Monday, October 26, 2015

பரமாச்சாரியார்.


     பரமாச்சாரியார், பெரியவாள், பெரியவர், மகாப்பெரியவர் என பக்தர்களால் அழைக்கப்பட்டவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
     அத்வைத தத்துவஞானி ஆதி சங்கரர் கி.மு. 482 முதல் 477 வரை காஞ்சிமடத்தின் முதல் தலைவராக இருந்து குருபரம்பரையை துவக்கி வைத்தார் என்கிறது காஞ்சிமடத்தின் இணைய தளம்.  பரமாச்சாரியார் அதன் 68வது மடாதிபதி.
     விழுப்புரத்தில் வாழ்ந்த கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கு சுவாமிநாதன் 1894ல் பிறந்தார்.  அவர்தான் 1907 பிப்ரவரி 3ல், 13-வது வயதில் மடத்தின் தலைவராகி பரமாச்சாரியார் ஆனார்.  1911 முதல் 1915 வரை மடம் அரசாங்கத்துக்கு போனது.  1915ல் அவருக்கு 21 வயதானதும் மடத்தின் நிர்வாகம் அவரிடம் திரும்பியது.
     87 வருடங்கள் மடத்தின் தலைவராக இருந்தார்.  வடக்கே வாரணாசிக்கும் தெற்கே ராமேஸ்வரத்துக்கும் பாதயாத்திரை சென்று வந்தார்.  சமஸ்கிருதம், வேதங்கள், சாஸ்திரங்களை, ஆழமாக கற்றார்.  அவற்றை பரப்பவும் பலப்படுத்தவும் பல மாநாடுகளை நடத்தினார்.  பல அறக்கட்டளைகளை ஆரம்பித்து மடத்தை பலப்படுத்தினார்.  அவரின் காலம் பொற்காலம் எனப்படுகிறது.
     மடாதிபதிகள் பட்டு ஆடைகளை அணிவதே வழக்கம்.  அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு இயக்கம் நடந்தபோது பட்டாடைகளை நீரில் எறிந்துவிட சொன்னார்.  கதர் ஆடைகளுக்கு மாறினார்.  தனது சீடர்களையும் அவ்வாறு செய்ய அறிவுறுத்தினார்.  கேரளத்தில் பரமாச்சாரியார் - காந்தியடிகள் சந்திப்பு நடந்தது.
     நேபாள மன்னர் இந்திய பிரதமர்கள் முதல் மிக முக்கியமானவர்கள் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.  ஆனாலும், ஏழை பணக்காரர் அனைவரையும் சமமாக நடத்தினார்.  1994ல் ஜனவரி 8ம் நாளில் முக்தி அடைந்தார்.
-- தேசம்.
--  ' தி இந்து' நாளிதழ், புதன், ஜனவரி 8, 2014.                                       

No comments: