Wednesday, January 13, 2016

'மென்தமிழ்' மென்பொருள்

  இந்த  மென்பொருளை  கம்ப்யூட்டர்,  லேப்டாப் போன்றவற்றில்  பதிவேற்றிவிட்டால்,  தமிழ்  வார்த்தைகளில்  உள்ள  தவறை  எளிதாகக்  கண்டுபிடித்து  ஒரு  வினாடியிலேயே  திருத்த  முடியும்.  வார்த்தையில்  ஒரு  எழுத்து  விடுபட்டிருக்கலாம்  அல்லது  தேவையில்லாமல்  ஒரு  எழுத்து  சேர்க்கப்பட்டிருக்கலாம்.  இதுபோன்ற  தவறுகளைக்  கண்டுபிடித்து  வினாடியிலேயே  திருத்துவதுதான்  இந்த  மென்பொருளின்  சிறப்பு.
     உதாரணத்துக்குக்  'கசலம்'  என்ற  தவறான  வார்த்தையைச்  சொற்பிழை  திருத்தியைக்கொண்டு  திருத்தும்போது 'கசம்',  'கலம்',  'கமலம்',  'கலசம்'  ஆகிய  வார்த்தைகள்  கம்ப்யூட்டர்  திரையில்  தோன்றும்.  அதில்  நமக்குத்  தேவையான  சரியான  வார்த்தையை  எடுத்துக்கொள்ள  வேண்டும்.
     சந்திப்  பிழையையும்  திருத்தமுடியும்.  எடுத்துக்காட்டாகப் 'படித்து  பார்த்தான்', 'வந்துப்  பார்த்தான்'  என்ற  வார்த்ட்தைகளில்  உள்ள  ஒற்றுப்  பிழையைத்  திருத்தி, 'படித்துப்  பார்த்தான்',  'வந்து  பார்த்தான்'  என்று  காண்பிக்கிறது.  எண்களைக்  கொடுத்தால்  எழுத்துகளாகக்குகிறது.  தமிழ்  எழுத்துகளுக்கு  எண்களைத்  தருகிறது.  அதாவது 1,20,00,000  எனத்  தட்டச்சு  செய்தால்  ஒரு  கோடியே  இருபது  லட்சம்  என்று  தமிழ்  எழுத்துகளாக  வருகிறது.  இந்த  மென்பொருளில்  உள்ள  56  ஆயிரம்  தமிழ்  அகராதி  சொற்களைக்  கொண்டு  கோடிக்கணக்கான  வார்த்தைகளைத்  திருத்த  முடியும்.
-- பேராசிரியர்  தெய்வசுந்தரம்.  'மென்தமிழ்'  மென்பொருளை  உருவாக்கியவர்.
-- பூச்செண்டு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜூன் 1, 2015.

No comments: