Monday, March 9, 2015

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

  ஒரு  அரசர்,  மந்திரியை  அழைத்து,  ' இங்கு  உண்டு,  அங்கு  இல்லை',  'இங்கு  இல்லை,  அங்கு  உண்டு',  'இங்குமில்லை,  அங்குமில்லை',
'இங்குமுண்டு,  அங்குமுண்டு'  இதற்கான  விளக்கம்  என்ன  என்று  கேட்டார்.
     மறுநாள்  மந்திரி  தன்னோடு  ஒரு  கொள்ளைக்காரன்,  ஒரு  ஞானி,  ஒரு  பிச்சைக்காரன்,  ஒரு  வள்ளல்  இவர்களை  அழைத்து  வந்து  நிறுத்தி,  இவர்கள்  தான்  தங்கள்  கேள்விகளுக்குப்  பதில்கள்  என்றார்.
     அரசன்  எப்படி  என்றவுடன்,  ' கொள்ளைக்காரன் -  கொள்ளையடித்து,  இவ்வுலகில்  மகிழ்ச்சியாக  இருக்கிறான்,  மேல்  உலகில்  அவனுக்கு  மகிழ்ச்சியில்லை.  இதுதான்  இங்கு  உண்டு,  அங்கு  இல்லை '  என்றார்.
     'ஞானி - இவர்  சதா  இறைவனையே  நினைப்பவர்.  இவருக்கு  இங்கு  இல்லை,  அங்கு  உண்டு'.
     ' பிச்சைக்காரன் - இவன்  எந்த  நல்ல  செயலும்  செய்யவில்லை.  எனவே  இவனுக்கு  இந்த  உலகமும்  இல்லை,  அந்த  உலகமும்  இல்லை'.
     ' வள்ளல் - தன்னிடம்  உள்ளதை  பிறருக்கு  கொடுத்து  தானும்  மகிழ்கிறார்,  பிறரையும்  மகிழ்விக்கிறார்.  எனவே  இங்கும்  உண்டு,  அங்கும்  உண்டு'  என்றார்.
     மந்திரியை  பாராட்டி,  தானும்  வள்ளல்  போல்  வாழ்வேன்  என்று  உறுதியளித்தார்  மன்னன்.  மன்னனைப்போல்  நாமும்  வள்ளலாக  வாழ  முயற்சிப்போம்.
-- செந்தமிழ்  ராம்,  செம்பொன்னார்கோயில்.
-- தினமலர் இணைப்பு.  27  அக்டோபர் , 2012. 

No comments: