Friday, January 22, 2016

டென்ஷன் இல்லாமல் பயணிக்கலாம்!

கிளட்ச் வேண்டாம்... கியரும் வேண்டாம் டென்ஷன் இல்லாமல் பயணிக்கலாம்!
     வாகனங்களால் ஏற்கனவே திணறிக்கொண்டிருக்கும் சாலையில் நமது வாகனத்தை செலுத்துவதே பெரும் பாடு.  இதில் அவ்வப்போது, கிளட்சை மாற்றி...கியரை போட்டு... ஓட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.  இந்த துயரத்துக்கு நிவாரணம் கண்டுபிடித்து விட்டார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரியமணலி கொட்ட பாளயத்தைச் சேர்ந்த , தலைமை ஆசிரியர் செல்வகுமார்.
     ரோட்டில் ஓடும் பைக் முதல் லாரி வரை எல்லா வண்டிகளிலும் கிளட்ச், கியர் உள்ளது.  வேறு சில வாகனங்களில் கிளட்ச் இல்லாமல் நேரடியாக கியர் மாற்றுவது என்று நிறையவே விஷயங்கள் உள்ளன.  ஆனால், இப்போது செல்வகுமார் கண்டுபிடித்திருக்கும் புதுமாதிரியான இயங்திரத்தின் மூலம், வண்டியை ஓட்டுபவர்கள் எளிதாக தங்கள் வாகனங்களை இயக்க முடியும்.  கியர் மாற்றும்போது ரீ கிளட்சிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  எனவே, இந்த இயந்திர தொழில்நுட்பத்தை பைக் தொடங்கி பெரிய லாரிகள் வரை தங்குதடையின்றி பயன்படுத்த முடியும்.
     தொழிற்சாலைகளிலும் தேவையான இடங்களிலும் சிறிய மாற்றம் செய்து இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும்.  பொதுவாக, ஆட்டோமெட்டிக் கிளட்ச் கொண்ட வாகனங்களிலும், கிளட்ச் இல்லாமல் நேரடியாக கியர் மாற்றுதல், 2 ஆட்டோமெட்டிக் கிளட்ச் கொண்ட வாகனங்கள், சைக்கிள் ரிக் ஷா, மொபட் மற்றும் கருவிகளிலும் இவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாகனங்களை அதிக வேகத்தில், அதே நேரத்தில் குறைந்த எரிபொருளைக் கொண்டு இயக்க முடியும்.
     இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு 'சிம்பிள் ஷிப்ட் பவர் டிரான்ஸ்மிஷன்; நியூ கியர் ஷாப்ட் மெதட்' என்று பெயர்.
-- தினமலர். சண்டே ஸ்பெஷல் . 23-02- 2014. 

No comments: