Sunday, January 31, 2016

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார் அளப்பரிய ஆச்சாரிய பக்தி
      வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சார்யனுக்கே முதலிடம்.  அப்படி ஆச்சார்யனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர் மதுரகவி ஆழ்வார்.  தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்த பெருமாளை 'உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று துதித்திருந்தவர் நம்மாழ்வார்.  நம்மாழ்வாருக்குக் கண்ணன் உயிர் தெய்வம் என்றால், மதுரகவி ஆழ்வாருக்கோ நம்மாழ்வாரே உயிர்.
     மதுரகவி ஆழ்வார் கருடனின் அவதாரம் என்று கொண்டாடப்படுகிறார்.  இவர் திருக்கோலூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.  இவர் குல வழக்கப்படி வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார்.  வேதம் தமிழில் செய்த மாறன் என்ற பெருமை பெற்ற நம்மாழ்வாரின் சீடரான இவர், தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் மிக்க புலமை படைத்தவராக இருந்தார்.
     முன்னதாக வட இந்தியப் பயணம் மேற்கொண்டு அயோத்தியில் ராமபிரானைத் தரிசித்தார்.  பின்னர் தென்திசை நோக்கி வரும்போது ஒரு புதிய ஜோதியைக் கண்டார்.  அந்த ஜோதி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக அவ்வோளியை நோக்கி வந்தார்.  அப்போது திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சோலை,திருவில்லிப்புத்தூர் ஆகிய திவ்ய தேசங்களைத் தரிசித்தார்.  அந்த தெய்வீகப் பயணத்தின் முடிவில் திருகுருகூர் என்ற புண்ணியத் தலத்தை அடைந்தார்.
     அந்த ஒளியின் இருப்பிடமே நம்மாழ்வார் வசிக்கும் இடம் என்பதைக் கண்டார் என்றும், அவரையே குருவாகக் கொண்டார் என்பதும் வைணவ மரபு சார்ந்த நம்பிக்கை.
     இவர் 11 திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை இயற்றியுள்ளார்.  இப்பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மதுரகவி ஆழ்வார் கொண்ட பக்தியைத் தெரிவிக்கின்றன.  ஆச்சாரியனைக் கொண்டாடும் விதமாக நம்மாழ்வாரை அர்ச்சா ரூபமாக எழுந்தருளச் செய்தார்.  அவர் அருளிய திவ்ய பிரபந்தங்களை நாம சங்கீர்த்தனமாக உலகோருக்குக் கற்றுக் கொடுத்தார்.
-- ராஜேஸ்வரி ஐயர்.  ஆனந்த ஜோதி.
--  'தி இந்து' நாளிதழ். வியாழன், மார்ச் 20,2014.  

Saturday, January 30, 2016

யார்,எது,என்ன?

1.  சஞ்சயன் வாய்மொழி........ அ.   சிவபெருமான்
2.  காண்டீபம் ..........................ஆ.   பரத முனிவர்.
3.  வாகீசன் .............................. இ.   அக்னி பகவான்.
4.  காதலாகிக் கசிந்து ............   ஈ    அமைச்சர்.
5.  பாசுபத அஸ்திரம் ...............உ.  ஞானசம்பந்தர்.
6.  பரத நாட்டிய சாஸ்திரம்......ஊ  சிரஞ்சீவி.
7.  சைதன்ய மகாபிரபு ............. எ.  சுந்தரர்.
8.  ஜாம்பவான் .......................... ஏ  மேற்கு வங்கம்.
9.  பித்தா பிறைசூடி ..................ஐ.  திருநாவுக்கரசர்.
10.விபீஷணன் ......................... ஒ.  பகவத் கீதை.
விடை :
1.  சஞ்சயன் வாய்மொழி -- கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்ன கீதையை சஞ்சயன் ஞான திருஷ்டியால் கண்டு  திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான்.
2.  காண்டீபம் என்னும் வில்லை அர்ச்சுனனுக்குக் கொடுத்தார் அக்னி பகவான்.
3.  வாகீசன் என்று திருநாவுக்கரசரைக் குறிப்பிடுவர்.
4.  காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் பாடலை எழுதியவர் ஞானசம்பந்தர்.
5.  பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனுக்கு அளித்தவர் சிவபெருமான்.
6.  பரத நாட்டிய சாஸ்திரம் நூலை எழுதியவர் பரதமுனிவர்.
7.  சைதன்ய மகாபிரபு மேற்கு வங்கத்தில் பிறந்தவர்.
8.  ஜாம்பவான், சுக்ரீவனின் அமைச்சர்.
9.  பித்தா பிறைசூடி எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் சுந்தரர்.
10.விபீஷணன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
-- ஆனந்த ஜோதி.
--  'தி இந்து' நாளிதழ். வியாழன், மார்ச் 20,2014. 

Friday, January 29, 2016

வெற்றிலைத் தாம்பூலம்

  சாப்பிட்டதும் வெற்றிலை போடுவது நம்மிடம் இருந்த ஒரு பழக்கம்.  ஆனால் இன்று வெற்றிலை போடுவது நாகரிகமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.  வெற்றிலை ஒரு போதைப் பொருள் அல்ல.  அதன் மருத்துவ குணத்தால் வீட்டு விஷேச நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை தாம்பூலத்திற்குத் தனி இடமுண்டு.  வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால் மிளகு, சாதிக்காய் ஆகியவற்றைச் சேர்த்துப் மெல்லும்போது பல விதமான மருத்துவப் பலன்கள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன.
     வெற்றிலை - வாயில் நறுமணம் உண்டாகும்.  பாக்கு - மலச்சிக்கலை நீக்கும். கோழை, கிருமியை நீக்கும்.  சுண்ணாம்பு - உணவை எளிதில் சீரணிக்கும். பற்களுக்கு உறுதியளிக்கும்.  உடலுக்கு இன்றியமையாததான சுண்ணாம்புஸ் சத்தை ( calclum) வழங்கும்.  ஏலம் - தொண்டை, வாய் இவைகளில் உண்டாகும் நோய்களை நீக்கும்.  வால்மிளகு - தாகம், வயிற்றுப்புண் நீக்கும். பசி உண்டாக்கும்.  சாதிக்காய் - வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், பசி மந்தம் நீங்கும்.  கிராம்பு - முகக் களிப்புண்டாகும்.
---சுந்தர லட்சுமி.   வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி. மார்ச் 15, 2014.     

Thursday, January 28, 2016

சிரிக்கத் தெரிந்த உயிரினம்?


1.  உலகில் சிரிக்கத் தெரிந்த உயிரினம், 'மனிதன்'.
2.  மனிதன் சிரிக்கும்போது 17 தசைகள் இயங்குகின்றன.  கோபமடையும்போது 43 தசைகள் இயங்குகின்றன.
3.  மனித வாழ்வில் கண்கள் மூலமே 81 சதவீத தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.  காது மூலம் 7.1 சதவீதம், தொடுவது,
     சுவையறிதல் மூலம் 1.5 சதவீதம்  தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
4.  ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 150 சொற்களை பேச முடியும்.
5.  மனிதன் பேசுவதற்கு உடலில் உள்ள 72 தசைகள் வேலை செய்ய வேண்டும்.
6.  மனித உடலில் உள்ள மிக மென்மையான உள் உறுப்பு 'மூளை'.
7.  மனிதனின் கண்களால் 70 லட்சம் நிறங்களைப் பிரித்தறிய முடியும்.
8.  தாயின் கருவில் முதலில் தோன்றும் உறுப்பு இதயம்.
9.  மனித உடலில் மிகச் சிறிய எலும்பு உள்ள உறுப்பு காது.
10. மனிதன் ஓர் ஆண்டில், சராசரியாக 1400 கனவுகளைக் காண்கிறான்.
-- இரா.நாகராஜன்.  நம்ப முடிகிறதா?  மாயாபஜார்.
--  'தி இந்து' நாளிதழ். புதன், மார்ச் 19, 2014.                                      

Wednesday, January 27, 2016

விந்தை உலகம்

  உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரை ஒருவர் திருடி விட்டார் என்றால் நம்பமுடிகிறதா?  ஆனால், ஒரு நிமிடத்தில் அதைச் செய்துவிட்டார்.   அமெரிக்காவைச் சேர்ந்த ஸாச் கிங்.  இவர் சமீபத்தில் Youtube தளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் தன் இரு விரல்களால் ஈபிள் டவரைத் திருடிச் செல்வதுபோல மாயாஜாலம் செய்துள்ளார்.  இந்த ஏழு வினாடிகள் ஓடும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது ஒரு கண்கட்டி வித்தை போன்றதுதான் என்றாலும் இதை இணையதளத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்துவருகின்றனர்.  இவர் இதுபோன்று பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  வீடியோ சுட்டி : htpps://www.youtube.com/watch ?v=AyjLjbRI- ZQ
-- வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி. மார்ச் 15, 2014.  

Tuesday, January 26, 2016

ஐசோபோட்

  ஓர் உயிரினத்தால் அதிகபட்சம் எத்தனை நாட்கள் சாப்பிடாமல் உயிர் வாழ முடியும்?  1,500 நாட்கள்.  அதாவது நான்கு வருடங்கள் தொடர்ந்து உயிர் வாழ்ந்துவருகிறது ஒரு ஜீவன்.  ஜப்பானின் கடல்வாழ் உயிரினக் காப்பகத்தில் உள்ள ஐசோபோட் என்ற கடல் வாழ் உயிரினம்தான் அது.  கடந்த 2007-ம் வருடம் மெக்சிகோ கடல் பகுதியில் அகப்பட்ட ஐசோபோட் , இந்தக் காப்பகத்துக்கு வந்த அன்று மேக்கரல் என்னும் மீனை ஐந்தே நிமிடங்களில் தின்று தீர்த்தது.  ஆனால், அதன் பிறகு இதுவரை எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறது ஐசோபோட்.  சாதாரணமாக, நாள் ஒன்றுக்குத் தனது எடைக்கு நிகரான உணவை உட்கொள்ளும் வழக்கமான ஐசோபோட் நான்கு ஆண்டுகளாகச் சாப்பிடாமல் இருப்பதும், இன்றும் உயிரோடு இருப்பதும் ஆச்சர்யம் என்கிறார்கள் காப்பக ஊழியர்கள்.  -  திரும்பக் கொண்டுபோய் கடல்ல விடுங்கப்பா!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன்.  06-03-2013.      

வானத்தில் ஒரு வர்ணஜாலம்

  (  சிறப்பு )
   புதன், வெள்ளி, செவ்வாய், ஜுப்பிடர்  மற்றும்  சனி  கோள்கள்  ஜன 20  முதல் பிப் 20  வரை காணப்படும்.
கடந்த  2005-ம்  ஆண்டிற்கு  பிறகு  இது  நடக்கவில்லை.
   சூரிய  மண்டலத்தில்  உள்ள  பிரகாசமான  கோள்கள்  எவ்விதமான  உபகரணங்களும்  இல்லாமல்  எளிதாக  பார்க்கக்  கூடிய  வகையில்  அமைந்துள்ளது.  இது  நம்  முன்னோர்கள்  பழங்காலத்தில்  பார்த்ததைப்  போன்றதாகும்.
   இந்த  கோள்களை  எளிதாக  பார்க்க  இயலும்.  ஏனென்றால்  சூரிய  ஒளியில்  பிரதிபலிக்க  கூடிய  தூரத்தில்  அமைந்திருக்கும்  மின்னுகின்ற  நட்சத்திரங்களைவிட  அருகில்  உள்ளது.  சூரியனிடமிருந்து  வரிசைப்படி  புதன், வெள்ளி, செவ்வாய், ஜூபிடர்  மற்றும்  சனி  அமைந்துள்ளது.
   உலகத்தின்  எந்த  பகுதியிலிருந்தும்  விடியற்காலையில்  இந்த  நிகழ்வை  காணலாம்.
-- தினமலர். திருச்சி  24-1-2016.  

Monday, January 25, 2016

சிறுதானியங்கள்.

  தினை, கண்ணுக்கு நல்லது,  கம்பு பெண்ணுக்கு நல்லது!  கேழ்வரகு வளரும் குழந்தைக்கும், பனிவரகு வளர்ந்த பெரியவருக்கும் நல்லது!  --  இதனால்மட்டும் நான் சிறுதானியங்களை உயர்வாகச் சொல்லவில்லை.  சிறுதானியங்களின் சாகுபடிக்கு ஆகும் தண்ணீரின் அளவு, நெற்பயிருக்கு ஆகும் செலவைக் காட்டிலும் மிகவும் குறைவு.  இன்னொரு விஷயம் சிறுதானிய சாகுபடிக்கு மண்ணைப் புண்ணாக்கும் உரங்களோ, பூச்சிக்கொல்லி ரசாயனங்களோ தேவையில்லை.  இரண்டாம் உலகப் போரில் மீந்துபோன வெடிமருந்து உப்பை, எப்படியாவது விற்றுப் பிழைக்கவேண்டி இருந்ததால் உருவானதுதான் உரங்களின் வரலாறு என்று பலருக்கும் தெரியாது.  இப்போது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியத்தில் இந்தியாவின் மண்ணைக் கெடுக்கும் இந்த உரத்தின் பயன், குழந்தைக்குத் தரவேண்டிய தாய்ப்பாலை ஒதுக்கிவிட்டு புட்டிப்பாலில் புளகாங்கிதம் அடைவதைப் போலத்தான்.
-- மருத்துவர் கு.சிவராமன்.  'ஆறாம் திணை' தொடரில்...
--  ஆனந்த விகடன். 13-11-2013.  

Sunday, January 24, 2016

இணைய வெளியிடையே...

*  பாட்டனி என்பது தாவரவியல்.  கூட்டணி என்பது 'தாவுர'வியல்.!
    arivuos@ twitter.com
*   மலையாளத்தில் 'சம்சாரித்தல்' னா -- பேசிக்கொண்டிருப்பது என்ற பொருள் தமிழ் சம்சாரத்திலிருந்து மருவி இருக்கலாம்.!
    arattagiri@twitter.com
*  பொட்டும் பூவும் வைத்து பார்க்கிறாள் விதவை...தன் கணவன் புகைப்படத்திற்கு!
   sarani@twitter.com
*  வங்கி ஊழியர்களை பொறுத்தவரை கம்ப்யூட்டர் என்பது பெரிய சைஸ் கால்குலேட்டர்... ஒரே விரல்தான்!
   arasu@twitter.com
*  நம்மள கால வார நினைக்கிறவன் எப்பவும் நம்ம காலுக்கு கீழ தான் இருப்பான்  --  இலங்கை!
   kanal@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர்.  16-3-2014.  

Saturday, January 23, 2016

சூரிய சக்தி கழிவறை

முதல் சூரிய சக்தி கழிவறை இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.
தண்ணீர் தேவையில்லை ; சுற்றுச் சூழலுக்கு உகந்தது.
     உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவியின் பெயரில் இயங்கும் பில் அண்டுமெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷன்7 லட்சத்து 77 ஆயிரம் டாலர்களை ( ரூ.4.76 கோடி ) நிதி ஒதுக்கியது.
     இக்கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள எட்டு சூரிய சக்தித் தகடுகள் மூலம் சூரிய ஒளி, மன்சாரமாக மாற்றப்படுகிறது.     இக்கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி இழை வடங்கள் 600 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பத்தை வெளிப்படுத்தி மனித கழிவுகளை உயிரிக்கரிமமாக ( பயோகார்) மாற்றுகின்றன.
     இந்த உயிரிக் கரிமத்தை வேளாண்துறையில் மண்வளத்தைப் பெருக்கப் பயன்படுத்தலாம்.  கார்பன் வெளியேற்றப்படாமல் மண்ணிலேயே தக்கவைக்கப்படுவதன் மூலம் பசுமையில்லா வாயுவான கரியமில வாயு ( கார்பன் டை ஆக்ஸைடு ) காற்றுமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது.  மண் வளத்தைப் பெருக்கும் உயிரிக் கரிமம், மண்ணுடன் 10 சதவீதம் சேர்க்கப்பட்டால் அது வழக்கமான மண்ணைவிட 50 சதவீதம் அதிக அளவு நீரைத் தக்கவைக்கும் திறனைப் பெறுகிறது.  இதனால், பயிர்களுக்கு தேவையான நீரும், ஊட்டச் சத்துகளும் போதிய அளவு கிடைக்கும்.
     இந்த உயிரிக் கரிமத்தை, உயிரி நிலக்கரியாக எரிக்கவும் செய்யலாம்.  வர்த்தக ரீதியாக எரிக்கும் உயிரி நிலக்கரியை விட இந்த உயிரி கரிமம்  அதிக வெப்பத்தைத் தர வல்லது.
     தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு கழிப்பறை ஒரு நாளில் 4 அல்லது 6 நபர்கள் பயன்படுத்தும் வகையிலானது. இப்புதிய கழிவறையை குறிப்பிட்ட வகையில் இணைப்பதன் மூலம் பல குடும்பத்தினர் பயன்படுத்த முடியும்.
     பாதுகாப்பற்ற கழிவறைகளால் சேமிக்கப்படும் மனிதக் கழிவுகள், பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன.  இவற்றால் உணவு மற்றும் நீர் மாசுபடுவதுடன், ஆண்டு தோறும் உலகம் முழுவதும் 7 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது.
     சோதனை முறையில் உருவாக்கப்பட்ட இக்கழிவறைகள், டெல்லியில் வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கொண்டுவரப்பட்டுள்ளன.
-- சர்வதேசம் .  'தி இந்து' நாளிதழ். சனி,மார்ச் 15,2014.
-- தினமலர்.  15-3-2014.                                                          

Friday, January 22, 2016

டென்ஷன் இல்லாமல் பயணிக்கலாம்!

கிளட்ச் வேண்டாம்... கியரும் வேண்டாம் டென்ஷன் இல்லாமல் பயணிக்கலாம்!
     வாகனங்களால் ஏற்கனவே திணறிக்கொண்டிருக்கும் சாலையில் நமது வாகனத்தை செலுத்துவதே பெரும் பாடு.  இதில் அவ்வப்போது, கிளட்சை மாற்றி...கியரை போட்டு... ஓட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.  இந்த துயரத்துக்கு நிவாரணம் கண்டுபிடித்து விட்டார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரியமணலி கொட்ட பாளயத்தைச் சேர்ந்த , தலைமை ஆசிரியர் செல்வகுமார்.
     ரோட்டில் ஓடும் பைக் முதல் லாரி வரை எல்லா வண்டிகளிலும் கிளட்ச், கியர் உள்ளது.  வேறு சில வாகனங்களில் கிளட்ச் இல்லாமல் நேரடியாக கியர் மாற்றுவது என்று நிறையவே விஷயங்கள் உள்ளன.  ஆனால், இப்போது செல்வகுமார் கண்டுபிடித்திருக்கும் புதுமாதிரியான இயங்திரத்தின் மூலம், வண்டியை ஓட்டுபவர்கள் எளிதாக தங்கள் வாகனங்களை இயக்க முடியும்.  கியர் மாற்றும்போது ரீ கிளட்சிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  எனவே, இந்த இயந்திர தொழில்நுட்பத்தை பைக் தொடங்கி பெரிய லாரிகள் வரை தங்குதடையின்றி பயன்படுத்த முடியும்.
     தொழிற்சாலைகளிலும் தேவையான இடங்களிலும் சிறிய மாற்றம் செய்து இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும்.  பொதுவாக, ஆட்டோமெட்டிக் கிளட்ச் கொண்ட வாகனங்களிலும், கிளட்ச் இல்லாமல் நேரடியாக கியர் மாற்றுதல், 2 ஆட்டோமெட்டிக் கிளட்ச் கொண்ட வாகனங்கள், சைக்கிள் ரிக் ஷா, மொபட் மற்றும் கருவிகளிலும் இவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாகனங்களை அதிக வேகத்தில், அதே நேரத்தில் குறைந்த எரிபொருளைக் கொண்டு இயக்க முடியும்.
     இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு 'சிம்பிள் ஷிப்ட் பவர் டிரான்ஸ்மிஷன்; நியூ கியர் ஷாப்ட் மெதட்' என்று பெயர்.
-- தினமலர். சண்டே ஸ்பெஷல் . 23-02- 2014. 

Thursday, January 21, 2016

எந்த இடத்திற்கு என்ன ஆதிக்கம்?

பூஜை அறை  --  சூரியன் ஆதிக்கம்.
தண்ணீர் கிணறு  --  சந்திரன் ஆதிக்கம்.
சமையல் அறை  --  செவ்வாயின் ஆதிக்கம்.
உக்கிரான அறை  --  குருவின் ஆதிக்கம்.
படுக்கை அறை  --  சுக்கிரனின் ஆதிக்கம்.
கல்விக்காக ஒதுக்குமிடம்  --  புதன் ஆதிக்கம்.
பழைய பொருட்கள் வைக்குமிடம்  --  சனி ஆதிக்கம்.
-- தினத்தந்தி. இணைப்பு. 10-3-2014  
--  இதழ் உதவி : s.முருகானந்தம். A.C. Retd.  வேளச்சேரி ,  சென்னை.42.  

Wednesday, January 20, 2016

யாரிடம் எப்படி பேச வேண்டும்?

தாயிடம் அன்பாகப் பேசுங்கள்
தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்
குழந்தையிடம் உற்சாகமாகப் பேசுங்கள்
நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்
அதிகாரிகளிடம் அடக்கமாகப் பேசுங்கள்
ஆசிரியரிடம் மரியாதையுடன் பேசுங்கள்
அரசியல்வாதிகளிடம்  சாமர்த்தியமாகப்  பேசுங்கள்.
இறைவனிடத்தில் மவுனமாகப் பேசுங்கள்.
--தினத்தந்தி. இணைப்பு. 10-3-2014
-- இதழ் உதவி : s.முருகானந்தம். A.C. Retd.  வேளச்சேரி ,  சென்னை. 42.   

Tuesday, January 19, 2016

மாற்றம் இல்லாதது!

" 'மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது' என்பது போல வேறு ஏதேனும் கூற முடியுமா?"
 " நிலையாமை ஒன்றுதான் நிலையானது !"
-- எம்.எஸ்.மணி, பெங்களூரு.
"முத்தமிழ் அறிஞருக்கு மிகவும் பிடித்தது?"
"அவ்வப்போது 'இயல்', 'இசை;' எப்போதும் 'நாடகம்!"
-- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.
-- நானே கேள்வி...நானே பதில்!  பகுதியில்.
--  ஆனந்த விகடன்.26-02-2014.  

Monday, January 18, 2016

மசானா ஃபுகாகோ.

    'உனக்குத் தேவையானவற்றை விதை; அல்லது தூவிச் செல்.  அதன் பின் விளைந்து நிற்கும் உனக்குத் தேவையான பொருளை மட்டும் அறுவடை செய்துகொள்...'  அதுவரை மண்ணை இடையூறு செய்யாமல் விலகி நில்'  என்பதுதான் உலகின் முதல் இயற்கை விஞ்ஞானி மசானா ஃபுகாகோவின் சித்தாந்தம்.  உருவாக்கப்படும் அல்லது பெருகும் உணவுத்தேவைக்கு எனச் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டுப்போன இந்தச் சித்தாந்தத்தில் தொலைந்துவருவது பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிகைக் கூட்டமும்தான்.
-- மருத்துவர் கு.சிவராமன்.  'ஆறாம் திணை' தொடரில்...
-- ஆனந்த விகடன்.26-02-2014. 

Sunday, January 17, 2016

கேள்வி - பதில்!

*  திருச்சி தி.மு.க. மாநாட்டில் பேசுவதற்காக சென்னை கன்னிமாரா நூலகம் சென்று குறிப்பெடுத்த தி.மு.க. பிரபலம் யார்?
    -- : குஷ்பு  --  'ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்' என்ற தலைப்பில் பேசுவதற்காக அவர் குறிப்புகள் சேகரித்தார்.
*  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தியரின் பெயர் என்ன?
    -- : சத்யா நாதெள்ளா.
*  நரேந்திர மோடிக்கு ஆதரவாக அரை நிர்வாண போஸ் கொடுத்த இந்தி நடிகை யார்?
    -- : மேக்னா படேல்.
*  ஐ.பி.எல். ஏலத்தில் அதிக ட்கொகைக்கு ஏலம் போன இந்திய கிரிக்கெட் வீரர் யார்?  அது எவ்வளவு தொகை?
    -- : யுவராஜ் சிங்.  --  14 கோடி ரூபாய்.
*  தமிழகத்தில் 'அம்மா' என்ற பெயருடன் தொடங்கவிருக்கும் அடுத்த திட்டம் என்ன?
    -- : 'அம்மா மருந்தகங்கள்' !
*  கட்சியின் கூட்டணி வியூகம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மொபைல் போன் மூலம் பேட்டியளித்த கட்சித் தலைவர்
    யார்?              
    -- : நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்.
-- ம.கா.செந்தில்குமார் .  நா.சிபிச்சக்கரவர்த்தி.
-- ஆனந்த விகடன்.26-02-2014.   

Saturday, January 16, 2016

வார்த்தைகள் போதாது!

  சீன அறிஞர் கொன்பூசியஸ்கூட பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே 'எல்லா வார்த்தைகளும் சேர்ந்தாலும் சரியான உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது' என்று சொல்லியிருக்கிறார்.  ஒன்றை விவரிப்பதற்கு ஒரு மொழியில் மட்டும் உள்ள வார்த்தைகள் போதாது.  குறைந்தது 10 மொழிகளாவது தெரிந்திருக்கவேண்டும்.  'சாந்தி முகூர்த்தம்' என்ற பதத்துக்கு ஆங்கில வார்த்தை இல்லை.  'இடது கால் செருப்பு'க்கு மட்டும் ஆப்பிரிக்க மொழியில் ஒரு வார்த்தை உண்டு.  தமிழில் கிடையாது.  ஆகவே, பல மொழிகள் தெரிந்தால்தான் அது சாத்தியமாகும்.  செவ்விலக்கியத்தின் வரைவிலக்கணம் என்னவென்றால், அது எதைச் சொல்லப் புறப்பட்டதோ அதைச் சொல்லி முடிப்பதற்கு முன்னரே அது முடிந்துவிடும் என்பது.  பிரச்சனை என்னவென்றால், மனிதன் முதலில் சிந்தித்தான்.  பின்னர்தான் வார்த்தை பிறந்தது.  எப்போதும் சிந்தனை கொஞ்சம் முன்னுக்கும் வார்த்தை ஓரடி பின்னுக்கும் தான் இருக்கும்.
-- விகடன் மேடை.  வாசகர் கேள்விகள்... அ.முத்துலிங்கம் பதில்கள்.
-- ஆனந்த விகடன்.26-02-2014.  

Friday, January 15, 2016

படித்ததில் பிடித்தது !

 ஆங்கிலத்தில்  எதிர்மறையாக  பொருள்  தரும் fal,  end,  no  போன்ற  வார்த்தைகளுக்கு  தனது  ஸ்டைலில்  தன்னம்பிக்கையாக  விளக்கம்  தந்தவர்  மறைந்த  மக்கள்  ஜனாதிபதி  அப்துல்  கலாம்.
கற்றுக்கொள்ள  முதல்  வாய்ப்பு...
     FAIL  என்ற  வார்த்தைக்கு  ( First  Attempt  in  Leanning )  'கற்றுக்கொள்வதற்கான  முதல்  வாய்ப்பு'  என  அவர்  விளக்கம்  அளித்துள்ளார்.
     முயற்சி  தோற்பதில்லை...
     இதேபோல், END  என்பதற்கு  'Effort  Never  Dies'  என  கலாம்  விளக்கமளித்துள்ளார்.  அதாவது  'முயற்சி  ஒரு  போதும்  தோற்பது  இல்லை'  என்பது  அதன்  பொருளாகும்.
     அடுத்த  வாய்ப்பு...
     NO  என்ற  வார்த்தைக்கு 'Next  Opportunity'  அதாவது  'அடுத்த  வாய்பு'  என  விளக்கம்  அளித்து  வாழ்க்கை  மீதான  நம்பிக்கையை  ஏற்படுத்தியவர்தான்  கலாம்.
-- தினமலர். திருச்சி.  பெண்கள்மலர்  இனைப்பு .  8-8-2015. 

Thursday, January 14, 2016

அனோ நுவோ.

  ' அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அனோ நுவோ (Ano Nuevo) என்று ஓர் இடம் இருக்கிறது.  2000-ம் ஆண்டு பிறந்த பின்னர் வந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அனோ நுவோ கடற்கரைக்குப் போனேன்.  சும்மா போக முடியாது.  நுழைவுச் சீட்டு எடுக்க வேண்டும்.  ஏனெனில், அது முக்கியமான நாள்.  யானைச் சீல்களை ( Elephant Seals ) பார்ப்பதற்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.
     ஜனவரி தொடக்கத்திலேயே ஆண் சீல்கள், 4,000 மைல் தூரத்தில் இருக்கும் அலாஸ்காவில் இருந்து நீந்தி அனோ நுவோ கடற்கரைக்கு வரும்.  பெண் சீல்கள் எதிர் திசையில் 3,000 மைல் தொலைவில் இருக்கும் ஹவாய் தீவில் இருந்து புறப்பட்டு அனோ நுவோ வரும்.  பெண் சீல்களை தம் வசமாக்க ஆண் சீல்கள் பயங்கரமாகச் சண்டை போடும்.  நினைத்துப் பார்க்க முடியாத மூர்க்கத்தோடு ஒன்றையொன்று தாக்கும்.  அதிபலம் கொண்ட ஆண் சீல்கள் தமக்கென பல பெண் சீல்களை வளைத்து வைத்துக்கொள்ளும்.  அந்தக் காலத்து அரசர்கள் அந்தப்புரத்தில் பெண்களைச் சிறைபிடித்துப் பாதுகாப்பது போலத்தான்.
     பல நோஞ்சான் ஆண் சீல்களுக்கு பெண் சீல்கள் கிடைக்காமலே போய்விடும்.  ஆண்- பெண் சீல்களுக்கு இடையே காதல் உச்சகட்டம் அடைவது பிப்ரவரி 14 அன்றுதான்.  பிறகு, தாய் சீல்கள் பிறந்த குட்டிகளை அங்கேயே விட்டுவிட்டு ஹவாய்க்குத் திரும்ப, ஆண் சீல்களும் அலாஸ்கா போய்விடும்.  மறுபடியும் சந்திப்பு அடுத்த வருடம் நிகழும் .  காதலர் தினமாக பிப்ரவரி 14 அறிவிக்கப்பட்டதற்குக் காரணம், இந்தத் தேதியில் வருடா வருடம் நடக்கும் சீல்களின் சங்கமம்தான் என்று 'அனோ நுவோ'வாசிகள் கூச்சம் இல்லாமல் அடித்துச் சொல்வார்கள்!'.
-- விகடன் மேடை.  வாசகர் கேள்விகள்... அ.முத்துலிங்கம் பதில்கள்.
-- ஆனந்த விகடன்.26-02-2014.    

Wednesday, January 13, 2016

'மென்தமிழ்' மென்பொருள்

  இந்த  மென்பொருளை  கம்ப்யூட்டர்,  லேப்டாப் போன்றவற்றில்  பதிவேற்றிவிட்டால்,  தமிழ்  வார்த்தைகளில்  உள்ள  தவறை  எளிதாகக்  கண்டுபிடித்து  ஒரு  வினாடியிலேயே  திருத்த  முடியும்.  வார்த்தையில்  ஒரு  எழுத்து  விடுபட்டிருக்கலாம்  அல்லது  தேவையில்லாமல்  ஒரு  எழுத்து  சேர்க்கப்பட்டிருக்கலாம்.  இதுபோன்ற  தவறுகளைக்  கண்டுபிடித்து  வினாடியிலேயே  திருத்துவதுதான்  இந்த  மென்பொருளின்  சிறப்பு.
     உதாரணத்துக்குக்  'கசலம்'  என்ற  தவறான  வார்த்தையைச்  சொற்பிழை  திருத்தியைக்கொண்டு  திருத்தும்போது 'கசம்',  'கலம்',  'கமலம்',  'கலசம்'  ஆகிய  வார்த்தைகள்  கம்ப்யூட்டர்  திரையில்  தோன்றும்.  அதில்  நமக்குத்  தேவையான  சரியான  வார்த்தையை  எடுத்துக்கொள்ள  வேண்டும்.
     சந்திப்  பிழையையும்  திருத்தமுடியும்.  எடுத்துக்காட்டாகப் 'படித்து  பார்த்தான்', 'வந்துப்  பார்த்தான்'  என்ற  வார்த்ட்தைகளில்  உள்ள  ஒற்றுப்  பிழையைத்  திருத்தி, 'படித்துப்  பார்த்தான்',  'வந்து  பார்த்தான்'  என்று  காண்பிக்கிறது.  எண்களைக்  கொடுத்தால்  எழுத்துகளாகக்குகிறது.  தமிழ்  எழுத்துகளுக்கு  எண்களைத்  தருகிறது.  அதாவது 1,20,00,000  எனத்  தட்டச்சு  செய்தால்  ஒரு  கோடியே  இருபது  லட்சம்  என்று  தமிழ்  எழுத்துகளாக  வருகிறது.  இந்த  மென்பொருளில்  உள்ள  56  ஆயிரம்  தமிழ்  அகராதி  சொற்களைக்  கொண்டு  கோடிக்கணக்கான  வார்த்தைகளைத்  திருத்த  முடியும்.
-- பேராசிரியர்  தெய்வசுந்தரம்.  'மென்தமிழ்'  மென்பொருளை  உருவாக்கியவர்.
-- பூச்செண்டு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜூன் 1, 2015.

Tuesday, January 12, 2016

Packet CHIP

  லேட்டஸ்ட்டாய்  Packet  CHIP  என்னும்  புதுவகை  கணினியை  கண்டறிந்து  மார்க்கெட்டில்  இறக்கியுள்ளனர்  விஞ்ஞானிகள்.  அதான்,  டெய்லி  ஒரு  மாடல்  மார்க்கெட்டுக்கு  வருதே  என்று  நீங்கள்  சலிப்பது  கேட்கிறது.  இது  கொஞ்சம்  புதுசு  கண்ணா  புதுசு  ரகம்.  இதன்  மொத்த  அளவே  விசிட்டிங்  கார்ட்  சைஸ்தான்.  ஆனால்  பெர்பாமன்ஸோ  மிரட்டுகிறது.  இவ்வளவு  சின்ன  கம்ப்யூட்ட்டர்னா  விலை  எக்கச்சக்கமா  இருக்குமே  என்ற  கவலை  வேண்டாம்.
     வெறும்  9  டாலர்கள்தான்  இதன்  விலை.  நம்மூர்  மதிப்பில்  600  ரூபாய்.  இந்த  வகை  கணினி  மூலம்  பிரவுசிங்  செய்யலாம்.  சில  ஆப்ஸ்களை   நிறுவி  பணிகளைச்  செய்யலாம்.  சரி,  இதுக்கு  மானிட்டர்  தனியா  வாங்கணுமா  என்ற   கேள்வி  எழுகிறதா?  டோண்ட்  ஒர்ரி, இதி  நீங்கள்  டிவியில்  கனெக்ட்  செய்து  ஆபரேட்  செய்து  கொள்ளலாம்.  லினக்ஸ்  என்னும்  ஓப்பன்  ஸோர்ஸ்  சாப்ட்வேரில்  இயங்கும்  இந்த  கணினி  கூடிய  விரைவிலேயே  எல்லாருடைய  பாக்கெட்டிலும்  இடம்  பிடிக்கப்  போகிறது.
-- - ரவி  நாகராஜன்.  (  டெக்  மார்க்கெட் ) .  சண்டே  ஸ்பெஷல்.
--  தினமலர்.  திருச்சி.  17-5-2015.     

Monday, January 11, 2016

ஒரே நேரத்தில் 8 சிம்கள்

   டூயல்  சிம்  போன்கள்  தொடங்கி  இப்போது  4  சிம்கள்  பயன்படுத்தக்  கூடிய  போன்  மாடல்கள்  வரை  வந்துவிட்டது.  ஆனால்  இவற்றில்  இருக்கும்  பெரிய  குறை, எத்தனை  சிம்கள்  இருந்தாலும்  ஒரு  நேரத்தில்  ஒரு  சிம்தான்  வேலை  செய்யும்.  ஏனெனில்  செல்போனில்  ஒரு  நேரத்தில்  ஒரு  கனெக் ஷன்  மட்டுமே  சாத்தியம்.  பல  நாட்களாய்  இது  குறித்து  ஆராய்ச்சி  செய்து  வந்த  பிளாக்பெர்ரி  நிறுவனம்  இப்போது  ஒரே  நேரத்தில்  8  சிம்கள்  வரை  பயன்படுத்தும்  புதிய  ஆர்க்கிடெக்கர்  முறையை  கண்டறிந்துள்ளது.  இந்த  வகை  ஆர்க்கிடெக்கரில்  சிம்  கார்டுக்கென  தனி  ஸ்லாட்  எல்லாம்  கிடையாது.  ஒரு  காமன்  டிவைஸை  மாஸ்டர்சிம் போல  டிசைன்  செய்திருக்கிறார்கள்.
     இதில்  நமக்கு  எத்தனை  நம்பர்கள்  வேண்டுமோ  அத்தனை  நம்பர்களை  இணைத்துக்கொள்ளலாம்.  மேலும்  மைக்ரோ  சிம்,  நானோ  சிம்  போன்ற  பிரச்னைகளும்  இல்லை.  ஸோ,  இனி  நீங்கள்  பெர்சனல்  வேலைக்கு  ஒரு  போன்,  புரொபஷனல்  வேலைக்கு  ஒரு  போன்  என்று  தூக்கித்  திரிய  தேவையில்லை.
-- ரவி  நாகராஜன்.  (  டெக்  மார்க்கெட் ) .  சண்டே  ஸ்பெஷல்.
--  தினமலர்.  திருச்சி.  17-5-2015.    

Sunday, January 10, 2016

f இணைய வெளியிடையே t.

*   பிள்ளைகளுக்கு  திருமணம்செய்ய  நினைக்கும்  பெற்றோர்கள்  அவர்கள்  ஜாதகத்தை  ஆராய்வதற்குமுன்  அவர்களின்  செல்போனை  ஆராய்ந்து  பார்த்தால்  பாதிவேலை  மிச்சமாகும்.
    karunaimalar@ twitter.com
*   பாதி  கவலைகள்  கற்பனையானவை,  மீதி  தற்காலிகமானவை.
    lamswathee @ twitter.com
*   அடிக்கடி  பாராட்டு  விழா  நடந்தா  அது  -  திமுக  ஆட்சி !!
    அடிக்கடி  பதவி  ஏற்பு  விழா  நடந்தா  அது  -  அதிமுக  ஆட்சி !!  தட்ஸ்  ஆல்  யுவர்  ஹானர்.
    staliinsy50 @ twitter.com
*   தூக்கத்தின்  வாழ்வுதனை  செல்போன்  கவ்வும்  மீண்டும்  தூக்கமே  வெல்லும்.
    soonapanna@twitter.com
+  ஓடி  விளையாடு  பாப்பா...
    அப்பாவ  ஓட  விடாத  பாப்பா...
    அப்பாவுக்கு  நாக்கு  தள்ளுது  பாப்பா.
    sakthivel  twut @ twitter.com
--  சண்டே  ஸ்பெஷல்.
-- தினமலர்.  திருச்சி.  31-5-2015.   

Saturday, January 9, 2016

சூப்பர் சிப்!

   EPFL's  (  Ecole  Polyechnique  Federale  de  Lausanne )  என்ற  ஆராய்ச்சிக்  கூடம்  1  செ.மீ  அள்வேயுள்ள  ஒரு  சிப்பை  உருவாக்கியுள்ளது.  இதை  உடலில்  இஞ்ஜெக்ட்   செய்துகொண்டால்  வாழ்நாள்  முழுவதும்  ஒரு  மருத்துவராய்  செயல்படுமாம்.  ஒரு  டாக்டரிடம்  சென்றால், என்னவெல்லாம்  பரிசோதனை  செய்வாரோ  அவை  எல்லாவற்றையும்  இந்த  சிப்  செய்யும்.  அதுவும்  ஒவ்வொரு  நாளும்  ஒவ்வொரு  நிமிடமும்  இந்த  சிப்  மூலம்  உங்கள்  உடலில்  என்ன  பிரச்னை  என்பதை  உடனுக்குடன்  நீங்கள்  தெரிந்துகொள்வதோடு  உங்கள்  மருத்துவரும்  தெரிந்துகொள்வார்.  அவருக்குத்  தெரிவிக்கும்  வேலையையும்  இந்த  சிப்பே  செய்துவிடும்.  வயதானவர்கள்  மற்றும்  தங்கள்  பிரச்னைகளை  சொல்ல  இயலாத  வளரும்  குழந்தைகள்  போன்றோருக்கு  இந்த  கண்டுபிடிப்பு  மிகவும்  உபயோகமாக  இருக்கும்  என்கிறார்கள்  ஆராய்ச்சியாளர்கள்.  இந்த  சிப்பின்  ஆயுட்காலம்  25  முதல்  40  ஆண்டுகளாம்.  நம்  உடல்  சூட்டையே  மின்சாரமாய்  மாற்றி  இயங்குமாம்.  உண்மையிலேயே  இது  சூப்பர்  சிப்தான்!
-- ரவி நாகராஜன்.  ( டெக்  மார்க்கெட் )  சண்டே  ஸ்பெஷல்.
-- தினமலர்.  திருச்சி.  31-5-2015.    

Friday, January 8, 2016

தெரிந்து கொள்வோம் !

*  40  பனிப்  பள்ளங்கள்,  சந்திரனில்  இருப்பதை  சந்திராயனின்  ரேடார்  கண்டுபிடித்துள்ளது !  
*  ஆமலகம்  என்றால்  நெல்லி  என்று  பொருள் .  நெல்லிமரத்தின்  அடிப்பகுதியில்  ஹரியும்,  நடுப்பகுதியில்  ஹரனும்,
  நுனிப்பகுதியில்  பிரம்மனும்   வசிக்கின்றனர்
*   பென்சிலில்  'எச்பி',  எச்பி2'  என்று  குறிப்பிடப்பட்டிருக்கும்.  'எச்'  என்றால்  ஹார்டு,  'பி'  என்றால்  பிளாக்.  அந்த பென்சிலில்
  பயன்படுத்தப்பட்டுள்ள  கிராபைட்  எந்த  அளவுக்கு  உறுதியாக,  கறுப்பாக  எழுதும்  என்பதை  இது  குறிக்கிறது.  .

Thursday, January 7, 2016

மேதாஜனனம் வேறுமுறைகள்.

  ஐந்திரீ  எனப்படும்  பேய்க்கும்மட்டி  வேர்,  ப்ராஹ்மீ  எனப்படும்  ப்ரம்மி  வழுக்கையின்  இலை,  சங்கபுஷ்பீ  என்ற  மூலிகையின்  வேர்,  வசம்பு  இந்த  நான்கையும்  தனித்தனியே  கடுகளவு  அரைத்து  இந்த  விழுதையும்  10  துளி  பசுநெய்  5  துளி  தேனையும்  சுய   தங்கத்தினால்  செய்த  ஓர்  அரசிலையில்  வைத்து  தேய்த்து  தர்ப்பத்தினால்  தோய்த்து  புத்தியினுடைய  வளர்ச்சிக்காக  குழந்தைக்கு  சிறிது  சிறிதாக  ஊட்டவேண்டும்.
     ஒரு  வசம்பு  துண்டைச்  சில  மணிநேரம்  பசுவின்  பாலில்  ஊற  வைத்தால்  மிருதுவாகும்.  இதில்  ஒரு  தங்கக்  கம்பியின்  ஊசி  போன்ற  நுனியால்  சொருகி  வசம்பின்  மத்தியில்  அடித்துச்  சொருகி  வைத்துக்  கொள்ளவும்.  மாத்திரை  மருந்து  அரைப்பதற்காக  உள்ள  ஒரு  சிறு  குழவியுடன்  கூடிய  வழுவழுப்பான  அம்மியில்  சில  துளிகள்  முலைப்பால்  வைத்து                 அதில்  தங்கக்  கம்பியும், வசம்பும்  அரைபடும்படியாக  உரைத்துக்  கலக்கி  அப்பாலை  குழந்தைக்கு  கொடுக்கவும்.  வசம்பு, தங்கக்கம்பி  உரைத்து  பிறந்தநாள்  வரும்வரையில்  தினசரி  கொடுக்கும்  பழக்கம்  கேரளத்தில்  பழைய  இல்லங்களில்  இன்றும்  இருக்கிறது.
     தங்கக்  குச்சியை  வசம்புத்  துண்டில்  அடித்து  வைத்துக்  கொண்டு, வசம்பையும்  தங்கத்தையும்  உரைத்துக்  கொடுக்கும்  முறையில்  சில  இடஞ்சல்கள்  ஏற்படுகின்றன.  வசம்பிலிருந்து  தங்கக்கம்பி  அடிக்கடி  நழுவி  விடுகிறது.  அரைப்பில்  வசம்பு  விழுதின்  அளவு  கண்டுபிடித்தல்  சிரமமாயிருக்கிறது.  வசம்பின்  அளவு  அதிகமானால்  குழந்தைக்கு  உமட்டல்  வாந்தி  ஏற்படும்.  அதனால்  கவனம்  தேவை.  இதைவிட  நல்ல  முறையானது  சுமார்  12  கிராம்  வசம்பை  துண்டுகளாக  நறுக்கி  ஆறு  மணிநேரம்  பசும்பாலில்  ஊறவைத்து  வெந்நீரால்  கழுவி  வெயிலில்  உலர்த்தி  நன்றாகப்  பொடி  செய்து  துணியால்  சலித்து  கண்ணாடி  பாட்டிலில்  பத்திரப்படுத்தி  வைத்துக்கொள்ளவும்.  தங்கத்தினால்  செய்த  சிறுபாலாடையில்  நெய்,  தேன்,  முலைப்பால்  இவற்றைச்  சில  துளிகள்  சேர்த்து  அதில்  மேற்படி  வசம்பு  சூரணம்  சிறுபயறு  அளவு  சேர்த்து  குழவியினால்  3  நிமிடங்கள்  நன்றாய்த்  தேய்க்கவும்.  அதைக்  குழந்தைக்கு  ஊட்டவும்.  இவ்விதம்  தொடர்ந்து  ஒரு  வருட  காலம்  தினசரி  செய்ய  வேண்டும்.  வசம்பு  சூர்ணத்தின்  அளவை  மாதத்திற்கு  3  கடுகளவு  வீதம்  கூட்டலாம்.  இதற்கு    உபயோகிக்கும்  தங்கப்  பாலடை  அல்லது  கிண்ணம்  அதிக  வழுவழுப்பாக  இருக்கும்படி  தேய்த்துப்  பாலீஷ்  போட்டிருக்கக்கூடாது.  கொஞ்சம்  சொரசொரப்பாக  இருப்பின்  தங்கம்  சேர்ந்து  மருந்துடன்  இழைபடுவதற்கு  எளிதாக  இருக்கும்.
     மேற்குறிப்பிட்ட  மூலிகைகளுடைய  சிறப்பான  மருத்துவ  குணங்களால்  குழந்தைக்கு  அறிவுத்திறன்  மேன்மையாக  வளரும்  என்று  கண்டுபிடித்தது  ஆயுர்வேதத்திற்கே  உரிய  தனிப்பெருமை.
-- எஸ்.சுவாமிநாதன்.  டீன்.  ஸ்ரீஜயேந்திர  சரஸ்வதி  ஆயுர்வேதக்  கல்லூரி.  நசரத்பேட்டை-( பூந்தமல்லி  அருகே)
--  தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

Wednesday, January 6, 2016

பிறந்த குழந்தை அறிவாளியாக வளர!

   மனதிற்கு  சத்வம்,  ரஜம்,  தமஸ்  என்று  மூன்றுவித  குணங்கள்.  சத்வம்  என்ற  குணத்தினால்  வித்தைகளை  எளிதில்  அறியும்  ஆற்றல்,  அறிந்த  வித்தைகளை  மறக்காமல்  இருக்கும்  சாமர்த்தியம்  முதலிய  சக்திகள்  மனதிற்கு  ஏற்படுகின்றன.  மனதின்  இந்த  விசேஷ  சக்தியைத்  தான்  மேதை  என்பர்.  மேதை  எவ்வளவுக்கு  எவ்வளவு  நன்றாக  மேன்மையடைகிறதோ  அவ்வளவுக்கவ்வளவு  அந்த  மனிதன்  மேலாகிறான்.  ஆயுர்வேதமும்  தர்ம  சாஸ்திரமும்  மனிதனுடைய  மூளை  சக்தியின்  வளர்ச்சிக்குப்  பிறந்த  நிமிடம்  முதல்  பல  உபாயங்களை  கடைபிடிக்க  வற்புறுத்துகின்றன.  மூளையின்  நாடிகள்,  தாதுக்கள்  விரிவைத்  துவங்கும்  முன்பு  தூய்மையான  விரிவையே  பெறுவதற்கு  உதவும்படியாக  குழந்தைக்குப்  பிறந்தது  முதலிலேயே  உணவு  மருந்து  மூலிகை  குளியல்,  மந்திரப்  பிரயோகங்களை  உபயோகிக்க  சாஸ்திரங்கள்  போதித்துள்ளன.  இதற்கு  மேதா  ஜனனம்  என்று  சொல்லுவர்.
     தாமிரக்  கலப்பில்லாத  சொக்கத்  தங்கத்தின்  ஒரு  சிறு  துண்டை  தர்பத்தினால்  முடிந்து  கொண்டு,  சுமார்  10-12  துளி  சுத்தப்பசு  நெய்யும்  5-6 துளி  தேனும்  கலந்து  ஒரு  தங்கம்  அல்லது  வெள்ளிப்  பாலடையில்  வைத்து  அதில்  தங்கத்  துண்டை  நன்றாய்  அழுத்தி  உரைத்து  குழந்தையின்  வாயில்  அந்த  நெய்  தேன்  கலவையை  மெதுவாய்  தடவி  உட்கொள்ளச்  செய்ய  வேண்டும்.  ஒரு  நாளில்  மூன்று  தடவை  இதுபோல  தொடர்ந்து  செய்யலாம்.
--  எஸ்.சுவாமிநாதன்.  டீன்.  ஸ்ரீஜயேந்திர  சரஸ்வதி  ஆயுர்வேதக்  கல்லூரி.  நசரத்பேட்டை-( பூந்தமல்லி  அருகே)
-- தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன்.   

Tuesday, January 5, 2016

பிரசவம்

  பிரசவத்தின்  போது  நம்  தாய்  57  டெல்  யூனிட்  வலியை  நமக்காக  தாங்கிக்  கொள்கிறார்.  இது,  ஒரே  நேரத்தில்  20  எலும்புகள்  உடையும்போது  உணரப்படும்  வலிக்கு  சமமாகும்.
சரியான  நேரத்தில்  தண்ணீர்  அருந்துவதால்  ஏற்படும்  பலன் :
     *  விழித்ததும்  அருந்தும்  2  கிளாஸ்  நீரால்  உள்ளூருப்புகள்  சுறுசுறுப்படையும்.
     *  உணவுக்கு  30  நிமிடங்களுக்கு  முன்  அருந்தும்  1  கிளாஸ்  நீரால்  ஜீரணம்  அதிகரிக்கும்.
     *  குளிப்பதற்கு  முன்  அருந்தும்  1  கிளாஸ்  நீரால்  குறைந்த  ரத்த  அழுத்தம்  குணமாகும்.
     *  தூங்குவதற்கு  முன்  அருந்தும்  ஒரு  கிளாஸ்  நீரால்  மாரடைபிலிருந்து  தப்பலாம்.
-- 'பேஸ்புக்'கில்  படித்தது.  சி.பன்னீர்செல்வன்,  செங்கற்பட்டு.
அதிகமாகச்  சாப்பிட்டுவிட்டால்...
     சிறிதளவு  புதினா  இலைகள்,  ஒரு  சிறிய  துண்டு  இஞ்சி,  சிறிதளாவு  பெருங்காயம்  ஆகியவற்றை  எடுத்துக்கொண்டு  புதினாவையும்  இஞ்சியையும்  சிறுசிறு  துண்டுகளாக  நறுக்கி  பெருங்காயம்  சேர்த்து  ஒரு  டம்ளர்  மோரில்  போட்டு  குடித்து  விடவும்.  இவ்வாறு  செய்தால்  இது  செரிமானத்தைத்  தூண்டி  வயிற்றைச்  சரிபடுத்திவிடும்.
-- ஷீலா பாஸ்கரன்,முதியால்பேட்டை.
-- தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன்.

Monday, January 4, 2016

'சாணக்கிய நீதி'

"ந  பஸ்யதி  ச  ஜன்ம  அந்த:
 காம  அந்தோ  ந  ஏவ  பஸ்யதி!
 ந  பஸ்யதி  மத  உன்மத்த:
 ஸ்வார்த்தி  தோஷான்  ந  பஸ்யதி!!"
     இதில்  முதல்  வரியின்  விளக்கம் :  பிறவியிலேயே  பார்வையற்றவர்களுடைய  கண்கள்  மற்றவர்களை  நேருக்கு  நேர்  பார்க்க  முடியாது.  அதனால்,  இவர்கள்  மற்றவர்கள்  மேல்  தவறான  எண்ணம்  அல்லது  தப்பெண்ணம்  கொள்வதில்லை.
     அடுத்த  வரியின்  விளக்கம் :  கண்  பார்வை  இருந்தும்,  பார்வையற்றவர்கள்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  "கொக்குக்கு  ஒன்றே  மதி"  என்று  சொல்லுவார்களே... அதைப்போல  அதிகமான  ஆசைகளை  வளர்த்து  வைத்துக்கொண்டிருப்பவர்கள்  தன்னுடைய  ஆசைகளை  எப்படி  அடைவது  என்று  மட்டும்  பார்க்க  தெரிந்தவர்கள்.  மற்ற  விஷயங்கள்  அவர்கள்  கண்ணுக்குத்  தெரியாது.
     மூன்றாவது  வரியின்  விளக்கம் :  கர்வம்,  இறுமாப்பு,  அகங்காரம்,  செருக்கு,  தற்பெருமையில்  மயங்கி  தத்தளிக்கும்  மனிதர்கள்  தன்னை  மீறி  எவரையும்  பார்க்க  மறுப்பவர்கள்.
     கடைசி  வரிக்கு  விளக்கம் :  மிகவும்  மோசமான  நிலையில்  இருக்கும்  கண்ணுள்ள  குருடர்களும்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  அவர்கள்  பிறர்  நலம்  கருதாதவர்கள்;  தன்னலத்தால்  தூண்டப்பட்ட  சுயநலவாதிகள்.  தன்னை  மீறி  மற்றவர்கள்  இருப்பதையே  மறந்து  விடுபவர்கள்.
     கண்  பார்வை  இல்லாததால்  பார்க்க  முடியாதவர்கள்      நம்மிடையே  இருக்கிறார்கள்.  அதுபோல,  பார்வை  இருந்தும்  போலி  வாழ்வு  வாழ்பவர்களும்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  இதற்கு  நிவாரணம்  இருக்கிறதா?
     இருக்கிறது... கண்களை  திறந்து  பார்த்து,  நன்கு  யோசிக்க  வேண்டிய  விஷயம்  இது.  நாம்  எல்லோரும்  இதயக்கண்  மூலம்  மற்ற  ஜீவராசிகளை  நோக்க  வேண்டும்.  அவ்வாறு  செய்தால்,  ஊனக்கண்  மட்டுமல்ல!  ஞானக்கண்ணும்  இருக்கிறது  என்று  பெருமைப்பட்டுக்  கொள்ளலாம்.
-- சித்ரா  நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! )  தொடரில்...
-- தினமலர்.  ஆன்மிக மலர்.  இணைப்பு. சென்னை  பதிப்பு . நவம்பர்  18, 2014.
-- இதழ்  உதவி :  SB. மாதவன்,  விருகம்பாக்கம்.  சென்னை . 92.

Sunday, January 3, 2016

பாவனைகள்

  மூன்று  விதமான  பாவனையில்  உலகில்  மனிதர்கள்  வாழ்கிறார்கள்.  அவை :  பிரம்ம  பாவனை,  கர்ம  பாவனை,  உபய  பாவனை.
     கடவுளையே  எப்போதும்  தியானித்து  பக்தி  செலுத்துவது  பிரம்ம  பாவனை.  நம்மாழ்வார்  போன்ற  ஆழ்வார்கள்  அனைவரும்  இந்த  பாவனையில்  வாழ்ந்தவர்கள்.
     வேலை,  சம்பாத்தியம்,  குடும்பப்  பொறுப்பு  என  எப்போதும்  கடமையில்  ஈடுபட்டு  இருப்பது  கர்ம  பாவனை.
     ஆனால்,  மனிதர்கள்  பெரும்பாலும்  பிரம்ம,  கர்ம  என்ற  இரண்டு  நிலையிலும்  கலந்து  வாழவே  விரும்புகிறார்கள்.  இந்தக்  கலப்புக்கு  உபயபாவனை  என்று  பெயர்.
-- வேளூக்குடி  உ.வே. கிருஷ்ணன்  சுவாமி.  ( நினைத்தாலே  இனிக்கும் )  தொடரில்....
-- - தினமலர்.  ஆன்மிக மலர்.  இணைப்பு. சென்னை  பதிப்பு . நவம்பர்  18, 2014.
-- இதழ்  உதவி :  SB. மாதவன்,  விருகம்பாக்கம்.  சென்னை . 92.

Saturday, January 2, 2016

தெரிந்து கொள்வோம் !

*  40  பனிப்  பள்ளங்கள்,  சந்திரனில்  இருப்பதை  சந்திராயனின்  ரேடார்  கண்டுபிடித்துள்ளது !
*  ஆமலகம்  என்றால்  நெல்லி  என்று  பொருள் .  நெல்லிமரத்தின்  அடிப்பகுதியில்  ஹரியும்,  நடுப்பகுதியில்  ஹரனும்,
  நுனிப்பகுதியில்  பிரம்மனும்   வசிக்கின்றனர்
*   பென்சிலில்  'எச்பி',  எச்பி2'  என்று  குறிப்பிடப்பட்டிருக்கும்.  'எச்'  என்றால்  ஹார்டு,  'பி'  என்றால்  பிளாக்.  அந்த பென்சிலில்
  பயன்படுத்தப்பட்டுள்ள  கிராபைட்  எந்த  அளவுக்கு  உறுதியாக,  கறுப்பாக  எழுதும்  என்பதை  இது  குறிக்கிறது.  

Friday, January 1, 2016

பூமியை விட பெரிய கருந்துளை

 * பெய்ஜிங்
      பூமியை  விட  சுமார்  1,200  கோடி  அளவு  பெரிய  கருந்துளை  ஒன்று  விண்வெளியில்  இருப்பதை  சீன  விண்வெளி  ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.  இதற்கு  SDSS  J0100 +2802  என்று  பெயரிட்டுள்ளனர்.
     கருந்துளை  என்பது  விண்வெளியின்  ஒரு  பகுதியாகும்.  இது  மிகவும்  அடர்த்தி  வாய்ந்த  ஒன்று.  எனவே,  இதனுள்  ஒளி  கூட  புக  முடியாது.  இந்தக்  கருந்துளை  தனக்கு  அருகில்  இருக்கும்  அனைத்தையும்  ஈர்த்துக்  கொள்ளும்  சக்தி  கொண்டது.  இதனால்  ஏற்படும்  வெப்பம்  காரணமாக,  ஒளித்துகள்கள்  மின்னும்  கதிர்களைவெளியிடும்  தன்மை  கொண்டவையாக  உள்ளன.  இந்த  ஒளிக்  கதிர்கள்  'குவாசார்'  என்று  அழைக்கப்படுகின்றன.
     இந்த  கருந்துளை  பூமியில்  இருந்து  1,200  கோடி  ஒளி  ஆண்டுகள்  தொலைவில்  உள்ளது.  இப்படி  ஒரு  கருந்துளை  இருப்பதை  அமெரிக்காவும்,  சிலி  நாடும்  உறுதி  செய்துள்ளன.
     இதுவரை  கண்டுபிடிக்கப்பட்ட  கருந்துளைகளிலேயே  இதுதான்  மிகவும்  பெரியதாகவும்,  இதன்  ஒளிக்கதிர்கள்  அதீத  வெளிச்சம்  கொண்டதாகவும்  இருப்பதாகக்  கூறப்படுகிறது.
    "பிரபஞ்சத்தில்  பெருவெடிப்பு  நிகழ்ந்தது  சுமார்  90  லட்சம்  ஆண்டுகளுக்குப்  பிறகு  இந்தக்  கருந்துளையை  நாங்கள்  கண்டுபிடித்துள்ளோம்.  இதன்  மூலம்  கருந்துளைகள்  எவ்வாறு  தோன்றுகின்றன  என்பது  குறித்தஆய்வு  அடுத்த  கட்டத்துக்கு  நகர்ந்துள்ளது"  என்றனர்  ஆய்வாளர்கள்.
    "பொதுவாக  இது  போன்ற  ஒரு  கருந்துளையைக்  கண்டுபிடிக்க  10  மீட்டர்  குறுக்களவு  கொண்ட  தொலைநோக்கிகள்தான்  பயன்படுத்தப்படும்.  ஆனால்  2.4  மீட்டர்  குறுக்களவு  கொண்ட  தொலைநோக்கியைப்  பயன்படுத்தி  இவர்கள்  கண்டுபிடித்திருப்பது  உண்மையிலேயே  மிகப்  பெரிய  சாதனைதான்.  இது  சீன  விண்வெளி  விஞ்ஞானிகளின்  அறிவுத்திறனைக்  காட்டுகிறது"  என்றார்  ஆய்வாளர்.
-- பி.டி.ஐ.   ( கடைசிப்  பக்கம் ).
-- 'தி இந்து'  நாளிதழ்.  வெள்ளி,  பிப்ரவரி  27, 2015.