Sunday, August 17, 2014

பூஜைக்குரிய மலரே வா !

 திருமுறைகள் மலர் வழிபாட்டின் மகத்துவத்தை விவரித்துள்ளன.  எல்லா மலர்களும் இறைவனுக்குரியவையே.  எனினும்,  சில மலர்களால் அர்ச்சிப்பதாலும், மாலை சாத்துவதாலும் குறிப்பிட்ட வகையான நலம்கிட்டும் எனப் பூஜாபத்ததி நூல்களும் புஷ்ப விதி நூல்களும் சொல்லியுள்ளன.
     துன்பம் நீங்கி நன்மைகள் அருளும் மலர்களைத் தெரிந்துகொள்ளலாமே...
எள்ளுப்பூவினால் பூஜை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
மாதா, பிதாக்களைக் கொன்ற கொடிய பாவத்தையும் நீக்க வல்லது கொன்றைப்பூ.
வெள்ளெருக்குப் பூவால் பூஜிக்க மாற்றான் மனைவியை விழைந்த தோஷம் போகும்.
பொய் சொன்னதால் நேரும் தோஷத்தை வில்வம் அகற்றும்.
வறுமையால் செய்த குற்றங்களால் விளையும் பாவங்களைத் துளசி நீக்கும்.
கத்தரிப்பூவால் பூஜிக்க அனைத்துவகையான கடும் நோய்களும் அகலும்.
பசுவைக் கொன்ற பாவம், தும்பைப்பூவால் அர்ச்சித்தால் போகும்.
சகோதர சகோதரிகளை வஞ்சித்த செயல்களால் வரும் பாவத்தை அருகம்புல் அகற்றும்.
சிவலிங்களுக்கு அழிவு செய்ததால் விளையும் பாவங்கள் அசோகம் அகற்றும்.
நெல்லி இலைகளால் வழிபட கொடிய நோய்கள் அகலும்.
பேச்சால் விளையும் பாவங்களை நீலோத்பவ மலர் அகற்றும்.
-- புலவர் வே.மகாதேவன்.
-- தினமலர் பக்திமலர். மே 9,2013. 

No comments: