Sunday, August 31, 2014

காதலன், கணவன்.

"காதலன், கணவன் என்ன வேறுபாடு?"
" பேசுவது புரியாவிட்டாலும் ரசித்துக் கொண்டே இருப்பவன் காதலன்... பேசுவது புரிந்தும் சகித்துக்கொண்டு இருப்பவன் கணவன் !"

குற்றவாளி, கட்சித்தலைவர்.
" குற்றவாளி, அரசியல் கட்சித்தலைவர்....என்ன வித்தியாசம்?"
" வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டு இருந்தால், அவர் குற்றவாளி!  வெளி மாவட்டத்துக்குச் செல்லவே தடை விதிக்கப்பட்டு இருந்தால் அவர் கட்சித்தலைவர் !"
-- நா.கி.பிரசாத், கோவை.  (.நானே கேள்வி,  நானே பதில் ! )
--  ஆனந்த விகடன். 31.7.2012.  

Saturday, August 30, 2014

ஆட்டோகிராஃப் .

 "ஆட்டோகிராஃப் . என்பது அடையாளம்.  திருவள்ளுவரின் கையொப்பத்தை நான் அறியேன்.  திருக்குறள்தான் அவர் எனக்குத் தந்த ஆட்டோகிராஃப்.
       ஆட்டோகிராஃப் எழுத்தில் எடுக்கப்படுகிற ஒருவரின் புகைப்படம்.  அதற்கு வேறு வடிவங்களும் உண்டு.
பிறை என்பது
நிலாவின் சுருக்கொப்பம்

விதை என்பது
மரத்தின் ஆட்டோகிராஃப்.

மலர் என்பது
அழகின் ஆட்டோகிராஃப்.

தாஜ்மகால் என்பது
ஷாஜகானின் நிமிர்ந்து நிற்கிற
ஆட்டோகிராஃப்.

காதலியின் கற்றைக் குழலில் ஒரு முடி எடுத்து பாதுகாப்பான் காதலன்.  ஒரு காதலியின் மிக நீண்ட ஆட்டோகிராஃப் அதுதான்.
இந்த உலகம் மறதியில் மட்டுமே அதிகமாக ஆர்வம் காட்டுகிறது.  இந்த பூமிக்கு யாருமே முக்கியம் இல்லை  என்பதே முக்கியமான உண்மை.  சமூகத்துக்கு எவை நன்மையோ, அவை மட்டுமே நிற்கும்.  நான் நினைவுகூறத்தக்க நன்மைகளை நோக்கி நாம் நடக்க வேண்டுமென விரும்புகிறேன்!"
--  ஆனந்த விகடன். 31.7.2012.    

Friday, August 29, 2014

அப்படியா!

*  மலைப்பாம்பு, தான் விழுங்கும் இரையின் இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.
*  நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியவை.
*  நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும்.  பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.
*  நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
*  ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்கும்.
*  வண்னத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
*  ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
--  தினமலர் . சிறுவர்மலர் .ஜூன் 26, 2013. 

Thursday, August 28, 2014

தெரிஞ்சுக்கோங்க!

ஏ.கே.47 துப்பாக்கி!
      ஏ.கே.47 ரக துப்பாக்கிக்கு அந்த பெயர் வந்தது சுவாரஸ்யமானது.  இந்தத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் ஆட்டோமேட்டிக்கோ காலஸ் என்பவர்.  அப்போது அவருக்கு வயது 47.  அதனால், அவர் வயதை குறிக்கும்படி ஏ.கே. 47 என்று பெயர் வைத்து விட்டார்கள்.
ஒரு ஊருக்கு 12 பெயர்கள்!
     உலகிலேயே 12 பெயர்கள் கொண்ட ஒரு ஊர் உண்டு.  அது தமிழகத்தில் சிதம்பரத்திற்கு அடுத்து இருக்கும் சீர்காழி என்ற ஊர்தான்.
     சீர்காழிக்கு, பிரம்மரம், வேணுபுரம், புகலி, பெரிய வெங்குருகு, திருத்தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வரும்புருவம், கண்பை நகர், வளரும் காழி, கொச்சைவயம், திருக்குழுமலம் ஆகிய பெயர்கள் உண்டு.
--  தினமலர் . சிறுவர்மலர் .ஜூன் 26, 2013.

Wednesday, August 27, 2014

சைபர் ஸ்பைடர்.

-- சம்சாரம் அது மின்சாரம்.  இருக்கும்போது மறந்துடுவோம்;  இல்லாதபோது புலம்புவோம்!
-- முன்னாடியெல்லாம் மின் தடைனு மரியாதையா சொன்னாங்க.  இப்ப மின் 'வெட்டு'  அதிகாரமா சொல்றாங்க. # கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க!
-- கச்சத் தீவு மீட்டால் பலன் இல்லை: ஞானதேசிகன்! # காங்கிரஸால கூடத்தான் பலன் இல்லை!
-- மணிரத்னம் ஒரு தீர்க்கதரிசி.  இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் அப்பவே இருட்டுலேயே படம் எடுத்துப் பழகிட்டாரு!
-- எத்தனை முறை ஆட்சியை இழந்து திரும்பப் பதவிக்கு வந்தாலும், அரசியல்வாதிகள் பாடம் கற்பதில்லை.  பாடம் புகட்டுவது தமிழக மக்களுக்கே!
-- தன் ஆசிரியரின் மேல் என் அப்பாவுக்கு இருக்கும் மரியாதை... என் ஆசிரியரின் மேல் எனக்கு இல்லை # உண்மை.
-- ஆறு வயதுக் குழந்தை மடிக்கணினியில் விளையாடுவதைப் பெருமையாகவும் கர்வமாகவும் நினைக்கும் பெற்றோர்களே.. அது சாபம் எனப் பின்னாளில்
   தெரியும்!
-- வலை பாயுதே !  facebook.  
--ஆனந்த விகடன்.22.2.2013.

Monday, August 25, 2014

அறிவோம் ! தெளிவோம் !

நமசிவாய, சிவாயநம இரண்டில் எது சிறந்தது?
     பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூக்குமம் என்று இரண்டு வகைப்படும்.  நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம்.  சிவாயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம்.
     ஆரம்ப நிலை ( சமயதீட்சை ) தீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும்,  மேல்நிலை ( விசேஷ தீட்சை முதலியன ) தீட்சை பெற்றவர்கள் சூட்சும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டு,.  எது சிறந்தது என்று கேட்பது தவறு. குருவிடம் உபதேசம் பெறுவது தான் முக்கியம்.  இரண்டுமே சகல நன்மைகளையும் தரவல்லவை.
தேய்பிறையில் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா?
      தேய்பிறை நாட்கள் சுத்தமாக வேண்டத்தகாதது அல்ல.  ஒரு சிலர் தவறாகப் பிரசாரம் செய்ததால் வந்த வினை இது.  சப்தமி வரை உத்தமம் - முதல் நிலை.  தசமி வரை மத்திமம் - இரண்டாம் நிலை.  சதுர்தசி வரை அதமம் - மூன்றாம் நிலை.  தவிர்க்க முடியாத சூழலில் மூன்றாம் நிலையிலும் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.
--   மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- . தினமலர் . பக்திமலர் .ஜூன் 25, 2013.    

Sunday, August 24, 2014

வட, தென் இந்தியா.

 " வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் என்ன ஒற்றுமை?"
     " தென் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்த நிகழ்வு இது.  புதுக்கோட்டை அருகே உள்ள கறம்பக்குடி கருவடதெரு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கலைமணி.  இவர் ஒரு தலித் பெண்.  குடியரசு தினத்தன்று கலைமணி தேசியக் கொடி ஏற்ற முற்பட்டபோது, ' ஒரு தலித் பெண் தேசியக் கொடி ஏற்றுவதா?  என்று ஆதிக்கச்சாதிக்காரர்கள் அடித்து உதைத்து இருக்கிறார்கள்.
       குடியரசு தினத்தில் இருந்து நான்கு நாட்கள் கழித்து மத்தியப்பிரதேசத்தில் நடந்த சம்பவம் இது.  பகார் பங்களா என்ற கிராமத்தைச் சேர்ந்த தலித் இளஞர் ஜெகதீஷ், தன் நிலத்தில் இருந்த மின்சார மோட்டார் திருடு போனதால் மூன்று பேர் மீது சந்தேகப் புகார் அளித்துள்ளார்.  அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ஜெகதீஷின் கை, கால்களைத் கோடரியால் துண்டித்து உள்ளனர்.  நம்புங்கள் இந்தியா ' குடியரசு நாடு '!
-- மா.குணசேகரன், கும்பகோணம்.
-- நானே கேள்வி... நானே பதில்!    ஆனந்த விகடன். 22.2.2012.

Saturday, August 23, 2014

உடம்பு

" உடம்பு எதுவரைக்கும் நன்றாக இருக்கும்?"
" கண்ணுக்குத் தூக்க மாத்திரையும்  --  கட்டிலுக்கு ஊக்க மாத்திரையும் தேவைப்படாத வரைக்கும். "
-- வைரமுத்து பதில்கள்.
-- ஆனந்த விகடன். 5.12.2012.

Friday, August 22, 2014

SMART

  குறிக்கோள் நிர்ணயிப்பதன் தன்மையை SMART என்று சுருக்கமாகச் சொல்வார்கள். ' கடினமாக உழைப்பதைவிட  புத்திசாலித்தனாமாக உழைப்பது சிறந்தது ' என்பதைத்தான இந்த  SMART என்கிற வார்த்தை குறிக்கிறது.  இதன் விரிவாக்கத்தைப் பார்ப்போம்:
S .......Specific ........      குறிப்பானதாக.
M ...... Meaningful.....      அர்த்தமுள்ளதாக.
A .......Action oriented.....நடைமுறைப்படுத்தத்தக்கதாக.
R .......Rewarding...........பயனளிக்கக்கூடியதாக.
T........Time- bound .......நேரக் கட்டுப்பாட்டோடு இருப்பதாக.
-- கோ.ரமேஷ். சுட்டி  விகடன். 15 . 06. 2012
-- இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.  

Thursday, August 21, 2014

' 0 ' clock.

  " நேரத்தைக் குறிப்பிடும்போது 5' 0 clock,  7' 0 clock என்கிறார்களே ... இதில் 0 என்பது எதைக் குறிக்கிறது?"
     " நமக்கு எல்லாமே சீக்கிரமாக முடிய வேண்டும்.  அதற்காக எல்லாவற்றையும் சுருக்கிவிடுகிறோம்.  அப்படித்தான்  0f the clock ( கடிகாரத்தில் உள்ளபடி )  என்பதில் இருக்கும் நான்கு எழுத்துகளைச் சுருக்கிவிட்டு, 0 மட்டும் போட்டு நேரத்தைக் குறிப்பிடுகிறார்கள்"
--   மை டியர் ஜீபா!  கேள்வி பதில் .  சுட்டி விகடன். 15 . 06. 2012
-- இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால். 

Wednesday, August 20, 2014

குரு பூர்ணிமா.

 ஆடி மாதம் பவுர்ணமி நாளை குரு பூர்ணிமா என்பர்.  குரு என்று இங்கு குறிப்பிடப்படுபவர் வியாசர்.  இவர் நாராயணனை முதல்வராகக்கொண்ட குரு பரம்பரையில் வருபவர்.
     நாராயணனிடமிருந்து பிரம்ம தேவன் பிறந்தார்.  பிரம்மனில் இருந்து வசிஷ்டர் பிறந்தார்.  வசிஷ்டருடைய மகன் சக்தி.  சக்தியின் மகன் பராசுரர்.  பராசுரருக்கும் சக்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவர் வியாசர்.
---  தினமலர் பக்திமலர்.  ஜூலை 18, 2013.

Tuesday, August 19, 2014

சித்தர் சொன்னது...

' மூலியடா பங்கம்பாளை
  கொண்டு
  வந்து உன் மனையில்
  வைத்திருந்தால்
  கொடிய விடம் அணு
  காது குடிஉஓடிப்போம்
  நன்றான நாகதாளிக்
  கிழங்கு தானும்
  நன்மனையிலுக்க
  விடம் நாடாதப்பா
  அன்றான ஆகாசகருடன்
  மூலி
  அம்மனையிலிருக்க விட
  மற்றுப்போம்...
-- சித்தர் பாடல்.
     ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை --  இந்த மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
-- தினமலர்.21.7.2013.   

Monday, August 18, 2014

இல்லறத்தான்-துறவியர்.

  இல்லறத்தாருக்கும்,  துறவியருக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு.  துறவியரை ஆதரிப்பது, உதவுவது இல்லறத்தாரின் கடமை.  எனவே அவர்கள் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழ வேண்டியவர்கள்.
     துறவியர் நிலையாக ஒரு இடத்தில் தங்குவதில்லை.  நவராத்திரி முதலான நாட்களைத் தவிர, மற்றபடி மூன்று நாட்களுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கக்கூடாது என்பது சந்நியாச விதி.
     சில நாட்களே ஓரிடத்தில் இருக்க வேண்டிய துறவியர்,  நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.  அப்படி தங்கி இருப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்வது சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம்.  சாதுர் மாஸ்யம் என்றால் நான்கு மாதங்கள் என்று பொருள்.
     ஆடிமாதம் பவுர்ணமி அன்று சாதுர்மாஸ்யம் தொடங்குகிறது.  அந்த நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் துறவிகள் இருப்பதற்கான காரணத்தை சாஸ்திரங்கள் சொல்கின்றன.
-- தினமலர் பக்திமலர்.  ஜூலை 18, 2013. 

Sunday, August 17, 2014

பூஜைக்குரிய மலரே வா !

 திருமுறைகள் மலர் வழிபாட்டின் மகத்துவத்தை விவரித்துள்ளன.  எல்லா மலர்களும் இறைவனுக்குரியவையே.  எனினும்,  சில மலர்களால் அர்ச்சிப்பதாலும், மாலை சாத்துவதாலும் குறிப்பிட்ட வகையான நலம்கிட்டும் எனப் பூஜாபத்ததி நூல்களும் புஷ்ப விதி நூல்களும் சொல்லியுள்ளன.
     துன்பம் நீங்கி நன்மைகள் அருளும் மலர்களைத் தெரிந்துகொள்ளலாமே...
எள்ளுப்பூவினால் பூஜை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
மாதா, பிதாக்களைக் கொன்ற கொடிய பாவத்தையும் நீக்க வல்லது கொன்றைப்பூ.
வெள்ளெருக்குப் பூவால் பூஜிக்க மாற்றான் மனைவியை விழைந்த தோஷம் போகும்.
பொய் சொன்னதால் நேரும் தோஷத்தை வில்வம் அகற்றும்.
வறுமையால் செய்த குற்றங்களால் விளையும் பாவங்களைத் துளசி நீக்கும்.
கத்தரிப்பூவால் பூஜிக்க அனைத்துவகையான கடும் நோய்களும் அகலும்.
பசுவைக் கொன்ற பாவம், தும்பைப்பூவால் அர்ச்சித்தால் போகும்.
சகோதர சகோதரிகளை வஞ்சித்த செயல்களால் வரும் பாவத்தை அருகம்புல் அகற்றும்.
சிவலிங்களுக்கு அழிவு செய்ததால் விளையும் பாவங்கள் அசோகம் அகற்றும்.
நெல்லி இலைகளால் வழிபட கொடிய நோய்கள் அகலும்.
பேச்சால் விளையும் பாவங்களை நீலோத்பவ மலர் அகற்றும்.
-- புலவர் வே.மகாதேவன்.
-- தினமலர் பக்திமலர். மே 9,2013. 

Saturday, August 16, 2014

எண்ணைக் குளியலும், பலன்களும்...

 எந்தெந்த நாளில்,  எண்ணை தேய்த்துக் குளித்தால் என்ன என்ன பலன்கள் விளையும் என பழந்தமிழ் நூல்கள் சொல்வதைப் பார்க்கலாம்,
ஞாயிற்றுக்கிழமை  --  எண்ணை தேய்த்து முழுகக் கூடாது.  அழகு போய்விடும்.
திங்கட் கிழமை  --  அதிக அளவில் பொருள் சேரும்.
செவ்வாய் கிழமை  --  இடர் வரும்.
புதன் கிழமை  --  பெருமை மிகுந்த இந்நாளில்,  மிகுந்த பக்தி வரும்.
வியாழக் கிழமை  --  அறிவு மங்கும்.
வெள்ளிக் கிழமை  --  தேடிச் சேர்த்து வைத்த பொருள் சேதமாகும்.
சனிக் கிழமை  --  செல்வமும்,  ஆயுளும் பெருகும்.
--- ஸாந்த்ரானந்தா.
--- தினமலர் வாரமலர். செப்டம்பர் 8,2013. 

Friday, August 15, 2014

அடேங்கப்பா வீடு !

  மொபைல் ஆஸ்பத்திரி,  மொபைல் கோர்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.  இப்போது மொபைல் வீடும் வந்துவிட்டது.  இங்கல்ல, அமெரிக்காவில்.
    ' தி ஹீட் ' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மொபைல் வீடு 53 அடி நீளமும்,  30 டன் எடையும் கொண்டது.  ஹைட்ராலிக் முறையில் இதன் இரண்டாவது தளம் மேலெழும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  அப்படி மேலெழும்பும் போது 15 அடி 10 இன்ச் உயரம் கொண்டதாக இருக்கும்.  2 குளியலறைகள்,  சமையலறை,  ஹால்,  பெட் ரூம் என்ற சகலவசதிகளுடன் இருக்கும்.  இந்த வீட்டில்,  7 இடங்களில் 60 இன்ச் கொண்ட 3டி தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.
     வெளியில் நிலவும் தட்பவெப்பத்திற்கேற்ப இந்த வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் உதவியுடன் வீடு தானாகவே குளிர்ச்சி அல்லது வெப்பப்படுத்தும் வசதிகளை கொண்டிருக்கிறது.
     இந்த வீட்டை சுற்றிலும் 360 டிகிரி கோணத்தில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால்,  வீட்டிற்கு வெளியே யாராவது நின்றால் கூட உள்ளே இருக்கும் டிவியில் தெரிந்து விடும்.  12 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் யார் வேண்டுமானாலும் நுழையலாம்.  ஆனால்,  படுக்கை அறையில் மட்டும் டெமிமூர் ரேகை வைத்தால் மட்டுமே கதவு திறக்கும்.
--  தினமலர் வாரமலர். செப்டம்பர் 8,2013. 

Thursday, August 14, 2014

ஆப்ஸ் @ அகில உலகம். காம்.

 ட்ரூ காலர்  ( True Caller )
     நம் அலைபேசி மெமரியில் இருக்கும் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் மட்டுமே,  அழைத்தவர் யார் என்று நமக்குத் தெரியும் !  புதிய எண்களில் இருந்து அழைப்பு வரும் போது அடித்துப்பிடித்து அட்டெண்ட் செய்தால், ' திண்டிவனம் தாண்டி சென்னைக்கு மிக அருகில் ஒரு கிரவுண்ட் நிலம் வெறும் ஐந்து லட்சம்தான் சார் '  என்று ரியல் எஸ்டேட் பேர்வழிகள் வெறுப்பேற்றுவார்கள்.  உலகதில் யார் அழைத்தாலும் அழைப்பது யார் என்று தெரிந்துகொள்ள உதவும் அப்ளிகேஷந்தான் ' ட்ரூ காலர் '. உங்கள் மொபைலைத் தீண்டிய எண்,  யாருடையது என்ற விவரங்கள்,  எந்த ஊரில் வாங்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் வந்துவிடும்.  ஸ்வீடன் நாட்டு நிறுவனம் தயாரித்துருக்கும் இந்த அப்ளிகேஷனுக்குள் நுழையும்போது உங்கள் அல்லைபேசியில் இருக்கும் காண்டாக்ட்ஸ் பட்டியலையும் அதனுடன் இணைக்க வேண்டும்.  அப்போது உங்கள் பட்டியலில் இருக்கும் அனைத்து எண்களும் ட்ரூ காலரில் பதிவாகிவிடும்.  இப்படி உலகம் முழுக்க ட்ரூ காலரில் பதிவு செய்திருக்கும் மில்லியன் கணக்கானோரின் தகவல்கள்தான் நமக்கு விவரங்கள் அளிக்கின்றது.  இந்த அப்ளிகேஷனில் இப்போது அடுத்தகட்டமாக காசு கொடுத்து நம்பர் வாங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
-- சார்லஸ்.
-- ஆனந்த விகடன். 11-9-2013.

Wednesday, August 13, 2014

ஆப்ஸ் @ அகில உலகம். காம்.

  வாலி ( Wally )
     வீட்டுக் கணக்கை உங்கள் போனிலேயே எழுதிக் கொள்ள உதவும் ஆப். வாடகை.  மின் கட்டணம் தொடங்கி தினசரி செலவுக் கணக்கு வரை அத்தனை விவரம்களையும் இதில் பதிவுசெய்து கொள்ளலாம்.  இதில் இருக்கும் நேவிகேஷன் மூலம் பொருட்களை எந்தக் கடையில் வாங்கினீர்கள் என்பதையும் பதிவுசெய்துகொள்ளலாம்.  தினமும் இவ்வளவு ரூபாய்தான் செலவழிக்க வேண்டும் என்று பட்ஜெட் போட்டுவிட்டால் செலவு தாண்டிப் போகும்போது சிவப்பு நிற எச்சரிக்கை வந்துவிடும்.  இதனால் சட்டென செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.  ஒவ்வொரு மாத முடிவிலும் இந்த செலவுக் கணக்கை இ. மெயில் அனுப்பி கணினியிலும் பதிவு செய்துகொள்ளலாம்.
-- சார்லஸ்.
-- ஆனந்த விகடன். 11-9-2013.  

Tuesday, August 12, 2014

புதிய கிரகம்!

 பூமியைப் போலவே நீல நிறத்தில் இருக்கும் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள்.  அந்த வெப்பமான நிலையில் விநோதமாகக் காட்சி அளிக்கும் அந்தக் கிரகத்தில் எப்போதும் சிலிக்கான் மழை பொழிகிறதாம். நீர் இல்லாத அந்தக் கிரகம் எப்படி நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது என்று ஆராய்ந்துவருகின்றனர்.  பூமியில் இருந்து 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் அந்தப் புதிய கிரகத்தில்,  1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்,  ஒரு மணி நேரத்துக்கு 7,000 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் அடித்துக்கொண்டு இருக்கிறதாம்.  --  ஹாலிவுட்காரங்களுக்கு அடுத்த பட ஸ்கிரிப்ட் ரெடி!
--- இன்பாக்ஸ். ஆனந்த விகடன். 24-7-2013.

Monday, August 11, 2014

எதிர்ப்பு போராட்டம்!

 உலகில் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் வளத்தில் 13 சதவிகிதமும்,  எரிவாயு வளத்தில் 30 சதவிகிதமும் ஆர்ட்டிக் பகுதியில் இருக்கிறது.  சமீபத்தில் அங்கும் சில எண்ணெய் நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக காலூன்ற,  அதை எதிர்த்து ' க்ரீன் பீஸ் ' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பெண்கள்,  கடந்த வாரம்மேற்கு ஐரோப்பாவின்பெரிய கட்டடமான  ' தி ஷார்ட் ' கட்டடத்தின் மீது ஏறி  ' சேவ் த ஆர்ட்டிக் ' என்று எழுதிய கொடியைப் பறக்கவிட்டு,  விநோத எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருகிறார்கள்.  அவர்கள் ஏறிய கட்டடத்தின் உயரம்.. 1,017 அடிகள். -- உச்சியைப் பிடித்து உலுக்கும்!
-- இன்பாக்ஸ். ஆனந்த விகடன். 24-7-2013. 

Sunday, August 10, 2014

அபிஷேகச் சாறு பலன் !

 விநாயகருக்கு பழச் சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்வதால் உண்டாகும் பலன்:
கரும்புச்சாறு  --  புத்திரப்பேறு.
எலுமிச்சைச்சாறு  --  தோஷம் விலகும்.
மாதுளம்பழம்  --  செல்வம் கிடைக்கும்.
நார்த்தை பழம்  --  வியாதிகள் நீங்கும்.
மாம்பழம்  --  திருமண காரியங்கள் நடக்கும்.
சாத்துக்குடி  --  வீரம் பெருகும்.
--  செ.ரமேஸ், மதுரை - 18.
-- குமுதம் பக்திஸ்பெஷல். செப்டம்பர் 1 - 15- 2013. 

Saturday, August 9, 2014

சாரமும் சக்கையும்!

   மகான் ஒருவர் ஒருமுறை கடவுளை தியானித்துக்கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த நாத்திகவாதி ஒருவர், ' கடவுள் இல்லை ' என்ற தலைப்பில் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றை உறையிலிட்டு மகானிடம் கொடுத்தார்.
     கட்டுரையைப் படித்த மகான்,  காகித உறையை மட்டும் வைத்துக் கொண்டு கட்டுரையைக் கிழித்து தூர எறிந்துவிட்டார்.
     நாத்திகவாதி மறுதினம்  அங்கு வந்து, " என் கட்டுரை எப்படி இருந்தது?" என்று கேட்டார்.
    அதற்கு மகான் அவனிடம் காகித உறையைக் காட்டி, " சாரத்தை எடுத்துக் கொண்டு,  சக்கையை எறிந்துவிட்டேன்" என்றார்.
-- நெ.இராமன், சென்னை - 74.
--  குமுதம் பக்திஸ்பெஷல். செப்டம்பர் 1 - 15- 2013.   

Friday, August 8, 2014

மூத்த பிள்ளையார்!

  பிள்ளையார் பஞ்சபூத தத்துவத்தினை உள்ளடக்கியவர் என்கின்றன புராணங்கள்.  அவருக்கு உரியதாகக் குறிப்பிடப்படும் மரங்களும் அந்தத் தத்துவத்தை உணர்த்துவதாகவே உள்ளன.  அரச மரம்,  ஆகாயத்தையும்;  ஆலமரம்,  பூமியையும்;  வாதநாராயண மரம்,  வாயுவையும்;  சமீ எனப்படும் வன்னி மரம்,  அக்னி தத்துவத்தையும்;  நெல்லி மரம் அப்பு தத்துவமான தண்ணீரையும் குறிக்கின்றன.
-- ஆர்.ஜெயலட்சுமி, சென்னை - 26.
ஹோம பலன்கள்
     கணபதி ஹோமத்தில் அறுகம்புல் எனப் பல பொருட்களை இடுவார்கள்.  அவற்றால் என்ன பலன்?
     அறுகம்புல் - கெட்ட சக்திகளை அழித்து,  நன்மை தரும்;  கரும்பு - புத்திரப்பேறு கிடைக்கும்;  வாழைப்பழம் - நற்புத்தி, ஞானம் கிட்டும்;  அவல் - புண்ணியம் உண்டாகும்;  தேங்காய் - இல்லத்தில் தானியம் பெறுகும்;  எள் - சனி தோஷம் விலகும்;  வெல்லம் - நோய்கள் குணமாகும்.
-- செ.ரமேஸ், மதுரை - 18.
-- குமுதம் பக்திஸ்பெஷல். செப்டம்பர் 1 - 15- 2013.   

Thursday, August 7, 2014

இணைய வெளியிடையே...

நச்!
எதை சந்திகிறீர்களோ...அது விதி!
எப்படி சந்திக்கிறிர்களோ... அது மதி!
ritevidu @ twitter.com

 குழல் ஊதும் காற்று!
குழல் என்று பெயர் இருப்பதால்தான்
கூந்தலுக்கு காற்று ஊதித்தள்ளுகிறது!
sudarkodi @ twitter.com

ஆறு நாள் ஆமை மாதிரியும்,
ஞாயிறு ஒரு நாள் முயல் மாதிரியும் ஓடுது !:-
settusays @ twitter.com
--தினமலர். 8-9-2013. 

Wednesday, August 6, 2014

கடவுள் பாதி... மிருகம் பாதி.

" கடவுள் பாதி... மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான மனிதன் ?"
     " லியானார்டோ டாவின்ஸி தன்னுடைய ' லாஸ்ட் சப்பர் ' ஓவியத்தில்,  யேசுவின் படம் வரைவதற்கு மாடல் தேடிக்கொண்டிருந்தார்.  வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு சர்ச்சில் வசீகரமும், தேஜஸும் நிறைந்த அழகுடன் கூடிய பீட்ரோ பெண்டினம்லி என்ற இளைஞரைப் பார்த்தார்.  மிகவும் அகமகிழ்ந்து அவரை மாதிரியாகவைத்து யேசுவை வரைந்து முடித்தார்.  ஆனால், யேசு உள்ளிட்ட அனைத்துச் சீடர்களையும் வரைந்து முடித்த பிறகு,  அந்த ஓவியத்தில் இடம் பெறவேண்டிய பாவங்களால் இறுகிப்போயிருக்கும் முகத்துடன் கூடிய யூதாஸ் பாத்திரத்துக்கு உரிய முகத்தை அதனால் ஓவியம் முழுமை அடையாமலேயே இருந்தது.  வெகுநாட்களுக்குப் பிறகு,  ரோம் நகரில் டாவின்ஸி எதிர்பார்த்த அதே தோற்றத்தோடு ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தார்.  உடனே அவனுக்குப் பணம் கொடுத்து அழைத்துவந்து அமர்த்தி,  ஓவியத்தை வரையத் தொடங்கினார்.  அப்போது அவனிடம் ' உன் பெயர் என்ன ? ' என்று கேட்டார் டாவின்ஸி.
' நான் பீட்ரோ பெண்டினம்லி,  பல வருடங்களுக்கு முன்னால் உங்களின் ஓர் ஓவியத்துக்கு யேசுவாக நான்தான் மாடலாக இருந்தேன் ' என்றான் அவன்.  ஒவ்வொரு மனிதனுமே கடவுளும் மிருகமும் கலந்து செய்த கலவை என்பதை உணர்கிறீர்களா?"
-- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.
-- .( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 24 .7.2013.  

Tuesday, August 5, 2014

உயரக் குறைவு.

" உயரக் குறைவை கிண்டல் செய்யும் நண்பர்களுக்கு எப்படி பதிலடிக் கொடுப்பது?"
     " அறிஞர் ஆல்ஸ்டன் குள்ளமாக இருப்பதைப் பார்த்து ஒரு வழக்கறிஞர் கிண்டலாக,  ' உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம் ' என்றார்.  ' அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட ... உங்கள் கோட் பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்!' என்றார். ஆல்ஸ்டன்.  இதைச் சொல்லுங்கள் .  நண்பர்கள் ' கப்சிப் ' ஆகிவிடுவார்கள் !"
-- ராம்.ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
-- .( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 24 .7.2013. 

Monday, August 4, 2014

கணீரென அறைந்த கவிதை.!

" சமீபத்தில் வாசித்ததில் கணீரென அறைந்த கவிதை.?"
     " யார் எழுதியது என்று தெரியவில்லை...
     ' விதைத்தவன் உறங்குகிறான்
      விதைகள் உறங்குவதில்லை ' ! "
-- கே.சுவாமிநாதன், மொடக்குறிச்சி.

சந்நியாசி, சம்சாரி.
" சந்நியாசி, சம்சாரி....என்ன வித்தியாசம்?"
     "  சந்நியாசி புலித்தோலில் தூங்குவார்,  ஆனால்,  சம்சாரி புலியுடனேயே தூங்குவார்!"
-- கி.ரவிக்குமார், நெய்வேலி.
.( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 24 .7.2013.   

Sunday, August 3, 2014

முதியோர் பராமரிப்பு !

" வீட்டிலிருக்கும் முதியவர்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்,?"
     " என் கொள்ளுப் பாட்டி ஒருமுறை போகிற போக்கில் சொன்னது இது...' பொறந்த குழந்தைகளை இன்னும் நூறு வருஷத்துக்கு வாழணும்கிற நினைப்புல
அன்ன ஆகாரம் கொடுத்துப் பராமரிக்கணும்.  வீட்டுல இருக்கிற வயசானவங்களை நாளைக்கே இறந்துருவாங்கனு நினைச்சு கண்ணுங்கருத்துமா கவனிச்சுக்கணும்!'.  சிம்பிள் ஃபார்முலாதானே!"
-- கே.ஹரி நாராயணன், மதுரை. .( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 11 .9.2013.  

Saturday, August 2, 2014

ஆவாரை டீ!

' பால் சாப்பிடக் கூடாது;  இனிப்பு வேண்டாம்... வேறு என்னதான் சார் காலையில் குடிப்பது? ' என்று கேட்டோருக்கு என் பதில்,  ஆவாரை டீ.  நாம் மறந்துபோன அருமையான ஒரு பாரம்பரிய பானம்.  ' ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?'  என்று முதுமொழி வழக்கத்தில் உண்டு.  ரோசாப்பூ, ஆர்க்கிட் பூ போல ஆவாரைக்கு மலர் மார்க்கெட்டில் மவுசு இல்லை என்றாலும்,  கூடிய சீக்கிரமே, அதன் சந்தைக்கு பெரும் அடிதடி வரப்போவது உறுதி.  ஆரம்பகட்ட சர்க்கரை நோய்க்கு இந்த மலர் தரும் மருத்துவம் பெரும் பலன் அளிப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
     ' ஆவாரை கொன்றை நாவல்
      அலைகடல் முத்துங் கோஷ்டம்
      மேவிய மருத் தோல் '  என ஏழு தாவரங்களைக் கொண்டு டீ போட்டு குடித்தால்,  ' காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும் என்று பரிபாஷையில் சித்தன் சொன்ன சூத்திரத்தை கட்டவிழ்த்துப் பார்ப்போமா?
      இனிப்பு நீரான ( காவிரி நீர் ) சர்க்கரை வியாதிக்கும்,  உப்பு நீரான ( கடல் நீர் )  சிறுநீரகக் கோளாறில் புரதம் கழிந்துவரும் நீருக்கும்.  இந்த ஆவாரை காபி ஓர் அருமருந்து என்பதே அந்தப் பரிபாடல் சொல்லும் உண்மை.
-- மருத்துவர் கு. சிவராமன்.  ( ஆறாம் திணை ).
-- ஆனந்த விகடன். 4 .9.2013.  

Friday, August 1, 2014

விளம்பர வாசகம்!

" சமீபத்தில் ரசித்த விளம்பர் வாசகம்!"
     " உள்ளூர் ' ஜிம் ' ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம் : ' எங்கள் கிளப் பயிற்சியில் நீங்கள் விரும்பிய உடற்கட்டு ஏற்படாவிட்டால்,  உங்கள் பழைய உடற்கட்டு திருப்பி தரப்படும் !'
-- கே.சரஸ்வதி, ஈரோடு. .( நானே கேள்வி... நானே பதில் ! ).

" வயிறு குலுங்க சிரிக்கவைத்த எஸ்.எம்.எஸ். ஒன்று ?"
     " போகாத நாடு இல்லை...செலவழிக்காத பணமில்லை... ஆனாலும் பேச்சு மட்டும் வரவே இல்லை ! ( கடந்த 2004 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2013 வரை, பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டுப் பயணச் செலவு 642 கோடி !)"
-- அ.குணசேகரன், புவனகிரி..( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 4 .9.2013.