Monday, January 25, 2016

சிறுதானியங்கள்.

  தினை, கண்ணுக்கு நல்லது,  கம்பு பெண்ணுக்கு நல்லது!  கேழ்வரகு வளரும் குழந்தைக்கும், பனிவரகு வளர்ந்த பெரியவருக்கும் நல்லது!  --  இதனால்மட்டும் நான் சிறுதானியங்களை உயர்வாகச் சொல்லவில்லை.  சிறுதானியங்களின் சாகுபடிக்கு ஆகும் தண்ணீரின் அளவு, நெற்பயிருக்கு ஆகும் செலவைக் காட்டிலும் மிகவும் குறைவு.  இன்னொரு விஷயம் சிறுதானிய சாகுபடிக்கு மண்ணைப் புண்ணாக்கும் உரங்களோ, பூச்சிக்கொல்லி ரசாயனங்களோ தேவையில்லை.  இரண்டாம் உலகப் போரில் மீந்துபோன வெடிமருந்து உப்பை, எப்படியாவது விற்றுப் பிழைக்கவேண்டி இருந்ததால் உருவானதுதான் உரங்களின் வரலாறு என்று பலருக்கும் தெரியாது.  இப்போது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியத்தில் இந்தியாவின் மண்ணைக் கெடுக்கும் இந்த உரத்தின் பயன், குழந்தைக்குத் தரவேண்டிய தாய்ப்பாலை ஒதுக்கிவிட்டு புட்டிப்பாலில் புளகாங்கிதம் அடைவதைப் போலத்தான்.
-- மருத்துவர் கு.சிவராமன்.  'ஆறாம் திணை' தொடரில்...
--  ஆனந்த விகடன். 13-11-2013.  

No comments: