Sunday, October 25, 2015

கள்ள ரூபாய் நோட்டு

  இந்தியாவில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு பாகிஸ்தானே காரணாம்.
     துபாய், ஹாலந்தில் அச்சிட்டு வங்கதேசம் வழியாக அனுப்பப்படுகிறது.  இதற்கான தொழில்நுட்பங்களை மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வரவழைத்து அச்சடிக்கின்றனர்.  வங்கதேசம் வழியாக கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும்போது, நேபாளம் வழியாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.
     கள்ளநோட்டு விநியோகம் செய்பவர்கள் மிகப் பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதையே   2006-ம் ஆண்டில்தான் முதலில் தமிழக காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.  வேலூர் சி.எம்.சி.யில் இருதய அறுவை சிகிச்சைக்காக சேர்ந்த ஒருவர் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தன.
0.0006 சதவிகிதம் கள்ளநோட்டுகள்
     இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, "4 ஆண்டுகளுக்கு முன்புவரை கள்ள நோட்டுகளுக்கும், நல்ல நோட்டுகளுக்கும் சுமார் 13 வித்தியாசங்கள் இருந்தன.  ஆனால், தற்போதுள்ள கள்ள நோட்டுகளில் 2 வித்தியாசம் மட்டுமே உள்ளன.  கள்ள நோட்டுகளை அச்சடிப்பவர்களும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்"  .
     கள்ள நோட்டுகளே இல்லாத நாடு ஆஸ்திரேலியா.  இந்த நாட்டு ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வழக்கமான காகிதத்தில் இல்லாமல், பாலிமரில் அச்சடிக்கப்படுகின்றன.
     இந்த நோட்டுகள் கசங்காது, கிழியாது.  இதை அச்சடிப்பதும் கடினம்.  இதற்கான தொழில் நுட்பம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்துவருகிறது.  அதற்கு ஆஸ்திரேலிய அரசின் உதவியையும் கேட்டிருக்கிறது.
-- ஆர்.சிவா.  மாநிலம்.
-- ' தி இந்து' நாளிதழ், புதன், ஜனவரி 8, 2014.  

No comments: