Sunday, May 10, 2015

தங்கத்தில் கலப்படம்

  (  சிறப்பு ).
தங்கத்தில்  கலப்படத்தை  கண்டுபிடிக்க  புதிய  கருவி.
நகையை  வைத்தால்  'கலப்பு'  எவ்வளவு  என  கூறிவிடும்.
   ஓஸ்மீயம்,  பல்லேடியம்,  ருத்தீனியம்,  இரிடியம்  ஆகிய  வெள்ளை  உலோகங்கள்  தற்போது  பெரும்பாலான  தங்க நகைகளில்  கலக்கப்படுகின்றன.  இதைக்  கண்டறிவது  மிகவும்  கடினம்.  நகைகளை  உருக்கினால்தான்  இந்த  உலோகங்களைக்  கண்டுபிடிக்க  முடியும்.  அதுவும், 2,200  டிகிரி  பாரன்ஹீட்  அளவுக்கு  வெப்பப்படுத்த  வேண்டும்.  ஆனால், அந்த  அளவு  வெப்பத்தில்  தங்கம்  துகளாக  மாறி  காற்றில்  கலந்துவிடும்.  இந்த  முறைக்கு  மாற்றாக, தங்கத்தின்  தூய  தன்மையை  எளிதில்  கண்டறிய  தற்போது  எக்ஸ்.ஆர்.எஸ் ( XRS ) என்ற  கருவி  உள்ளது.  இந்த  கருவியில்  ஒரு  தங்க  நகையை  வைத்தால்,  அதில்  எந்த  அளவுக்கு  தங்கம், வெள்ளி, செம்பு, இதர  உலோகங்கள்  உள்ளன  என்பதை  சிறிது  நேரத்தில்  கண்டறிந்து  தெரிவித்துவிடும்.
   நகை  எந்த  அளவுக்கு  சுத்தமாக, தரமாக  இருக்கிறது  என்பதை  நுகர்வோர்  இந்த  கருவி  மூலம்  உறுதிப்படுத்திக்கொள்ள  முடியும்.  இக்கருவி  தற்போது  சந்தையில்  கிடைக்கிறது.
-- எஸ்.ரேணுகாதேவி. (கடைசிப்பக்கம் )
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், மே  6,   2015.                      
இதையும்  தெரிந்துகொள்ளுங்கள்
   இந்தக்  கருவி  கெட்டி  நகை  எனப்படும்  ஆண்கள்  அணியும்  காப்பு,  பெண்கள்  அணியும்  வலையல்  போன்றவற்றில்  உள்ள  தரத்தை  அறிய  முடியாது.  ஏனெனில், இது  ஒரு  குறிப்பிட்ட  மைக்ரான்  அளவுதான்  உள்ளே  ஊடுருவிச்  சென்று  தரம்  அறிய  முடியும்.  இந்தக்  கருவி  எப்போதோ  வந்துவிட்டது.  இதன்  விலை  பல  லட்சங்கள்.  எனவே, பெரிய  நகைக்  கடைகளில்  மட்டுமே  இருக்கும்.
-- பாலாஜி, 'தி இந்து' இணையதளம்  வழியாக... ( இப்படிக்கு  இவர்கள் ). கருத்துப்  பேழை.
--  'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  மே  7,   2015.  

No comments: