Tuesday, April 28, 2015

" சான்ஃபிரான்சிஸ்கோ "

 அமெரிக்காவில்   சான்ஃபிரான்சிஸ்கோ  நகரில்  ' தி  மிஸ்ட்ரி  ஸ்பாட்' னு  ஒரு  இடம்  இருக்கு.  விஞ்ஞானத்தில்  உள்ள  அத்தனை  விநோதங்களையும்  அங்கே  பார்க்கலாம்.  அதாவது,  இறக்கத்தில்  உருட்டிவிடும்  பேனா,  உருட்டிவிட்ட  இடத்திற்கே  திரும்ப  வரும்.  நாம  சரிவில்  இறங்கி  நடக்குற  மாதிரி  இருக்கும்.  ஆனா,  நம்மைப்  பார்க்கிறவங்களுக்கு  நாம்  நேரா  நடக்கிற  மாதிரி  இருக்கும்.  திடீர்னு  பார்த்தா  சுவரோட  மையத்தில்  இருப்போம்.  இப்படி  அறிவியல்  குறும்புகள்  நம்மை  அச்சர்யத்தில்  ஆழ்த்தும்  இடம்  அது! '.
-- K.சந்தானம்  குடும்பத்துடன்  சென்றபோது  பார்த்தது. 

Monday, April 27, 2015

தாலாட்டு.

தாலாட்டு  பாடி  குழந்தைகளைத்  தூங்கவைக்கும்  ' மம்மி ' கள்  இப்போது  இருக்கிறார்களா?
     அரசருக்குப்  பிறந்தாலும்  அரச  மரத்தடியில்  பிறந்தாலும் தாலாட்டு  பாடி  குழந்தைகளைத்  தூங்கவைப்பது  என்பது  அழியாமல்,  உலகின்  கடைசி  தாய்  இருக்கும்  வரை  தொடரும்.
     ருமேனியத்  தாய் ' ஹையா...ஹையா...மைக்கா  பையா...'  என்று  தாலாட்டை  ஆரம்பிக்கிறாள்.  செக்  நாட்டில்  தாலாட்டு ' ஹூல்லி  பேபி...'  எனத்  தொடங்கும்.  கிரேக்கர்கள்  ' நானி...நானி...என்  பாப்பா...' என்றும்,  துருக்கியில்  ' ஹூஹூ ஹூஹூ  பேபி...' என்றும்,  நாம் ' லுலுலுலுவாயி...' என்றும்,  தாலாட்டுகிறோம். 4,000  ஆண்டுகளுக்கு  முன்பு  ஒரு  தாய்  குழந்தையைத்  ' தூக்கமே  வா!  என்  குழந்தையைத்  தூங்க  வை.  சீக்கிரம்  வா...பளிச்சிடும்  அவன்  கண்களை  என்  விரல்களால்  மெள்ள  மூடுகிறேன்...  தூக்கமே  வா!  அவன்  உதடுகள்  எதையோ  முணுமுணுக்கின்றன... அந்த  முணுமுணுப்பு  அவனைத்  தூக்கத்தில்  இருந்து  எழுப்பிவிடாமல்... தூக்கமே  வந்து  சேரு!'  என்கிற  அர்த்தத்தில்  தாலாட்டு  பாடி  இருக்கிறாள்.  சுமேரியாவில்  அந்தத்  தாய்  பாடிய  பாடல்  நமக்குக்  கிடைத்திருக்கிறது.
-- ஹாய்  மதன்.  கேல்வி...பதில்.
-- ஆனந்த விகடன்.2 .5 . 2012.  

Sunday, April 26, 2015

இன்றைய கல்விமுறை

" இன்றைய  கல்விமுறை  எப்படி  இருக்கிறது?"
" உங்களுக்காக  ஒரு  குட்டிக்  கதை.  அந்தக்  கல்லூரியைச்  சுற்றிலும்  வீடுகள்  இருந்தன.  அந்த  வீட்டில்  வசிப்பவர்களின்  நாய்கள்  அடிக்கடி  கல்லூரி  வகுப்புகளுக்குள்  வந்து  படுத்துக்கொள்ளும்.  ஆசிரியர்களும்  அதைப்  பொருட்படுத்துவது  இல்லை.  திடீரென்று  ஒருநாள்  ஒரு  பேராசிரியருக்கு  ஆத்திரம்  வந்ததாம்.  மாணவர்களைப்பார்த்து  கோபத்துடன்  சொன்னாராம், ' இந்த  நாயை  விரட்டுங்கள்.  போன  வருஷமே  இந்த  நாய்  இந்த  கோர்ஸை  முடித்து  விட்டது!".
-- அ.பேச்சியப்பன்,  ராஜபாளையம். ( நானே  கேள்வி... நானே  பதில்! ).
--ஆனந்த விகடன்.11 .4 . 2012.  

Saturday, April 25, 2015

சிறுநீர் !

  இந்த  உலகம்  கடல்  நீரால்  சூழப்பட்டு  இருப்பதுபோல்,  உயிர்கள்  சிறுநீரால்  சூழப்பட்டு  இருக்கின்றன.  சிறுநீர்   இழிவானதன்று.  மாரடைப்பைத்  தடுக்கும்  மருந்து  சிறுநீரில்  தயாரிக்கப்படுகிறது.  சிறுநீரில் தங்கமெடுக்க  முனைந்த  ஆராய்ச்சி  வெள்ளை  பாஸ்பரஸ்  கண்டுபிடிப்பில்  முடிந்தது.  சில  நூற்றாண்டுகளுக்கு  முன்பு  வரைக்கும்  தோலின்  மினுமினுப்புக்கு  உடம்பெங்கும்  சிறுநீர்  பூசிக்கொண்டார்கள்  இங்கிலாந்துப்  பெண்கள்.
      சிறுநீரில்  ஊறிய  புல்லைத்தான்  பல்  துலக்கப்  பயன்படுத்துகிறார்கள்  எஸ்கிமோக்கள்.  கோமேயம்தான்  சிறந்த  கிருமி  நாசினி  என்று  கண்டுபிடித்தவர்கள்  இந்துக்களும்  ஆப்பிரிக்கர்களும்.
      ஒரு  டஜன்  எலிகள்  கூடி  ஒரு  நாள்  முழுக்கச்  சிறுநீர்  கழித்தாலும்  ஒரு  ஸ்பூன்கூட  நிரம்பாதாம்.  ஆனால்,  ஒரு  யானை  ஒரு  நாளில்  49  லிட்டர்  சிறுநீர்  கழிக்கிறதாம்.
      கொசுவுக்கும்  சிறுநீர்  உண்டு.  ஆனால்,  அதன்  கழிப்பறைதான்  உலகத்திலேயே  உயர்ந்தது.  மனித  உடல்தான்  கொசுவின்  சிறுநீர்  கழிப்பறை.  உடம்பில்  ஊசிபோடும்  கொசு,  தன்  சிறுநீரை  உடம்புக்குள்  கழித்து  விட்டு  அந்தக்  காலி  இடத்தை  நம்  ரத்தத்தால்  நிரப்பிக்கொள்கிறது.
      சிங்கத்தின்  சிறுநீர்  வாசம்  அத்துணை  சீக்கிரம்  தீராது.  காடுகளில்  குறிப்பிட்ட  எல்லைகளில்   சிறுநீர் கழித்துச்  செல்லுமாம்  சிங்கம்.  இது  என்  காடு,  இதற்கு  மேல்  எதிரிகள்  வரக்கூடாது  என்று  எச்சரிக்கை  செய்யுமாம்  சிங்கத்தின்  சிறுநீர் வாசம்.
      ஆட்டுக்  கிடாய்  தன்  உடம்பெங்கும் சிறுநீரைப்  பூசிக்கொள்ளுமாம்.  அது  வெள்ளாட்டைப்  பாலுணர்வுக்கு  அழைத்து  வெறியூட்டுமாம்.  ஆடுகளுக்கு  ' சென்ட்'  ஆகிவிடுகிறது  சிறுநீர்.
       மோஹியோ  பாலைவனத்து  ஆமைகளின்  உடம்பில்  மூன்றில்  ஒரு  பங்கு  சிறுநீர்தானாம்.  உடம்பில்  நீர்ச்  சத்து  குறைந்துபோனால்,  சிறு நீரைத்தான்  சுழற்சிக்கு  அனுப்புமாம்.
       மனிதனின்  பிரச்சனைகள்  ஆரம்பமாவது  இரண்டில்.  சிறுநீர்  அதிகம்  பிரிவது;  மற்றும்  சிறிதும்  பிரியாதது.  அவரவர்  சிறுநீர்  பருகுதல்  அவரவர்  நோய்தீர்க்கும்  என்பதும்  ஒரு  மருத்துவ  நம்பிக்கை.
       எனவே,  சிறுநீர் என்பது  சிறுமைக்குரிய  நீரல்ல,  ' சிறுநீர்  இன்றியும்  அமையாது  இவ்வுலகு '."
-- விகடன் மேடை.  வைரமுத்து  பதில்கள்.
-- ஆனந்த விகடன்.21 . 11 . 2012.  

Friday, April 24, 2015

கிளியோபாட்ராவின் கோபம்!

 நூல்களும்  நூலகங்களும்தான்  அறிவை  வளர்ப்பதற்கு  பயன்படும்  அறிவுச்  சோலைகள்.
     ஜூலியஸ்  சீசர்  எகிப்தின்  மிது  படையெடுத்து  அந்நாட்டை  அடிமைப்படுத்தச்  சென்றபோது  எகிப்தில்  அமைந்திருந்த  மிகப்பெரும்  நூலகத்தை  அவரது  படையினர்  தீயிட்டு  அழித்தனர்.
     பேரழகி  கிளியோபாட்ராவிடம்  சீசர்  மயங்கி  அவளிடமே  அவளது  நாட்டை  ஒப்படைத்தார்.  அவள்  அழகில்  சொக்கிப்போயிருந்த  அவர்  அவளுடனேயே  தங்கிவிட்டார்.
     ஒருநாள்  சீசரை  கிளியோபாட்ரா  அழைத்து, " உமக்கு  நான்  ஒரு  பெரும்  தண்டனை  வழங்க  இருக்கிறேன்.  என்னுடன்  சேர்ந்து  வாழ்வதால்  உம்மை  மன்னிப்பதாக  இல்லை.  உம்முடைய  படைவீரர்கள்  பிடித்த  கட்டடங்களை  திருப்பிக்  கட்டிவிடலாம்.  கொல்லப்பட்ட  வீரர்களைப்  பற்றிக்கூட  அது  போரில்  நடக்கக்கூடியதே  என  விட்டுவிடலாம்.  ஆனால்,  அறிவுப்பெட்டகமாக  விளங்கிய  அரிய  நூலகத்தை  உம்முடைய  முரட்டு  வீரர்கள்  எரித்து  விட்டார்களே!  ஆயிரமாண்டுச்  சிந்தனைகளை  இனி  மீண்டும்  எப்படி  பெறுவது?  எனவே,  இந்த  நாட்டின்  அரசி  என்ற  முறையில்  உம்மை  எரிக்கலாமா?  என்று  நினைக்கிறேன்"  என்று  கடிந்தாளாம்.  சீசர்  எரிக்கப்படவில்லை.  சமரசமாகி  விட்டது.  இந்நிகழ்ச்சியை  சுட்டிக்காட்டுவது  நூல்களின்  அவசியத்தை  வலியுறுத்தத்தான்!
-- தா.பாண்டியன்  எழுதிய  ' மாணவர்  மாணவியர்களுக்காக '  என்ற  நூலில்  இருந்து...
-- தினமலர்.  வாரமலர் .  நவம்பர் . 18,  2012. 

Thursday, April 23, 2015

விநாயகர் அகவல்.

  அவ்வையார்  இயற்றிய  விநாயகர்  அகவல்  பாடல்களில்  விடுபட்ட  2  வரிகள்  குறித்து  தஞ்சை  சரஸ்வதி  மகால்  நூலக  சுவடிகளில்  விளக்கமாக  கூறப்பட்டுள்ளது  என்று  நூலக  தமிழ்  பண்டிதர்  மணிமாறன்  தெரிவித்துள்ளார்.
     இதுபற்றி  அவர்  வெளியிடுள்ள  அறிக்கை:
     விநாயகர்  அகவல். நூலை  பல்லாயிரக்கணக்கான  மக்கள்  தினமும்  பூஜையின்போது  மனமுருகிப்  பாடுவது  வழக்கமாக  உள்ளது.  அப்படி  சிறப்புடைய  பாடல்களில்  2  வரிகள்  விடுபட்டுள்ளது  இப்போது  தெரியவந்துள்ளது.  பழந்தமிழ்  நூல்கள்  அனைத்தும்  ஓலைச்சுவடிகளில்  இருந்து  பதிப்பிக்கப்பட்டு  அச்சு  நூலாக  மலர்ந்துள்ளன.  அச்சு  நூல்  வெளியானபின்பு,  அதில்  சில  விடுபட்டாலோ  அல்லது  பிழைகள்  இருந்தாலோ  அவை  அடுத்தடுத்த  பதிப்புகளில்  சரி  செய்யப்படும்.  இந்த  வகையில்  நல்லூர்  ஆறுமுக  நாவலர்  பதிப்பித்த  விநாயகர்  அகவலிலும்  பின்னர்  பாலகிருஷ்ண  முதலியார்  பதிப்பிலும்  இதன்பின்பு  திருவாவடுதுறை  ஆதீன  பதிப்புகளிலும்  முதல்  பாடலான  ' சீதக்  களபச்செந்தாமரைப்பூ ' என்று  தொடங்கும்  பாடலில்  இரு  வரிகள்  விடுபட்டுள்ளன.  இந்தப்  பாடலில்  2 வது  வரியான  ' பாதச்  சிலம்பு  பலவிசை  பாடப்...' என்ற  வரிக்கு  அடுத்து " காரணத்  தண்டை  கணைக்கால்  சிலம்பும்,  பூரணக்கதலியைப்  போற்றுடையழகும்"  என்ற  2  வரிகள்  உள்ளன.  இந்த  வரிகள்  இதுவரை  பதிப்பித்துள்ள  பாடல்களில்  இல்லை.  இந்த  சுவடியில்தான்  உள்ளன.  இவ்வாறு  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தினமலர்.  18 - 11 - 2012. 

Wednesday, April 22, 2015

துணுக்கு மேடை.

*  வள்ளுவர்  எப்படி  இருப்பார்  என்று  தெரியாத  நிலையில்,  வள்ளுவருக்கு  உருவம்  கொடுத்தவர்  வேணுகோபால்  சர்மா.
*  தாமஸ்  ஆல்வா  எடிசன்  பள்ளிக்கூடத்தில்  படித்தது  மூன்றே  மாதங்கள்தான்.  எடிசனின்  ஆசிரியர்,  இவனுக்கு  தலையில்  மூளை  இல்லை,
   களிமண்தான்  இருக்கிறது  என்று  சொன்னாராம்.  ஆசிரியரின்  கணிப்பை  பொய்யாக்கி  1000 க்கும்  அதிகமான  சாதனைகளை  கண்டுபிடித்தார்  எடிசன்.
*  இந்தியாவில்  பெண்கள்  காவல்  நிலையம்  முதன்முதலில்  கேரள  மாநிலத்தில்  கோழிக்கோடு  நகரத்தில்  1973ம்  ஆண்டு  தொடங்கப்பட்டது.
*  தமிழ்நாட்டில்  அமைக்கப்பட்ட  முதல்  நீர்மின்  திட்டம் ' பைக்காரா '.  இது  1929ல்  தொடங்கி  மூன்று  கட்டங்களாக  1956ல்  கட்டி  முடிக்கப்பட்டது.
   3080  அடி  உயரத்தில்  இருந்து  விழும்  நீரைக்  கொண்டு  இங்கு  மின்சாரம்  உற்பத்தி  செய்யப்படுகிறது.
--- தினமலர்.  பெண்கள் மலர்.  நவம்பர்  17,  2012. 

Tuesday, April 21, 2015

' இந்தி 'தர்ஷன்.

தமிழகத்தில்  1937ம்  ஆண்டு  சென்னை  வானொலி  நிலையம்  தொடங்கப்பட்டது.
1975ம்  ஆண்டு  ஆகஸ்டு  மாதம்  15ம்  தேதி  சென்னை  தொலைக்காட்சி  நிலையம்  தொடங்கப்பட்டது.
இந்தியில்தான்  செய்திகள்  அதிகம்.
வெள்ளிக்கிழமை  இரவு  ஒளியும்  ஒலியும்.
ஞாயிறு  மாலை  பழைய  தமிழ்படம்  ஒளிபரப்பப்பட்டது.
-- இ.ஜெசிந்தா,  மயிலாடுதுறை.
--  தினமலர்.  பெண்கள் மலர்.  நவம்பர்  17,  2012. 

Monday, April 20, 2015

எல்லாமே 100.

அமெரிக்க  அதிபரின்  கார்  எண்...
சிங்கத்தின்  கர்ப்பநாட்கள்...
மனித  உடலில்  உள்ள  மூட்டுகள்....
நீரின்  கொதிநிலை...
இவை  எல்லாமே  100 தான்.
-- விஜயா,  கட்டிகானப்பள்ளி
--  தினமலர்.  பெண்கள் மலர்.  நவம்பர்  17,  2012.  

Sunday, April 19, 2015

பாவங்க

மன்னிக்க  முடியாத  பாவங்கள்...
கொள்கை  இல்லாத  அரசியல்.
உழைப்பு  இல்லாத  செல்வம்.
நேர்மை  இல்லாத  வியாபாரம்.
ஒழுக்கம்  இல்லாத  கல்வி.
மனசாட்சி  இல்லாத  இன்பம்.
மனிதாபிமானம்  இல்லாத  விஞ்ஞானம்.
தியானம்  இல்லாத  இறைவழிபாடு.
-- உமாமகேஸ்வரி,  திருவெண்காடு.
-- தினமலர்.  பெண்கள் மலர்.  நவம்பர்  17,  2012. 

Saturday, April 18, 2015

துறவியின் உணவு.

  தேங்காய்க்  குடுக்கை,  சுரைக்  குடுக்கை,  தொன்னை,  மூங்கில்  படி,  மட்கலம்,  மரஓடு  இவை  துறவியின்  பாண்டங்கள்.  பொன்,  வெள்ளி,  செம்புப்  பாத்திரங்கள்  கூடாது.  தம்  பாண்டத்தை  வேள்விக்  கலமெனப்  போற்றி,  நீராலும்  மண்ணாலும்  அன்றாடம்  துலக்குக.
      நெருப்பு  மூட்டி  சமைத்துண்ணற்க.  பிச்சைக்குக்  கிராமத்துள்  செல்க.  பிரம்மச்சாரி,  வனப்பிரஸ்தர்  பிச்சைக்காகக்  காத்திருக்கையில்  துறவியும்  சென்று  நிற்கக்  கூடாது.  பறவையும்,  நாயும்  சோறுண்ணும்  இடத்திலும்  நிற்கக்  கூடாது.
      உலக்கைச்  சத்தம்  கேட்காத,  அடுப்பு  எரிந்து  கொண்டிராத,  புகை  நின்ற  இல்லம்  நாடுக.  விருந்தினர்  உண்டான  பின்  பிச்சை  கொள்க.
      ஒரே  வேளை  உண்ணுக.  அதிக  உணவு  காமம்  வளர்க்கும்.
---காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு.

Friday, April 17, 2015

தீட்டுக்கு மாற்று.

  மாதவிலக்கானவள்,  நான்காம்  நாள்  தலைமுழுகினால்  தீட்டு  விலகும்.
      காமத்தால்  வீர்யம்  விடுபவன்  நீராடினால்  தீட்டு  விலகும்.
      சண்டாளன்,  விலக்கானவள்,  பிணம்,  பிணத்தைத்  தொட்டவர்  ஆகியவர்களைத்  தொட்டால்  நீராடுக.
      மனித  எலும்பைத்  தொட்டால்  நீராடுக.
      வேள்வி  நோற்பவன்,  தாய்,  தந்தையர்,  மற்ற  பங்காளிகள்  மரித்தால்,  வேள்வி  முடிந்தபின்  மூன்று  நாட்கள்  தீட்டு  காக்க.  தர்ப்பணம்  செய்க.
      பிராமணன்  இறந்தால்,  கிழக்குத்  திசையில்  தூக்கிச்  செல்க.  சத்திரியனை  வடக்கேயும்,  வைசியனை  மேற்கேயும்,  சூத்திரனை  ஊருக்குத்  தெற்கேயும்  தூக்கிச்  செல்க.
      தலைக்கு  நீராடுவதால்  பிராமணனுக்குத்  தூய்மை.  வாகனம்,  படைக்கலம்  இவற்றைத்  தொடுவதால்  சத்திரியனுக்குத்  தூய்மை.  உழுகோல்,  கயிறு,  தராசு  ஆகியவற்றைத்  தொடுவதால்  வைசியனுக்குத்  தூய்மை.  மூங்கில்  குச்சியைத்  தொடுவதால்  சூத்திரன்  தூய்மை  பெறுகிறான்.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு.   மாதவிலக்கானவள்,  நான்காம்  நாள்  தலைமுழுகினால்  தீட்டு  விலகும்.
      காமத்தால்  வீர்யம்  விடுபவன்  நீராடினால்  தீட்டு  விலகும்.
      சண்டாளன்,  விலக்கானவள்,  பிணம்,  பிணத்தைத்  தொட்டவர்  ஆகியவர்களைத்  தொட்டால்  நீராடுக.
      மனித  எலும்பைத்  தொட்டால்  நீராடுக.
      வேள்வி  நோற்பவன்,  தாய்,  தந்தையர்,  மற்ற  பங்காளிகள்  மரித்தால்,  வேள்வி  முடிந்தபின்  மூன்று  நாட்கள்  தீட்டு  காக்க.  தர்ப்பணம்  செய்க.
      பிராமணன்  இறந்தால்,  கிழக்குத்  திசையில்  தூக்கிச்  செல்க.  சத்திரியனை  வடக்கேயும்,  வைசியனை  மேற்கேயும்,  சூத்திரனை  ஊருக்குத்  தெற்கேயும்  தூக்கிச்  செல்க.
      தலைக்கு  நீராடுவதால்  பிராமணனுக்குத்  தூய்மை.  வாகனம்,  படைக்கலம்  இவற்றைத்  தொடுவதால்  சத்திரியனுக்குத்  தூய்மை.  உழுகோல்,  கயிறு,  தராசு  ஆகியவற்றைத்  தொடுவதால்  வைசியனுக்குத்  தூய்மை.  மூங்கில்  குச்சியைத்  தொடுவதால்  சூத்திரன்  தூய்மை  பெறுகிறான்.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு. 

Thursday, April 16, 2015

பிறப்பு, இறப்பு தீட்டு.v

   நீர்,  நெருப்பு,  மண்,  காற்று,  சூரியன்,  தவம்,  வேள்வி.  அவி,  மணம்,  ஞானம்,  மெழுகுதல்,  பெருக்குதல்,  தீட்டுக்காலம்  ஆகியவற்றால்  மனிதர்க்கு  வலிமை  வரும்.
      குழந்தை  பிறப்பு  தீட்டு  தந்தைக்குப்  பதினோரு  நாள்.  தாய்க்கு  எண்ணற்ற  நாட்கள்,  தாய்க்கும்  தந்தைக்கும்  பிறர்  தொடக்கூடாதத்தீட்டு.
      பிறன்  மனைவியிடத்து  ஒருவனுக்குப்  பிள்ளை  பிறந்தால்  மூன்று  நாள்  தீட்டு.
      பிறப்புத்தீட்டு  ஏழு  தலைமுறைக்குட்பட்ட  பங்காளிக்கும்  உண்டு.  அவர்களின்  பொதுப்பெயர்  சபிண்டர்.  அதற்கு  மேற்பட்ட  முன்  தலை  முறைக்  கோத்திரப்  பங்காளிகளுக்கும்  அத்தீட்டு  உண்டு.  அவர்களின்  பொதுப்பெயர்  சோதகர்.
      குழந்தை  இறந்தாலும்  தீட்டு.  குழந்தை  பிறப்பில்  போலவே  தாய்க்கும்  தந்தைக்கும்  குழந்தை  இறப்பிலும்  தீட்டு.
      கருத்தரித்த  குழந்தை  கலைந்தால்  தீட்டு.  கரு  எத்தனை  மாதமோ  அத்தனை  நாட்கள்  தீட்டு.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு. 

Wednesday, April 15, 2015

மௌனம் - அமைதி.

" மௌனம்  என்பது  வேறு;  அமைதி  என்பது  வேறா?"
"  ஜான்கேஜ்  என்பவர்  ' மௌனம் '  என்ற  புத்தகத்தில்  எழுதுகிறார் --
   எந்த  சப்தமும்  வராத  ஓர்  அறையை  ஆக்ஸ்ஃபோர்டு  பல்கலைக்கழகத்தில்  உருவாக்கினார்கள்.  கேஜ்  நுழைந்தபோது  இரண்டு  சப்தங்களைக்  கேட்டார்.  ' என்ன  சப்தம்?'  என்று  கேட்டபோது,  'ஒன்று,  மனம் ( MIND )  வேலைசெய்கின்ற  சப்தம்.- நரம்பு  மண்டலம்.  இரண்டாவது,  ரத்த  ஓட்டம்,  இயங்குகின்ற  சப்தம்.  இதுநாள்  வரை நான்  இந்தச்  சப்தங்களைக்  கேட்டதே  இல்லை '  என்று  கேஜ்  சொன்னார்.  ' ஆம்,  அமைதி  வேறு  மௌனம்  வேறு.  அமைதி  எங்கு  வேண்டுமானாலும்  இருக்கும்.  போருக்குப்  பிறகுகூட  அமைதி  இருக்கலாம்.  புயலுக்குப்  பிறகுகூட  அமைதி  இருக்கலாம்.  அமைதி  மேலோட்டமானது.... மௌனம்  உள்  மையத்தில்  இருந்து  ஏற்படுவது.  மூன்று  துறவிகள்  மௌனம்  அனுஷ்டிப்பது  என்று  தீர்மானித்தார்கள்.  ஐந்து  நிமிடம்  சென்றிருக்கும்  முதல்  துறவியின்  முகத்தில்  கரி  இருந்ததைப்  பார்த்தார்,  இரண்டாவது  துறவி.  அவரால்  கட்டுப்படுத்த  முடியவில்லை.
   'உங்கள்  முகத்தில்  கரி !'  என்றார்.
   முதலாவது  துறவி,  ' நீ  பேசிவிட்டாய் '  என்றார்.  மூன்றாம்  துறவி, ' நான்  மட்டும்தான்  பேசவில்லை'  என்றார்.
   மௌனம்  வார்த்தைகளைக்  கடந்தது.  மொழிகளைக்  கடந்தது  மட்டுமல்ல;  எண்ணங்களையும்  கடந்தது."
-- சந்திரா  சிவபாலன்,  திருச்சி, 26.  ( நானே  கேள்வி...நானே  பதில்! )
-- ஆனந்தவிகடன்.  16 - 5 - 2012.  

Tuesday, April 14, 2015

சிறுநீரில் மின்சாரம்.

சிறுநீரில்  இருந்து  மின்சாரம்.--  நைஜீரிய  சிறுமிகள் சாதனை.
     சிறுநீர்  மூலம்  ஜெனரேட்டரை  இயக்கி  மின்சாரம்  தயாரிக்கும்  தொழில்நுட்பத்தை, ஆப்பிரிக்க  நாடுகளில்  ஒன்றான நைஜீரியாவை  சேர்ந்த  14,15  வயது  இளம்பெண்கள் 3  பேர்  கண்டுபிடித்துள்ளனர்.
     இதுகுறித்து  அந்த  பெண்கள்  கூறுகையில்,  ' சிறுநீரை  முதலில்  எலக்டோலைட்டிக்  செல்லுக்குள்  செலுத்தி  சிறுநீரில்  இருக்கும்  யூரியா  உடைக்கப்பட்டு  நைட்ரஜன்,  தண்ணிர்,  ஹைட்ரஜன்  என  3  ஆக  பிரிக்கப்படும்.  இதில் ஹைட்ரஜனை  மட்டும்  தண்ணீர்  வடிகட்டி  வழியாக  செலுத்தி  சுத்தப்படுத்தப்படும்.
     சுத்திகரிக்கப்பட்ட   ஹைட்ரஜனை  போராக்ஸ்  திரவம்  நிரப்பப்பட்ட  சிலிண்டருக்குள்  செலுத்தும்போது  உருவாகும்   ஹைட்ரஜன்  வாயுவை  மின்  உற்பத்தி  செய்யும்  ஜெனரேட்டரில்  செலுத்தி  ஜெனரேட்டரை  இயக்கலாம்.  ஒரு  லிட்டர்  சிறுநீர்  மூலம்  6  மணிநேரம்  ஜெனரேட்டரை  இயக்கி  மின்சாரம்  தயாரிக்க  முடியும்'  என்றனர்.
-- தினமலர்,  12 - 11 - 2012.  

வருடப் பிறப்பு.

  உலகில்  எல்லா  நாடுகளிலும்  வருடப்  பிறப்பு  கொண்டாடப்படுகிறது.  ஆனால்  அந்த  நாடுகளின்  வருடங்கள்  எல்லாவற்றுக்கும்  பெயர்  என்ற  ஒன்று  இருக்காது.  பெரும்பாலான  நாடுகளின்  ஆண்டுகள்  எண்களின்  அடிப்படையில்  தான்  அறியப்படுகிறது.  ஆனால்  தமிழர்  கொண்டாடும்  ஆண்டுகளுக்கு  மட்டுமே  பெயர்  இருக்கிறது. ( அது  வடமொழியில்  இருந்தாலும்  கூட )  தமிழில்  மட்டுமே  ஆண்டுகளுக்கு  பெயர்கள்  வழங்கப்படுகின்றன.
   தமிழில்  மொத்தம்  அறுபது  ஆண்டுகள்  உண்டு.  சூரியன்  மேஷ  ராசியில்  நுழைவதை  தமிழ்  வருடப்பிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது.  இவ்வாண்டு  பிறக்கும்  தமிழ்  ஆண்டானது தமிழ்  ஆண்டுகளின்  வரிசையில்  இருபத்து  ஒன்பதாவது  ஆண்டு  ஆகும்.  இப்புத்தாண்டின்  பெயர்  'மன்மத'  வருடம்.  மன்மத  என்றால்  வடமொழியில்  இளமை  என்று  பொருள்.  இது  கலி  பிறந்து  5116வது  வருடமாகும்.  தமிழில்  அறுபது  வருடங்கள்  பட்டியலை  வாக்கிய  பஞ்சாங்கம்  அல்லது  திருக்கணித  பஞ்சாங்கத்தில்  காணலாம்.  ஒவ்வொரு  தமிழ்  வருடத்திற்கும்  இடைப்காட்டுச்  சித்தர்  எழுதிய  பாடல்களைக்  கொண்டு  அந்த  வருடத்தின்  பலன்  அறியப்படுகிறது.
   சனி  கிரகம்  சூரியனை  ஒரு  முறை சுற்ற  30  வருடங்களை  எடுத்துக்  கொள்கிறது.  வியாழன்  கிரகம், சூரியனை  ஒருமுறை  சுற்ற  12  வருடங்களை  எடுத்துக்  கொள்கிறது.  இந்த  இரு  கிரகங்களும்  60  வருடங்களுக்கு  ஒருமுறைதான்  ஒரே  நிலையில்  சந்திக்கும்.  இதைக்  கொண்டுதான்  தமிழ்  வருடங்களை  60  என்று  கணக்கிட்டார்கள்.  முதல்  வருடத்தின்  பெயர்  'பிரபவ'  என்பதாகும்.  எந்த  தொழில்நுட்பமும்  இல்லாத  காலத்தில்  இதை  எல்லாம்  கணித்த  நம்  முன்னோர்கள்  பற்றி  தமிழ்  வருடப்  பிறப்பு  கொண்டாட்டத்தில்  நினைத்து  பார்த்து  மகிழ்வோம்.  எல்லோருக்கும்  இதை  பகிர்வோம்.
-- ஸ்ரீ,  தலையங்கம்.  பே.மு.பே
-- தினமலர்  திருச்சி  பெண்கள்மலர்.  11-4-2015. 

Monday, April 13, 2015

அறிவோம்! தெளிவோம்!v

  கோயில்களில்  அம்மன்  கிழக்கு  மற்றும்  தெற்கு  முகமாக  அமைந்திருப்பது  ஏன்?
     சிவன்  கோயில்களில் மூன்று  விதமாக  அம்மன்  சன்னிதியை  அமைக்கலாம்  என்று  ஆகம்  சாத்திரங்கள்  கூறுகின்றன.
     ஒன்று,  சிவன்  சன்னிதி  எந்த  திசை (  கிழக்கு  அல்லது  மேற்கு )  நோக்கி  அமைந்துள்ளதோ  அந்தத்  திசை  நோக்கி  அம்மனையும்  பிரதிஷ்டை  செய்வது.  அதாவது,  சுவாமியும்  அம்பாளும்  ஒரே  திசை  நோக்கி  காட்சி  தருவர்.  இதை  ஸமான  வீஷணம்  என்பர்.  கல்யாணக்  கோலம்  என்றும்  வழக்கத்தில்  இருக்கிறது.  மதுரை  மீனாட்சி  அம்மன்  கோயில்  இந்த  அமைப்பிலேயே  உள்ளது.
     இரண்டாவது,  சிவன்  சன்னிதி  கிழக்கு  அல்லது  மேற்கு  முகமாக  இருந்தாலும்  அம்மன்  சன்னிதி  தெற்கு  முகமாகவே  அமைந்திருக்கும்.  இதை  அனுக்கிரஹவீஷணம்  என்பர்.  சுவாமியை  தரிசிக்கும்  முறையில்  அம்மன்  பிரதிஷ்டை  அமைந்திருக்கும்.  சுவாமியின்  அனுக்கிரகத்தைப்  பெற்று  நமக்கு  அருள்வதாகப்  பொருள்.  இந்தநிலை  அனேகமாக  எல்லா  கோயில்களிலுமே  உள்ளது.
     முன்றாவது,  சுவாமி  சன்னிதி  மேற்கு  நோக்கி  இருந்தால்  அம்மன்  சன்னிதி  கிழக்கு  நோக்கி  அமைந்திருக்கும்.  நேர்  எதிராகப்  பார்த்துக்கொள்ளும்  நிலை.  அபிமுகவீஷணம்  என்பர்.  எதிர்க்காட்சி  என்றும்  வழக்கத்தில்  உள்ளது.  இந்த  நிலை,  மிக  அபூர்வமானது.  திருக்கடவூர்,  காளஹஸ்தி  போன்ற  தலங்களில்  தரிசித்து  மகிழலாம்.  அருள்பாலிப்பதில்  எந்த  வேறுபாடும்  கிடையாது.  மூன்றுமே  ஒன்றுதான்.
-- ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்,  மயிலாடுதுறை.
-- த்னமலர் ,  பக்திமலர்,  நவம்பர்  8,  2012. 

Sunday, April 12, 2015

மருத்துவம்.

  மருத்துவத்தில்  இரண்டு  வகைகள்  உண்டு.  வருமுன்  காப்பது,  வந்தபின்  சிகிச்சை.  சொல்லுங்கள் ...இதில்  முதல்  வகை  மருத்துவம்தானே  சிறந்தது!
    ' ப்ரிவென்ஷன்  ஈஸ்  பெட்டர்  தென்  க்யூர் '  ( Prevention  is  better  than  cure )  என்பது  ஆங்கிலப்  பழமொழி.  இதைவிடக்  கடுமையான  சீனப்பழமொழி  ஒன்று  உண்டு.  The  superior  doctor  prevents  sickness;  The  mediocre  doctor  attends  to  impending  sickness;  The  inferior  doctor  treats  actual  sickness.  அதாவது,  உயர்தர  மருத்துவர்  வியாதி  வராமல்  தடுப்பார்;  நடுத்தர  மருத்துவர்  வரப்போகும்  நோய்க்கு  வைத்தியம்  செய்வார்;  கீழ்த்தர  மருத்துவர்தான்  வந்துவிட்ட  நோய்க்கு  வைத்தியம்  செய்வார்.
     இதையேதான்  தாமஸ்  எடிசன்  என்கிற  பிரபல  மருத்துவ  அறிஞர்  இப்படிக்  கூறுகிறார்...The  Doctor  of  the  future  will  give  no  medicine  -- but  will  concentrate  in  diet  and  preventive  aspects.  '  எதிர்கால  மருத்துவர்  மருந்துகள்  கொடுக்கமாட்டார்  --  நோயைத்  தடுப்பதிலும்  உணவு  முறைகளிலுமே  கவனம்  செலுத்துவார் '  என்கிறார்.
     ஆக,  வரும்  முன்  காப்பதே  சிறந்த  மருத்துவ  முறை  என்பதைத்தான்  அறிஞர்கள்  வலியுறுத்துகிறார்கள்.
-- பி.சௌந்தரபாண்டியன்,   அவள் விகடன்,  20 -11 - 2012.  தீபாவளி  ஸ்பெஷல்.
-- இதழ் உதவி: N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் .  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி ).  

Saturday, April 11, 2015

நாய்க்கு குளியல் மிஷின் !

  மேல்நாடுகளில்  செல்ல  நாய்,  பூனைகளைக்  குளிப்பாட்ட  தனி  பார்லர்கள்  உண்டு.  ஜப்பான்  பார்லர்களில்  ஒரு  நாயைக்  குளிப்பாட்டும்  கட்டணம்  நமது  பணமதிப்பில்  ஆயிரத்து  500  முதல்  2  ஆயிரம்  ரூபாய்!
      ஜப்பானில்  இப்போது  பொருளாதார  நெருக்கடி.  நாய்  குளியல்  கட்டணத்தைக்  குறைக்க  வேண்டும்  என்று  ஒரே  கூப்பாடு.
      ஒரு  நிறுவனத்திற்கு,  ' இதையே  புது  பிசினஸ்  வாய்ப்பாக்கினால்  என்ன ' என்று  ஐடியா  பளிச்சிட...' டாக்  ஓ  மேட்டிக் '  என்ற  நாய்  குளியல்  மிஷினைக்  கண்டுபிடித்து சந்தையில்  குவித்தது.  விலை  குறைவு.  ஒரு  குளியலுக்கு  அதிகபட்சமாக  200  ரூபாய்தான்  செலவு  என்பதால்  அமோக  பிசினஸ்!
      இதைப்  பயன்படுத்துவது  ஈஸி.  மிஷினுக்குள்  நாயை  வைத்து,  கண்ணாடி  கதவை  மூட  வேண்டும்.  சுவிட்ச்சைத்  தட்டினால்  நாய்க்கு  ஷாம்பு,  ஸ்பெஷல்  சோப்  நுரையுடன்  கூடிய  இதமான  சுடுநீர்  குளியல்;  பிறகு  இதமான  வெப்பக்  காற்றால்  உடல்  ஈரப்பதம்  நீக்கல்... கதவு  திறந்தால்,  ' ப்ரஷ்'  ஆன  நாய்  துள்ளிக்குதிக்கும்!
--தினமலர்.  மார்ச்  28,  2010.  

Friday, April 10, 2015

உயிர் எங்கே?

  ' நம்  உயிர்  எங்கே  இருக்கிறது ?'  என்று  ஓர்  ஆராய்ச்சி,  மருத்துவர்கள்  கூடி  ஆய்வு  செய்கிறார்கள்.  ஒரு  மருத்துவர்,  ' நம்  உயிர்  இதயத்  துடிப்பில்  இருக்கிறது.  இதயத்  துடிப்பில்  இருக்கிறது.  இதயத்  துடிப்பு  நின்று  போனால்  உயிர்  பிரிந்து  போகும்'  என்றார்.  இன்னொரு  மருத்துவர், ' நம்  உயிர்  சுவாசக்  காற்றில்  இருக்கிறது.  சுவாசிக்க  மறந்து  போனால்  உயிர்  பறந்து  போகும் ' என்றார்.  மற்றுமொரு  மருத்துவரோ,  ' நம்  உயிர்  ரத்த  ஓட்டத்தில்  இருக்கிறது.  ரத்த  ஓட்டம்  தடைபட்டால்... உயிர்  விடைபெறும்'  என்றார்.  ஆளுக்கு  ஆள்  உயிர்  இருக்கின்ற  இடம்  பற்றிய  கருத்து  வேறுபாடுகள்  உண்டு.
      உலகின்  தலைசிறந்த  உளவியல்  மருத்துவர்,  வான்புகழ்  வள்ளுவர்  சொல்கிறார்...' நம்  உயிர்,  அன்பில்  இருக்கிறது.  அன்பின்  வழியது  உயிர்  நிலை'  என்று  அறிவிக்கிறார்.  அந்த  அன்புதான்  அவனியெங்கும்  ஆட்கொள்ளப்பட  வேண்டும்.
      நமது  வாழ்க்கையின்  ஆதாரமே  அன்புதான்.  இன்றைக்கு  கிலோ  என்ன  விலை  எனக்  கேட்கும்  அளவுக்கு,  அன்பு  நீர்த்துப்  போய்  விட்டது.  எந்த  சமுதாயத்தில்  குழந்தைகளும்,  முதியோர்களும்  காப்பகங்களில்  பராமரிக்கப்படுகிறார்களோ... அந்த  சமுதாயத்தில்  அன்பின்  ஆணிவேர்  இற்றுப்  போய்விட்டது  என்று  பொருள். காப்பகத்தில்  இருக்கும்  ஒரு  தாய்,  தன்  அருமை  மகனுக்கு  உயிரை  உருக்கி  ஒரு  கடிதம்  எழுதுகிறாள்...
    ' மகனே,  நீ  குடியிருக்க
     என்  வயிற்றில்  இடம்  இருந்தது.
     நான்  குடியிருக்க
     ஒரு  அறைகூடவா  இல்லை
     உன்  வீட்டில்...?'
என்று  கேட்கின்ற  தாயின்  புலம்பல்,  அக்குடும்பத்தில்  அன்பின்  ஆழம்  நீர்த்துப்  போய்விட்டதைக்  காட்டுகிறது.
--  தவத்திரு  குன்றக்குடி  பொன்னம்பல  அடிகளார்.
--  அவள் விகடன்,  20 -11 - 2012.  தீபாவளி  ஸ்பெஷல்.
--  இதழ் உதவி: N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் .  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி ). 

Thursday, April 9, 2015

போப்.

 ஒருமுறை  போப்,  நியூயார்க்  நகரத்துக்குப்  பயணம்  மேற்கொண்டார்.  அங்கு  அலுவல்  சம்பிரதாயங்கள்  முடிந்த  பிறகு  கிடைத்த  ஓய்வு  நேரத்தில்,  நியூயார்க்  நகர  வீதிகளில்  கார்  ஓட்ட  ஆசைப்பட்டார்  போப்.  உடனே,  டிரைவரைப்  பின்  இருக்கையில்  அமரச்  சொல்லிவிட்டு,  அவர்  கார்  ஓட்டத்  தொடங்கினார்.  ரசித்து,  லயித்து  ஓட்டிக்கொண்டு  இருந்தவரை  ஒரு  முனையில்  மடக்கினார்  டிராஃபிக்  கான்ஸ்டபிள்  ஒருவர்.  குனிந்து  ஜன்னல்  வழியாகப்  பார்த்தால்,  டிரைவர்  இருக்கையில் அமர்ந்தபடி  போப்  புன்னகை  புரிந்துகொண்டு  இருந்தார்.  அதைக்  கண்டு  ஆச்சர்ய  அதிர்ச்சி  அடைந்த  கான்ஸ்டபிள்,  உடனே  வாக்கி  டாக்கியில்  தனது  மேலதிகாரியைத்  தொடர்புகொண்டு,  " சார்,  இங்கே  ஒரு  பிரச்னை"  என்றார்.  " என்ன  பிரச்னை?"  என்று  கேட்டார்  மேலதிகாரி.  " நான்  மிக  முக்கியமான  ஒருவரின்  காரை  வழிமறித்துவிட்டேன்."
      " யார்  அந்த  மிக  முக்கியமானவர்?"
      " அவர்  யார்  என்று  தெரியவில்லை.  ஆனால்,  அவர்  போப்பையே  டிரைவராக  வேலைக்கு  அமர்த்தியிருக்கிறார் !"
-- கி.கார்த்திகேயன்.
--ஆனந்த விகடன் .  9 - 5 - 2012. 

Wednesday, April 8, 2015

தமிழ் மொழி!

 " தமிழ்  மொழிக்கே  உரிய  தனிப்  பெருமையை  மற்ற  தொன்மையான  மொழிகளோடு  ஒப்பிட்டுக்  கூற  முடியுமா?"
     " அமெரிக்காவின்  மிகப்  பெரிய  எம்பயர்  ஸ்டேட்  கட்டடம்போல  30  மடங்கு  பெரிதான  பிரமிடுகளைக்  கட்டிய  எகிப்தியர்கள்  பேசிய  எகிப்திய  மொழி  இப்போது  இல்லை.
       'இந்த  உலகத்தையே  தன்  காலடியில்  விழவைப்பேன்'  என்று  சொன்ன  மாவீரன்  அலெக்சாண்டர்  பேசிய  ஆதி  கிரேக்க  மொழி  இப்போது  இல்லை.  ஆசைகளைத்  துறக்கச்  சொன்ன  புத்தர்  பேசிய  பாலி  மொழி  இப்போது  இல்லை.  அன்பிற்கரசர்  இயேசுநாதர்  பேசிய  ஹீப்ரு  மொழியின்  கிளை  மொழியான  அரமிக்  இல்லை.
       ஆனால்,  இத்தனை  மொழிகளோடு  பிறந்து,  வளர்ந்து  தன்  தோழமை  மொழிகள்  எல்லாம்  சிதைந்தபோதிலும்  இன்றைக்கும்  வாழ்ந்து,  வளர்ந்து  நிற்கும்  ஒற்றை  மொழி  வாழும்  செம்மொழியாம்  நம்  தமிழ்  மொழிதான்."
-- க.அருள்,  ஆரணி. (  நானே  கேள்வி... நனே  பதில்! )
-- ஆனந்த விகடன் .  13 - 8 - 2012. 

Tuesday, April 7, 2015

மனித உடை.

 லட்சக்கணக்கான  ஆண்டுகளாக,  மனிதன்  உடை  இல்லாமல்  பிறந்த  மேனியோடுதான்  வளைய  வந்தான்.  5,000  ஆண்டுகளாகத்தான்  உடை  அணிகிறோம்! ( செக்ஸ்  உறுப்புகளை  மட்டும்  மூடிக்கொள்வது  அதற்கு  முன்பே  வந்துவிட்டது.  கோவணம்தான்  முதல்  உடை !)
      உடை  அணிய  மூன்று  அடிப்படைக்  காரணங்கள்  உண்டு.  அதை  சி.எம்.டி.  என்கிறார்கள்  ( Comfort,  Modesty,  Display ).  பிரபல  மனித  இயல்  ஆய்வாளர்  டெஸ்மாண்ட்  மாரீஸ்  இது  பற்றி  விவரமாகவும்  சுவையாகவும்  ' பீப்பிள்  வாட்சிங் ' ( People  Watching ) என்கிற  புத்தகத்தில்  எழுதி  இருக்கிறார்.
-- ஹாய்  மதன் .  கேள்வி  -  பதில்.
-- ஆனந்த விகடன் .  9 - 5 - 2012.  

வருத்தம் தந்த வாசகம் !

  சமீபத்தில் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தபோது, அதில் கண்ட வாசகம் :
    'வார்த்தை தடுமாற காரணம் கண்கள்,
     வாழ்க்கை தடுமாற காரணம் பெண்கள்'
    'மண்ணை நம்பினால் ஒரு கோடி,
    பெண்ணை நம்பினால் தெருக்கோடி'
-- இரா.பொன்னரசி, வேலூர்.
--   தினமலர். பெண்கள்மலர். 8-3-2014. 

Monday, April 6, 2015

சூப்பர் வாஷிங்மிஷின் !

  தண்ணீர்,  சோப்,  கரன்ட்  செலவைக்  கணிசமாகக்  குறைக்கும்  சூப்பர்  வாஷிங்  மிஷினைக்  கண்டுபிடித்திருக்கிறது,  இங்கிலாந்தைச்  சேர்ந்த  ஜெராஸ்  நிறுவனம்.  இதன்  மூலம்  தண்ணீர்  செலவை  90  சதவீதம்  குறைக்கலாம்.  ஒட்டுமொத்த  செலவை  30  சதவீதம்  குறைக்கலாம்.
     ஸ்டீபன்  பர்கின்ஷா  என்ற  விஞ்ஞானியின்  ஐடியாவில்  பிறந்த  இதில்,  3  மில்லிமீட்டர்  அளவிலான  சிறுசிறு  நைலான்  மணிகள்  இருக்கும்.
     தண்ணீரில்  துளிகள்  ஓரளவு  நனைந்ததும்  மிஷின்  வேகமாகச்  சுழலும்.  நைலான்  மணிகள்,  மின்னல்  வேகத்தில்  துணிகளின்  ஊடாகப்  பரவி  அழுக்குகளை  உறிஞ்சி  சுத்தப்படுத்தும்.  ஏறக்குறைய,  டிரை-க்ளீங்  டெக்னிக்.
-- தினமலர் .  மார்ச்  28,  2010. 

Sunday, April 5, 2015

இனிமேல் இதுதான் கம்ப்யூட்டர்!

  ( சிறப்பு )
     உலகின்  முன்னணி  தேடல்  இணைய  தளமான  கூகுள்  நிறுவனம்  புதிய  க்ரோம்  கருவி  ஒன்றை  உருவாக்கி  உள்ளது.  இது  பார்ப்பதற்கு  பென்  டிரைவ்  சைஸில்  தென்படுகிறது.  இந்த  க்ரோம்  இயங்குதளம்  கொண்ட  டாங்கிள்  கூகுள்  க்ரோம்  புக்கில்  இருக்கும்  அனைத்து  அம்சங்களும்  இந்த  புதிய  க்ரோம்  கருவியிலும்  உள்ளது.  இதை  கொண்டு  தொலைக்காட்சி  பெட்டி  லேப்டாப்  அல்லது  க்ரோம்  கம்ப்யூட்டராக  மாற்ற  முடியும்.  எந்த  டிஸ்ப்ளேவில்  இதை  இணைத்தாலும்  அது  கம்ப்யூட்டராக  மாறிவிடும்  என்று  கூறப்படுகிறது.  இளைஞர்கள்  மத்தியில்  பலத்த  எதிர்பார்ப்பை  உருவாக்கியுள்ள  இந்த  க்ரோம்  கருவி  உபயோகப்படுத்துவதிலும்  எளிமையாக  இருக்கும்  என்று  கூறப்படுகிறது.  இந்த  கூகுள்  க்ரோம்பிட்  கருவி  சாம்பல்,  நீலம்  மற்றும்  ஆரஞ்சு  நிறங்களில்  கிடைக்கும்.  ஐபோன்6ஐ  விட  சிறியதாக  இருக்கும்  இந்த  க்ரோம்  கருவி  இந்த  ஆண்டின்  மத்தியில்  இந்தியாவில்  விற்பனை  செய்யப்படும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  ஒரு  காலத்தில்  வீட்டின்  பெரிய  ரூம்  சைசில்  இருந்த  கம்ப்யூட்டர்,  இப்போது  கைக்குள்  அடக்கும்  அளவுக்கு  சுருங்கிவிட்டது  குறிப்பிடத்தக்கது.
-- தினமலர்  திருச்சி  5-4-2015. 

தீபாவளி.

*  ஐப்பசி  மாதம்  கிருஷ்ணபட்சம்  சதுர்தசி  திதியில்  வரும்  திருநாளே  தீபாவளி.
*  தீபாவளி  தினம்  ஒன்றில்தான்  குபேரன்,  சிவபெருமானை  வழிபட்டு  செல்வங்களனைத்தையும்  பெற்றான்.
*  பவிஷ்யோத்ர  புராணம்  தீபாவளி  என்றும்;  காமசூத்ரா  கூராத்ரி  எனவும்;  காலவிவேகம்,  ராஜமார்த்தாண்டம்  ஆகிய  நூல்கள்  சுபராத்ரி  எனவும்
   தீபாவளியைக்  குறிப்பிடுகின்றன.
*  ஒரே  மூலவரை  நாராயணர்,  விநாயகர்,  சிவபெருமான்,  பார்வதி  என  வெவ்வேறு  தெய்வங்களாக  வழிபடும்  பழக்கம்  பூரிஜகன்நாதர்  ஆலயத்தில்
   உள்ளது.
*  அம்பிகை  வழிபாடு  ஆதி  காலத்தில்  இருந்து  வழக்கத்தில்  உள்ளது.  நாமப்பிரியையான  அம்பாளுக்கு  ஆயிரமாயிரம்  திருநாமங்கள்  உண்டு  என்பதும்
   அனைவரும்  அறிந்த  விஷயம்.
*  பஞ்சபூதங்களுமே  நம்  வாழ்வோடு  ஏதோ  வகையில்  பின்னிப்  பிணைந்துதான்  இருக்கின்றன.  அவற்றுள்  நீர்  ஒருபடி  மேலாக  ' தீர்த்தம் '  என்ற
   பெயரில்  உயர்வுபடுத்தப்பட்டு  போற்றப்படுகிறது.
*  வண்னத்துப்  பூச்சியை  நீங்களாகப்  பிடித்தால்,  அதன்  வண்ணம்  உங்கள்  கையில்  ஒட்டும்.  அதுவாக  வந்து  அமர்ந்தால்  ஒட்டாது.
* ' விருந்தோம்பல் '  என்பது  நமது  நாட்டின்  பண்பாட்டின்  சின்னம்.  " அதிதி  தேவோ  பவ !"  என்கிறது  வடமொழி  நன்னெறி.  விருந்தாளியை
    தெய்வமாகவே  மதித்திடு  என்பதுதான்  அதன்  பொருள்.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல்.  நவம்பர்  1 - 15,  2012..

Saturday, April 4, 2015


" அட, இப்படியும்..."

" அட,  ஒரு  விஷயத்தை   இப்படியும்  பார்க்க  முடியுமா?"  என்று  சமீபத்தில்  வியந்தது  எதற்கு?"
     " எழுத்தாளர்  பட்டுக்கோட்டை  பிரபாகரின்  மாமனார்,  வழக்கறிஞர்  முத்துநாராயணன்  ஒரு  பெரியாரிஸ்ட்.  அவர்  பெரியாரோடு  பழகிய  அனுபவங்கள்,  பெரியாரின்  சிந்தனைகள்,  அவர்  வாழ்க்கையில்  நடந்த  சம்பவங்கள்  ஆகியவற்றை  பட்டுக்கோட்டை  பிரபாகர்  தொகுத்து,  ' பெரியார்  ஒரு  தீவிரவாதி '  என்ற  தலைப்பில்  வெளியிட்டு  இருக்கிறார்.  அதில்  ஒரு  சம்பவம்... பெரியார்  திருச்சியில்  பேசும்போது,  ' போரில்  ராவணன்  ஆயுதத்தை  இழந்து  நிராயுதபாணியாக  நிற்கும்போது,  ' இன்று  போய்  நாளை  வா'னு  சொன்னதைப்  பெருந்தன்மையாச்  சொல்றாங்க.  ரெண்டு  பேருக்குச்  சண்டை  வந்து  ஆயுதங்களை  இழந்துட்டா,  அடுத்து  கைச்  சண்டைதான்.  மல்யுத்தம்தான்  நடக்கும்.  ராவணன்  உருவத்துல  பெரியவன்.  அதனாலதான்  மல்யுத்தத்துக்குப்  பயந்து  ராமன்,  ' இன்று  போய்  நாளை  வா'னு  சொன்னான் '  என்றாராம்  பெரியார்.  இது  எப்படி  இருக்கு?"
-- இரா.மங்கையர்கரசி,  கோயம்புத்தூர். ( நானே  கேள்வி...நானே  பதில்! )
-- ஆனந்தைகடன் .  7 - 11 - 2012. 

Friday, April 3, 2015

லேட்டஸ்ட் எஸ் எம் எஸ்.

*  கணவன்: " நிஜம்தான்  சொல்றீங்களா  டாக்டர்...என்  மனைவி  இனிமே  பேசவே  மாட்டாளா?"
   டாக்டர்:   " யோவ்... இந்த  வார்த்தையை  கேட்ட  உனக்கு  சதோஷமா  இருக்கலாம்.  நான்  எத்தனை  தடவை  திரும்ப,  திரும்ப  சொல்றது?"
* நோயாளி: " டாக்டர்.  முழுசா  இரண்டு  இட்லியை  கூட  என்னால  சாப்பிட  முடியலை."
  டாக்டர்:    " உன்னால  மட்டுமில்லை... யாராலேயும்  முழுசா  இரண்டு  இட்லியை  சாப்பிட  முடியாது.  புட்டு,  புட்டுதான்  சாப்பிடணும்!"
* காந்தி  எவ்வளவோ  கருத்துக்களை  சொல்லியிருந்தாலும்  எனக்கு  பிடித்த  விஷயம்,  ' இந்தியா  சுதந்திரம்  அடைந்தவுடன்  காங்கிரஸை  கலைச்சுடணும்'
  என்பதுதான்.
-- தினமலர்  5 - 11 - 2012. 

Thursday, April 2, 2015

பெருமாளின் வாள்


' ஜிப் ' தெரியுமா?

இந்தியாவில்  பின்கோடு  என  அழைக்கும்  அஞ்சல்  குறியீட்டு  எண்ணை  அமெரிக்காவில்  ' ஜிப் '  என்று  அழைக்கின்றனர்.  இதன்  விரிவு  'ஜோன்  இம்ப்ரூவ்மெண்ட்  பிளான் '  என்பதாகும்.
மோப்ப  செல்கள்
     வாசனையைக்  கண்டறிவதற்காக  உயிரினங்களுக்கும்  உணர்வு  செல்கள்  உள்ளன.  மனிதனுக்கு  60  மில்லியன்  உணர்வு  செல்கள்  உள்ளன.  நாய்களுக்கு  250  மில்லியன்  செல்கள்  உள்ளன.  அதனால்தான்  நாய்களுக்கு  மோப்பசக்தி  அதிகமாக உள்ளது.
ரத்த  புத்தகம்.
     ' சு - தோக்கு '  என்றொரு  ஜப்பானிய  மன்னர்.  புத்தரைப்  பற்றி  135  பக்கங்கள்  கொண்ட  ஒரு  நூலை  எழுதியுள்ளார்.  இதில்  என்ன  விசேஷம்  என்றால்,  அந்த  நூல்  முழுவதையும்  தனது  உடல்  ரத்தத்தைக்  கொண்டே  அவர்  எழுதியிருக்கிறார்.
---  தினமலர்  பெண்கள் மலர்.  நவம்பர் 3,  2010.  

Wednesday, April 1, 2015

துணுக்கு மேடை.

அளந்து  பாருங்க.
இந்திய  ரூபாய்  நோட்டுகளின்  அளவுகள்:
1000  ரூபாய்  --  177 மி.மீ. நீளம்.  73  மி.மீ. அகலம்.
500    ரூபாய்  --  167 மி.மீ. நீளம்.  73  மி.மீ. அகலம்.
100    ரூபாய்  --  157 மி.மீ. நீளம்.  73  மி.மீ. அகலம்.
50      ரூபாய்  --  147.மி.மீ. நீளம்.  73  மி.மீ. அகலம்.
20      ரூபாய்  --  147.மி.மீ. நீளம்.  63  மி.மீ. அகலம்.
10      ரூபாய்  --  137.மி.மீ. நீளம்.  63  மி.மீ. அகலம்.
5        ரூபாய்  --  117.மி.மீ. நீளம்.  63  மி.மீ. அகலம்.
---தினமலர்  பெண்கள் மலர்.  நவம்பர் 3,  2010.