இருந்து 360 கிலோமீட்டர் உயரத்தில் காற்று மண்டலத்தைத் தாண்டிச் செயல்பட்டுவருகிறது.  இது 92 மணி நேரத்துக்கு ஒரு முறை உலகைச் சுற்றி வருகிறது.  அப்போது பூமியைப் பல கோணங்களில் படம் பிடித்து அமெரிக்கா, ரஷ்யா உள்பட நாடுகளின் விண்வெளி மையத்துக்கு அனுப்புகிறது.
-- ஆர்.கீர்த்தனா, திருச்சி.  மாயாபஜார் .
-- 'தி இந்து' நாளிதழ். புதன், ஜூன் 4, 2014. 

Thursday, July 28, 2016

வலி உணர்வு.

ஆண்களுக்கு வலி உனர்வு அதிகம்.  பெண்களுக்கு அவ்வளவாக இல்லை.
     'ஆபரேஷனுக்குப் பிறகு, பெண்களை விட , ஆண்களே அதிகமாக வலியை உணர்கின்றனர்' என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
    'வலி எல்லாருக்கும் பொதுவானது: ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரி தான் வலி இருக்கும்' என்ற கருத்து நிலவுகிறது.  எனினும், லேசான ஆபரேஷன்களுக்கு கூட பெண்கள் அதிக வலியை உணர்கின்றனர். பெரிய ஆபரேஷன்களின் போது மட்டும், ஆண்கள் அதிக வலியை உணர்கின்றனர்.  சாதாரண ஆபரேஷன்களின் போது, அதை ஆண்கள் கண்டுகொள்வதில்லை.
     அதே நேரத்தில், பெரிய அளவிலான ஆபரேஷன்களின் போது, பெண்கள் அதிக வலியை உணர்வதில்லை; இதுதான், பொதுவான நிலை.
-- தினமலர். புதன், 4-6-2014.                                           

Wednesday, July 27, 2016

'கேன் குடிநீர்' ( தொடர்ச்சி )

பாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளூங்கள்.
     பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிலில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர்.  அதை கவனியுங்கள்.  ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டிலெந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.
     எண் 1. பாலி எத்திலின் டெர்ப்தலேட் ,  2. ஹைடென்சிட்டி பாலி எத்தனால்,  3. பாலிவினைல் குளோரைடு,  4. லோ டென்சிட்டி பாலி எத்தனால்,  5. பாலி புரோபைலினால்,  6. பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது.
7. ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது.  குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிட்டுள்ள பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!
--  டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 3,2014. 

Tuesday, July 26, 2016

'கேன் குடிநீர்' ( தொடர்ச்சி )

தீர்வுகள் என்ன?
     250  -  300  வரை டி.டி.எஸ். இருக்கும் நீர் குடிப்பதற்கு உகந்தது.  நாம் குடிக்கும் நீரை நாமே பரிசோதனை செய்யலாம். பெங்களுரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது.
     இதை குடி நீரில் வைத்தால் டி.டி.எஸ். அளவு காட்டும்.  இதில் 100 முறை சோதனை செய்ய முடியும்.  சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள பி.டி.ஆர் பவுன்டேஷனில் சுமார் 350 ரூபாயில் சிறு கருவி கிடைக்கிறது.
     கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 3,2014.   

Monday, July 25, 2016

'கேன் குடிநீர்' ( தொடர்ச்சி )

போலி சுத்திகரிப்பு.
     தண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.  ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர்.  எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில் நிரப்புவோரும் உண்டு.  சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள்.  இது ஆபத்தானது.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 3,2014.   

Sunday, July 24, 2016

கேன் குடிநீர்'

நாம் குடிக்கும் 'கேன் குடிநீர்' சுத்தமானதுதானா?
    குடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்?
*  காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் ( sand filter ) இயந்திரத்திற்கு அனுப்பி தண்ணீல் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.
*  நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் ( Activated Carbon Filter ) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும்.
*  மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் ( Micrpn Filter ) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.
*  ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில் நுட்பம் ( Reverse osmosis ) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
*  இந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் ( UT Bulb ) தொழில் நுட்பம் மூலம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ் பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.
*  ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 3,2014.                                    

Saturday, July 23, 2016

டிப்ஸ்...டிப்ஸ்...

*   வேர்க்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றை உருண்டை பிடிக்க வெல்ல பாகு காய்ச்சும்போது, வெல்லத்துடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்துக் காய்ச்சினால், உருண்டைகள் கரகரப்புடனும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.
*   கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை ஃபிரிட்ஜில் வைக்கும் போது சீக்கிரமே அழுகிவிடுகிறதா?  அவற்றை ஈரமில்லாமல், ஒரு செய்திதாளில் சுற்றி, கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் வைத்து சுருட்டி ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள்.  பத்து நாட்களானாலும், அழுகாமல் அப்படியே பசுமையாக இருக்கும்.
*   சப்பாத்தி மிருதுவாக இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மாவு பிசைவோம்.  அதற்கு பதில், முதலில் எண்ணெய் சேர்க்காமல் மாவு பிசையவும்.  பிறகு, ஒவ்வொரு சப்பாத்தியையும் ஒரு சிறு அப்பளம் போல் உருட்டி, அதன் மேல் எண்ணெயைத் தடவி, நான்காக மடித்து மீண்டும் சப்பாத்தியைத் திரட்டி சுட்டால் மென்மையாக இருக்கும்.  குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.  எண்ணெய்க்கு பதில் நெய் தடவலாம்.  எண்ணெய் வேடாதவர்கள் எதுவும் தடவாமல் அப்படியே சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.
*   காலையில் செய்த இட்லிகள் மீதமிருக்கிறதா?  இட்லிகளின் மீது இருபுறமும் எண்ணெய் அல்லது நெய் தடவி, சூடான தோசைக்கல்லில் போட்டு குறைந்த தீயில், பிரவுன் நிறம் வரும் வரை சுட்டு எடுத்தால்...மொறுமொறுவென்று ஆகிவிடும்.  இதைத் தக்காளி சாஸுடன் குழந்தைகளுக்கும் கொடுத்தால்... சட்டென்று காலியாகி விடும்.  இட்லிகள் தடிமனாக இருந்தால், நடுவில் வெட்டி இரண்டு மெல்லி வட்டங்களாக சுடலாம்.
-- அவள் விகடன்.  5-4-14.
-- இதழ் உதவி :   இதழ் உதவி : புலவர் மா. கணபதி, மாத்தூர்.  சென்னை. 68.

Friday, July 22, 2016

திருமண தடை நீங்க...

கல்யாண ரூப :  கல்யாண :
       கல்யாண குணஸம்ஸ்ராய :
ஸுந்தரம்ரூ :  ஸூ நயக :
       ஸூல்லாட :  ஸூகந்தர.
என்கிற ஸ்லோகத்தை காலை, மாலை இரு வேளைகளிலும் 18 தரம் ஜெபித்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
-- எம்.வசந்தா,  திருச்சி.
--  மங்கையர் மலர்.  ஜூலை 1 - 15 , 2014.
-- இதழ் உதவி ;  K. முத்துசாமி ஐயர்.  விருகம்பாக்கம்.  சென்னை . 92. 

Thursday, July 21, 2016

அசத்தல்.

தோல்வியின் தூரம் குறைவு
அதனால் தான் அனைவராலும்
அதை எளிதில் சென்றடைய முடிகிறது.

வெற்றியோ தூரம் அதிகம்
அதனால் தான் ஒரு சிலரால் மட்டுமே
அங்கு செல்ல முடிகிறது.

வெற்றியை சென்றடைய தோல்வி
வழியாகத் தான் செல்ல முடியும்
என்பது பலருக்கு தெரியாமல் போனது வேதனையே!
-- ஜோ.ஜெயகுமார், சிவகங்கை.
--  மங்கையர் மலர்.  ஜூலை 1 - 15 , 2014.
-- இதழ் உதவி ;  K. முத்துசாமி ஐயர்.  விருகம்பாக்கம்.  சென்னை . 92.   

Wednesday, July 20, 2016

வெய்யில் அதிகமாகி விட்டது!


'A'lways  'B'  'Cool'
'D'ont  have 'E'go  with 'F'riends
'G'ive  up 'H'unting  'I'ncidents
'J'ust  'K'eep  'L'oving  'M'ankind
'N'ever  'O'mit   'P'rayer
'Q'uietly  'R'emember  God
'S'peak  the  'T'ruth
'U'se  'V'olid  'W'ords
'X'press  'Y'our  'Z'eal.
--அனுஷா நடராஜன்.  
-- மங்கையர் மலர்.  ஜூலை 1 - 15 , 2014.
-- இதழ் உதவி ;  K. முத்துசாமி ஐயர்.  விருகம்பாக்கம்.  சென்னை . 92.                     2

Tuesday, July 19, 2016

சமய வினா விடை.

  மிகப்பழமை வாய்ந்த சிவலிங்கங்கள் எவை?
    கஜின் முகமதுவால் அழிக்கப்பட்ட சோமநாதபுரத்து லிங்கம், அல்டமஷ் என்பவரால் அழிக்கப்பட்ட உஜ்ஜயினியில் இருந்த மகா காள லிங்கம், ஸ்ரீசைல லிங்கம், நருமதைக் கரையிலுள்ள ஓங்காரநாத லிங்கம், வங்கத்திலுள்ள வைத்தியநாத லிங்கம், நாசிக்கிலுள்ள திரயம்பகேசுவர லிங்கம், கௌதமேசலிங்கம், காசி விசுவேசுவர லிங்கம், திருக்கேதார லிங்கம், தச்சனியிலுள்ள பீமசங்கரலிங்கம், இராமேசுவரலிங்கம் எனும் பனிரண்டு லிங்கங்களும் மிகப்பழமை வாய்ந்தவை என நூல்கள் கூறுகின்றன.
*  ஐம்படைத்தாலி என்றால் என்ன ?
    குழந்தைகளுக்கு காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஐந்தின் வடிவமாக அமைத்து அணிவிக்கும் அணிகலனுக்கு ஐம்படைத்தாலி என்று பெயர்.
*  சைவ சமயம் எத்தனை ஆண்டுகள் பழமையானது ?
    சைவ சமயம் உலகின் பழைய சமயங்களுள் ஒன்றாகும்.  இது இந்தையாவில் சிந்து சமவெளி நாகரிக காலமான 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
-- சேக்கிழார் குரல்.  ஆகஸ்ட் , 2013.
-- இதழ் உதவி : புலவர் மா. கணபதி, மாத்தூர்.  சென்னை. 68.  

Monday, July 18, 2016

தெரியுமா?

*  ஜூலை 28, 1914 தொடங்கி, நவம்பர் 11, 1918 வரை முதல் உலகப் போர் நீடித்த மொத்த நாட்களின் எண்ணிக்கை 1,568.
*  ஒருவர் தண்ணீர் குடிக்காமல், உணவு சாப்பிடாமல் 15 நாட்கள் வரை உயிர் வாழலாம்.  சுவாசிக்க ஆக்ஸிஜன் மட்டும்
    இருந்தால் போதும்.  ஆனால், சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
*  முதல் உலகப்போரின் திருப்புமுனையே மார்ன் நதிக்கரையில் நடந்த சண்டைதான்.  மேற்கு ஐரோப்பாவின்
    பாதுகாவலராகவும், படிப்படியாக உலகின் ஒற்றை வல்லரசாகவும் அமெரிக்கா உருவானதன் தொடக்கமே அந்த வெற்றிதான்.
*  முதல் உலகப்போரில், பிரிட்டன் படையுடன் இணைந்து போரிட்டுப் பலியான இந்திய வீரர்களின் எண்ணிக்கை 74,191.
*  நோயால் பாதித்த பெண் யானை, சில நேரங்களில் தன் குட்டியும் நோயால் பாதிக்கக் கூடாது என்பதற்காக அதை தனியாக
    விட்டு பிரிந்துவிடும்.  சில பெண் யானை, மற்றொரு யானை கூட்டத்தில் சேர்வதற்காக, தன் குட்டியை பிரிந்து செல்லவும்
    வாய்ப்புள்ளது.
*  இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே காணப்படும் விலங்கு வங்கப்புலி.  இது 1972-ல் தேசிய விலங்காக தேர்வு
   செய்யப்பட்டது
-  'தி இந்து' நாளிதழ்.  புதன் ஜூலை 2, 2014.
-- தினமலர். செவ்வாய், 3-6-2014. 

Sunday, July 17, 2016

ஃபிரிட்ஜ் விபத்து

விபத்தை தடுக்க என்ன வழி?
     வீடுகளில் தற்போது உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் அனைத்தும் பொதுவாக இரண்டு அடுக்குகளை கொண்டது.  ஒன்று ரெப்ரிஜிரேட்டர் ( Refrigerator).  மற்றொன்று ப்ரீசர் ( Freezer ).  இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டவை.  இதில் ரெப்ரிஜிரேட்ட்டர் என்பது நீரின் உறைநிலைக்கு மேல் ( 3 to 5 டிகிரி C ) வெப்பநிலையை கொண்டது.  நீரின் உறைநிலைக்கு கீழே ( 0 to 18 டிகிரி C ) வெப்பநிலையை கொண்டது ப்ரீசர்.  முன்பெல்லாம் குளிருக்காக அமோனியா ( anhydnous Ammonia ) வாயு பயன்படுத்தப்பட்டது.  இது விஷத்தன்மை கொண்டது என்பதால் சல்பர் டை ஆக்ஸைடு ( Sulfur dioxide ) பயன்படுத்தப்பட்டது.  இதுவும் பாதுகாப்பற்றது என கருதப்பட்டதால் CFC - 12  எனப்படும் டை குளோரைடை புளூரோ மீத்தேன் ( Di - chloro - di - fluoro - methane ) என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.
     குளிர்சாதன பெட்டியை காற்றோட்டமான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.  சமையல் அறைகளில் அடுப்பு அருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து கசியும் வாயு மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியாகும் சிறு தீப்பொறி ஆகியவை சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.  அதுபோல, சூரிய ஒளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது.  ப்ரிட்ஜுக்கு நில இணைப்புகள் ( Earth ) கொடுக்க வேண்டும்.  ஃபிரிட்ஜ் வித்தியாசமான ஓசை வந்தால் மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
-- ஃபிரிட்ஜ் மெக்கானிக் எம்.சரவணன்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன் ஜூலை 2, 2014. 

Saturday, July 16, 2016

அர்ச்சனை செய்யும்போது...

  சுவாமிக்குப் பூக்களால் அர்ச்சனை செய்யும்போது விதவிதமான மலர்களை இறைவனுடைய கழுத்ல் ஆரம்பித்து திருவடி வரை எட்டு இடங்களில் சாத்த வேண்டும்.  இதை 'அங்க பூஜை' என்பார்கள்.  சிவபெருமானுடைய கழுத்தில் வில்வத்தையும், திருமுகத்தில் தாமரை மலரையும், திருமுடியில் எருக்கம்பூவையும்,  மார்பில் நந்தியாவட்டையும், கொப்பூழில் ( தொப்புளில் ) பாதிரி மலரையும்,  இடுப்பில் அலரி மலரையும், முழ்ந்தாளில் செண்பக மலரையும், திருவடிகளில் நீல மலரையும் சமர்ப்பிக்க வேண்டும்.  மேற்படி மலர்வகைகளைச் சேகரிக்க முடியாத பட்சத்தில் ஒரே வித மலராக இருந்தாலும்... இந்த எட்டு இடங்களிலும் சமர்ப்பிக்து வணங்கலாம்.
--  தினமலர் பக்திமலர்.  மே 22. 2014.  

Friday, July 15, 2016

வெந்நீரில் குளிக்காதீர் !

  அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு முதலான நாட்களில் வெந்நீரில் குளிக்கக்கூடாது.  குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.  பழங்காலத்தில் நீர் நிலைகள், ஆறு, குளம், கால்வாய், கடலில் குளிப்பார்கள்.
      பவுர்ணமி - அமாவாசை நாட்களில் மேற்படி திதி இருக்கும்போது அதிகாலையில் புண்ணிய தீர்த்தங்களில் குளிக்க வேண்டும்.  சமுத்திர ஸ்நானம் மிகவும் விசேஷம்.
      பவுர்ணமி என்பது சந்திரன் சூரியனுக்கு நேர் எதிரில் வெகு தொலைவில் இருக்கும் நாள்.  அமாவாசை மிக அருகில் 12 டிகிரியில் இருக்கும் நாள்.  சூரிய சந்திர இயக்கங்கள் பூமியில் பிரதிபலிக்கும்.  பூமிக்கு அடியில் உள்ள காஸ்மிக் கதிர் இயக்க மாறுதல்கள் ஏற்படும்.  இயற்கையின் சீற்றம் புலப்படும்.
     இந்நாட்களில் இயற்கையான நீர் நிலைகளில் குளிக்க வேண்டும்.  வெந்நீரில் குளிக்க வேண்டாம் என்கிறார்கள்.
--   தினமலர் பக்திமலர்.  மே 22. 2014.   

Thursday, July 14, 2016

மணப்பலகை ஏன்?

 சாப்பிடும் போதும், ஜபம் செய்யும் போதும் மரப்பலகை மீது அமர வேண்டும்.  காய்ந்த தர்ப்பப் புல்லால் உருவாக்கப்பட்ட தர்ப்பாசனதில் அமர்வதும் உண்டு.  சிலர் புலித்தோல், மான்தோல் முதலானவற்றில் அமர்ந்து ஜபம் செய்வர்.
     மின்சாரம் பாய்வதை 'ஷாக்' என்கிறோம்.  ஷாக் அடிக்காமல் இருக்க கைகளுக்கு உறை அணிகிறோம்.  காய்ந்த மரப்பலகை மீது நிற்கிறோம்.  இவை தடுப்புக்கள்.  மின் சக்தியைக் கடத்தாத பொருள்கள் எனப்படுகிறது.  சாப்பிடும் போதும், ஜபம் செய்யும் போதும் ஆற்றல் கிடைக்கிறது.  ஜபிக்கும் போது ஆன்மாவுக்கும் புதிய சக்தி கிடைக்கிறது.  இந்த சக்தி பூமியில் இறங்கிவிடாமல் இருக்கவே - ஆற்றல்களை ஊடுருவாமல் தடுக்கும் சக்திப் படைத்த மணைப்பலகை மீது அமர வேண்டும்.
--  தினமலர் பக்திமலர்.  மே 22. 2014.  

Wednesday, July 13, 2016

ஐந்து முக கங்கைகள்.

  சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு.  ஒவ்வொரு திசை நோக்கி ஒவ்வொரு முகம் இருக்கும்.  ஐந்தாவது முகம் நடுவில் மேல் நோக்கி இருக்கும்.  இந்த ஐந்து முகங்களை உடைய லிங்கத்தை 'பஞ்சமுக லிங்கம்' என்பார்கள்.  ஒவ்வொரு முகத்தில் இருந்தும் கங்கை உற்பத்தியானது.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டென்கிறது சிவபுராணம்.
     அந்தக் கங்கைகளை 'சிவஅமுதசாகரம்' என்றும் சொல்கிறது.  கிழக்கு முகதில் இருந்து ரத்தினகங்கையும், மேற்கு முகதில் இருந்து தேவகங்கையும், வடக்கு  முகதில் இருந்து கைலாய கங்கையும், தெற்கு  முகதில் இருந்து உக்கிர கங்கையும், நடு  முகதில் இருந்து பிரம்ம கங்கையும் உற்பத்தியாயின என்பது புராணம்.
-- பக்தி துணுக்குகள்.
-- தினமலர் பக்திமலர்.  மே 22. 2014.  

Tuesday, July 12, 2016

பஜகோவிந்தம்.

    ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்., உலக மாயைகளில் இருந்து விடுபட்டு ஆத்ம தத்துவத்தை உனர்த்தும் ஞானப்பொக்கிஷம்.  இதன் 32 பாடல்களில் 5-வது பாடல் :
    'யாவத்வித்தோபார்ஜன ஸக்த
     ஸ்தாவந்நிஜ பருவாரோ ரக்த :
     பச்சாஜ்ஜீவதி ஜர்ஜர தேஹே
     வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே'
இதற்கு வழங்கியுள்ள உரை :  'ஒருவன் பொருள் ஈட்டும் வரையில் அவனது சுற்றத்தார் மிகுந்த அன்பு காட்டுவார்கள்.  ஆனால், உடல் தளர்ந்து, சம்பாதிக்க முடியாமல் போகும்பொழுது, வீட்டில் உள்ளவர்கள் கூட அவனிடம் பேசமாட்டார்கள்'.
-- க.ராஜகோபாலன், தனது ' ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்' என்ற நூலில்.
-- தினமலர் நாளிதழ். 22-5-2014.   

Monday, July 11, 2016

கைகொடுக்கும் புதிய வீரர்கள்.

   சிக்கல்கள், கஷ்டமான தேர்வுகள் எதுவும் இல்லாமல் சீனாவில் சிலருக்கு வேலை கிடைத்திருக்கிறது.  அவர்கள் வேறு யாருமல்ல.  இங்கே நம் ஊரில் சேட்டைக்குப் பெயர்போன குரங்குகள்.  சீனாவில் இந்தக் குரங்குகளுக்குப் பொறுப்பான வேலை கொடுத்திருக்கிறார்கள்.  அதுவும் The People's Liberation Army Air Force -ல்.
     பெய்ஜிங் அருகே உள்ள விமான தளத்தைப் பாதுகாக்க இந்த குரங்குகளைப் பணியில் அமர்த்தியுள்ளார்கள்.  ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்குகளுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.  பறவைகள் மூலம் விமானங்களுக்கு ஏற்படும் அச்சுருத்தலைத் தடுப்பது இந்தக் குரங்குகளின் முதன்மையான பணி.  சீனாவின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த விமானப் படைத் தளத்தில் வாத்துப் பறவைகள் அதிக அளவில் ஆண்டுதோறும் கூடுகிராட்ம்.
     இந்தப் பறவைகள் விமானப் படை விமானங்களுக்கு இடையில் வந்து சிக்கிக்கொள்கின்றன.  சமயங்களில் விமான எஞ்சினுக்குள்ளும் சிக்கிவிடுகின்றன.  இதனால் விமானங்கள் விபத்துக்குள்ளாகி விமானிகள் இறக்கும் ஆபத்தும் உள்ளது.  மேலும் பறவைகள் இறப்பதும் பெருகிவருகிறது. இதைத் தடுக்க வழி தெரியாமல் விமானப் படை உயர் அதிகாரிகள்விழி பிதுங்கினர்.  பட்டாசுகளை வெடித்துப் பார்த்தனர்.  துப்பாக்கியால் சுட்டுப் பார்த்தனர்.  அந்தச் சமயத்தில் மட்டும் கலைந்து ஓடும் பறவைகள், பிறகு மீண்டும் கூடிவிடும்.  கடைசியாகத்தான் அவர்கள் இந்த யோசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
     இப்போது அவர்களைக் காக்க இந்தக் குரங்குகள் வந்துவிட்டன.  குரங்குகள் அருகில் உள்ள மரங்களில் உள்ள கூடுகளை அழிக்கக் கற்றுவருகின்றன.  குரங்குகள் எங்களுடைய விசுவாசம்மிக்க வேலைக்காரன் என ஒரு உயரதிகாரி புன்னகையுடன் சொல்கிறார்.
-- சுந்தர லட்சுமி.  வாழ்வு இனிது.
--  'தி இந்து' நாளிதழ். சனி, மே 17,  2014.

Sunday, July 10, 2016

தலைகீழ் சஞ்சாரம் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எனத் தலைகீழாக நிற்பவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக வீட்டையே தலைகீழாகக் கட்ட முடியுமா? ஆனால் கட்டியிருக்கிறார்கள். இந்த விசித்திர வீடு உலகெங்கிலும் இப்போது பிரபலமாகிவருகிறது. சீன நாட்டில் ஷாங்காய் நகரத்திலும், ஆஸ்திரேலியாவில் டெர்ஃபென்ஸ் நகரத்திலும் அமைந்துள்ள இந்தத் தலைகீழ் வீட்டைப் பார்வையிட தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். இந்த வீடுகளில் வெளித்தோற்றம் மட்டும் தலைகீழாக இல்லை. வீட்டின் உள்ளே சென்றால், கழிவறை, சாப்பிடும் மேஜை எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் சுவரில் மாட்டியுள்ள படங்கள், அழகுப் பொருட்கள், பொம்மைகள் எல்லாமும் தலைகீழாகவே காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டிடக் கலையின் வடிவமைப்பாளர்களில் இரக் கொல்வகி, இந்த நுட்பம் பார்வையாளர்களைக் கவர்வதாகவும், இந்த வீட்டிற்குள் நுழைபவர்கள் ஒரு கனவு உலகத்தில் சஞ்சரித்த பரவசத்தை அடைகிறார்கள் எனவும் சொல்கிறார். இந்த வகை வீடுகள் ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலும் உள்ளன. -- சொந்த வீடு. -- 'தி இந்து' நாளிதழ். சனி, மே 17, 2014. சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எனத் தலைகீழாக நிற்பவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக வீட்டையே தலைகீழாகக் கட்ட முடியுமா? ஆனால் கட்டியிருக்கிறார்கள். இந்த விசித்திர வீடு உலகெங்கிலும் இப்போது பிரபலமாகிவருகிறது. சீன நாட்டில் ஷாங்காய் நகரத்திலும், ஆஸ்திரேலியாவில் டெர்ஃபென்ஸ் நகரத்திலும் அமைந்துள்ள இந்தத் தலைகீழ் வீட்டைப் பார்வையிட தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். இந்த வீடுகளில் வெளித்தோற்றம் மட்டும் தலைகீழாக இல்லை. வீட்டின் உள்ளே சென்றால், கழிவறை, சாப்பிடும் மேஜை எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் சுவரில் மாட்டியுள்ள படங்கள், அழகுப் பொருட்கள், பொம்மைகள் எல்லாமும் தலைகீழாகவே காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டிடக் கலையின் வடிவமைப்பாளர்களில் இரக் கொல்வகி, இந்த நுட்பம் பார்வையாளர்களைக் கவர்வதாகவும், இந்த வீட்டிற்குள் நுழைபவர்கள் ஒரு கனவு உலகத்தில் சஞ்சரித்த பரவசத்தை அடைகிறார்கள் எனவும் சொல்கிறார். இந்த வகை வீடுகள் ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலும் உள்ளன. -- சொந்த வீடு. -- 'தி இந்து' நாளிதழ். சனி, மே 17, 2014.

 சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எனத் தலைகீழாக நிற்பவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.  அதற்காக வீட்டையே தலைகீழாகக் கட்ட முடியுமா?  ஆனால் கட்டியிருக்கிறார்கள்.  இந்த விசித்திர வீடு உலகெங்கிலும் இப்போது பிரபலமாகிவருகிறது.  சீன நாட்டில் ஷாங்காய் நகரத்திலும், ஆஸ்திரேலியாவில் டெர்ஃபென்ஸ் நகரத்திலும் அமைந்துள்ள இந்தத் தலைகீழ் வீட்டைப் பார்வையிட தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள்.
     இந்த வீடுகளில் வெளித்தோற்றம் மட்டும் தலைகீழாக இல்லை.  வீட்டின் உள்ளே சென்றால், கழிவறை, சாப்பிடும் மேஜை எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கின்றன.  இது மட்டுமல்லாமல் சுவரில் மாட்டியுள்ள படங்கள், அழகுப் பொருட்கள், பொம்மைகள் எல்லாமும் தலைகீழாகவே காட்சியளிக்கின்றன.  இந்தக் கட்டிடக் கலையின் வடிவமைப்பாளர்களில் இரக் கொல்வகி, இந்த நுட்பம் பார்வையாளர்களைக் கவர்வதாகவும், இந்த வீட்டிற்குள் நுழைபவர்கள் ஒரு கனவு உலகத்தில் சஞ்சரித்த பரவசத்தை அடைகிறார்கள் எனவும் சொல்கிறார்.  இந்த வகை வீடுகள் ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலும் உள்ளன.
-- சொந்த வீடு.
--  'தி இந்து' நாளிதழ். சனி, மே 17,  2014. 

Saturday, July 9, 2016

3ஜி சேவை.

  3ஜி சேவை என்பது மூன்றாம் தலைமுறை ( Third generation ) என்பதன் சுருக்கம்.  தகவல் தொடர்பு மொபைல் தொழில் நுட்பத்தில் இது பயன்படுத்தப்படுகிறது.
     முதல் தலைமுறை மொபைல் தொலை பேசிகளில் பேசத்தான் முடியும்.  இரண்டாம் தலைமுறை மொபைல்களில் தகவல் அனுப்புவது சாத்தியமானது.  மூன்றாம் தலைமுறை தொலைபேசிகளில் வீடியோ கான்பரன்ஸ் முறைப் பேச்சு ( ஒரே சமயத்தில் பலர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ) சாத்தியமானது.  தவிர ஒவ்வொரு தலைமுறை தொழில் நுட்பம் மாறும்போதும், தகவல்களை அனுப்பவும், பெறும் வேகம் அதிகரித்துக் கொண்டே வரும்.  இவையெல்லாம் எளிய விளக்கங்கள்.  டெக்னிக்கலாகப் பல வேறுபாடுகள் உண்டு.
-- ஜி.எஸ்.எஸ்.  ( குட்டீஸ் சந்தேக மேடை ?!).
-- தினமலர். சிறுவர்மலர். மே  16,  2014. 

Friday, July 8, 2016

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?
     அரசுப் பணியாளர் வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் முதல் பதினெட்டாவது மாதம் அல்லது அவர் புது வீட்டில் குடியேறும் முதல் மாதம் தொடங்கும் .  இவற்றுள் எந்த மாதம் வருமோ அந்த மாதம் தொடங்கும்.
     வட்டி கணக்கீடு என்பது அவர் முதல் தவணை பெற்ற நாளில் தொடங்கும்.  அதிக பட்ச கடன் தவணை பதினைந்து ஆண்டு.  அதிகபட்ச வட்டித் தவணை ஐந்தாண்டு.  அதாவது 180 + 60 தவணைகள்.  பணிக் காலம் குறைவாக உள்ளோரும் குறுகிய காலத்தில் கடனைச் செலுத்தி வட்டியைக் குறைத்துக்கொள்ள விரும்புவோரும் தவணைக் காலத்தைச் சுருக்கிக் கொள்ளலாம்.
     ஒரு பணியாளர் பத்து லட்சம் ரூபாய் கடன் பெறுவதாக வைதுக்கொள்வொம் இவருக்கு முதல் தவணையாக ரூபாய் ஐந்து லட்சம் ஜனவரி 2014-ல் வழங்கப்படுகிறது.  இரண்டாவது தவணை அக்டோபர் 2014-ல் வழங்கப்படுவதாகவும்                   கொள்வோம்.  கடன் பிடித்தம் ஜூலையில் தொடங்கும்.  மாதத் தவணை ரூபாய் 10 ஆயிரம்.
     கடன் தொகை, தவணை எண் மற்றும் விட்டி வீதம் ஆகியவை மாறும்போது தக்க மாற்றங்களுடன் மேற்கண்ட முறையில் வட்டியைக் கணக்கிடலாம்.  அதிகபட்சமாக அறுபது தவணைகலில் வட்டி பிடித்தம் செய்யப்படும்.  பணிக்காலம் குறைவாக உள்ளவர்களுக்கு வட்டியை அவர்களது பணிக்கொடையில் ( Death cum Retirement Gratuity ) பிடித்தம் செய்யவும் கூடும்.
வட்டியைச் செலுத்திய பின் வீட்டுப்பத்திரம் முதலானவற்றைத் திரும்பப் பெற்றுக்கொல்லலாம்.  கடன் தொகைப் பிடித்தம் முடியும் வரை, கடன் மற்றும் வட்டித் தொகைக்குக் காப்புறுதி செய்து பிரீமியத் தொகை செலுத்தி வர வேண்டும்.
-- ப. முகைதீன் சேக்தாவூது  . சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, மே 3,  2014.   

Thursday, July 7, 2016

மலட்டுத் தன்மை

சோப்பு, பற்பசை, சன்ஸ்கிரீன் கிரீம்களில் உள்ள ரசாயனங்கள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.
* ஆய்வில் அதிர்ச்சித் தகவல் *
     96 சேர்மங்களை ஆய்வு செய்ததில், வெயிலிலிருந்து சருமங்களைப் பாதுகாப்பதற்காக சன்ஸ்கிரீன் கிரீம்களில் பயன்படுத்தப்படும் '4- மீதைல்பென்ஸில்டேன் கேம்பர்' ( 4-எம்பிசி ), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான 'டிரைகுளோசன்' ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் விந்தணுக்களைப் பாதிக்கின்றன.
     இதற்கு முந்தைய ஆய்வுகளில், இந்த ரசாயனங்கள் விந்தணுக்களைப் பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு ஆய்வுமுறைகள் இல்லை.  தற்போது புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
     நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிப்பவை எனக் கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  மனிதனின் அன்றாடம் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருட்கள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் 'நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிப்பவை' எனக் கருதப்படும் ரசாயனங்கள் உள்ளன.
     சிலவகை சோப்புகள், பற்பசைகள், சன்ஸ்கிரீன் கிரீம்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் சிலவகை ரசாயனங்கள், விந்தணுக்களின் கால்சியம் அளவை அதிகப்படுத்துகின்றன.  அவற்ரின் நீந்தும் தனமையில் மாற்றத்தை ஏற்படுதுவதுடன், கருமுட்டையைப் பாதுகாக்கும் கவசத்தைத் துளைத்து உள் நுழையும் திறனையும் குறைக்கின்றன.
-- ஏ.எப்.பி.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், மே 14.  2014.   

Wednesday, July 6, 2016

மருத்துவர்கள் ரொமான்ஸ்.

  மருத்துவமனைக் கட்டிலில் படுத்துக்கொண்டே யோசித்திருப்பார்கள்போல !  மருத்துவர்களை மனிதக் கடவுளாக நாம் போற்றிக்கொண்டிருக்க, 'நோயாளிகள் விருப்பப்பட்டால் மருத்துவர்கள் அவர்களுடன் ரொமான்ஸில் ஈடுபடலாம்' என்று அதிர்ச்சி அனுமதி அளித்திருக்கிறது பிரிட்டன் மருத்துவ கவுன்சில்.  மருத்துவர்கள் நோயாளிகளோடு ரொமான்ஸில் ஈடுபடலாம்.  விருப்பம் இருதால் காதலிக்கலாம் என்று அறிவித்திருக்கும் மருத்துவ கவுன்சில்,  அதற்கெனச் சில விதிமுறைகளையும் விதித்திருக்கிறது.  அதன்படி டாக்டர்கள் தான் சிகிச்சை அளித்த முன்னாள் நோயாளிகளுடன் மட்டுமே காதல்வயப்படாலாமாம்.  காதல் புரியும் நோக்குடன் நோயாளியின் வீட்டுக்கு அடிக்கடி செல்லக் கூடாதாம்.  ஆதரவும் எதிர்ப்புமாக சலசலதுக் கிடக்கிறது மருத்துவ வட்டாரம்.  -  இதெல்லாம் நல்லதுக்கில்லை!
-- இன்பாக்ஸ்
-- ஆனந்த விகடன். 10-04-2013.

Tuesday, July 5, 2016

கொலஸ்ட்ரால் .

கொலஸ்ட்ரால் தொடர்ச்சி...
     சமீபத்தில் சி.என்.என். வெளியிட்ட மருத்துவ ஆய்வு நூலின் ஆசிரியரான டாக்டர் செண்டிரா சொல்லும் உண்மைகள் கொஞ்சம் அதிரவைக்கின்றன...
     உலகில் தேவையில்லாமல் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் கொலஸ்ட்ரால் குறைக்கும் ஸ்டாட்டின்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன.  இதனை உட்கொள்வதால் இளமையிலேயே கால் வலி, நரம்பு பலவீனம் போன்றவை ஏற்படுகின்றது.  சிலருக்குப் பயனளிப்பதுகூட , அது கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் அல்ல.  அதன் anti- inflammatory செய்கையால்தான் என்கிறார் அவர்.  ஒரு புண்ணை ஆற்ற, நோயில் இருந்து நம்மைக் காக்க நடக்க வேண்டிய inflammation, காரணம் இல்லாமல் நடக்கும்போதுதான் மரடைப்பு முதல் கேன்சர் வரை வருகிறது என்பதுதான் தற்போதைய மருத்துவ விளக்கம்.  நாம் தவிர்க்க வேண்டியது எண்ணெயை அல்ல... டென்ஷனையும் சோம்பேறித்தனத்தையும் மட்டும்தான்.
     மன இறுக்கமும் பரபரப்பும் அடிக்கடி நிகழும்போது இந்தத் தேவையற்ற  inflammation நிகழும்.  ஆகவே, மொத்தக் குற்றத்தையும் கொலஸ்ட்ரால்தலையில் சுமத்துவது சரியல்ல.
     இந்தியாவிலும் இப்போது பல மூத்த இதய மருத்துவர்கள் இந்தக் கருத்தைப் பேசத் துவங்கியுள்ளனர்.  டாக்டர் செண்டிரா கூடுதலாகச் சொன்ன கருத்து, 'தேங்காய் எண்ணெய் இதயத்துக்கு நல்லது' என்பது.  'அதில் உள்ள சாக்சுரேட்டட் கொழுப்பு அமிலம் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'னாக இன்றும் பலரால் பார்க்கப்படுவது அர்த்தமற்றது' என்கிறார் அவர்.  இயற்கை தரும் கொழுப்பில் அதிகப் பிரச்னை  எப்போதும் கிடையாது.  மனிதன் உருவாக்கும் வனஸ்பதி, மார்ஜரைன் ( பீட்சா, பர்கர், டோனட் , பவ், ஹாட் டாக், சிப்ஸ் இன்னும் பல பேக்கரி ரொட்டி அயிட்டங்களில் சேர்க்கப்படுவது) முதலான எண்ணெயில்தான் trans fat எனும் மிகக் கெட்ட கொழுப்பு அதிகம்.  அதை தவிர்த்தே ஆக வேண்டும்.
-- மருத்துவர் கு. சிவராமன்.  (  'ஆறாம் திணை ' , தொடரில் ..).
-- ஆனந்த விகடன். 10-04-2013. 

Monday, July 4, 2016

கொலஸ்ட்ரால்

  கொலஸ்ட்ரால் பெரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும்.  உடலுக்குத் தேவையான ஒரு வஸ்து.  அதை வஸ்தாது ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான்.  காரணம், மாரடைப்பு நிகழும் 50 சதவிகித மக்களில் அதிக ரத்தக் கொழுப்பு இருந்ததைக் கண்டறிந்த மருத்துவ விஞ்ஞானம், 'கொலஸ்ட்ரால்தான் காரணம்' என கட்டப்பஞ்சாயத்து பண்ணிவிட்டது.  ஆனால், மீதி 50 சதவிகிததினருக்கு கொஞ்சுண்டு கொலஸ்ட்ரால் இருந்ததைக் கவனிக்க மறந்தனரா அல்லது மறுத்தனரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.  இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் முன்னர், இந்த கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்தில் 30 பில்ல்யன் டாலர் வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
     உடலில் கொலஸ்ட்ராலின் கால் பங்கு மூளையில் இருக்கிறது.  நரம்பு உறையிலும் myelin -லும் இன்னும் ஒவ்வொரு செல் உறையிலும் கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமான பொருள்.  அன்றாடம் இயல்பாக ரத்தக் குழாய் உட்சுவர்களில் நடக்கும் சிறுசிறு வெடிப்பைப் பட்டி பார்த்து பதமாகவைத்திருக்கும் முக்கிய வேலை கொலஸ்ட்ரால் செய்கிறது.  'இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை மருந்து கொடுத்து மட்டுப்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனம்?' என்கிறார் அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் செண்டிரா.
-- மருத்துவர் கு. சிவராமன்.  (  'ஆறாம் திணை ' , தொடரில் ..).
-- ஆனந்த விகடன். 10-04-2013.     

Sunday, July 3, 2016

உலகின் காஸ்ட்லி வீடு

உலகின் காஸ்ட்லி வீடு பட்டியல்.
     ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை வீடு உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வீடாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
     அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் விலை உயர்ந்த வீடுகள் குறித்து பட்டியலிட்டுள்ளது.  அதில் தெரியவந்துள்ளதாவது : பல அடுக்கு மாடிகளைக் கொண்ட முகேஷ் அம்பானியின் மும்பை வீடான அண்டிலியா உலகில் உயர்ந்த வீடாக முதலிடத்தை பிடித்துள்ளது.
     இந்த வீடு 4 லட்சம் சதுர அடியில், 27 மாடிகள், 9 லிப்ட், 1 திரை அரங்கு, 1 ஜிம், 168 கார் பார்க்கிங், நூற்றுக்கணக்கான அறைகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.  கீழ்தளத்தில் உள்ள 6 மாடிகள் கார்பார்க்கிங் வசதிக்காக உள்ளது.  3 ஹெலிகாப்டர்கள் தரை இறங்கும் வசதியும் இந்த வீட்டில் உள்ளது.  இந்த வீட்டை நிர்வகிக்க மட்டும் குறைந்தபட்சம் 600 பேர் வேலைக்கு தேவையாம்.  இந்த வீடு கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் ( ரூ.12 ஆயிரம் கோடி ) அளவில் கட்டப்பட்டுள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-- தினமலர். வியாழன், மே 15, 2014.  

Saturday, July 2, 2016

திருவள்ளுவர் தினம்!

  வைகாசி அனுஷம்தான் திருவள்ளுவர் தினம் !
வரலாற்று ஆதாரங்களுடன் அறிஞர்கள் புதுத் தகவல்.
பெரியார், அண்ணாதுரை வழியை பின்பற்ற கோரிக்கை.
     'வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்'  -  இந்த தலைப்புக்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா.பொ.ரத்தினம் எம் ஏ, பி.ஓ.எல்.  23.11. 1952ல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகம் சார்பில் அரும்பாடுபட்டு வைகாசி அனுட ( அனுஷ ) நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டி அதில் வெற்றியும் பெற்றார்.
     சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.  இந்த கோயிலில், திருவள்ளுவர் அவதார நாளாக  வைகாசி அனுடமும் - அவர் அடைந்து போன நாளாக மாசி உத்தரமும் கடைபிடிக்கப்படுகின்றன.
-- தினமலர். வியாழன், மே 15, 2014.    

Friday, July 1, 2016

மூளைகாரன்பேட்டை

நான் யார் ?
1. எட்டு எழுத்துகள் கொண்ட நான் ஒரு ராகம்.  என் பெயரில் திரப்படம்  ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
2.  எனது 1,2,3,8 எழுத்துகளை இணைத்தால், தமிழ் வளர்த்த அமைப்பு.
3.  எனது 4,3,8 எழுத்துகளை இணைத்தால், கல்யாணி, தோடி, காம்போதி  போன்ற வகை.
4.  எனது 3,5,8 எழுத்துகளை இணைத்தால், அது நெஞ்சில்  கட்டிக்கொள்ளும் சளியைக் குறிக்கும்.
5.  எனது கடைசி மூன்று எழுத்துகள் காயத்தைக் குறிக்கும்.
6.  எனது 5,7,8 எழுத்துகள் காசு என்பதைக் குறிக்கும்.
7.  எனது 3,6,8 எழுத்துகளை இணைத்தால்,கையைக் குறிக்கும்.
8.  எனது 3,7,8 எழுத்துகளை இணைத்தால்,கிடைப்பது மிகச் சிறிய   அளவிலான நேரம்.
9.  என் முதல் நான்கு எழுத்துகள் சிவபெருமானை அழைப்பதாகும்.
     நான் யார் தெரியுமா?
    விடை : 1.சங்கராபரணம்.  2.சங்கம்.  3.ராகம்.  4.கபம்.  5.ரணம்.
                 6.பணம்.  7. கரம்.  8.கணம்.  9.சங்கரா.
 -- ஜி.எஸ்.எஸ்.  ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ்.ஞாயிறு, மே 11, 2014.