Monday, November 30, 2015

இணைய வெளியிடையே...

*  உலகில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு கியூபா!  கியூபாவில் 1000 பேருக்கு 6.7 மருத்துவர்கள் உள்ளனர்.
    ( இந்தியாவில் 0.6 தான் ).
*  சில எறும்புகள் துண்டு இலைகளை தமது இருப்பிடத்தில் புதைத்து மக்கச் செய்து புஞ்சைகளை வளர்த்து விவசாயம் செய்து
    சாப்பிடும் !
*  நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று திரும்பியபோது அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை சோதனையிட்டார்களாம்!
   -- tamilfacts@twitter.com
*  தாத்தா உறவினர்களுக்கு ஆதரவாக இருந்தார் !  அப்பா ஆறுதலாக இருந்தார் !  நான் அனுதாபம் தெரிவிப்பதோடு நிறுத்திக்
   கொள்கிறேன் !
   -- naiyandi @twitter.com
*  பிள்ளை பெற்றபோது அவள் அழுதாள்.  பில்லைப் பெற்ற போது நான் அழுதேன்.  # மருத்துவமனை.!
   --oruvan@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர்.  ஞாயிறு,  6-4-2014.  

Sunday, November 29, 2015

ஐம்பூதங்கள்

  இந்த உலகின் ஐந்து அடிப்படை அம்சங்கள் நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு ( வானம் ) ஆகியவை.
--  சூழல் மரபு. உயிர்மூச்சு .  டி.கார்த்திக் ஆதி
     ஐம்பூதங்களின் அடிப்படையில்தான் இந்தப் பூவுலகும், அதில் உள்ள உயிரினங்களும் தோன்றின என்பது தமிழர் கோட்பாடு. இது அறிவியல்பூர்வமானது.  தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம், இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது.  இந்தியத் தத்துவ மரபில் இரண்டு போக்குகளைக் காணலாம்.  ஒன்று அறிவைப் பரவலாக்குவது.  மற்றொன்று அறிவைத் தடை செய்வது.  தமிழ் மரபு அறிவைப் பரவலாக்கும் பணியைச் செய்தது.  ஐம்பூதங்களின் தன்மையை, இயல்பை ஆராய்ந்த நூல் தொல்காப்பியம்.  அதனால்தான் தொல்காப்பியருக்கு ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர் என்று பெயர்.  மேலும் விசும்பை ( வானம் ) தமிழ் மரபு மட்டுமே ஐம்பூதமாக ஏற்றுக்கொண்டிருந்தது.
-- பேராசிரியர் நெடுஞ்செழியன்.
     ஐம்பூதம் என்பது முழுக்கத் 'தமிழ்க் கொள்கைதான்.  பூ என்றால் பூத்தல்.  விரிதல் என்று பொருள். சங்க இலக்கியத்தில் பூ என்ற சொல் 33 இடங்களில் வருகிறது.
-- சூழலியல் எழுத்தாளர் பாமயன். ( நிலம் ).
    மண்ணுக்கு மேல்தான் உயிர்கள் வாழ்வதாக நினைக்கிறோம்.  இது தவறு.  மண்ணுக்கு மேல் இருப்பதைப் போல அடியில் 100 மடங்கு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.
-- அரச்சலூர் செல்வம், இயற்கை விவசாயி. ( நிலம் ).
     தூய்மையான தண்ணீர் கிடைக்காமல் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது.  தண்ணீரை வியாபாரிகள் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.  நம்முடைய நிலத்தில் இருந்து எடுத்த தண்ணீரை, நமக்கே விற்றுக் கோடி கோடியாகத் தனியார் பெரு நிறுவனங்கள் லாபம் பார்த்து வருகின்றன.
--- சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.  ( நீர் ).
     காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பாக்கம் என்ற பெயரில் நிறை ஊர்கள் உண்டு.  பாக்கம் என்றால் நீர் மிகுந்த பகுதி என்று பொருள்.  ஆனால் இப்போதோ சென்னையில் எங்கும் தண்ணீர் கிடையாது.
--- பேராசிரியர் சாமுவேல் ஆசிர்ராஜ்.  ( நீர் ).
     நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல் - எரிசக்தி ஆதாரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் தீர்ந்து போகக் கூடியவை.  பெட்ரோல் 29-30 ஆண்டுகளிலும், நிலக்கரி 100 ஆண்டுகளிலும் தீர்ந்து போய் விடக்கூடும்.  காற்றாலை மின்னுற்பத்திதான் மின்சாரம் குறைந்த சமூகப் பாதிப்பைக் கொண்டிருக்கிறது.
--- பொறியாளர் சி.இ. கருணாகரன்.  ( நெருப்பு ).
     வெப்பம் மனிதர்களுக்கு மிகவும் அவசியம்.  எப்போது உடலில் வெப்பம் குறைகிறதோ, உடல் சில்லிடுகிறதோ அப்போது மனிதன் இறந்து விடுகிறான்.  பூமியில் முதன்முதலில் மழை பெய்தபோது மரமே கிடையாது.  மனிதர்கள் மரங்களை நடுவதால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இயற்கை இல்லை.  அதை மனிதர்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
---திரைப்பட இயக்குநர் ம. செந்தமிழன்.  ( நெருப்பு ).
    நம் அண்டை மாநிலமான கேரளாவில் மணல் எடுக்க முடியாது.  ஆனால்,தமிழகத்தில் மணல் வியாபாரிகள்தான் அரசியல் கட்சித் தலைவர்களாக உள்ளனர்.
--- கி.வெங்கற்றாமன், தமிழர் உழவர் முன்னமி ஆலோசகர்.  ( காற்று ).
    பூமியின் சராசரி வெப்ப நிலை 15 டிகிரி சென்டிகிரேடு.  இதில் 2 டிகிரி செ.கி. அதிகரித்தாலும் உலகில் பல்வேறு பிரச்னைகள் வந்து விடும்.  அதைத்தான் புவி வெப்பமடைதல் என்கிறார்கள்.  புவி வெப்பமடைந்தால் என்னவாகும்?  துருவப்பிரதேசங்களில் பனிப்பாறைகள் கரைந்து, கடல் நீர் மட்டம் அதிகரிக்கும்.  கடலோரப்பகுதிகள் நீரில் மூழ்கும்.
--- சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன்,  ( விசும்பு - வானம் ).
--- சூழல் மரபு. உயிர்மூச்சு .
--  'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 11, 2014.  

Saturday, November 28, 2015

மிருகம் விரட்டுங்கள்!

  மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி கோபம்.  அதை தவிர்த்தாலே நினைத்ததை சாதிக்கலாம்.  சிடுமூஞ்சியானாலும் கோபத்தை
தவிர்க்க வழியுண்டு.  இதோ...
1.  தொடர்ந்து இயற்கை உணவுகளை சாப்பிட்டுப் பழகலாம்.
2.  தியானம், சாந்தி ஆசனம் செய்யலாம்.
3.  ஒன்று முதல் 10 வரை எண்ணலாம்.
4.  தண்ணீர் குடிக்கலாம்.
5.  கோபத்துக்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியலிட்டு எழுதலாம்.
6.  பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடிக்கலாம்.
7.  கோபம் வரும்போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடியில் பார்க்கலாம்.
8.  கோபத்துக்குக் காரணமான சொல், செயல், எண்ணத்தை மாற்றலாம்.
9.  கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
10. நீர்வீழ்ச்சியில், ஷவரில், தொட்டியில் குளிக்கலாம்.
11. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
     இவற்றை கடைபிடித்தால் எவ்வளவு பெரிய கோபக்காரரும் சாந்த சொரூபியாகி விடுவார்.  அப்புறம் என்ன?  கோப உணர்ச்சிகளால் ரத்த அழுத்தம், கண் சிவப்பு, அமில சுரப்பு, வயிற்றுப்புண் போன்ற நோய்களும், மிருக குணமும் நம்மை விட்டு ஓடிப்போய் விடும்.
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 23-2-2014. 

Friday, November 27, 2015

வண்ண டைல்ஸ்கள்

 முன்பு குளியல் அறைக்குக்கூட வழுக்கக்கூடிய டைல்ஸ்களையே பயன்படுத்தப்பட்டன.  இப்போதோ அக்குபஞ்சர் மற்றும் கிரிப்பர் வகை டைல்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான டைல்ஸ்களில் ஷாம்பு கொட்டியிருந்தால்கூடக் கால் வைத்தாலும் வழுக்காது.
     வீட்டின் முகப்புப்பகுதியில் ஒரே வண்ணத்தில் டைல்ஸ் பதிக்கும் வழக்கமே முன்பு இருந்தது.  தற்போது ஸ்டைலான, கலர்ஃபுல்லான டிசைகளில் டைல்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.  போர்டிகோ பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் போதும், நடக்கும் போதும் பிடிமானம் இருக்கும் வகையில் சொரசொரப்பான டெரகோட்டா வகை டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன.
     வீட்டின் உள் பகுதிக்கு மங்கலான நிறம் கொண்ட டைல்ஸ் பயன்படுத்தப்பட்ட காலம் மாறிப் பளிச்சிடும் வண்ணங்களில் டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன.  சுமார் 1000 சதுர அடி பரப்பில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு 500 முதல் 600 டைல்ஸ்கள் தேவைப்படும்.  சமையல் கூடத்திற்குச் சிம்னி உயரம் வரை வால் டைல்ஸ் பதிக்க வேண்டும்.
     வரவேற்பறை, சமையலறை, பூஜையறை, படுக்கையறை, படிக்கும் அறை என அனைத்துக்கும் தனித்தனி டைல்ஸ்கள் இன்று விற்பனைக்கு உள்ளன.  ஆனால், டைல்ஸ்களில் சீதோஷ்ண நிலையின் தாக்கம் கணிசமாகத் தெரியும்.  கோடைகாலத்தில் உள் கூடங்களில் டைல்ஸ் சற்று சூடாகத் தெரிவதும், குளிர்காலத்தில் குளிர்ச்சியாகத் தெரிவதும் டைல்ஸ்களில் உள்ள ஒரு குறைபாடு.
     மொட்டை மாடியில் பதிக்கவும் இன்று நிறைய டைல்ஸ்கள் சந்தைக்கு வந்துவிட்டன்.  இவற்றில் உஷ்ணத்தைக் கிரகித்துக்கொள்ளும் டைல்ஸ்களும் அடங்கும்.
-- மகேஷ்.  சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, பிப்ரவரி 22, 2014.  

Thursday, November 26, 2015

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தடை.  ஐக்கிய அரபு நாடுகள் 'பத்வா'.
     நெதர்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம், செவ்வாயில் குடியிருப்பை உருவாக்கி அங்கு மனிதர்களை நிரந்தரமாக குடியேற்றச் செய்யும் ஒருவழி பயணமான 'மார்ஸ் ஒன்' திட்டத்தை அறிவித்துள்ளது.  இதற்காக உலகம் முழுவதும் உள்ள மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, முதற்கட்ட தேர்வும் முடிந்துள்ளது.  இந்த திட்டத்தின் மூலம், வரும் 2024 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 பேர், ஒரு வழி பயணமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
     இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு செல்வது இஸ்லாமுக்கு எதிரானது என ஐக்கிய அரபு நாடுகளின் இஸ்லாமிய விவகார மற்றும் அறக்கட்டளையின் பொது அதிகார குழு 'பத்வா' விடுத்துள்ளது.
     இதுகுறித்து குழுவின் தலைவர் பரூக் அமதா கூறுகையில், 'செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழி பயணமாக செல்வது பாதுகாப்பு இல்லாதது.  தற்கொலைக்கு சமமானது.  ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது இஸ்லாமுக்கு எதிரானது.  எனவே, மார்ஸ் ஒன் திட்டத்துக்கு பத்வா விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
     சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து 500 க்கும் அதிகமானோர், மார்ஸ் ஒன் திட்டத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--  தினமலர். 23-2-2014. 

Wednesday, November 25, 2015

இணைய வெளியிடையே...

*    தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்?  அப்போ இது உங்களுக்குத்தான்...
     யாராவது அறிவுகெட்டவனே என்று திட்டினால், உடனே கோபம் கொள்ளக்கூடாது.  அறிவுக்கெட்டவனை பிரித்து பாருங்கள்.  அறிவு +Get + வனே.  Get என்றால் ஆங்கிலத்தில் பெற்ற என்று அர்த்தம்.  ஆக, அதை அறிவு பெற்றவனே என பொருள் கொள்ள வேண்டும்.
     நம்மை அதிகம் திட்டப்படும் இன்னொரு வார்த்தை விளங்காதவனே.  அந்த வார்த்தையையும் பிரியுங்கள்.  விளங்கு + ஆதவனே.  அதாவது விளங்குவதில் சூரியனே என்று அர்த்தம்.  ஆதவன் என்றால் சூரியன்.
     மேலும் திட்ட பயன்படுத்தும் இன்னொரு வார்த்தை தண்டச்சோறு.  அதையும் பிரிப்போம்.  தண்டம் + சோறு.  தண்டம் என்றால் ஆங்கிலத்தில் Fine என்று அர்த்தம்.  Fine என்பதற்கு நல்லது என்ற அர்த்தமும் உண்டு.  ஆக தண்டச்சோறு என்றால் நல்லசோறு என்று அர்த்தப்படும்.
    -- sowmya @ twitter.com
*   வயதான காலத்தில் சிலருக்கு விலங்குகள் வாரிசாகவும், வாரிசுகள் விலங்காகவும் மாறிவிடுவது விந்தை!
    - arun @ twitter.com.
*  யானை என்ற வார்த்தையில் 'னை' யே யானையின் உருவத்தை ஒத்திருப்பது அழகு!
   -- girl @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 23-2-2014. 

Tuesday, November 24, 2015

மரம் இல்லாத கதவுகள்

  வீட்டுக்கு அழகான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எது?  கதவுதான்.  வீட்டு வாசல்கள் அழகாக இருப்பதில் கதவுகளுக்கும் முக்கிய இடம் உண்டு.  அழகிய அம்சம் சார்ந்த வாசல் கதவுகள் தற்போது கண்ணாடி இழைகள் மற்றும் ரீஇன் டோர்ஸ்டு பிளாஸ்டிக்கிலும் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன.
     மரத்துக்கு மாற்றாக ஸ்டீல்களும்கூட இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறன.  தற்போது ஸ்டீல் விலையும் அதிகமாகவே விற்பனையாகிறது.  எனவே, விலை அதிகமாக உள்ள இந்தக் கதவுகளைவிட கண்ணாடி இழைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட  பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் கண்னாடி இழை கதவுகளைப் பயன்படுத்தலாம்.  இவற்றின் விலை குறைவு.  மேலும் கண்ணைக்கவரும் வகையில் பல டிசைங்களிலும் கிடைக்கின்றன.
     அசல் மரக்கதவுகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கதவுகளில் பல்வேறு வண்ணங்களில் நாம் விரும்பும் வகையில் செய்ய முடியும்.  மரம் மற்றும் ஸ்டீல் கதவுகளில் பராமரிப்பு அதிகம் தேவைப்படும்.  மழைக்காலங்களில் சில மரக் கதவுகளில் தண்ணீர் பட்டால் அந்த இடம் கறுப்பாக மாறிவிடும்.  ஆனால், கண்னாடி இழை கதவுகளில் அந்தப் பிரச்சினை இல்லை.  100 சதவிகிதம் வாட்டர் ஃபுரூப்புடன் எல்லா சீதோஷ்ண நிலைகளையும் தாங்கக்கூடியவை.
     குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் இந்தக் கதவுகளைப் பொருத்த முடியும்.  குறிப்பாகக் குழந்தைகளுக்காக அமைக்கப்படும் அறைகள் மற்றும் குழந்தைகளின் குளியல் அறைகளுக்குக் குழந்தைகள் விரும்பும் வகையிலான டிசைங்களிலும், வண்ணங்களிலும் வடிவமைக்கலாம் என்கின்றனர் கட்டுநர்கள்.
-- மிதிலேஷ்.  சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி,பிப்ரவரி 15,2014. 

Monday, November 23, 2015

தேங்காய், வாழைப்பழம்.

   தேங்காய் என்பது தோல், நார், ஓடு எனும் மூன்றையும் விடுத்து உள்ளே இனிக்கும் பொருளாக உள்ளது.  அது போன்று நம்மிடம் உள்ள ஆணவம் ( தான் எனும் அகந்தை ), கன்மம் ( முன்பிறவி பாவங்கள் ), மாயை ( இப்பிறவியில் செய்யும் தவறுகள் ) இவை மூன்றையும் நீக்கினால், நம் உள்ளே உயிரில் இறைவன் இனியவராகத் துணை புரிவார்.  இதைப் புரிந்து கொண்டு வாழ்வதற்காகவே, தேங்காய் உடைத்து வழிபட வகை செய்துள்ளார்கள்.
     ஒரு வாழை மரம் வளர்ந்தால், அதைச்சுற்றி பல கன்றுகள் தோன்றி பலன் அளிக்கும்.  வாழைப்பழம் விதையானது வாழையடி வாழையாக தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.  அதன் பழம் இறைவனுக்கு நிவேதனமாக ஆவது போன்று நம் குலமும் வாழையடி வாழையாக வம்சவிருத்தியடையவும், எல்லாம் ஆண்டு அனுபவித்து முதிர்ந்த வயதில் ( பழுத்த பழம் என்பார்கள் ) இம்சை இல்லாமல் இறைவனடி சேரவும் வாழைப்பழ நிவேதனம் அறிவுறுத்துகிறது.  மேலும், வெற்றிலைப் பாக்கும் வைக்க வேண்டும்.  இது லட்சுமி கடாட்சத்தைத் தரும்.
-- அறிவோம்! தெளிவோம் ! -  மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
--   தினமலர்.பக்திமலர். பிப், 20, 2014.

Sunday, November 22, 2015

மெட் ரோ ரயில்.

 சென்னையில் இடம் பெறப் போகும் நம் மெட்ரோ ரயிலை எடுத்துக்கொள்வோம்.  சிலர் நினைப்பது போல இவை இயங்கும்போது தேவைப்படும் மின்சாரம் மிக அதிகம் அல்ல.  திட்டம் முழுவதுமாக நடைமூறைப்படுத்தப்படும்போது, அத்தனை ரயில்களும் இயங்கும் போது 80 மெகாவாட் மின்சாரம்தான் தேவைப்படும்.
இரும்பு உருக.
     மற்ற உலோகங்களைவிட, இரும்பு உருகுவதற்கு அதிக நேரம் தேவைப்படுவது ஏன்?
     ஒரு பொருள் எவ்வளவு நேரத்தில் உருகும் என்பது அதன் அடர்த்தி, அதன் தன் வெப்பம் ( specific heat ) மற்றும் எந்த அளவுக்கு எரிசத்து அளிக்கப்படுகிறது ஆகிய மூன்று விஷயங்களைப் பொருத்திருக்கிறது.  இருப்பின் உருகு நிலை 1538 டிகிரி சென்டிகிரேட்.
     ஒப்பீட்டுக்காக இதோ வேறு சில உலோகங்களின் உருகு நிலை (  சென்டிகிரேடில் )
     அலுமினியம்  -  659.
     வெண்கலம்  -  913.
     தங்கம்  -  1063.
     டங்ஸ்டனின் உருகு நிலை 1482 .  அதனால்தான், அதை மின்சாரப் பல்புகளில் பயன்படுத்துகிறார்கள்.
தொட்டபெட்டா
      தொட்டபெட்டா என்பது கன்னடச் சொல். கன்னடத்தில் 'சிக்க' என்றால் சிறிய என்றும், 'தொட்ட' என்றால் 'பெரிய' என்றும் பொருள்.  மலையை அவர்கள் 'பெட்டா' என்பார்கள்.  ஆக தொட்டபெட்டா என்றால் பெரியமலை என்று பொருள்.
-- குட்டீஸ் சதேக மேடை ?!  --  ஜி.எஸ்.எஸ்.
-- தினமலர்.சிறுவர்மலர். பிப், 21, 2014.

Saturday, November 21, 2015

கரப்பான் பூச்சி

முகம் பளபளக்க கரப்பான் பூச்சியை தடவுங்கப்பா!
     என்ன, டைட்டிலை படிச்ச உடனே தலைசுத்துதா...?
     இது உண்மைதான்!
     சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது.  கரப்பான் பூச்சி என்றாலே முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில் சீனாவில் சிலர் கரப்பான் பூச்சி பண்ணை வைத்து கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர்.  சீனாவில் கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டு புழுக்களை வறுத்து சாப்பிடுவது அறுசுவை உணவாக கருதப்படுகிறது.
     சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன.
     அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது.  இதற்கு முதலீடு மிக குறைவு.  61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம்.
     பண்னை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும்.  அதுவும் அமெரிக்க கரப்பான் பூச்சிகளை தான் வளர்க்கின்றனர்.  இவை நீளமாக, பெரியதாக, கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும்.  இதற்கு இறக்கைகள் உண்டு.  இவற்றை அழிப்பதும் எளிது என்கிறார் பூமிஸ்.  அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு வடகம் போல காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.  கரப்பான் பூச்சி பண்ணையில், பெரிய அளவில் லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது.  ஒருமுறை கோடிக்கணக்கில் கரப்பான் பூச்சிகள், ஒரு பண்ணையில் இருந்து எஸ்கேப் ஆகிய பின்புதான் மக்களுக்கே தெரிய வந்தது.  இந்த பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதியிளிலிருந்து தொலைவில் வைக்கின்றனர்.  இப்போது சீன 'டிவி'க்களில் கரப்பான் பண்ணைகள் வளர்ப்பு முறை பற்றிய விளம்பரங்கள் பிரபலாமாக உள்ளன.
     சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக்கழகங்கள் கரப்ப்பான் பூச்சியை வைத்து பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன.  அணு கதிர்வீச்சை கூட தாங்கும் சக்தி உடையது கரப்பான் பூச்சி.  இவை மூலம், எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
    'லீ ஷிவான்' என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து தன் வழுக்கை தலையில் தினமும் தேய்த்து கொண்டதால் முடி வளர்ந்ததாக கூறுகிறார்.
-- அதிமேதாவி அங்குராசு.
-- தினமலர். சிறுவர்மலர் ,சென்னை பதிப்பு.. பிப்ரவரி 14,2014. 

Friday, November 20, 2015

குளக்கரையில் மண்டபங்கள்

   கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றிலும் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.  சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்களும், ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு சிறு கோயிலும் கட்டப்பட்டு, சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது.
     காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் பெரிய மண்டபத்துடன் கூடிய சிவன் கோயில், பிரம்ம தீர்த்தேஸ்வரர் கோயிலாகும்.  இந்த மண்டபம் மற்ற மண்டபங்களைக் காட்டிலும் பெரிய மண்டபமாகும்.  இதை துலாபாரதான மண்டபம் என்பார்கள்.

செவ்வாய்க்கு மனித எந்திரம்

  ( சிறப்பு )
   அமெரிக்க  விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனமான  நாசா, செவ்வாய்க்கிரகத்தில்  உயிரினங்கள்  வாழ்வதற்கான  சாத்தியக்கூறுகள்  இருக்கிறதா  என்ற  ஆராய்ச்சியில்  ஈடுபட்டு  வருகிறது.  இதற்காக  நாசா  அனுப்பிய  கியூரியாசிட்டி  ரோவர், செவ்வாயின்  மேற்பரப்பில்  ஆராய்ந்து  வருகிறது.  இதற்கிடையில், பேரிடர்  மீட்பு  பணிகளில்  மனிதர்களை  ஈடுபடுத்த  முடியாத  அசாதாரணமான  சூழ்நிலைகள்  ஏற்படும்போது, அதை  சமாளிப்பதற்காக  மனிதனைப்போன்ற  ரோபோவை  நாசா  உருவாக்கியது.
   6  அடி  உயரம்  131  கிலோ  எடையுள்ள  ஆர்-5  ரோபாட்டுகளை  நாசா  தாயாரித்தது.  அதற்கு 'வால்கிரி'  என்று  பெயரிட்டுள்ளது.  கிட்டத்தட்ட  மனிதனைப்  போலவே  சூழ்நிலைகளை  புரிந்து  செயல்படும் வகையில்  அதிநவீன  தொழில்நுட்பத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ள  வால்கிரி  ரோபாட்டை  பேரிடர்  நிவாரணப்பணிகளில்  மட்டுமல்லாது  வேறுபல  பணிகளிலும்  ஈடுபடுத்துவது  குறித்து  ஆய்வு  செய்துவந்த  நாசா, செவ்வாய்  கிரகத்தில்  ரோவரால்  நெருங்கமுடியாத  உள்பகுதிகளை  ஆராய  வால்கிரியை  பயன்படுத்த  திட்டமிட்டுள்ளது.
   இது  தொடர்பாக  நாசா  வெளியிடுள்ள  அறிவிப்பில், 'செவ்வாய்  கிரகத்தை  ஆராய்வதற்காக  வால்கிரி  ரோபாட்டை  அனுப்ப  திட்டமிட்டுள்ளோம்.  முன்னதாக, கிரகங்களைப்  பற்றி  வால்கிரி  அறிந்து  கொள்வதற்காக, 2  வால்கிரி  ரோபாட்டுகளை  கல்லூரிக்கு  அனுப்ப  முடிவு  செய்துள்ளோம்.  ஒரு  ரோபாட்  மாசசூசெட்ஸ்  தொழில்நுட்ப  மையத்துக்கும், மற்றொரு  ரோபாட்  பாஸ்டனில்  உள்ள  வடகிழக்கு  பல்கலைக்கழகத்துக்கும்  அனுப்பப்படும்.  இந்த  2  பல்கலைகளும்  அதிநவீன  ராணுவ  திட்டங்கள்  ஆராய்ச்சி  முதனமையால்  தேர்வு  செய்யப்பட்டுள்ளன.  ரோபாட்டுகளுக்கு  பாடம்  கற்றுக்  கொடுப்பதற்காக  இந்த  2  நிறுவனங்களுக்கும்  ஆண்டுக்கு  2  லடசத்து  50  ஆயிரம்  டாலர் (ரூ. 1.65 கோடி ) வீதம்  2  ஆண்டுகளுக்கு  வழங்கப்படும்  என்று  குறிப்பிட்டுள்ளது.
-- தினமலர்  திருச்சி  20-11-2015. 

Thursday, November 19, 2015

திட்டமிட்டு மறைத்த உண்மை?

  வரலாற்றில் மறைக்கப்பட்ட இசுலாமியர்களின் தியாகங்கள்.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கப்பல் வாங்க அந்த காலத்திலேயே 2 இலட்சம் கொடுத்த தொழிலதிபர் திரு. பக்கீர் முகம்மது இராவுத்தர் என்ற தமிழரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  அதை போல வ.உ.சி .யின் கப்பல் நிறுவனம் நட்டத்தில் இயங்கிய போது, வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட் , உமர் கத்தாப், இப்ரஹீம் செய்யது இராவுத்தர், அகமது சாகிப், முகமது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல இலட்சங்களை வாரி வழங்கினர்.  வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912 இல் வறுமையில் வாடியபோது, அவருக்கு உதவிகளைச் செய்து மகழ்ந்தவர் அகமது மீரான் என்பவராவார்.  வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடியவர் இசுலாமிய வழக்கறிஞர்... அன்று இந்திய சுதந்திரதிற்காக தங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக போராடிய பொருளாலும், உடலாலும் தியாகம் செய்த இசுலாமிய சமூகத்தின் வரலாறு அனைத்தும் பார்ப்பனீயத்தாலும் திராவிடத்தாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்தது என்பதே உண்மை.
---  மூத்த குடி. அரசியல் மாத இதழ்.  திசம்பர் 2013.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

Wednesday, November 18, 2015

புகை பிடிக்கும் பழக்கம்

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?
     சத்தியமா இல்லவே... இல்லைன்னு சொல்றீங்களா... ஒரு நிமிடம் இதப்படிங்க... Colgate, Vicco, Dabur, Himalaya  இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands -ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.
     ஒரு சிகரெட்லயே 2...மி.கி. தான் நிக்கோடின் இருக்காம்.  ஆனா Colgate Herbal -ல அதிகபட்சமா 18 mg / gm நிக்கோடின் இருக்காம்.  அப்ப நாம ஒரு தடவை இந்த பற்பசையில பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... இந்த ஆராய்ச்சி முடிவு 2011 - லயே வந்திருச்சி.  ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்டது நம்ம பத்திரிகை, தொலைக்காட்சிகளோடத  எப்படிதான் பாராட்றது...?
     என்னங்க இது அநியாயமா இருக்கு...? நம்ம அரசாங்கம் என்ன பண்ணுது...?- னு தானே கேட்க வர்றீங்க...? ம்ம்... என்னங்க பண்றது....? காசுக்காக மக்களுக்கு அரசாங்கம் சாராயம் விக்கிற நாடுங்க இது... இங்க போயி நியாயமாவது தர்மமாவது.
-- இரா.பார்த்திபன்.   மூத்த குடி.   அரசியல் மாத இதழ்.  திசம்பர் 2013.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.  

Tuesday, November 17, 2015

ஒரே மாதத்தில்...

ஒரே மாதத்தில் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை.
     சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்,
     கொத்தமல்லி  --  அரை கிலோ
     வெந்தயம்  --  கால் கிலோ
     இரண்டையும் தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்தெடுத்து, தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்.
     இரண்டு தேக்கரண்டி பொடியை இரண்டு குவளை ( இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்துஒரு குவளை அளவிற்கு சுண்டக் காய்ச்சவும்.  பின்பு வடிகட்டி, மூன்று வேளைகளுக்கு உணவுக்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக அருந்தவும்.  அடுத்து, குறைந்தது முக்கால் மணி நேரத்திற்கு குடிநீர் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது.
    ஒரு மாத காலத்திற்கு இந்தப் பொடியை மேற்கூறியபடி அருந்தி வரவும்.
    சர்க்கரை உங்கள் இரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூடத்தில் சோதனை செய்து உறுதி செய்து பாருங்கள்.  சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடி விட்டிருக்கும்.
-- சி.தேன்மொழி.
-- மூத்த குடி. அரசியல் மாத இதழ்.  திசம்பர் 2013.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.    

Monday, November 16, 2015

மூளைக்காரன்பேட்டை.

1.  ஏழு எழுத்துகள் கொண்ட எனக்கு அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.
2.  எனது முதல் 3 எழுத்துகள் அரசியல்வாதிகளின் இலக்கு.
3.  மூன்றாவது, நான்காவது எழுத்துகளை நீக்கிவிட்டால் அது ஒலிம்பிக்ஸ் வீரர்களின் இலக்கு.
4.  கடைசி 4 எழுத்துகள் விலக்குதலைக் குறிக்கின்றன.
5.  இரண்டாவது, மூன்றாவது எழுத்துகள் 'சங்கடப்படு'.
6.  முதல் எழுத்தும்,கடைசி மூன்று எழுத்துகளும் தாளின் ஒரு பகுதி.
     நான் யார்?
புதிருக்கான விடைகள்:
1.பதவிநீக்கம்  2. பதவி  3.பதக்கம்  4.நீக்கம்  5.தவி  6.பக்கம்.
-- ஜி.எஸ்.எஸ்.  ரிலாக்ஸ்
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி 17,  2014.   

Sunday, November 15, 2015

இணைய வெளியிடையே...

*  நாம் உண்ணும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும், நாமே தீர்மானிப்பதுதான் உண்மையான சுதந்திரம்!
   sutha@twitter.com
*  ஹியூமர் சென்ஸ் உள்ள ஆணையும், ரூமர் சென்ஸ் உள்ள பெண்ணையும், பெண்களுக்கு எளிதில் பிடித்து விடுகிறது!
   naayon @ twitter.com
* எடை கூடுவதற்காக பெண்கள் சந்தோஷப்படுவதென்றால், அது மளிகை கடையில் பொருட்கள் வாங்கும்போது மட்டும் தான்!
   pisasu @ twitter.com
*  இங்குமட்டும்தான்,மீன் பிடிக்கப்போனால் மீனுக்குப் பதிலாக மீனவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்!
    vivaaji @ twitter.com
*  குடித்துவிட்டு மட்டுமே வாகனத்தை ஓட்டுவேனென அடம்பிடிக்கிற்து, பெட்ரோல் டேங்க்!
   writer @ twitter.com
*  பூமியை பாதுகாப்பது குத்த கருதரங்கம் நடத்தப்படுகிறது குளிரூட்டப்பட்ட அறைகைகளில்!
   sappani @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 16-2-2014. 

Saturday, November 14, 2015

அப்படியா...?

*  வயிற்றிலுள்ள அமிலத்திலிருந்து வாயு பிரிந்து ஏப்பம் வருமளவுக்கு ஈர்ப்புவிசை இல்லாததால் விண்வெளி வீரர்களால் ஏப்பம்
   விட முடியாது.
*  ATM மிஷினை உருவாக்கிய ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன் மனைவியால் 6 இலக்க ரகசிய எண்ணை நினைவில் வைக்க
   முடியாததால், அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.
*  வழுதுணங்காய் என்பது கத்தரிக்காயின் பழந்தமிழ்ப் பெயர்.
*  இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாகக் கேலிச்சித்திரம் ( கார்ட்டூன் ) வெளியிட்டவர் நம்ம மகாகவி பாரதியார் தான்!
   சுதேசமித்திரனில்!!
*  இன்றும் தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் போது, திருவெம்பாவை பாடப்படுகிறது!
*  விமானத்திலிருந்து பார்க்கும் பயணிக்கு வானவில் வட்ட வடிவமாகத் தெரியும்!
*  ஆசியாவிலுள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஆட்சி
   மொழிகளில் ஒன்றாக இருக்கிறது !
*  உலக மக்கள் தொகையை 100 பேர் இருக்கும் கிராமமாகக் கொண்டால், அதில் 57 ஆசியர்கள்,21ஐரோப்பியர்கள், 14
   அமெரிக்கர்கள், 8 ஆப்பிரிக்கர்களும் இருப்பார்கள்.
--     தமிழ் பேக்ட்ஸ்.  சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 16-2-2014.  

Friday, November 13, 2015

ஆன்மிகப் புதிர்

ராமாயணம் படித்திருக்கிறீர்களா?  அப்படியென்றால் கீழே உள்ள சொற்களைச் சரியாகப் பொருத்துங்கள்.
ஐவரில் ஒருவர்...........................பஞ்சவடி
லட்சுமணனின்.............. ........... மோதிரம்
அடையாளம் .................            சிவதனுசு
சகுந்தலை ................................  ஊர்மிளை
சுயம்வரம் ...................... ...........துஷ்யந்தன்
சுக்ரீவன் ........................ ...........குகன்
வனவாசம் ..................... ............கிஷ்கிந்தா
வீணைக்கொடி ............. ............இந்திரஜித்
ஜனகர் ........................... .............ராவணன்
இந்திரனை வென்றவன்............ ராஜரிஷி
விடை :
*  குகனோடு நாங்கள் ஐவரானோம் என்று ராமன் விபீஷண்னிடம் சொல்கிறான்.
*  லட்சுமணனின் மனைவி ஊர்மிளை
*  தனது அடையாளமாக மோதிரத்தை அனுமனிடம் கொடுத்து அனுப்புகிறாள் சீதை.
*  சகுந்தலையின் கணவன் துஷ்யந்தன்.
*  சுயம்வரத்தில் ராமர் சிவதனுசை முறித்தார்.
*  சுக்ரீவன் இருந்த இடம் கிஷ்கிந்தா.
*  ராமர் வனவாசம் இருந்த இடங்களில் ஒன்று பஞ்சவடி.
*  ராவணனின் கொடி வீனைக்கொடி.
*  ஜனகர் ராஜரிஷி என அழைக்கப்படுபவர்.
*  இந்திரனை வென்றவன் இந்திரஜித்.
--   ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 6, 2014. 

Thursday, November 12, 2015

பூதத்தாழ்வார்

  பூதத்தாழ்வார் வைனவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் காலத்தால் முதலாமவர்.  முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக போற்றப்பட்டவர்.  மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைனவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிபந்தங்களில் உள்ள நூறு வெண்பாக்களால் ஆன இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.
     இவரது அவதாரத் தலமான மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது.  இக்கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது.  இக் கோயிலின் வெளிச்சுவரிலே, இத்தலம் பூதத்தாழ்வாரின் அவதாரத் தலம் என அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.
     திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவப் பெரியோர் கூறுகின்றனர்.
     வடமொழியில் பூ என்ற அடிச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல்.  இதற்குச் சத்து - அறிவு என்று பொருள்.  பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார்.
-- ரஜேஸ்வரி ஐயர்.  ஆழ்வார்கள். ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 6, 2014.

Wednesday, November 11, 2015

குழந்தையைக் கொஞ்சலாம்!

பிறக்கும் முன்னே குழந்தையைக் கொஞ்சலாம்!
     கருவில் இருக்கும் குழந்தையை கொஞ்சி மகிழும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது நவீன விஞ்ஞானம்.
     வயிற்றில் இருக்கும் சிசுவின் மாதிரியைக் கொண்டு, குழந்தை பொம்மையை தயாரித்துத் தருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த 3டி பேபிஸ் நிறுவனம்.
     3டி, 4டி அல்ட்ரா சவுண்ட் தொழில் நுட்பம் மூலம் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் உருவத்தை பதிவுசெய்து, அதையே மாதிரியாக வைத்து இந்த குழந்தை பொம்மையை உருவாக்கித் தருகிறது இந்த நிறுவனம்.  இதன் மூலம் தன் குழந்தை வயிற்றில் எப்படி இருக்கும் என்பதும், அதன் முக மற்றும் உடல் அமைப்பு குறித்தும் பெற்றோர்கள் முன்னரே அறிந்து கொள்ளலாம்.  இது மட்டுமல்லாது, பொம்மையின் உடல் நிறம், அளவு ஆகியவற்றை பெற்றோர்களே நிர்ணயம் செய்யலாம்.  20 செ.மீ, 10 செ.மீ என விருப்பமான அளவுகளில் குழந்தை பொம்மையை பெற்றுக் கொள்ளலாம்.
     இந்த 3டி குழந்தையின் மூலம் முன்கூட்டியே குழந்தை வளர்ப்பு அனுபவத்தைப் பெறமுடியும்.  குழந்தையை எப்படி லாவகமாக தூக்குவது, கொஞ்சுவது, பராமரிப்பது என்று பயிற்சி எடுத்து தயாராகலாம்.  எல்லாவற்றுக்கும் மேலாக, 'நீ இப்படித்தான் இருந்தாய்' என பின்னாளில் அக்குழந்தைக்கே நினைவுப் பரிசாகவும் வழங்கவும் முடியும் என்பதால், அமெரிக்கத் தாய்மார்களிடையே பெறும் வரவேற்புப் பெற்றுள்ளன 3டி குழந்தை பொம்மைகள்.
     விரைவில் இந்த சேவையை மற்ற நாடுகளிலும் விரிவுபடுத்த அந்நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிய தடைவிதிக்கப்பட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-- பவானி.
-- தினமலர். பெண்கள்மலர். 1-2-2014.  

Tuesday, November 10, 2015

தெரியுமா உங்களுக்கு !

  திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை 'டயல் யுவர் இ.ஓ' எனும் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்று
   வருகிறது.  இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தொலபேசி மூலம் கூறும் குறைகள் கேட்கப்பட்டு, அவற்றில் சில
   நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்கிற பக்தர்
   தொடர்பு கொண்டு,' சுவாமி தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தமது கைக்குழந்தைகள்
   பாலுக்காக அழும்போது செய்வதறியாது தவிக்கின்றனர். இதற்கு தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என
   கோரிக்கை விடுத்தார்.  'இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது.  இனி வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை
   களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் பால் விநினியோகம் செய்யப்படும் என்று அதிகாரி கோபால் தெரிவித்தார்.
-- தினமலர்  நாளிதழ், 

Monday, November 9, 2015

சமணர் படுகைகள்

சிதையும் சமணர் படுகைகள் பாதுகாக்கப்படுமா?
கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்று பொக்கிஷம்.
     முற்காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் மலைக்குகைகளை தங்கள் வாழிடமாகக்கொண்டிருந்தனர்.  தவத்துக்கு ஏற்ற தனிமையும், நிர்வாணக் கோலத்தில் இருப்பதற்கும் அதுபோன்ற இடங்கள் அவர்களுக்கு உகந்தவையாக இருந்தன.  மலைகள் சூழ்ந்த இயற்கை பகுதிகளில், சராசரி மக்களிடம் இருந்து விலகி துறவறம் மேற்கொள்ள மலை குகைகளையே சமண முனிவர்கள் தேர்வு செய்து வந்துள்ளனர்.
     முதலில் கரடு முரடான பகுதிகளில் தங்கியவர்கள் பின்னர் தங்களூக்காக பாறைகளில் படுகைகளையும், இருக்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர்.
      சமணர்கள் அதிகம் இருந்த பகுதிகளை பஞ்சபாண்டவர் மலை, ஐவர் மலை என அழைக்கப்பட்டன.  மதுரையில் கி.மு. 3ம் நூற்றாண்டில் சமணம் வளர்ச்சி பெற்றிருந்தது.  அதன் பிறகு அங்கு அது வீழ்ச்சியை சந்தித்தபோதும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமணம் எழுச்சி பெற்றிருந்தது.  இதற்கு ஆதாரங்களாக சமணர் படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.செஞ்சிக்கோட்டையிலும் சமணப் படுகைகள் காணப்படுகின்றன.
      பாதுகாக்கப்பட வேண்டிய இப்படுகைகளில் அதன் வரலாற்று உண்மை புரியாமல் பலர் தங்கள் பெயர்களை கிறுக்கி வைத்து, பெயிண்டால் அலங்கோலப்படுத்தியுள்ளனர்.  அதன் தொன்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
      மேலும் இதுபோன்ற சமணப் படுகைகள் உள்ள மைலைகள் கல் குவாரிகளாக மாற்றப்பட்டு ஜல்லி கற்களாக உடைக்கப்பட்டு வருகின்றன.  மிச்சம் உள்ளதையாவது தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--    'தி இந்து' நாளிதழ். சனி,பிப்ரவரி 8,2014.

Sunday, November 8, 2015

தங்கத் தாழி மீட்பு

புத்தரின் முடி, பல், எலும்புகள் அடங்கிய தங்கத் தாழி மீட்பு.  திருடுபோனதாக தேடப்பட்டு வந்தது.
     நாம் பென்.
     மலைக்கோயில் ஒன்றில் வைக்கப்பட்டு திருடுபோனதாக தேடப்பட்டு வந்த புத்தருடையது என கருதப்படும் முடி,பற்கள், எலும்புகள் அடங்கிய தங்கத்தாழி மீட்கப்பட்டது.
     கம்போடியாவில் உள்ள மலைக்கோயில் ஒன்றிலிருந்து இந்த தங்கத்தாழி, சிறுசிலைகள் உள்ளிட்டவை காணாமல்போனது  கடந்த டிசம்பரில் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.  இதனால் நாட்டில் கொந்தளிப்பு எழுந்து தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
     உடாங் நகரில் உள்ள கோயிலிலிருந்து 130 கி.மீ, தொலைவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் வியாழக்கிழமை  நடத்திய அதிரடி சோதனையில் இந்த உடமைகள் கிடைத்தன.  தாழியில் வைக்கப்பட்டிருந்த எல்லா பொருள்களும் பத்திரமாக இருப்பதாக தேசிய காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
     டிசம்பரில் மலைக்கோயிலின் 5 காவலர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.  புத்தரின் 2500ம் ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாட 1950ம் ஆண்டு இலங்கையிலிருந்து புத்தரின் புனித முடி, பற்கள், எலும்புகள் கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டன.
     2002ல் அப்போதைய மன்னர் நரோடம் சிகானூக் இந்த உடமைகளை நாம்பென் நகரிலிருந்து உடாங் நகரில் வைக்க உத்தரவிட்டார்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ். சனி,பிப்ரவரி 8,2014. 

Saturday, November 7, 2015

புலியைக் கொன்றது சரியா?

  உதகையில் அதிரடிப்படை புலியை சுட்டுக் கொன்றது சரியா...தவறா? என்பது குறித்து, வனஉயிரியின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சவுந்தரராஜான் கூறியதாவது :
     4 வயதில் ராஜ்ஜியத்தை பிடிக்கும் புலிகள் 6 ஆண்டுகளில் தளர்வடையும். ராஜ்ஜியத்தை இழந்த புலி, பிற புலிகளின் ராஜ்ஜியத்தில் சுதந்திரமாக உலாவ முடியாது.  உயிர் அச்சம் ஒரு புறம், பசி மறுபுறம் வாட்டும்.  இந்த நிலையை அடைந்த புலிதான், காட்டை ஒட்டியிருக்கும் கிராமப்பகுதியில் ஊடுருவியுள்ளது.  முதலில் மாட்டை பதம் பார்த்த புலி, அதனினும் எளிதாக தாக்கி சாப்பிடக் கூடிய மனிதர்களை கொன்று தின்றுள்ளது.
     ஆராய்ச்சியளர்களின் கூற்றுப்படி, ஒரு புலி மனிதரை கொல்கிறது என்றால், அதன் மூதாதையர்கள் மனிதரைக் கொன்று தின்னும் பழக்கம் உள்ளதாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.  மனிதரைக் கொன்று சாப்பிடும் புலியை உயிருடன் பிடித்தாலும், அதனை மிருகக் காட்சி சாலையில் பாதுகாக்க முடியாது.  இரையைக் கொண்டுவரும் ஊழியர் மீதுதான், அந்த புலிக்குக் கண் இருக்கும்.  அஜாக்கிரதையால் கூண்டு திறந்தால், பல உயிர்கள் பலியாக வாய்ப்பாக அமையும்.  எனவே, மனிதரைக் கொன்ற புலிகள் ஆபத்தானவை.
     வனத்துறை அதிகாரிகள் உயிருடன் இப்புலியை பிடிக்க முதலில் கூண்டுகள் வைத்துப் பார்த்தனர்.  கூண்டுக்குள் மயக்க ஊசியுடன் அமர்ந்து புலியை எதிர்பார்த்திருந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.  ஆடு, நாய்களை வைத்து புலியைப் பிடிக்கும் முயற்சியும் தோல்வி கண்டது.  மூன்று மனிதர்களையும், இரண்டு மாடுகளையும் புலி கொன்ற நிலையில், உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.  தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை, இரவில் எங்கிருந்து புலி தாக்குமோ என்ற உயிர் அச்சம்.  இதுபோன்ற சூழ்நிலையிலும் பத்து நாட்களூக்கு மேலாக புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் எடுத்த முயற்சி தோல்வி கண்டது.  இக்கட்டான சூழ்நிலையில்தான் அதிரடிப்படை வீரர்கள் நவீன ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.  இந்த புலிக்கு வயதாகிவிட்டதால், உயிருடன் பிடித்து வனத்துக்குள் விட்டாலும் மீண்டும் வேட்டையாட  வழியின்றி நகர பகுதிக்குள்தான் வரும்.  அதனால் மனித உயிர்களைக் காக்கும்பொருட்டு புலியைக் கொன்றது சரிதான்.
-- வீ.சீனிவாசன்.
--  'தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஜனவரி 24, 2014.      

Friday, November 6, 2015

கழிவை நீக்கும் காளான்

   காளான்களை கொண்டு சாக்கடையை சுத்தம் செய்யலாம்.  இதை பாட்டனி புத்தகத்தில் படித்ததோடு சரி.  யாரும் முயற்சி செய்வதில்லை.  அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளார்கள்.  கழிவு நீர் நிறைந்த பகுதியில் சில காளான்களை நட்டு வைத்தார்கள்.  அடுத்த ஒரு வாரம் கழித்து அந்த நீரை சோதித்ததில் அந்த நீரின் நச்சுத்தன்மை கிட்டத்தட்ட  பாதிக்கும் கீழாக குறைந்திருந்தது.  சாக்கடை நீரின் தன்மை இப்படி மாறுவதற்கு காரணம், மைசிலியம் என்னும் காளான்களின் அடிப்பகுதி சாக்கடையில் உள்ள இ - கொலி பாக்டீரியா, பூச்சிகள் போன்றவற்றை அழித்துவிடுவதுதானாம்.
-- மணிகண்டன். நாளைய உலகம். ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி10,2014.

Thursday, November 5, 2015

வருஷாபிஷேகம்.

வருஷாபிஷேகம் என்றால் என்ன?  கோயிலில் நடத்துவது ஏன்?
      நாம் பிறந்த நாள் கொண்டாடுவது போல, கோயிலில் கும்பாபிஷேகம் செய்த நாள், அக்கோயிலின் வருஷாபிஷேக நாளாகக் கொண்டாட வேண்டும்.  இதனை சம்வத்ஸராபிஷேகம்  என்றும் சொல்வர்.
---அறிவோம்! தெளிவோம்!  - தொடரில், மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 30,2014.  

Wednesday, November 4, 2015

ராமன் பூஜித்த நவக்கிரகங்கள்.

  ஸ்ரீராமபிரான் சேது பந்தனம் ( பாலம்) கட்டுவதற்கு முன்பு விநாயகரையும், நவக்கிரகங்களையும் பூஜித்தார் என்பது புராணம்.  நவக்கிரகப் பிரதிஷ்டை நடந்த இடம் ' நவபாஷாணம்' எனப்படும்.  அது இப்போதுள்ள தேவிப்பட்டணம்.  விக்னேஷ்வரரை பூஜை பண்ணிய இடம் உப்பூர்.  எனவே, இந்தப் பிள்ளையாரை வழிபட்டே ராமேஸ்வர யாத்திரையை தொடங்க வேண்டும்.
மூன்று வகை ஆசைகள்
     மூன்று வகையான  ஆசைகள் மனிதனை மோட்சமடையாமல் தடுக்கின்றன என்பர்.  மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பன அவை.  தனேஷனை, தாரேஷனை, புத்ரேஷனை என்பது வடநூல் வழக்கு.  மண்ணாசை முதலில் வந்துவிடும்.  இளமையில் பெண்ணாசை வரும்.  பிறகு வருவது பொன்னாசை.  இம்மூன்று ஆசைகளே பிறவிக்குக் காரணமாகும்.  இவற்றை விடவேண்டும் என்பதனை நாயன்மார் வரலாறு காட்டும்.  சேரமான் பெருமாள் தனேஷனையை விட்டவர்.  திருநீலகண்டர் தாரேஷனையை விட்டவர். புத்ரேஷனையை விட்டவர் சிறுத்தொண்டர்.
-- தினமலர். பக்திமலர். ஜனவரி 30,2014. 

Tuesday, November 3, 2015

கருந்துளை கண்டுபிடிப்பு


ஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு
     புவியிலிருந்து 390 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆற்றல் மிக்க புதிய கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
     ஆர்எக்ஸ்ஜே 1532 பால்வெளி மண்டலத்தில் இந்த கருந்துளை உள்ளது.  மிகப் பெரிய அளவுடையதாக இது உள்ளது.  நாசாவின் சந்திரா எக்ஸ் கதிர் கண்காணிப்பு தொலை நோக்கி மற்றும் இதர தொலைநோக்கியைப் பயன்படுத்தி இக்கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.
     அளப்பரிய வடிவமைப்புகளை இக்கருந்துளை உருவாக்கியுள்ளதுடன் வெப்பவாயுச் சூழலில் ஏராளமான நட்சத்திரங்கள் உருவாவதிலிருந்தும் பாதுகாத்து வருகிறது.  இந்த கருந்துளை நமது சூரியனை விட ஆயிரம் லட்சம் கோடி ( ஆயிரம் டிரில்லியன் ) மடங்கு பிரகாசமானது. இக்கருந்துளையின் மையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான தடயம் எதுவும் கண்டறியப்படவில்லை.
கருந்துளை என்றால் என்ன?
     கருந்துளை ( பிளாக் ஹோல்) என்பது அண்டவெளியில் ஒரு பகுதியாகும்.  இவை இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம்.  கருந்துளைகளின் எல்லைக்குள் செல்லும் ஒளி உள்ளிட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவுக்கு அதீத ஈர்ப்பு சக்தியைக் கொண்டவை.  இவற்றின் எல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒலி,ஒளி, மின்காந்த அலைகள் கூட வெளியேறாது.  ஆகவே, இக்கருந்துளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.
     இக்கருந்துளைகள் நட்சத்திர தோற்றப் பரிமாணத்தின் இறுதிக் கட்டமாகக் கருதப்படுகின்றன.  இவை அதீத நிறையைக் (மாஸ்) கொண்டுள்ளதால், முடிவேயில்லாத அடர்த்தியைக் கொண்டுள்ளன.  கன அளவோ, மேற்பரப்போ இவற்றுக்குக் கிடையாது.
     அண்டப்பெருவெடிப்புக் காரணமாகவே, பூமி உள்ளிட்ட கிரகங்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஜனவரி25,2014.                                        

Monday, November 2, 2015

பொதுஅறிவு

*  உடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுப்பு நரம்புத் தொகுப்பு.
*  தும்மல் என்பது சுவாசப் பகுதியை சுத்தம் செய்வதற்காக இயற்கையாகவே நிகழும் நிகழ்வாகும்.  தும்மும்போது சில
   சமயங்களில் மார்பு விலா எலும்பு உடைய வாய்ப்பு உள்ளது.  அதே தும்மலை நாம் அடக்கினால் சில சமயங்களில் கழுத்து,
   தலைஆகிய பகுதிகளில் ரத்த நாளங்கள் வெடித்து இறப்பு ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.
*  சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள்களில் புதன் கோள்தான் சூரியனை மிக வேகமாகச் சுற்றி வருகிறது.  விநாடிக்கு 48 கி.மீ.
   வேகத்தில், 88 நாட்களில் சூரியன ஒரு சுற்று சுற்றிவருகிறது.  சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள அளவில் சிறிய கோளும்
   இதுதான்.
'நெட்'டுக்குத்து
*  செய்தி : பா.ம.க ஆட்சிக்கு வந்தால் காடுவெட்டி குருவுக்குதான் காவல்துறை.  --  ராமதாஸ்
   குத்து :  ஆட்சிக்கு வரலைன்னா காடுவெட்டி குரு காவல்துறைக்குதான்.  --  வஸந்தகுமாரன்.
--  'தி இந்து'  நாளிதழ்.

தானியங்கி கிளீனர்

  வீட்டை  பெருக்க, சுத்தம்  செய்யும் வேலைகளை  எளிதாக  செய்ய  வேக்குவம்  கிளினர்  இயந்திரங்களைப்  பயன்படுத்துகிறோம்.  ஆனால்  இந்த  இயந்திரத்தை  இயக்கவும்  ஒரு  ஆள்  தேவையாகத்தான்  இருக்கிறது.
   தற்போது  இதையும்  எளிமையாக்கியுள்ளது  ஐபோபாட்  என்கிற  கருவி.  மொபைல்  ஆப்ஸ்  மூலம்  இயக்கப்படும்  இந்த  கருவி  தானாகவே  அறையை  சுத்தம்  செய்கிறது.
   360  டிகிரி  சுழலும்  இந்த  கருவியிலுள்ள  சென்சார்கள்  வீட்டின்  வளைவுகளுக்கு  ஏற்ப  சுற்றி  வருகிறது.  எத்தனை  மணிக்கு  சுத்தம்  செய்ய  வேண்டும்  என  ஆப்ஸில்  பதிவு  செய்துவிட்டால்  தானாகவே  சுத்தம்  செய்துவிட்டு  அதற்குரிய  இடத்தில்  செட்டில்  ஆகிவிடும்.
கைகளே  கீபோர்டு
   கீபோர்டு  மற்றும்  மவுசுக்கு  பதிலாக  கையில்  சில  ஒயர்களை  மாட்டிக்கொண்டு  கம்ப்யூட்டரை  இயக்கலாம்.  இப்படியான  ஒரு  கருவியை  ஜெஸ்ட்  என்கிற  நிறுவனம்  வடிவமைத்துள்ளது.
   ஒயர்களைப்  போல  உள்ள  இந்தக்  கருவியை  கையில்  அணிந்து  கொண்டு  கம்ப்யூட்டரின்  மானிட்டரை  பார்த்து  கை  அசைத்தால்  மவுசாக  இயக்கலாம்.  திரையில்  தெரியும்  கீ  போர்டு  எழுத்துகளை  கையை  அசைப்பதன்  மூலமே  டைப்  செய்யலாம்.  மோஷன்  பிராசசர்  மூலம்  இந்தக்  கருவி  செயல்படுகிறது.
   போட்டோஷாப்  மற்றும்  3டி  வேலைகள்  உட்பட  பல  வசதிகளை  இந்த  கருவி  மூலம்  மேற்கொள்ள  முடியும்.
---'தி இந்து' நாளிதழ். வணிக வீதி  இணைப்பு. திங்கள்,   நவம்பர், 2, 2015.   

Sunday, November 1, 2015

மீட்டர் பேசுது

*  சூரியனிலிருந்து சுமார் 9.1 கோடி மைல் தொலைவில் பூமி உள்ளது  சூரியனிலிருந்து வெளிப்படும் வெளிச்சம்
    பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன.
*  வானிலையில் மாற்றம் ஏற்பட சூரியனே காரணம்.  சூரிய ஒளியால் கடல் பரப்பை விட நிலப்பரப்பு விரைவாக சூடாகிறது.
    இதனால் அதன் மேற்பரப்பில் வெப்ப நிலை, காற்றின் அழுத்தம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.
*  இங்கிலாந்தின் தென்கிழக்கே 1987 -ம் ஆண்டு அக்டோபர் 15 மற்ரும் 16 ஆகிய தேதிகளில் வீசிய கடுமையான புயலால் ஒரு
   கோடியே 50 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
-- 'தி இந்து'  நாளிதழ்.