Saturday, January 31, 2015

கிளியோபாட்ரா.

 " படித்ததில்  அதிர்ந்தது?"
     " கிளியோபாட்ரா  இறந்தபோத,  பண்டைய  எகிப்தில்  சம்பிரதாயப்படி  அவர்  உடல்  மூன்று  நாட்கள்  புதைக்கப்படவில்லை.  அந்த  மூன்று  நாட்களும்  அவருடைய  சடலம்  பலரால்  கற்பழிக்கப்பட்டதாம்.  இந்தச்  செய்தியப்  படித்ததும்  எனக்கு  ஒரே  ஆச்சரியம்.  எந்த  வகை  மனிதன்  ஒரு  பினத்தைக்  கற்பழிப்பான்  என்று  தோன்றியது.  பிறகுதான்  ஒரு  விஷயம்  எனக்கு  உறைத்தது.  அந்த  உண்மை  அப்படி  ஒன்றும்  அதிசயமில்லையே!  ' எல்லா  ஆண்களும்  பெண்களைப்  பிணமாக்கித்தான்  வைத்துள்ளனர்... குறைந்த  பட்சம்  உடலுறவின்போது !'  சொன்னவர்:  ஓஷோ  ரஜினீஷ்"
--- நானே  கேள்வி? .. நானே  பதில்.
-- ஆனந்த விகடன் .  15 - 8 - 2012 

Friday, January 30, 2015

பேல் பூரி.

கண்டது:
*  (  கோயம்புத்தூர்  காந்திபுரத்தில்  ஆம்னி  வேனின்  பின்புறத்தில் )
     போதிக்கும்போது  புரியாது
     பாதிக்கும்போது  புரியும்.
*  (  திருப்பூரில்  ஆட்டோவில்  கண்ட  வாசகம் )
     வழி  தவறுவதைவிட...
     வழி  கேட்பது  மேல்.
*  ( திண்டுக்கல்  கடிகாரக்கடை  ஒன்றில் )
     நகர்வது  முள்  அல்ல
     உங்கள்  வாழ்க்கை.
*  ( நெல்லை  பெருமாள்கோயில்  தெரு  தேநீர்க்கடை  ஒன்றில் )
     அன்பை  வாங்கினால்
     பிற்காலத்தில்  நன்மை  சேரும்.
     கடனை  வாங்கினால்
     பிற்காலத்தில்  வம்பு  சேரும்.
(  கிருஷ்ணகிரி  நேதாஜி  ரோட்டில்  உள்ள  ஒரு  முடிதிருத்தத்தில் )
     நண்பனுக்குக்  கடன்
     கொடுத்தால்
     கடனும்  போய்விடும்
     நண்பனும்  போய்விடுவான்.
--- தினமணி  கதிர்,  15 / 22  -  07 - 2012.
-  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர். 

Thursday, January 29, 2015

விழாக்கள்.

*  ஒரு  வருடம்  நிறைந்தால்  காகித  விழா.
*  ஐந்து  வருடம்  நிறைந்தால்  மர  விழா.
*  பத்து   வருடம்  நிறைந்தால்  தகரம்  அல்லது  அலுமினிய  விழா.
*  பதினைந்து   வருடம்  நிறைந்தால் படிக  விழா.
*  இருபது வருடம்  நிறைந்தால்  பீங்கான்  விழா.
*  இருபத்தைந்து வருடம்  நிறைந்தால் வெள்ளி  விழா.
*  முப்பது வருடம்  நிறைந்தால் முத்து  விழா.
*  நாற்பது வருடம்  நிறைந்தால் மாணிக்க  விழா.
*  ஐம்பது  வருடம்  நிறைந்தால் பொன்  விழா.
*  அறுபது  வருடம்  நிறைந்தால்  வைர  விழா.
*  எழுபத்தைந்து வருடம்  நிறைந்தால்  பவள  விழா.
*  நூறு   வருடம்  நிறைந்தால்  நூற்றாண்டு  விழா.
-- - தினமணி  கொண்டாட்டம்.  ஜூலை  22,  2012                                                          
---  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர். 

Wednesday, January 28, 2015

ஆன்மிக வினா - விடை.

*  மூவர்  தேவாரம்  பெற்ற  தலங்கள்  எத்தனை?  --  நாற்பத்து  நான்கு.
*  தன்னைத்  ' தமிழ்  விரகர் '  என்று  கூறிக்கொண்டவர்  யார்?  --  திருஞானசம்பந்தர்.
*  அறுபத்து  மூவரில்  பெண்  அடியார்கள்  யாவர்?  --  காரைக்கால்  அம்மையார்,  மங்கையர்க்கரசியார்,  இசைஞானியார்.
*  கால  பைரவர்  சந்நிதி  எங்குள்ளது?  --  காசி  மற்றும்  விருத்தாசலம்.
*  ஈசனுக்கு  எழுப்பது  மாடக்கோயில்கள்  எழுப்பிய  மன்னன்  யார்?  --  கோச்செங்கட்சோழ நாயனார்.
*  நந்தி,  கொடிமரம்,  தட்சிணாமூர்த்தி  சந்நிதி  ஆகியவை  இல்லாத  சிவத்தலம்  எது?  --  ஆவுடையார்கோயில்.
*  பார்வதி - பரமசிவன்  திருமணம்  நடந்த  நாள்  எது?  --  பங்குனி  உத்திரம்.
*  அம்பிகையின்  மந்திரத்தை  என்ன  பெயரிட்டு  அழைக்கின்றனர்?  --  ஸ்ரீவித்யை.
--- தினமணி  வெள்ளிமணி.  ஜூலை  27,  2012  
---  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.  

Tuesday, January 27, 2015

விதண்டாவாதம்.

  ' வித்து '  என்றால்  விதை,  ' அண்டம் '  என்றால்  மரம்.  முதலில்  விதையிலிருந்து  மரம்  முளைத்ததா  அல்லது  மரத்திலிருந்து  விதையா  என்று  வாதம்  செய்வதுதான்  விதண்டாவாதம்.  இப்படி  விதண்டாவாதம்  புரிபவர்களை  இலேசில்  கன்வின்ஸ்  செய்ய  முடியாது.
-- அனுஷா  நடராஜன். மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )   

Monday, January 26, 2015

வைரக்கோள்.

விருச்சிக  ராசி  மண்டலத்தில்  வைரக்கோள்.
      அமெரிக்காவைச்  சேர்ந்த  இந்திய  வம்சாவளி  விஞ்ஞானி  நிக்கு  மதுசூதன்  தலைமையிலான  பிரான்கோ  ஆராய்ச்சிக்குழுவினர்,  விருச்சிக  ராசி
 நட்சத்திர மண்டலத்தில் பூமியின்  குறுக்களவை  போல்  2  மடங்கு  பெரிய  வைரக்  கோள்  ஒன்றை  கண்டுபிடித்துள்ளனர்.  அதற்கு ' 55 கேன்சரி இ'  என்று  பெயரிட்டுள்ளனர்.
     இது  குறித்து  ஆராய்ச்சிக்குழுவின்  தலைவர்  நிக்கு  மதுசூதன்  கூறுலையில் ' கடினமான  பாறைகள்  மற்றும்  கிராபைட்டால்  ஆன,  பூமியின்  குறுக்களவை  போல்  2  மடங்கு  பெரியதும்,  செவ்வாய்  கிரகத்தை  போன்று  8  மடங்கு  பெரிய  கோள்  ஒன்றை  கண்டுபிடித்துள்ளோம்.  விருச்சிக  ராசி  மண்டலத்தில்  உள்ள  சூரியனைப்  போன்ற  ஒரு  நட்சத்திரத்தை  ' 55  கேன்சரி  இ'  என்ற  வைரக்கோள்  சுற்றிவருகின்றது.  அந்த  கோள்  பூமியைவிட  வேகமாக  18  மணி  நேரத்தில்  அந்த  நட்சத்திரத்தை  சுற்றிவருகிறது.
     இந்த  கிரகத்தின்  மேற்பரப்பில்  3  ஆயிரத்து  900  டிகிரி  பாரன்ஹீட்  வெப்பம்  நிலவுகிறது.  பூமியை  காட்டிலும்  வித்தியாசமான  வேதியியல்  கலவையால்  ஆன  இந்த  கோளை  முதல்முறையாக  கண்டுபிடித்துள்ளோம். சிறிது  நேரமே  அந்த  கோளை  பார்க்கமுடிந்தது. இருப்பினும்  இந்த  அளவுக்கு  பெரிய  வைரக்கோள்  கண்டுபிடித்துள்ளது  இதுவே  முதல்முறை  என்றார்.
--  தினமலர்.  அக்டோபர்  13, 2012. 

Sunday, January 25, 2015

நமஸ்காரம்.

  நமஸ்காரங்களில்  ஐந்து  வகை  உள்ளன.  அவை  ஏகாங்கம்,  திலியாங்கம்,  திரியாங்கம்,  பஞ்சாங்கம்,  அஷ்டாங்கம்  என்பன.  உடலுருப்புக்கு  அங்கம்  என்று  பொருள்.
     ஏகாங்க  நமஸ்காரம்  என்பது  தலையாகிய  உறுப்பை  மட்டும்  தாழ்த்தி  வணங்குதலாகும்.
     திவியாங்க  நமஸ்காரம்  என்பது  வலக்கையை  மட்டும்  தலையில்  குவித்து  வணங்குவதாகும்.
     திரியாங்க  நமஸ்காரம்  என்பது  தலையின்  மீது  இரண்டு  கைகளையும்  குவித்து  வணங்குதலாகும்.
     பஞ்சாங்க  நமஸ்காரம்  என்பது  தலை,  இரண்டு  கைகள்,  இரண்டு  முழங்கால்கள்  ஆகிய  ஐந்து  உறுப்புகளும்  தரையில்  பொருந்தும்படி
வணங்குதலாகும். இந்த  வகை  நமஸ்காரத்தை  பெண்கள்தான்  செய்ய  வேண்டும்.  ஸ்திரீகளின்  திருமாங்கல்யம்  தரையில்  படக்கூடாது  என்பதற்காகத்தான்  மண்டியிட்டு  இந்த  நமஸ்காரத்தைச்  செய்யவேண்டும்  என்று  ஆன்றோர்கள்  சொல்லியுள்ளனர்.  மேலும்,  இதை  பெண்கள்  ஒருதரம்  செய்தல்  குற்றமாகும்.  3,  5,  7  அல்லது  12  முறை  செய்யவேண்டும்.
     அஷ்டாங்கம்  என்பது  தரையோடு  தரையாக  படுத்து ந்ம்முடைய  தலை,  இரண்டு  கைகள்,  இரண்டு  செவிகள்,  மோவாய்,  இரண்டு  புஜங்கள்  ஆகிய  எட்டு  அங்கங்களும்  பூமியில்  படும்படி  செய்யவேண்டும்.  இந்தவகை  நமஸ்காரத்தை  ஆண்கள்தான்  செய்ய  வேண்டும்.
--- மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )  

Saturday, January 24, 2015

இவை எல்லாமே ஆஹா தான்.

*  இறைவனின்  திருநாமத்தை  வாய்விட்டோ,  உதட்டளவிலோ  உச்சரிக்காமல்  மனத்திலிருந்து  திரும்பத்திருமப  சொல்லும்போது  அட்ரீனலின்  சுரப்பு
   குறைவதோடு  மூளையானது,  நைட்ரிக்  ஆக்ஸைடு  என்ற  வேதிப்பொருளை  வெளிப்படுத்தி  இரத்த  அழுத்தத்தைச்  சீராக்குகிறது  என்று  ட்யூக்
   பல்கலைக்கழக  ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர். இறைவனின்  நாமத்தை  உளமாற  ஜபித்து  உயர்  இரத்த  அழுத்தத்திலிருந்து  விடுபடலாமே!
*  கடலைப்  பருப்பு  ஒரு  கிலோ,அரிசி  கால்  கிலோ,  வரமிளகாய்  6,  ஓமம்  1  ஸ்பூன்.  இவற்றை  மிஷினில்  அரைத்து  வைத்துக்  கொண்டால்,  பஜ்ஜி,
    போண்டா,  ஓமப்பொடி  எதுவானாலும்  உடனடியாக  செய்யலாம்.
*  அல்வா  போன்ற  ஸ்வீட்  செய்யும்போது  வெண்ணெயை  அரைப்  பதமாக  உருக்கி  வைத்துக்கொண்டு,  கொஞ்சம்  கொஞ்சமாகச்  சேர்த்துக்
   கிளறினால்  நெய்  பதமாகக்  காய்ந்து  ஸ்வீட்  கமகமக்கும்.
*  தோல்  சீவிய  பிரண்டைத்  துண்டுகளை  வேக  வைத்து  காய  வைக்கவும்.  அதைப்  பொடி  செய்து  அதனுடன்  ஒரு  ஸ்பூன்  இந்துப்பு,  எலுமிச்சைச்சாறு
   கலந்து  உலர்த்திக்  கொள்ளவும்.  இந்தப்  பொடியைத்  தினமும்  சாப்பிடுவதற்கு  முன்  ஒரு  ஸ்பூன்  நீரில்  கலந்து  உட்கொண்டால்  உடல்  பருமன்
   குறையும்.
*  வீட்டில்  எலி  தொந்தரவா?  Rat  Gum  Pad  கடைகளில்  கிடைக்கிறது.  அதை  வாங்கி  எலி  நடமாடும்  இடங்களில்  வைத்தால்,  அதில்  எலிகள்
   சுலபமாக  ஒட்டிக்கொள்ளும்.
*  பட்டு  வாங்கும்போது  ஒரிஜினல்  பட்டுத்துணிதானா  என்பதைக்  கண்டுபிடிக்க,  கைவிரலை  துணிமீது  வைத்து  அழுத்தினால்  கைரேகை  பதிந்ததும்
   சட்டென  மறைந்துவிடும்.  வேறு  நூல்கள்  கலந்திருந்தால்  கைரேகை  அப்படியே  இருக்கும்.
*  விழாக்களின்  அழைப்பிதழ்கள்  தபாலில்  ஐம்பதுக்கும்  மேல்  அனுப்பும்போது,  அதற்குரிய  தொகையை  தபால்  அலுவலகத்தில்  செலுத்தினால்
   அவர்களே  எந்திரம்  மூலம்  அஞ்சல்  முத்திரையைப்  பதித்து  விடுவார்கள்.  ஸ்டாம்ப்  ஒட்டும்  வேலை  மிச்சம்.
-- மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி ) 

Friday, January 23, 2015

யோசனை.

*  தேங்காய்  மூடியை  ' பிரீசரில் '  மூன்று  மனி  நேரம்  வைத்த  பிறகு   துருவுங்கள்.  சிரமம்  இல்லாமல்  சரசரவென்று  துருவி  விடலாம்.
*  ஆணும்,  பெண்ணும்  உதடுகளில்  முத்தமிடும்போது  278  வகையான  பாக்ட்ரியாக்கள்  பரிமாறிக்கொள்ளபடுகின்றன.
*  உடலில்  90  சதவிகித  நோய்களுக்கு  காரணமே  மன அழுத்தம்தான்.
*  பால்  கலக்காத  தேநீர்  பருகுவதால்  உடல்  எடை  குறைவதாக  ஜப்பான்  விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர்.  அதிலும்  பச்சைத்  தேநீர் (கிரீன் டீ)
   மிகவும்  நல்லது.
*  ஜலதோஷம்  பிடித்து  தலை  பாரமாக  உள்ளதா?  தலையனைக்குப்  பதில்  சணல்  கோணியைப்  பயன்படுத்துங்கள்,  பலனை  சீக்கிரம்  உணர்வீர்கள்.
*  சூரியகாந்திச்  செடிகளை  வளருங்கள்.  உங்கள்  வீட்டில்  யாருக்கும்  ஜலதோஷம்   எட்டிப்  பார்க்காது.
-- வாராந்தரி ராணி.  25 - 3 - 2012.
--  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.  

Thursday, January 22, 2015

தொடர்ந்த ஏழு.

எம்.ஜி.ஆர்.  பிறந்தது        -- 1917
நாடக  நடிகரானது            -- 1927
காங்கிரசில்  சேர்ந்தது       -- 1947
தி.மு.க.வில்  இணைந்தது  -- 1957
எம்.எல்.ஏ. ஆனது             -- 1967
முதல்வரானது                  --  1977
இயற்கை  எய்தியது          --  1987
-- ஜி.மகாலிங்கம்,  காவல்காரபாளையம்.
-- வாராந்தரி ராணி.  25 - 3 - 2012.
--  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.  

Wednesday, January 21, 2015

மனசாட்சி.

  மனசாட்சி  என்பது  இதயத்தின்  ஆத்மா,  மனித  இதயத்திலிருந்து  சுடர்விட்டு  வழிகாட்டும்  ஒரு  பேரொளி.  வாழ்க்கை  எப்படி  உண்மையோ  அதைப்போன்றது  அது.  நேர்மைக்குப்  புறம்பாகச்  சிந்தித்தாலோ,  நடந்தாலோ  அது  தன்  எதிர்ப்பைக்  காட்டும்.
     மனசாட்சி  என்பது  நமது  பாரம்பரியத்தில்  வந்து  உதித்த  ஒன்று.  தப்பையும்  சரியானவற்றையும்  நமக்குச்  சரியான  நேரத்தில்  உணர்த்தும்  ஓர்  அறிவார்ந்த  மரபணு  உண்மை.  நமது  குற்றங்களைப்  பதிவு  பண்ணும்  ஓர்  வாழ்க்கைப்  புத்தகம்.  அது  நம்மைப்  பயமுறுத்தும்,  நம்பிக்கை  கொடுக்கும்,  பாராட்டும்,  தண்டனை  அளிக்கும்.  நம்மைக்  கட்டுக்குள்  வைக்கும்.  ஒரு  தடவை  மனசாட்சி  உறுத்தினால்  அது  எச்சரிக்கை.  மறுமுறை  உறுத்தினால்  அது  தண்டனை.
     ஒரு  நிகழ்வு  நடந்தால்  --  கோழை  கேட்பான்  இது  பாதுகாப்பானதா  என்று  --  பேராசைக்காரன்  கேட்பான்  இதனால்  எனக்கு  என்ன  லாபம்  என்று  --  தர்பெருமைக்காரன்  கேட்பான்  நான்  மகானாக  முடியுமா  என்று  --  இச்சையாளன்  கேட்பான்  அதில்  என்ன  சந்தோஷம்  உண்டு  என்று  --  ஆனால்  மனசாட்சி  ஒன்றுதான்  கேட்கும்  அது  சரியா  என்று.  ஆனால்,  ஒட்டு  மொத்தமான  பதில்  என்ன  தெரியுமா?  ஒரு  மனிதன்  தன்  மனசாட்சிப்படி  நடப்பது  ஒன்றுதான்.
-- முன்னாள்  குடியரசுத்தலைவர்  A.P.J.அப்துல்கலாம்  அவர்களின்  உரையிலிருந்து.
-- R.அஜாய் குமார், T.G.T.  MAGGHS,  KARAIKKAL., ஆசிரியர்  நண்பன்,  ஆகஸ்ட்  2012.
--  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.  

Tuesday, January 20, 2015

பொது அறிவு.

*  தேசியக்  கொடியின்  நீள,  அகலம்  --  3 , 2.
*  நாட்டிய  சாஸ்திரத்தை  எழுதியவர்  --  பரத  முனிவர்.
*  தாண்டியா  --  குஜராத்  மாநில  நடனம்.
*  சத்யமேவ  ஜெயதே  என்ற  வாசகம்  --  முண்டக  உபனிஷத்திலிருந்து  எடுக்கப்பட்டது.
*  மோகினியாட்டம்  --  கேரள  மாநில  நடனம்.
*  ஜெகன்நாதர்  ரத  யாத்திரைக்கு  புகழ்  பெற்ற  பூரி  நகரம்  --  ஒரிசாவில்  உள்ளது.
*  ஜாரே  ஜகான்  சே  அச்சா,  தேசபக்தி  பாடலை  எழுதியவர்  --  முகமது  இக்பால்.
*  சாகித்ய  அகாடமி  அமைப்பின்  அலுவலகம்  --  டில்லியில்  உள்ளது.
*  பூமியில் கிடைக்கும்  கடினமான  பொருள்  --  வைரம்.
*  பொட்டாஷியம்  நைட்ரேட்  --  உரத்தில்  உள்ளது.
--  தினமலர். 

Monday, January 19, 2015

புதிய கருந்துளை.

கன்னிராசி  மண்டலத்தில்  புதிய  கருந்துளை.
இந்திய  விஞ்ஞானி  கண்டுபிடிப்பு.
     தம்முள்  புகும்  ஒளி,  மின்காந்த  அலைகள் உட்பட  எதுவும்  மீண்டும்  வெளிவராத  அளவு  அடர்த்தியும்,  ஈர்ப்பு  சக்தியும்  கொண்ட  ' பிளாக்  ஹோல் '
எனப்படும்  கருந்துளைகள்  விண்ணில்  ஏராளமாக  இருப்பதாக  விஞ்ஞானிகள்  கருதுகின்றனர்.  விண்ணில்  மிதக்கும்  தூசு  மற்றும்  இதர  மாசுக்களால்  இந்த  கருந்துளைகள் மூடப்பட்டிருப்பதால்  இந்த  கருந்துளைகளை  காண  முடிவதில்லை.
     இருப்பினும்  இந்த  கருந்துளைகள்  தனது  அருகில்  உள்ள  நட்சத்திர  மண்டலங்களை  தனக்குள்  ஈர்த்துக்  கொள்ளும்போது  அதனால்  ஏற்படும்  வெப்பத்தால்  கருந்துளையில்  இருந்து  கதிர்வீச்சுக்கள்  வெளியாகும்.  இந்த  கதிர்வீச்சுக்களை  கொண்டு  விஞ்ஞானிகள்  கருந்துளைகளை  கண்டுபிடிக்கின்றனர்.
     இந்நிலையில்,  கன்னிராசி  மண்டலத்தில்  சூரியனைக்காட்டிலும்  பல  ஆயிரம்  மடங்கு  அடர்த்தி  வாய்ந்த  பிரம்மாண்டமான  கருந்துளை  இருப்பதை  கண்டுபித்துள்ளனர்.  யுகே  இன்பராரெட்  டெலஸ்கோப் ( யுகேஐஆர்டி )  எனப்படும்  அதிநவீன  டெலஸ்கோப்  மூலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள  கருந்துளைக்கு  யுஎல்ஏஎஸ்ஜே  1234+0907  என்று  பெயரிட்டுள்ளனர்.  இது  தொடர்பான  கட்டுரையில்:  பூமியில்  இருந்து  வெகு  தொலைவில்  உள்ள  இந்த  கருந்துளையில்  இருந்து  வெளியாகும்  ஒளி  பூமியை  வந்தடைய  ஆயிரத்து  100  கோடி  ஆண்டுகள்  ஆகும் .  இதுபோன்று  விண்ணில்  400க்கும்  அதிகமான  பிரம்மாண்ட  கருந்துளைகள்  இருக்கலாம்  என்று  நம்புகிறோம்.  ஒவ்வொரு  நட்சத்திர  மண்டலத்திலும்  ஒரு  கருந்துளை  இருக்க  வாய்ப்பு  உள்ளது என்கிறது..
-- தினமலர் .  11- 10 - 2012.    

Sunday, January 18, 2015

பஞ்சவடி, சாகா, பழம்.

 ராமாயணத்தில்  வரும்  பஞ்சவடி  என்னும்  இடம்  கோதாவரி  தீரத்தில்  உள்ள  நாசிக்  என்ற  இடமே.  ' வடம் '  என்பது  ஆலமரத்தின்  பெயர்.  அங்கே ஐந்து  ஆலமரங்கள்  இருந்தன.  அதனால்  பஞ்சவடி  என்ற  பெயர்  வந்தது.  அங்கே  வனவாசத்தின்போது  ராமர்  வந்து  தங்கியபோது  சூர்ப்பனகை  வந்து  மூக்கு  அறுபட்டாள்.  நாசிகை  என்பது  மூக்கு.  சூர்ப்பனகையின்  மூக்கு  விழுந்த  இடமாதலில்  ' நாசிகா '  என்று  வந்து  அதுவே  ' நாசிக் '  ஆயிற்று.
      'சாகா'  மிருகம்  என்று  குரங்குக்குப்  பெயர்  சொல்வார்கள்.  ஆனால்,  அது  சாகாது  என்று  பொருள்  இல்லை!   சாகா  என்பது  தழையைக்  குறிக்கும்.  ஊனுண்ணாமல்  தழை,  தளிர்  முதலியவற்றை  உண்ணுவதால்  குரங்குக்கு  அந்தப்  பெயர்  வந்தது.
      எத்தனையோ  பழங்கள்  இருக்க  ஆண்டவன்  வழிபாட்டுக்கு  வாழைப்பழத்தை  பயன்படுத்துவது  ஏன்?  என்று  பலருக்குச்  சந்தேகம்.  வாழைப்பழம்  எல்லாக்  காலங்களிலும்  கிடைக்கும்  என்பதே  காரணம்!
-- ( ' விடைகள்  ஆயிரம் '  என்ற  நூலில்,  கி.வா.ஜகந்நாதன் ).
-- தினமணி கதிர்.  1 - 4 - 2012.
--  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.

Saturday, January 17, 2015

பிரெஞ்சு புரட்சி

  பிரெஞ்சு  புரட்சியின்போது  கொடிய  பாஸ்டில்  சிறை  உடைக்கப்பட்டது.  பல  வருடங்களாக  கை,  கால்களில்  விலங்குகளோடு  வாழ்ந்தவர்கள்,
வெளிச்சத்தையே  பாராமல்  இருட்டில்  சிறை  வைக்கப்பட்டவர்கள்  விடுதலை  செய்யப்பட்டனர்.  ஆனால்,  விடுவிக்கப்பட்டவர்களால்  வெளியே  வாழ  முடியவில்லை.  வெளிச்சத்தையே  அவர்களால்  பார்க்க  முடியவில்லை.  மறுபடியும்  சிறைக்குள்  வாழவே  அவர்கள்  அனுமதி  கேட்டுக்  கெஞ்சினார்கள்.  நம்ப  முடிகிறதா?  அடிமைகளுக்குத்  துயரங்களே  வாழ்வாகி  விடுகிறது.  அவர்கள்  எஜமானர்கள்  ஆக  விரும்புவதே  இல்லை!
-- சுகி.சிவம். ' எப்போதும்  சந்தோஷம் ' தொடரில்.
-- தினகரன்  ஆன்மிக  மலர்.  7 - 8 - 2010. 

Friday, January 16, 2015

தமாஷ் !

*  " ஊட்டியில  எஸ்டேட்  இருக்குன்னு  சொன்னீங்களே ..... "
   " ஆமா,  அது  எம்  பேர்ல  இருக்குன்னு  சொல்லலையே  டார்லிங் ! "
*  " இனிமேல்  சத்தியமா  குடிக்க  மாட்டேன்னு  சொன்னீங்களே..."
   " விட்டுட்டேன்  டாக்டர் !"
   " குடிக்கிறதையா?"
   " ம் ஹூம்,  சத்தியம்  பண்றதை !"
* " ஜெனரல்  வார்டுல  இருக்க  விரும்புறீங்களா...ஸ்பெஷல்  வார்டுல  இருக்க  விரும்புறீங்களா?"
  " எங்கே  வேணாலும்  இருக்கென்  டாக்டர்.  ஆனா,  நான்  இருக்கணும்!"

Thursday, January 15, 2015

அறிந்து கொள்வோம் !

*  போலியோ  தடுப்பு  மருந்தை  கண்டுபிடித்தவர்  --  ஜோன்ஸ்  சால்க் .
*  நெயில்  பாலிஷில்  உள்ள  ரசாயனம்  --  அசிடோன் .
*  மத்திய  காபி  ஆராய்ச்சி  நிலையம்  --  பலேஹன்னூர்,  கர்நாடகாவில்  உள்ளது .
*  பெயின்ட்  தொழிலில்  வெளிப்படும்  மாசு  --  அலுமினிய  மாசு .
*  டெசிமல்  முறைக்கு  இந்தியா  --  1957 ம்  ஆண்டு  மாறியது .
*  சீக்கியர்களின்  10வது  குரு  கோவிந்த்சிங்கின்  மனைவி  பெயர்  --  மாதா  சுந்தரி .
*  ராயல்  பெங்கால்  புலிக்கு  முன்,  இந்தியாவின்  தேசிய  விலங்கு  --  சிங்கம் .
*  ஆசியாட்டிக்  சொசைட்டியை  நிறுவியவர்  --  வில்லியம்  ஜோன்ஸ் .
*  எமர்ஜென்சி  கொண்டுவரப்பட்டபோது  நாட்டின்  ஜனாதிபதியாக  இருந்தவர்  --  பக்ருதீன்  அலி  அகமது .
*  பீடியில்  சுற்றப்பட்டிருக்கும்  இலையின்  பெயர்  --  டெண்டு  இலை .
*  கடந்த  1962 ம்  ஆண்டு  இந்தியா  --  சீனா  போர்  நடந்தபோது,  இந்தியாவின்  ராணுவ  அமைச்சராக  இருந்தவர்  --
   கிருஷ்ண  மேனன் .
*  அதிக  பிரிகுவன்சி  கொண்டது  --  மைக்ரோவேவ் .
----   தினமலர் .23 . 1 . 2012 . 

Wednesday, January 14, 2015

தெரியுமா ? தெரியுமே !

*  தலைக்கு  உள்ளே  இருக்கின்ற  காதுகளினாலும்,  உடலாலும்  மீன்கள்  தண்ணீருக்குள்ளே,  தங்களைச்  சுற்றி  எழும்  சப்தங்களை  உள்வாங்கிக்  கொள்கின்றன  என்கிறது  நேஷனல்  வைல்ட்டு  லைப்  பெடரேஷன்  ஆய்வு !
*  இயற்கையாக  மனிதர்களுக்கு  வயது  ஏறஏற  முளையின்  அளவு  சிறியதகிப்  போகிறது .  ஒவ்வொரு  பத்தாண்டிற்கும்  1.9  சதவீதம்  மூளை  தன்னுடைய  கன  அளவை  இழக்கிறதாம் .இதனால்  நினைவாற்றல்  குறைகிறது .  அதனால்தான்  ஞாபகமறதி  ஏற்படுகிறது .

Tuesday, January 13, 2015

டிப்ஸ்...டிப்ஸ் !

*  நாம்  நினைத்தது  நிறைவேற  வேண்டும்  என்றால்,  அதற்கு  நாம்  தீவிரமாக  ஆசைப்பட  வேண்டும்.  அது  நிச்சயம்  நடந்தே  தீரும்  என்று  நம்ப
    வேண்டும்.    -- குடியரசுத்  தலைவர்.  ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
* கோயில்களில்  இருக்கும்  கொடிமரத்தின்  தாத்பரியமே,  பஞ்ச  பூதங்களில்  ஒன்றான  ஆகாயத்தில்  அமைந்துள்ள  பிரம்மத்தின்  கதிர்களை  கோயிலின்
  கும்பத்திற்கு  செலுத்தி,  அங்கிருந்து  மூலவருக்கு  அதனை  அளிப்பதுதான்.  கொடி  மரத்திற்கு  முன்னால்  மட்டும்தான்  விழுந்து  கும்பிடவேண்டும்.  மற்ற
  இடங்களில்  செய்வது  தவறாகும்.
* பிரம்ம  முகூர்த்த  நேரத்தில் ( அதிகாலை  4.30  மணி  முதல்  5.30  மணி  வரை )  வாசல்  தெளித்து  கோலம்  போடும்  வீட்டின்  உள்ளே  ஸ்ரீமகாலஷ்மி
  ஆசையோடு  வருனாள்.  கோலத்தின்  நடுவில்  அகல்  விளக்கை  கிழக்கு  முகமாக  ஏற்றி  வைத்தால்,  அந்த  வீட்டில்  மங்கலம்  பெருகி,  செல்வம்
  நிறையும்.
* கோலத்தைக்  குனிந்து  நின்றுதான்  போட  வேண்டும்.  அமர்ந்தபடி  பொடக்கூடாது.  கோலத்தில்  தவறு  வராமல்  போடுவது  மிகவும்  நல்லது.
   ஒரு  வேளை  புள்ளிகளோ  இழைகளோ  தவறாகி  விடுமானால்,  அவற்றை  ஈரத்  துணியால்  ஒற்றி  எடுத்துவிட்டு  மறுபடி  போடவேண்டும்.  கோலத்தை
   ஒருபோதும்  கையாலோ  அல்லது  காலாலோ  அழிக்கக்கூடாது.
* பெரும்பாலான  கோயில்களில்  பலிபீடம்  அமைந்திருக்கும்.  பலிபீடம்  என்பது  பாசத்தைக்குறிக்கும்.  பலிபீடத்தை  ஸ்ரீபலிநாதர்  என்றழைப்பர்.
   ஆலயத்தில்  எட்டு  மூலைகளில்  பலி  பீடங்கள்  அமைந்திருக்கும்.  இதனை ' அஷ்ட  திக்பாலகர்கள் '  என்று  கூறுவர்.  இதற்கெல்லாம்  முதன்மையானது
   சிவனுக்கு  எதிரில்  நந்தியின்  பின்புறமாக  அமைக்கப்பட்டிருக்கும்!
--- குமுதம்  சிநேகிதி ,  ஆகஸ்ட்  15,  2006.  

Monday, January 12, 2015

பொம்மை கொடுங்கள்

பொம்மை  கொடுங்கள்  உங்கள்  குழந்தை  புத்திசாலியாவான் !
      " என்னடா  இது... நம்ம  குழந்தை  எப்போ  பாத்தாலும்,  பொம்மைகளோடேயே  விளையாடிகிட்டு  இருக்கானே?"  என்று  இனி  எந்த  அம்மாவும்  புலம்பத்  தேவையில்லை.  காரணம்,  குழந்தைகளுடைய  மூளையின்  செயல்திறனை  அதிகப்படுத்தும்  ஆற்றல்  பொம்மைகளுக்கு  இருக்கிறதாம்!
       ' எஜுகேஷனல்  டாய்ஸ் '  என்று  சொல்லப்படுகிற  குழந்தைகளின்  கல்வி  சம்பந்தமான,  A, B, C, D ... போன்ற  எழுத்துக்கள்,  பெயர்களோடு  கூடிய  பழங்கள்,  கார்கள்,  பல்வேறு  நாடுகளின்  தேசியக்  கொடிகள்,  மேத்மேடிகல்    பொம்மை  விளையாட்டுகள்  போன்றவற்றால்,  குழந்தைகளின்  ஐக்யூ  அதிகமாகிறது '  என்கிறார்  அமெரிக்காவைச்  சேர்ந்த  நியூரோபயாலஜி  துறை  பேராசிரியர்  எரிக்  நட்ஸென்.
       இதில்  மிகவும்  ஆச்சரியமான  விஷயம்  என்னவென்றால்,  குழந்தைகள்  தாங்கள்  கற்றுக்கொள்கிற  விஷயங்களை  வளர்ந்தவுடன்  பெரும்பாலும்  மறந்து  விடுவார்கள்.. ஆனால்,  நிறைய  பொம்மைகளோடு  விளையாடிய  குழந்தைகளின் மூளை  செயல்திறன்  அவர்கள்  வளர்ந்த  பிறகும்  கூட,  பழைய  ஞாபகசக்தி  குறையாமலும்  அதே  சுறுசுறுப்போடும்  இயங்குகிறதாம்.
-- தகவலீஸ்வரி.  குமுதம்  சிநேகிதி ,  ஆகஸ்ட்  15,  2006. 

Sunday, January 11, 2015

கடி.

*  ஒருவர் : என்னது,  உங்க  மனைவி  நில்லுன்னு  சொன்னா  நிப்பீங்க.  போன்னு  சொன்னா  போவீங்கன்னு  சொல்றீங்களே.  இது  உங்களூக்கே
                வெட்கமாயில்லை!
   மற்றவர் : என்ன  பண்றது.  ஒரே  பஸ்ல  நான்  டிரைவராகவும்  என்  மனைவி  கண்டக்டராகவும்  வேலை  செய்யுறோம்..!
*  ஒருவர் :  எங்க  ஊர்ல  சப்போட்டாப்பழம்  சீப்பா  கிடைக்கும்...!
   நண்பர் :  ஆச்சரியமா  இருக்கே...!  எங்க  ஊர்ல  வாழைப்பழம்தான்  சீப்பா  கிடைக்கும்...!
*  ஒருவர் :  நான்  பத்து  வருஷமா  ஒரே  சோப்புதான்  தேய்ச்சுக்  குளிக்கறேன்...!
   மற்ரவர் : பரவாயில்லையே,  எனக்கு  ஒரு  சோப்பு  ஒரு  மாசத்துக்குக்கூட  வரமாட்டேங்குதே!
-- தினமணி சிறுவர்மணி.  24 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர். 

Saturday, January 10, 2015

இன்பம்!

   தமிழ்த்  தாத்தா  உ.வே.சாமிநாதய்யரிடம்  ஒருவர்,' ஐயா,  ஆங்கிலம்  படித்தால்  இந்த  ஜென்பத்தில்  மகிழ்ச்சியாக  வாழலாம்.  சமஸ்கிருதம்  படித்தால்  மறுமையில்  ஆனந்தமாக  வாழலாம்  என  நினைகிறேன்.  நீங்கள்  என்ன  சொல்கிறீர்கள்?'  என்றாராம்.
     அதற்கு  தமிழ்தாத்தா  இப்படிச்  சொன்னாராம்.
    ' தமிழை  ஒழுங்காகப்  படி  எந்த  ஜென்மத்திலும்  நீ  இன்பமாக  இருக்கலாம்!'
-- விசாகன்,  திருநெல்வேலி.
-- தினமணி சிறுவர்மணி.  24 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.   

Friday, January 9, 2015

கண்டது.

( சின்னமனூரில்  ஒரு  விலம்பரப்  பலகையில் )
கோபமாய்ப்  பேசினால்  குணத்தை  இழப்பாய்
அதிகமாகப்  பேசினால்  அமைதியை  இழப்பாய்
வேகமாய்ப்  பேசினால்  அர்த்தத்தை  இழப்பாய்
வெட்டியாய்ப்  பேசினால்  வேலையை  இழப்பாய்
ஆணவமாய்ப்  பெசினால்  அன்பை  இழப்பாய்
பொய்யாய்ப்  பேசினால்  பீயரை  இழப்பாய்
சிந்தித்துப்  பேசினால்  சிறப்போடு  இருப்பாய்
சிரித்துப்  பேசினால்  அன்போடு  இருப்பாய்.
-- ஜி.மாரியப்பன்,  சின்னமனூர்.
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர். 

Thursday, January 8, 2015

கண்டது.

 ( வாலாஜாபேட்டை  பெல்லியப்பா  நகர்  சுவர்  ஒன்றில் )                  
  சூரியனைப்  பார்த்து  நேரம்
  சொன்னது
  அந்தக்காலம்.
  பவர்கட்  ஆவதைப்  பார்த்து  நேரம்  சொல்வது
  இந்தக்காலம்.

( நாகர்கோவில்  கார்மல்  மேல்நிலைப்பள்ளி  சுவரில் )
    பள்ளியில்  ஆசிரியர்  பெற்றோரே
வீட்டில்  பெறோரும்  ஆசிரியரே.

( டிராவலர்ஸ்  வண்டியின்  பின்புறம் )
     ஒருநாள்  நிச்சியம்  விடியும்
     உன்னால்மட்டும்  அது  முடியும்.
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.

Wednesday, January 7, 2015

ஸ்ரீ மடத்தில்...

ஸ்ரீ மடத்தில்  பெரியவர்  முன்னிலையில்  தினமும்  காலையில்  பஞ்சாங்க  படனம்  நடைபெறும்.  நாள்தோறும் திதி- வார- நஷத்ர-யோக  கரணங்களை  அறிந்து  கொண்டாலே  மகத்தான  புண்ணியம்  என்பது  சாஸ்திர  வாக்கியம்.  ஒரு  அமாவாஸ்யை  திதியன்று  செவ்வாய்கிழமையும்  கேட்டை  நட்சத்திரமும்  கூடியிருந்தன.  " இன்னைக்கு  கேட்டை  மூட்டை  செவ்வாய்க்கிழமை  எல்லாம்  சேர்ந்திருக்கு,  அதை  ஒரு  தோஷம்  என்பார்கள்.  பரிகாரம்  செய்யணும்"  என்றார்கள்  பெரியவர்.  " அப்பாகுட்டி  சாஸ்திரிகளுக்குச்  சொல்லியனுப்பு,  லோகஷேமத்துக்காக  ஹோமங்கள்  செய்யச்  சொல்லு..."
      பரிகார  ஹோமம்  நடந்துகொண்டிருக்கும்போது  பெரியவர்  அங்கே  வந்து  பார்த்தார்கள்.  " கேட்டை,  மூட்டை,  செவ்வாய்க்கிழமை  என்றால்  என்ன  அர்த்தம்?  கேட்டை  என்பது  நட்சத்திரம்,  செவ்வாய்  என்பது  கிழமை,  மூட்டை  என்றால்  என்ன?  என்று  கேட்டார்கள்.  எவருக்கும்  பதில்  சொல்லத்  தெரியவில்லை.
      பெரியவர்களே  சொன்னார்கள்:
     " அது  மூட்டை  இல்லை.  மூட்டம்.  மூட்டம்  என்றால்  அமாவாஸ்யை.  பேச்சு  வழக்கில்  மூட்டை,  மூட்டை  என்று  மோனை  முறியாமல்  வந்துடுத்து"
       தொண்டர்களுக்கெல்லாமே  ஆச்சரியமாக  இருந்தது. " பெரியவா  இம்மாதிரி  நுட்பமான  விஷயங்களை  எங்கிருந்து  தெரிந்துகொண்டார்கள்?"
-- ( 'மகா  பெரியவாள்  தரிசன  அனுபவங்கள் ( 3-ம்  தொகுதி)  தொகுப்பாசிரியர்:  பி.எஸ்.கோதண்டராமசர்மா.)
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர். 

Tuesday, January 6, 2015

இருபத்தாறு கீதை.

  பரந்தாமன்  பார்த்தனுக்குச்  சொன்ன  பகவத்  கீதைபோல  மேலும்  26  கீதைகள்  இருக்கின்றன.  அவை:
     1, ரிபு  கீதை.  2. பிட்சு  கீதை.  3. பராசரகீதை.  4. போத்திய  கீதை.  5. ஷடாஜ  கீதை.  6. உதத்திய  கீதை.  7. ராமகீதை.  8. தேவிகீதை.
9. ஹம்சகீதை.  10. ஹரித  கீதை.  11. சம்பக  கீதை.  12. வாமதேவ  கீதை.  13. சூரிய  கீதை.  14. சிவகீதை.  15. கபில கீதை.  16. மங்கி  கீதை.
17. ரிஷப  கீதை.  18. விருத்திரக்கீதை.  19. வசிஷ்டகீதை.  20. உத்தவகீதை.  21. பிரம்ம  கீதை.  22. அஷ்டாவக்ர  கீதை.  23. பாண்டவகீதை.
24. உத்தர  கீதை.  25. அவதூத  கீதை.  26. வியாச  கீதை.
-- ஆர்.சௌம்யா,  திருச்சி - 13.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல்  ஜூன்  1 - 15, 2012.
-- இதழ் உதவி:  P. சம்பத் ஐயர்,  திருநள்ளாறு.

Monday, January 5, 2015

தெய்வீக வீணை.

 வீணை  என்று  சொன்னதுமே  எல்லோருக்கும்   சரஸ்வதியின்  நினைவுதான்  வரும்.  ஆனால்,  32  வகையான  வீணைகளை  31  தெய்வங்கள்  இசைப்பதாக  புராணங்கள்  சொல்கின்றன.  இதோ     தெய்வங்களும்  அவர்களுக்குரிய  வீணையின்  பெயர்களும்:
     1. பிரம்மதேவனின்  வீணை  -  அண்டம்.  2. விஷ்ணு  -  பிண்டகம்.  3. ருத்திரர்  -  சராசுரம்.  4. கௌரி  -  ருத்ரிகை.  5. காளி  -  காந்தாரி.  6. லட்சுமி  -  சாரங்கி.  7. சரஸ்வதி  -  கச்சபி  எனும்  களாவதி.  8. இந்திரன்  -  சித்திரம்.  9. குபேரன்  -  அதிசித்திரம்.  10. வருணன்  -  கின்னரி.  11. வாயு  -  திக்குச்சிகை.
யாழ்.  12. அக்கினி  -  கோழாவளி.  13. நமன்  -  அஸ்த  கூர்மம்.  14. நிருதி  -  வராளி  யாழ்.  15. ஆதிசேடன்  -  விபஞ்சகம்.  16. சந்திரன்  -  சரவீணை.  17. சூரியன்  -  நாவீதம்.  18. வியாழன்  -  வல்லகி  யாழ்.  19. சுக்கிரன்  -  வாதினி.  20. நாரதர்  -  மகதி  யாழ்  ( பிருகதி ).  21. தும்புரு  களாவதி ( மகதி ).  22. விசுவாவசு  -  பிரகரதி.  23. புதன்  -  வித்யாவதி.  24. ரம்பை  -  ஏக  வீணை.  25. திலோத்தமை  -  நாராயணி.  26. மேனகை  -  வணி.  27. ஊர்வசி  -  லகுவாக்ஷி.  28. ஜயந்தன்  -  சதுகம்.  29. ஆஹா,  ஊஹூ  தேவர்கள்  -  நிர்மதி.  30. சித்திரசேனன்  -  தர்மவதி ( கச்சளா ).  31. அனுமன்  -  அனுமதம்.
32 வது  வகை  வீணையை  வாசிப்பவன்,  ராவணன்  அவனது  வீணையின்  பெயர்  -  ராவணாசுரம்.
-- எஸ்.ஜெயந்தி,  சென்னை - 92.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல்  ஜூன்  1 - 15, 2012.
-- இதழ் உதவி:  P. சம்பத் ஐயர்,  திருநள்ளாறு.  

Sunday, January 4, 2015

சிம்கார்டு.

 செல்போன்களில்  மற்றவர்களுடன்  தொடர்பு  கொள்ள  சர்வீஸ்  புரொவைடர்களால்  வழங்கப்படும்  ஒரு  சிறிய  அட்டைக்குப்  பெயர்தான்  சிம்கார்டு.  சிம்  என்பதன்  விரிவாக்கம்  Subscriber  Identity  Module ( SIM) .  முதல்சிம்  கார்டு  1991 ம்  ஆண்டில்  உருவாக்கப்பட்டது.  அந்த  சிம்கார்டை  முனிஸ்  ஸ்மார்ட்  கார்டு  தயாரிப்பாளர்  ஜெர்மன்  நாட்டைச்  சேர்ந்த  கீய்செக்கே  டெவ்ரியன்ட்  உருவாக்கினார்.
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012.  

Saturday, January 3, 2015

கிரகணம்.

   இது  ஒரு  வானவியல்  நிகழ்வு.  வானில்  பல  பொருட்கள்  வலம்  வந்து  கொண்டிருக்கின்றன.  அவை  நகர்ந்து  செல்லும்போது  சில  சமயம்  ஒன்றின்  பாதையில்  மற்றொன்று  குறுக்கிட  நேரிடும்.  அப்போது  அந்த  வான்பொருள்  நம்  பார்வையிலிருந்து  மறைக்கப்படும்.
     இந்நிகழ்வு  சூரிய  குடும்பத்துக்குள்  நிகழும்போது  மறைக்கப்படும்  பொருளின்  பெயரை  வைத்து,  அதன்  கிரகணம்  என்று  சொல்லப்படுகிறது.
     சந்திரன்  பூமியைச்  சுற்றி  வரும்போது  29 1/2  நாட்களுக்கு  ஒருமுறை  பூமிக்கும்  சூரியனுக்கும்  இடையேயும்,  சூரியனுக்கு  எதிர்திசையிலும்  வருகிறது.  அதனால்  பூமியில்  இருப்போருக்கு  இருட்டாக  அமாவாசையாகவும்  சூரிய  ஒளிவெளிச்சம்  பெற்று  பிரகாசமாக  பவுர்ணமியாகவும்  சந்திரன்  தோற்றமளிக்கிறது.  இதற்கான  காரணம்  சூரியன்,  பூமி,  சந்திரன்  ஆகிய  மூன்றும்  குறித்த  தினங்களில்  ஒரே  நேர்  கோட்டில்  வருவதே.
     பவுர்ணமி  தினத்தில்  பிரகாசமாக  தோற்றமளிக்க  வேண்டிய  சந்திரன்  சில  சமயங்களில்  பூமியின்  நிழலால்  மறைக்கப்பட்டும்,  அமாவாசை  தினத்தில்  சூரியன்  சந்திரனின்  நிழலால்  மறைக்கப்பட்டும்  விடுகின்றது.  இவ்  நிகழ்வையே  சந்திர,  சூரிய  கிரகணம்  என்று  அழைக்கிறோம்.
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012.  

Friday, January 2, 2015

சாகையில் பார்...

  ஒரு  ஊரில்  இனிமையாக  பாடுவதில்  வல்லமை  பெற்ற  ஒரு  புலவர்  இருந்தார்.  அவர்  பாடலைக்  கேட்க  அந்த  ஊர்  மக்கள்  எப்போதுமே  விரும்புவார்கள்.
     ஒரு  நாள்  காலை  அந்தப்  புலவர்  கடைத்  தெருவுக்கு  வந்துகொண்டிருந்தார்.  அவர்  பாடும்  இனிமை  பற்றி  பக்கத்து  ஊர்க்காரர்களுக்கு  சொல்லிக்கொண்டிருந்தார்  அந்த  ஊர்  ஆசாமி.  பக்கத்து  ஊர்க்காரர்  சரியான  கிண்டல்  பேர்வழி.  சும்மா  இருப்பாரா?  பாடகரை  உசுப்பேத்த  நினைத்தார்.
     புலவரிடம்  ஓடிச்சென்று,  அவருக்கு  வணக்கம்  சொல்லி,  " ஐயா,  புலவரே,  நீங்கள்  நல்லாப்  பாடுவீங்களாமே !  நான்  உங்களைப் ' பாடையில ' பார்க்கணும் "  என்றான்  குசும்பாக   அதாவது  ' பாடும்போது  பார்க்க  வேண்டும் '  என்பதை  அப்படிச்  சொல்லியிருக்கிறான்.
     புலவருக்கு  பக்கத்து  ஊர்க்காரரின்  நக்கல்  புரிந்தது.  புலவரும்  அசராமல்,  " அப்ப  சாகையில  வந்து  பார் "  என்றார்.  அதாவது  ' சாகை'  ( ஜாகை ) என்பது  இருப்பிடத்தைக்  குறிக்கும்.  வீட்டில்  வந்து  பார்  என்பதை  இப்படி  அழகாக  சிலேடையில்  கூறினார்  புலவர்.  நையாண்டி  ஆசாமி  திகைத்து  நின்றான் !
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012. 

Thursday, January 1, 2015

12 வகை உணவுப் பழக்கம்.

அருந்துதல்     :  மிகக்  கொஞ்சமாக  சாப்பிடுவது.
உண்ணல்       : பசி  தீர  சாப்பிடுவது.
உறிஞ்சுதல்     : நீர்  கலந்த  உணவை  உண்ணுதல்.
குடித்தல்         : நீரான  உணவை  பசி  நீங்க  உறிஞ்சி  உட்கொள்ளுதல்.
தின்றல்          : பண்டங்களை  மெதுவாக  கடித்துச்  சாப்பிடுதல்.
துய்த்தல்        : உணவை  ரசித்து  மகிழ்ந்து  உண்ணுதல்.
நக்கல்           :  நாக்கினால்  துழாவித்  துழாவி  உட்கொள்ளுதல்.
பருகல்           : நீர்  கலந்த  பண்டத்தை  கொஞ்சம்  குடிப்பது.
மாந்தல்          : ரொம்பப்  பசியால்  மடமடவென்று  உட்கொள்ளுதல்.
கடித்தல்         : கடினமான  உணவுப்  பொருளை  கடித்தே  உண்ணுதல்.
விழுங்கல்       : வாயில்  வைத்து  அரைக்காமல்  அப்படியே  உள்ளே  தள்ளுவது.
முழுங்கல்       : முழுவதையும்  ஒரே  வாயில்  போட்டு  உண்பது.
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012.