Monday, February 15, 2016

ஏடிஎம் கார்டு

இனி ஏடிஎம் கார்டு தேவயில்லை:  ஐஎம்டி மூலம் பணம் அனுப்பலாம்
     பொதுத்துறை வங்கிகளில் முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய சேவையில் பணம் அனுப்புபவர், ஒரு வங்கிக் கிளையில் இருந்து பெறுபவரின் மொபைல் எண், 4 இலக்க ரகசிய குறியீட்டு எண், தொகை மற்றும் ஏடிஎம் அல்லது இன்டர்நெட் வங்கிச் சேவை மூலமாகப் பணம் வழங்கப்பட வேண்டுமா என்பது உள்ளிட்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.  மேலும் எஸ்எம்எஸ் அல்லது இன்டர்நெட் வங்கிச் சேவை மூலம் பெறுபவரின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணை வங்கியில் சமர்பிக்கவேண்டும்.  அதைத் தொடர்ந்து பணம் பெறுபவருக்கு ஒரு தனி குறியீட்டு எண்  எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும்.  அத்துடன் பணம் அனுப்புவரிடமிருந்து, அவர் பதிவு செய்த ரகசிய 4 இலக்க எண்ணையும் பெற்றுக்கொண்டு, அருகிலுள்ள ஐஎம்டி வசதிகொண்ட பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில் மொபைல் எண், எஸ் எம் எஸ் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
     ஐஎம்டி சேவை மூலம் அனைத்து வங்கிக் கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பண பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.  இந்த வசதியைப் பெற தனியாக ஏடிஎம் கார்டு பயன்படுத்த தேவையில்லை.  நெறிமுறைகளின் படி ஒவ்வொரு மாதமும், ஐஎம்டி சேவை மூலம் ரூ.25 ஆயிரம் வரையும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வரையும் பணம் அனுப்ப முடியும்.  இவ்வாறு பணம் அனுப்பியபின், 14 நாட்கள் வரை பெறுபவர் பணம் பெற்றுக்கொள்ளலாம்.  14 நாட்களில் இந்த பணத்தை எடுக்கவில்லையெனில், அந்த தொகை அனுப்பியவரின் வங்கிக்கணக்கில் மீண்டும் சேர்க்கப்படும்.  இவ்வாறு அனுப்பிய தொகையை வாடிக்கையாளர் விரும்பினால் திரும்பவும் பெற முடியும்.  ஒவ்வொரு முறையும் இவ்வாறு பணம் அனுப்ப ரூ.25 வசூலிக்கப்படுகிறது.
-- தினமலர்.  27- 3- 2014.      

No comments: