Saturday, June 18, 2016

தெரியுமா ? தெரியுமே! ஒரு துணுக்கு.

*   ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஒருவர் ஒரு நாளில் 10,000 அடிகள் நடக்க வேண்டுமாம்.  ஒரு நாள் குறைந்தாலும், மறு
     நாளில் அதைச் சமன் செய்யும்படி அதிகமாக நடக்க முயன்றுகொண்டு இருக்க வேண்டுமாம்.
ஒரு துணுக்கு.
"அண்மையில் நீங்கள் படித்ததில் அதிரச் செய்தது?"
     "அது ஒரு துணுக்கு,
      ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாராகிறது.  வாழ்வில்தான் தோற்றுப்போனோம்.  தற்கொலையிலும் தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை, சாவுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.
      தூக்கில் தொங்கலாம்;  ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால்...? விஷம் அருந்தலாம்;  ஒருவேளை அது கலப்படமாயிருந்தால்...?  கிணற்றில் குதிக்கலாம்;  ஒருவேளை நீர்மட்டம் குறைவாயிருந்தால்...?  தீயிட்டுக் கொள்ளலாம்;  பாதியில் அணைந்துபோனால்...?
      தகப்பன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது:
     "அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது, பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?"
      உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது !"
-- எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.   ( நானே கேள்வி... நானே பதில் ! ,  பகுதியில் ).
--   ஆனந்த விகடன். 26 -12 - 2012.                                              6 .5.14.

No comments: