Thursday, July 31, 2014

அரசியல் மேல் நம்பிக்கை!

" இந்திய அரசியல் மேல் நம்பிக்கை வைப்பதற்கு ஒரே ஒரு காரணம் சொல்லுங்களேன்...!"
     " திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர்  மானிக் சர்க்கார்தான் நாட்டின் மிகவும் ஏழையான முதலமைச்சர்.  இவருடைய வங்கி இருப்பு 6,500 ரூபாய் மட்டுமே.  சொந்த வீடு கிடையாது. இவரது மனைவி சைக்கிள் ரிகஷாவில்தான் பயணிக்கிறார்.  மானிக் தன்னுடைய முதலமைச்சர் சம்பளத்தை அப்படியே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டு,  அவர்கள் தரும் மாதம் 5,000 ரூபாயில்தான் குடும்பம் நடத்துகிறார்.  இவரின் நேர்மை, எளிமை காரணமாக,  தொடர்ந்து நான்காவது முறையாக திரிபுராவின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராட்டும் இவரது நேர்மை மீது நம்பிக்கை வையுங்கள் !"
-- கல்லிடை. ஒய்.கே.சேகர்,  குஜராத்.( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 4 .9.2013.  

Wednesday, July 30, 2014

பெண்களின் சூழலுக்கு ஏற்ற கவிதை.

" சமூகத்தி, பெண்களின் சூழலுக்கு ஏற்ற கவிதை ஒன்று...?"
     கவிஞர் செழியரசு  வின் கவிதை ஒன்று சட்டென நினைவுக்கு வந்தது...
' எத்தனை விடுதலை பெற்றும்
 எவ்வளவு உயரம் அடைந்தும்
 இத்தனைக் கால
 இழிவின் மிச்சமாய்
 உம் வசவுக்கான பின்னிணைப்பு
 எம் பிறப்புறுப்பு!' "
-- அனார்கலி, தஞ்சாவூர். ( நானே கேள்வி...நானே பதில் ! )
--  ஆனந்த விகடன். 14. 8 . 2013.  

Tuesday, July 29, 2014

' சூப்பர் பூமிகள் '!

  வாஷிங்டன் :  உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3  ' சூப்பர் பூமிகள் ' கண்டறியப்பட்டுள்ளன.
     பூமியில் இருந்து 22 ஒளி ஆண்டுகள் தொலவில்,  ஸ்கார்பியோ நட்சத்திர மண்டலம் ( விருச்சிக ராசி மண்டலம் ) அமைந்துள்ளது.  ( ஒளியின் வேகம், ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் . ஒரு ஒளி ஆண்டு என்பது,  ஓராண்டில் ஒளி கடந்து செல்லும் தூரம் ).
     ஸ்கார்பியோ. மண்டலத்தில் உள்ள கிரகங்களைப் பற்றி இஎஸ்ஓ ஆய்வு நடத்தி வருகிறது.
     ஸ்கார்பியோ நட்சத்திர மண்டலத்தில் உள்ள க்ளீஸ் 667சி என்ற நட்சத்திரத்தை 7 கிரகங்கள் சுற்றி வருகின்றன.  அவை பற்றி நடத்திய ஆய்வுகளில்,  3 கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்லது.
     ஒரு கிரகத்தில்,  திரவநிலையில் தண்ணீர் இருந்தால்,  அந்த கிரகத்தில் உயிரினங்கள் ஆழும் சூழல் இருக்கும்.  தண்ணீர் திரவநிலையில் இருக்க,  அந்த கிரகத்தில் வெப்ப நிலை மிதமான அளவில் இருக்க வேண்டும்.
     ஒரு கிரகத்தின் வெப்ப நிலை,  அதற்கும் அது சுற்றிவரும் நட்சத்திரத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் அமையும்.  தூர இடைவெளி மிக அதிகமாக இருந்தால்,  வெப்ப நிலை மிகவும் குறைந்து,  தண்ணீர் பனிமலை போல் நிரந்தரமாக உறைந்திருக்கும்.  தூர இடைவெளி மிகக் குறைவாக இருந்தால்,  வெப்ப நிலை மிகவும் அதிகரித்து,  தண்ணீர் ஆவியாகி விடும்.
     க்ளீஸ் 667சி நட்சத்திரத்திற்கும் அதைச் சுற்றிவரும் 3 கிரகங்களுக்கும் இடையிலான தூரம்,  அந்த கிரகங்களில் மிதமான வெப்பநிலையை ஏற்படுத்தும் அளவில் உள்ளது.  எனவே,  அந்த 3 கிரகங்களிலும் திரவ நிலையில் தண்ணீர் இருக்கும்.  தண்ணீர் உள்ள கிரகங்களில்,  பூமியைப் போன்ற பாறைகள் கொண்ட நிலப்பகுதியும் சாதகமான காற்று மண்டலமும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.  இந்த அடிப்படையில்தான்,  அந்த 3 கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதர்கு ஏற்ற சூழ்நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள நட்சத்திர மண்டலங்களில் உள்ள கிரகங்கள்,  பொதுவாக பெரிய அளவில் இருக்கும்.  ஒரு சில கிரகங்கள் சிறிய அளவில் இருக்கும்.  அப்படிப்பட்ட கிரகங்களுக்கு ' சூப்பர் பூமி ' என்று பெயர்.  இப்போது இஎஸ்ஓ கண்டறிந்துள்ள 3 கிரகங்களும் ' சூப்பர் பூமிகள் '.
-- தினமலர். 27-6-2013. 

Monday, July 28, 2014

அப்பா...

தவமிருந்து
என்னைப் பெற்றதையும்
கை பிடித்து
பள்ளிக்கு அழைத்து சென்றதையும்
தேர்த் திருவிழாவில்
கேட்டவற்றை வாங்கித் தந்ததையும்
பால்யம் மாறினாலும்
சினேகிதனாய் அரவணைத்ததையும்
இலக்கியம் முதல்
விளையாட்டு, காதல் வரை
வரம்பு மீறாமல் பேசி மகிழ்ந்ததையும்
நினைத்து, நினைத்து அழ
ஏராளமிருந்தும்
பாழாய் போன நாகரிகம் கருதி
பொங்கி வரும் அழுகையை
விசும்பல்களுக்கிடையே
அடக்கினேன்...
அப்பாவின் சடலம் பார்த்தபடி...!
-- இரா.கமலக்கண்ணன்,  சித்தோடு.
-- தினமலர் வாரமலர். செப்டம்பர் 1, 2013  

Sunday, July 27, 2014

பேர் வைச்சாங்க !

 பொதுவாக ஒரு மனிதன் அல்லது இடத்திற்கு எவ்வளவு நாட்களில் பெயர்வைப்பார்கள்?  நியூசிலாந்தில்  உள்ள இரண்டு தீவுகளுக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் பெயர் வைக்க இருக்கிறார்கள்.  நியூசிலாந்துக்குச் சொந்தமாகப் பல தீவுகள் உள்ளன.  அவற்றில் இரண்டு தீவுகளை வடக்குத் தீவு,  தெற்குத் தீவு என்றே இதுவரை அழைத்துவந்தனர்.  மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப,  இதனை வருடங்கள் கழித்து வடக்கு மற்றும் தெற்குத் தீவுகளுக்குப் புதிய பெயர்களைச் சூட்ட முடிவு செய்திருக்கிறது நியூசிலாந்து அரசு.  மக்களிடம் நடந்த ஓட்டெடுப்பின்படி வடக்குத் ' மாவோரியின் கடவுள் '  என்றும் தெற்குத் தீவுக்கு ' பச்சைக் கற்களின் நதி ' என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். -- குளோபல் வார்னிங்ல முங்குறதுக்குள்ள பற்ற வைச்சாங்களே !
-- இன்பாக்ஸ். ஆனந்த விகடன். 14. 8 . 2013.  

Saturday, July 26, 2014

ச்சும்மா அதிருதுல்ல...

  எழுத்துப் பிழை ஏற்பட்டாலோ,  கையெழுத்து சரியில்லாமல் போனாலோ,  அதிந்து எச்சரிக்கும் பேனாவை ஜெர்மனி,  முனிச் நகரைச் சேர்ந்த டேனியல் மற்றும் பால்க் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  ' லெர்ன்ஸ்டிப்ட் ' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் பேனாவின் உள்ளே சிறிய சென்சார் மற்றும் பேட்டரியில் இயங்கும் கம்ப்யூட்டர், வை - பை சிப் ஆகியவை இடம்பெற்றுள்ளன்.
    பேனாவின் அசைவைக் கொண்டு,  எழுத்துகளின் வடிவத்தை இந்த கருவிகள் அடையாளம் காண்கின்றன.  நுண்ணிய கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள அகராதியின்படி,  தவறான எழுத்தை எழுதும்போது,  பேனாவின் சென்சார் அதை கிரகித்து ' தப்பா எழுதாதடா மக்கு ' என்று அதிர்ந்து குட்டுமாம்.
-- தாண். ஆதித்யா.
-- தினமலர் வாரமலர். செப்டம்பர் 1, 2013   

Friday, July 25, 2014

' கற்கால ' கடிகாரம்.

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதிசயம்.
     திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள,  ஆண்டிப்பட்டி மற்றும் அமராவதி மலைப்பகுதிகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது,  6 ஆயிரம் ஆண்டு பழமை மிக்க சவுக்கை எனப்படும் சூரிய நகர்வு பாதையை கண்டறியும் அமைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
     சரிவான மலைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த சவுக்கை,  இரு பெரும் உருண்டை பாறைகளை அருகருகே அடுக்கி அதன் மேல் பெரும் பலகைப் பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர்.  தொலைவில் இருந்து பார்க்கும்போது, ஆய்த எழுத்து வடிவத்தில் ராட்சத சுமைதாங்கியைப் போல இது காட்சி அளிக்கிறது.
     இதன் அமைப்பு, வடகிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.  எனினும் இந்த அமைப்பு ஆளரவம் இல்லாத பகுதியில் ஏன் அமைக்கப்பட்டது என்பதற்கான காரணம் புரியவில்லை.  சூரியனுடைய நகர்வுப் பாதையை கணிக்க பண்டைய இடைச்சங்க காலத்தில் தமிழர்கள் இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
    ஆடிமாதம் 1ம் தேதி தட்சணாயனத் தொடக்கத்தில் சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் இந்த சவுக்கையில் உள்ள ஓட்டை வழியாக தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுகிறது.  பின்னர் தைமாதம் 1ம் தேதி உத்தராயனத் தொடக்கத்தில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவுகிறது கண்கூடாகத் தெரிகிறது.  இந்த 2 மாதங்களும் தமிழர்களின் முக்கிய மாதங்களாகும்.  சூரியனின் நகர்வு பாடையை கொண்டு ஆடி 1 தட்சணாயனத் தொடக்கத்தை ஔஉரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்வதாகவும்,  தை 1 உத்தராயணத் தொடக்கத்தை சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்து செல்வதாகவும் கணித்து ஜோதிட நூல்களில் கூறியுள்லனர்.
    6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இடைச்சங்க காலத்தை சேர்ந்த தமிழ் மக்கள் சூரிய நகர்வு பாதையை கண்டறிய ஏற்படுத்தியுள்ள இந்த அமைப்பு மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது.  பண்டைத் தமிழர்கள் வான் மற்றும் விண்ணியலில் பெற்றிருந்த அறிவு, பெருமை கொள்ள வைப்பதாகும் என்று இதை ஆய்வு செய்த, மத்தியபிரதேசத்தை சேர்ந்த தொல்லியலளர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.
--   சண்டே ஸ்பெஷல்,
-- தினமலர்.  28.7.2013. 

Thursday, July 24, 2014

நடமாடும் கிரகங்கள் !

   நவக்கிரகங்கள் எல்லாம் நம்மை விட்டுவிலகி, கண்களுக்கு தெரியாதபடி தூரத்தில் இருந்தவாறே நமக்கு பாதிப்பை உண்டாக்கும்.
     ஆனால்,  நம்முடனேயே இருந்து,  கண்களுக்கு எதிரில் நடமாடி, நமக்கு பாதிப்பை உண்டாக்கும் கிரகங்கள் உண்டு.  அந்த கிரகங்கள் எவை என்று நமது முன்னோர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.  குடும்ப ஜோதிடம் எனும் அந்த கிரக வழிபாட்டைப் பார்க்கலாம்.
     அப்பா, அம்மாவின் பேச்சை கேட்காத பிள்ளை  -  அஷ்டமத்தில் சனி.
     சற்றும் அஞ்சாமல்,  வார்த்தைக்கு வார்த்தை,  எதிர்த்து நின்று பேசும் மனைவி  -  இரண்டாம் இடத்தில் அங்காரகன் இருக்கப் பிறந்தவள்.
     சொன்ன வார்த்தையைக் கேட்காத பணியாளர்  -  அஷ்டமத்தில் சந்திரன்.
    ' என் பங்கை கொடு!  நீதிமன்றத்திற்கு வா!  என்று வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு அலைய வைக்கும் தம்பி  -  லக்னத்தில் சூரியன்.
     தர்மம், நீதி என்பவை சிறிதளவு கூட இல்லாமல் வஞ்சனை செய்யும் மூத்த சகோதரன்  -  மூன்றாம் இடத்தில் வியாழன்.
     நம் வீட்டில் பெண் எடுத்து,  பெண் கொடுத்து,  தினந்தோறும் சண்டை போடும் சம்பந்திகள்  -  ராகு, கேதுக்கள்.
-- ஸாந்தரானந்தா.
-- தினமலர் வாரமலர். செப்டம்பர் 1, 2013 

Wednesday, July 23, 2014

அந்த ' 5 ' ...

' ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ' என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்...
1.  ஆடம்பரமாய் வாழும் தாய்.
2.  பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.
3.  ஒழுக்கமற்ற மனைவி.
4.  ஏமாற்றுவதும்; துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்.
5.  சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்.
இவர்களை கொண்டிருப்பவன்,  அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்பது இதன் விளக்கம்.
-- சண்டே ஸ்பெஷல்,
-- தினமலர்.  28.7.2013. 

Tuesday, July 22, 2014

விஞ்ஞானிகள் புதிய சாதனை

' நான் நினைப்பதை நீ செய்யப் போகிறாய் ' : விஞ்ஞானிகள் புதிய சாதனை
     வாஷிங்டன் :  இரண்டு நபர்களின் மூளைகளை மின்காந்த அலைகள் மூலம் இணைத்து ஒருவர் நினைப்பதை அடுத்தவர் செய்ய வைத்து : விஞ்ஞானிகள் புதிய சாதனைகள் படைத்துள்ளனர்.
இது தொடர்பான ஆராய்ச்சியில் சில சானைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் ஏற்கனவே படைத்துள்ளனர்.  இரண்டு எலிகளின் மூளைகளை மின்காந்த
அலைகளால் இணைக்க முடியும் என டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.  இதேபோல்,  ஒரு மனிதனின் மூளையை எலியின் மூளையுடன் இணைத்து, மனிதன் செய்ய நினைப்பதை எலி செய்து முடிக்கும் என சோதனை மூலம் நிரூபித்தனர். இந்நிலையில் இரண்டு மனிதர்களின் மூளைகள் இடையே மின்காந்த அலைகள் கடத்தும் சோதனையை ராஜேஷ் ராவ் தலைமையிலான  விஞ்ஞானிகள் நடத்தினர்.  இதில், ஒரு கம்ப்யூட்டர் முன்னால் ராஜேஷ் அமர்ந்து, வீடியோ கேம் விளையாடினார்.  அவருடைய தலையில் அணிந்திருந்த தொப்பியில் பல எலக்ட்ரோடுகள் அமைக்கப்பட்டு, இஇஜி கருவியுடன் இணைக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் அவருடைய மூளையில் உருவாகும் மின் காந்த அலைகள் சேகரிக்கப்பட்டன.  இதேபோல் மற்றொரு அறையில் கம்ப்யூட்டர் முன்னால் சக விஞ்ஞானி ஆண்ட் ரியோ ஸ்டாக்கோ அமர்ந்திருந்தார்.  அவர் அணிந்திருந்த தொப்பியில் மின் காந்த அலைகளை பெறும் சுருள் அமைக்கப்பட்டிருந்தது.
      ராஜேஷ், ஸ்டாக்கோ அமர்ந்திருந்த 2 அறைகளையும் ஸ்கைப் மூலம் இணைத்து பெரிய திரைகளில் அவர்களுடைய செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்துக்கொண்டிருந்தனர்.
      கம்ப்யூட்டர் கேம் விளையாடியபோது,  அதில் ஒரு இலக்கை ராஜேஷ் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.  அப்போது சுடுவதற்கான பட்டனை அழுத்துவதற்காக மவுஸ் மீது கை வைக்க வேண்டும் என ராஜேஷ் நினைத்தார்.  ஆனால், கையை அவர் நகர்த்தவில்லை.  அதே நேரத்தில், அவருடைய நினைவு அலைகள் கடத்தப்பட்டு ஸ்டாக்கோ மூளைக்கு வந்து சேர்ந்தன.  அவர் திடீரென கையை தூக்கி மவுஸ் நோக்கி கொண்டு சென்றார்.  இதன்மூலம் ராஜேஷ் நினைத்ததை ஸ்டாக்கோ செய்தார்.
    ஒருவழி கடத்தல்.
    இந்த சோதனை வெற்றி குறித்து விஞ்ஞானி ராஜேஷ் ராவ் கூறுகையில், ' என் மூளை நினைத்ததை ஸ்டாக்கோ மூளை செய்து முடித்தது.  இது ஒருவழி தகவல் கடத்தல் ஆகும்.  இதேபோல் இரண்டு மூளைகள் இடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள அடுத்த கட்ட ஆராய்ச்சி நடத்தப்படும்.  இதில் மூளையில் தோற்றுவிக்கும் சில கட்டளைகள் மட்டுமே கடத்தப்பட்டு,  மற்றொரு மூளையால் செயலாக்கப்படுகிறது.  ஆனால்,  ஒருவருடைய விருப்பம் இல்லாமல்,  அவருடைய செயல்பாடுகளை மற்றொருவரால் கட்டுப்படுத்த முடியாது என்றார்.
-- தினமலர் . ஆகஸ்ட் 30, 2013. 

Monday, July 21, 2014

தெரிஞ்சுக்கோங்க!

 அணைகளும், மாநிலங்களும்.
1.  நாகார்ஜுன சாகர் நீர்த்தேக்கம் (  ஆந்திர மாநிலம் ):
     கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  விவசாயம் மற்றும் நீர்மின் சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
2.  கக்கார்பார் நீர்த்தேக்கம் (  ஆந்திர மாநிலம் )::
     தபதி நதியின் குறுக்கே விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.
3.  கோஷினீர்த்தேக்கம் ( பீகார் மாநிலம் ):
     கோஷி நதியின் குறுக்கே  கட்டப்பட்டுள்ளது.  மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித் திட்டத்திற்கும் இந்த
     நீர்த்தேக்கம்  பயன்படுகிறது.
4.  சபரிகிரி நீர்த்தேக்கம் ( கேரள மாநிலம் ):
     பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள து.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.
5.  சாராவதி நீர்த்தேக்கம் ( கர்நாடக மாநிலம் ) :
     ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே   கட்டப்பட்டுள்ள து.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.
6.  மகாநதி டெல்டா  நீர்த்தேக்கம் ( ஒரிசா மாநிலம் ):
     மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது.
7.  பக்ராநங்கல் நீர்த்தேக்கம் ( இமாச்சலப் பிரதேசம் ) :
     சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  பஞ்சாப், அரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில்  கட்டப்பட்டுள்ள து.  விவசாயம் மற்றும் நீர்மின்
     சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
8.  தாமோதர் பள்லத்தாக்கு நீர்த்தேக்கம் ( ஜார்க்கண்ட்   மாநிலம் ) :
     தாமோதர் நதியின் குறுக்கே   கட்டப்பட்டுள்ள து.  ஜார்க்கண்ட்  மாநிலத்தில்   கட்டப்பட்டிருந்தாலும்,  இந்த அணையின் நீரை மேற்கு வங்கமும்
     பகிர்ந்துகொள்கிறது   வெள்ள நீரை தடுப்பற்காகவும், விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.
9.  சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் ( குஜராத்  மாநிலம் ) :
     நர்மதா நதியின்  குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச  மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெருகின்றன.  விவசாயம்
     மற்றும் நீர்மின் சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
10. மேட்டூர் ( தமிழ் நாடு ) :
     காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.   விவசாயம் மற்றும் நீர்மின் சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
---  தினமலர் சிறுவர்மலர் . ஆகஸ்ட் 30, 2013. 

Sunday, July 20, 2014

டி.வி.ஆன் செய்ததும்...

டி.வி.ஆன் செய்ததும் ஒளியைவிட ஒலி ஏன் முன்னதாக வருகிறது?
     இது மிகவும் நியாயமான சந்தேகம்தான்.  ஏனென்றால், ஒலியைவிட ஒளி வேகமாகப் பயணம் செய்கிறது என்கிறது அறிவியல்.  அப்படியானால் டி.வி.செட்டை ஆன் செய்ததும்,  முதலில் படங்கள்தானே தெரிய வேண்டும்.  பிறகுதானே ஒலி வரவேண்டும்?  ஆனால்,  இப்படி நேரெதிராக நடப்பதற்குக் காரணம் உண்டு.
     தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள பிக்சர் டியூப் ( Cathode Ray Tube )  கொஞ்சம் வெதுவெதுப்பான பிறகுதான் திரையில் படங்கள் தெரியும்.  இதற்கு சிறிது நேரம் பிடிக்கிறது.  ஆனால்,  ஒலிக் கம்பிச் சுற்றுகளுக்கு ( Audio Coils )  மின்னொட்டம் பெற மிகக் குறைவான நேரமே தேவைப்படுகிறது.  இதனால்தான் டி.வி. செட்டை ஆன் செய்ததும் முதலில் ஒலி கேட்கிறது!
-- ஜி.என்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை.?!
-- தினமலர் சிறுவர்மலர் . ஆகஸ்ட் 30, 2013.

Saturday, July 19, 2014

தெரியுமா உங்களுக்கு!

*  முத்து பிறக்கும் இடங்கள் பலவற்றை இலக்கியங்கள் குறிக்கும்.  முத்துப் பிறக்கும் இடங்களில் ஒன்று மூங்கில்.
*  பெரும்செல்வத்தைப் பாதுகாத்தல் ' கார்ப்பண்யம் ' எனப்படும்.
*  அனுபவிக்காமல் இருத்தல்,  செல்வத்தின் மீது பற்று ஆகியவை செல்வந்தனைக் கஞ்சனாக்கி விடும்.
*  சிக்கனம் வேறு;  கஞ்சத்தனம் வேறு.  அளவுக்குள் செலவை அமைத்தல் சிக்கனம்.  அத்தியாவசிய நேரத்தில் கூட,  தனக்காகக்கூடச் செலவு செய்யாமல்
   இருப்பவன் கஞ்சன்.
*  சீர்காழிக்குப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு.  அவற்றுள் வேணுபுரம் என்பதும் ஒன்றாகும்.
* ' போலச் செய்தல் ' என்ற தன்மை, கற்றலின் அம்சங்களில் ஒன்று. மனிதனைக் கூர்ந்து பார்த்து, அவர் செய்தது போலவே செய்யும் போலச் செய்தலில்
   குரங்குகள் வல்லவை.
--  தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 29, 2013.  

Friday, July 18, 2014

மூங்கில் மரம்.

 மூங்கில் இலைக்கு ஒரு விசேஷ மருத்துவ சக்தி உண்டு.  கருவுற்ற காலத்தில் வயிற்றில் இருக்கும் கருவைத் தாங்கிய நீர்,  பிள்ளை பெற்றபின் வெளியே வந்துவிடும்.  வயிற்றை முழுவதுமாய் தூய்மை செய்து வெளியேற்றும் மருத்துவ குணம் மூங்கில் தழைக்கு உண்டு.  எனவேதான் கிராமப்புறங்களில் மாடு கன்று போட்டவுடன் மூங்கில் இலைகளை ஒடித்துப் போடுவர்.
-- புலவர் வே. மகாதேவன் .
-- தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 29, 2013.

Thursday, July 17, 2014

எது உதவும்?

ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன், ' சுவாமி!  என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது.  விளை நிலங்களும் ஏராளம் உள்ளது.  உடலும்
ஆரோக்கியமாக இருக்கிறது.  எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை.  எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை!  எனப் பெருமையடித்துக் கொண்டான்.
     புன்சிரிப்போடு கேட்ட ஞானி,  " வா! சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம்!"  என்றார்.  ' கடுமையான வெயிலில் போக வேண்டுமா?'  என தயங்கினாலும்,  ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான்.  சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன்,  ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சற்றும் முற்றும் பார்த்தான்.  எந்த நிழலும் தென்படவில்லை.  ஞானி கேட்டார், " என்ன தேடுகிறாய்?"
     " நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன்." " ஏன் உன் நிழல் உள்ளதே,  அதில் நீ ஒதுங்கிக்கலாமே?"  " சுவாமி! என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்?"
     " என்னப்பா இது... நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை.  உன் பொருட்களே உன்னைக் காப்பாற்றும் என சற்று முன்புதான் சொன்னாய்.  ஆனால்,  இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே?"  என்றார்.  உண்மையை உணர்ந்தான் செல்வந்தன்.
-- ஜி.கே.சுந்தரமூர்த்தி, கோபிசெட்டிப்பாளையம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஆகஸ்ட் 16 - 31, 2013.  

Wednesday, July 16, 2014

நீராட்ட நுணுக்கங்கள்

 காலையில் சூரிய உதயதிற்கு முன்னால் எழுந்து குளித்து விட வேண்டும்.  சூரிய உதயமாகி விட்டால்,  நீரில் உள்ள பல சக்திகள் ஆவியாகிப் போய்விடும்.
     குளத்திலோ,  நதியிலோ நீராடும் போது,  அதில் இருந்து மூன்று கைப்பிடிகள் மண்ணை எடுத்து கரையில் போட்டுவிட்டு அதன்பிறகே நீராட வேண்டும்.  அவ்வாறு செய்வதன் மூலம்,  தூர் வாரல்,  கரையைப் பலப்படுத்துவது ஆகியவற்றிற்குத் தனியாகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
     குளிக்கும் போது,  இறைவனின் நாமங்களை ஒரு சில முறையாவது சொல்லிக் குளிக்க வேண்டும்.  அதன் மூலம் உடலும், உள்ளமும் தூய்மையாகும்.
     அடுத்து...
     ஆறு,  நதிகளில் குளித்தாலும்,  அறைக்குள் நீராடினாலும் சரி, ஆடையில்ல்லாமல் குளிக்கக்கூடாது.
     குள்ளித்தபின்,  துடைத்துக் கொள்ளும் போது ' கரகர'வென்று பாத்திரம் தேய்ப்பதைப் போல இழுத்து தேய்த்து துடைத்துக் கொள்ளக் கூடாது.  அதிவிரைவில் சுருக்கம் வந்துவிடும்.  மென்மையாக ஒத்தி எடுக்க வேண்டும்.
--- ஸாந்த்ரானந்தா.
--- தினமலர் வாரமலர். ஆகஸ்ட் 25, 2013. 

Tuesday, July 15, 2014

ஏணிப் படிக்கட்டுகள் ஏழு !

  ஏழு படிகள் கொண்ட அந்த ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறி,  சுகம் என்னும் கனியை அடைய முயற்சிக்கலாம்,  வாருங்கள்.
1.  மாதம் இரு முறைதான் மனைவியோடு சேர வேண்டும்.
2.  ஆண்டுக்கு இரண்டு முறை பேதிக்கு மருந்து உண்ண வேண்டும்.
3.  வாரத்திற்கு இருமுறை எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
4.  தன்னை விட வயதில் மூத்த பெண்ணை அடையக் கூடாது.
5.  நல்ல தயிர்,  காய்ச்சிய பால்,  நீர் விட்டு பெருக்கிய மோர்,  அப்போது உருக்கிய நெய்,  வழுக்கை இளநீர் ஆகியவற்றை உண்ணுதல்.
6.  உண்டபின் தண்ணீர் குடித்தல்.
7.  உணவு உண்டபின் உலாவுதல்.
     இந்த ஏழும் சுகத்தை உண்டாக்கும்.  இந்த ஏழும் நம்மால் செய்ய முடிந்தவைதான்.
-- ஸாந்த்ரானந்தா.
--  தினமலர்.வாரமலர்  .செப்டம்பர் 22  2013.  

Monday, July 14, 2014

நச் !

 *  வீட்டுக்கு காவல் பூட்டு அல்ல...
    அதனை உடைக்கும் போது வரும் சத்தம்தான் !
    rajarajan @ twitter.com.
*   குண்டு பல்ப் பியூஸ் போயிடுச்சு என்பதை விட,
    குண்டு பல்ப் யூஸ் போயிடுச்சு என்பதே உலகுக்கு நல்ல செய்தியாய் இருக்கும் !
    alexious @ twitter.com.
*   மழை வரும்போது கப்பலாய்,
    காதல் வரும்போது கவிதையாய்,
    கோபம் வரும்போது குப்பையாய்... காகிதம் !
    sakthivel @ twitter.com.
*   போய் புள்ளகுட்டிய படிக்க வைங்கய்யா...
    மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் உடலில் ஈக்கள் முட்டை இடுகின்றன...
    60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
    3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
    4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
    5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
    6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
    2 மாதங்களில் உடல் உருகி திரவமாகிறது...
    இப்படி சிதைந்து போகும் மனிதனுக்கு ஆணவம், தலைகனம், கோபம், ஆடம்பரம், கவுரவம், கொலைவெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...?
-- இனைய வெளியிடையே... சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 22-9-2013.

Sunday, July 13, 2014

உப்பா...கொக்கா...?

*  நீண்ட நாள் பூட்டிக் கிடந்த அறைகளை,  நீரில் சிறிது உப்பு சேர்த்து சுத்தம் செய்தால்,  நாற்றம் குறைவதோடு தரையும் பளிச்சிடும்.
*  சில கறைகள் எவ்வளவுதான் அழுந்த தேய்த்து துடைத்தாலும் நீங்காது.  வெள்ளை வினிக்கர், பேக்கிங் சோடா, எலுமிச்சை, உப்பு ஆகியவற்றை
   சிறிதளவு படன்படுத்தி இக்கறைகளை நீக்கலாம்.
*  உப்புடன் வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை சேர்த்து சமையலறையின் சிம்னியை சுத்தம் செய்தால்,  அதில் படிந்திருக்கும் எண்ணை அழுக்குகள்
   அகலும்.
*  பிரிட்ஜில் இருந்து கிளம்பும் ஒருவித மணத்தையும் வினிகருடன் உப்பு கலந்த நீரினால் துடைத்துப் போக்கலாம்.
*  தரை விரிப்புகளில் உள்ள அழுக்குகளை நீக்க,  அவற்றின் மேல் உப்பை தூவி ஸ்பாஞ் வைத்து தேய்த்து,  நீரில் அலசினால் ,  அழுக்குகள் நீங்கிவிடும்.
*  மழைக்காலத்தில் துவைத்த உடைகள் காயாமல் துர்நாற்றம் வரும்.  இந்தத் துணிகளை உப்பு நீரில் 5 -10 நிமிடம் ஊறவைத்து,  பிறகு நல்ல நீரில்
   அலசினால் நல்ல பொலிவுடனும், நறுமணத்துடனும் இருக்கும்.
*  உப்புடன் வினிகரை சேர்த்து பாத்ரூம் கண்ணாடிகளை சுத்தம் செய்தால்,  பளிச்சென்று மாறுவதோடு, பாக்டீரியா வராமலும் இருக்கும்.
--- மணிமேகலை.
---   தினமலர். பெண்கள்மலர் . .21- 9- 2013.

Saturday, July 12, 2014

இதற்கும் பயன்படும்...

*  கவரை ஒட்டுவதற்கு கம் இல்லை என்றால்,  கிளியர் நெயில் பாலீஷை லேசாக தடவி ஒட்டலாம்.
*  நூல் பிரிந்து ஊசியில் கோர்க்க முடியாமல் படுத்தினால்,  நூலின் முனையை நெயில்பாலீஷில் நனைக்க இறுகிவிடும்.
*  ஷூ லேசின் முனையை நெயில்பாலீஷில் நனைத்தால்,  நுனி  பிரியாமல் இருக்கும்.
*  ஸ்குரூவை இறுக்கமாக திருகி,  அதன் மேல் கிளியர் நெயில் பாலீஷை அடித்தால், சுலபத்தில் கழன்றுவராது..
*  பேஷன் நகைகளின் மேல் கிளியர் நெயில் பாலீஷ் ஒரு கோட் அடித்து அணிந்து கொள்ள,  அலர்ஜி ஏற்படாது நககளும் கறுக்காது.
*  டூப்ளிகேட் கல் நகைகளின் மேல் கிளியர் நெயில் பாலீஷை அடித்தால்,  கற்கள் கீழே விழாமல் இருக்கும்.
*  எதிர்பாராத நேரத்தில் பட்டன் அறுந்து விட்டதா?  கவலை வேண்டாம்.  கிளியர் நெயில்பாலீஷ் கொண்டு பட்டனை ஒட்டி விடலாம்.
*  லெக்கிங்க்ஸ்சில் சின்ன ஓட்டை இருந்தால்,  அந்த இடத்தில் கிளியர் நெயில்பாலீஷை லேசாக பூசினால் கிழிசல் அதிகமாகாது.
-- தினமலர். பெண்கள்மலர் . .21- 9- 2013. 

Friday, July 11, 2014

இதையும் தெரிஞ்சுக்கோங்கோ !

*  பத்துவகையான ஆயுதங்களில் முதலாவது வச்சிராயுதம்.  இது மிகப்பலம் பொருந்திய ஆயுதம்.
*  இந்திரன் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்தியுள்ளான்.  கள்ளிச் செடிக்கு வச்சிரம் என்ற பெயருண்டு.
*  அப்பு என்றால் நீர்.  பஞ்சபூதங்களில் ஒன்று.
*  கணக்கு நமக்குத்தெரியும்.  அதென்ன கீழ்க்கணக்கு.  1க்கு மேல் உள்ல பத்து, நூறு, ஆயிரம் முதலானவை மேல்கணக்கு.  ஒன்றுக்கு கீழ் உள்ள முக்கால்,
   அரை, கால் முதலியன கீழ்க்கணக்கு.
*  மனிதர்களுக்கு மட்டும் நான்கு கண்கள் உண்டு.  வெளியில் இருப்பன புறக்கண்கள் ( ஊனக்கண்கள் ).  இன்னும் இரண்டு கண்கள் அகக்கண்கள் .
   ( ஞானக்கண்கள் ).
--  தினமலர். பக்திமலர். செப்டம்பர் 19, 2013.

Thursday, July 10, 2014

முன்னோர் வழிபாடு முக்கியம் !

  இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று வரையறுக்கிறது.  இம்மூன்று வழிபாடுகளை முறைப்படி செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும்,  எள்ளளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டுமொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும்.
மூன்று முக்கியம்:
    வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழிசெய்பவை மூன்று வழிபாடுகளாகும்.  அவை: குலகுரு வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முலமுன்னோர் வழிபாடு.
தென்புலத்தார்.
     இறந்து போன முன்னோரைப் ' பிதிரர் ' என்பர்.  இவர்கள் வாழுமிடம் பிதிர்லோகம் எனப்படும்.  இதனை வள்ளுவர் ' தென்புலம் ' என்பார்.
தர்ப்பண நாட்கள்:
     எள்ளும், நீரும் முன்னோருக்கு அளித்தல் நீர்க்கடன் தருதல் எனப்படும்.  இதனை தர்ப்பணம் தருதல் என்பர்.
' மண்ணுலகின் தென்திசையில் வாழும் முன்னோர்கள்,  தான் வாழ்ந்த பகுதிக்கு வருகை தரும் நாட்கள் மாளய பட்ச நாட்கலாகும்.
-- தினமலர். பக்திமலர். செப்டம்பர் 19, 2013.  

Wednesday, July 9, 2014

சிறப்பு எழுத்துகள் !

வேர்டில் பயன்படுத்தப்படும் சிறப்பு எழுத்துகள் !
     வேர்டில் டாகுமென்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது.  இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப்பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும்.  இங்கே அவை தரப்படுகின்றன.
     அதனை அமைக்கையில் எழுத்துக்களுக்கு மேலே உள்ள எண்களை அழுத்தக் கூடாது.  நம் லாக் கீயை அழுத்தி அத்துடன் தரப்பட்டுள்ள எண்களுக்கான பேடிலிருந்து எண்களை டைப் செய்ய வேண்டும்.
1.  கத்தி போன்ற இந்த அடையாளம் பெற ................ஆல்ட் + 0134 ...... †
2.  இதையே இரட்டையாகப் பெற .......... ............  ..ஆல்ட் + 0135 ....... ‡
3.  டிரேட் மார்க் அடையாளம் ஏற்படுத்த................. ..ஆல்ட் + 0153........™
4.  பவுண்ட் ஸ்டெர்லிங் அடையாலம் பெற ...............ஆல்ட் + 0163....... . £
5.  ஜப்பானிய கரன்சியான யென் அடையாளம் பெற ..ஆல்ட் + 0165..... .. ¥
6.  காப்பி ரைட் அடையாளம் பெற............................ஆல்ட் + 0169.........©
7.  ரெஜிஸ்டர்ட் ட்ரேட் மார்க் அடையாளம் உண்டாக்க ஆல்ட் + 0174......®
8.  டிகிரி என்பதைத் தெரிவிக்கும் அடையாளம் பெற....ஆல்ட் + 0176...... °
9.  பிளஸ் ஆர் மைனஸ் என்பதைக் காட்ட ................. ஆல்ட் + 0177.......±
10.சூப்பர்ஸ்கிரிப்ட் 2 என்பதைக் காட்ட.....................  ஆல்ட் + 0178 ...... ²
11.சூப்பர்ஸ்கிரிப்ட் 3 என்பதைக் காட்ட.....................  ஆல்ட் + 0179 ...... ³
12. நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த.........  ஆல்ட் + 0183 ......·
13. கால் என்பதைக் குறிக்க ....................................  ஆல்ட் + 0188 ...... ¼
14. அரை என்பதைக் குறிக்க ..................................  ஆல்ட் + 0189 ...... ½
15. முக்கால் என்பதைக் குறிக்க ..............................  ஆல்ட் + 0190 .......¾
      இந்த கால், அரை மற்றும் முக்கால் பின்னங்களை ஒரே கேரக்டரில் அமைக்க அதனை ¼, ½, ¾ என டைப் செய்து ஸ்பேஸ் பார் தட்டினால் அவை ¼ , ½, ¾ எனத் தானாகவே அமைகப்பட்டுவிடும்.
      இன்னும் பல குறியீடுகளை இதேபோல ஏற்படுத்தலாம்.  மேலே தரப்பட்டுள்ளவை நாம் அடிக்கடி பயன்படுத்த முயற்ச்சிக்கும் குறியீடுகளே.  மேலும் பல குறியீடுகளும் அவற்றைத் தரும் கீ தொகுதிகளையும்  http:// home. earthlink. net /-- awinkelried - board_ shortcuts. html  என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.
-- தினமலர் .10 - 9 - 2013 .   

Tuesday, July 8, 2014

முத்துசாமி தீட்சிதர் !

 சீடர்களுக்கு உணவளிக்க முடியாத வறுமையில் வாடிய முத்துசாமி தீட்சிதர், திருவாரூர் கோயிலில் இறைவன் தியாகராஜரைப் பார்த்து ' தியாகராஜம் பஜரே ' கிருதியை மனமுறுகிப் பாடினார்.  அவர் வீடு திரும்பிய போது, ஒரு வண்டி நிறைய உணவு தானியங்கள் இருந்தன.  அவை, தஞ்சை மன்னரின் மந்திரி ஒருவர் திருவாரூர் வந்து தங்க இருந்ததால் அரண்மனையில் இருந்து அனுப்பப்பட்டவை.  மந்திரி பயணம் திடீர் ரத்தானதால், அவறைறை தீட்சிதர் வீட்டுக்கு
--  என்.கணேசன் எழுதிய ' சங்கீத மும்மூர்த்திகள் ' என்ற நூலிலிருந்து.  -- பிரபா.
-- தினமலர் ' புத்தக உலகம் ' 18 - 9 - 2013.  

Monday, July 7, 2014

தியாகராஜர்!

  தியாகராஜர் மன்முறுகித் தொழுது வணங்கும் ராமர், சீதை பெயர்களே அவருடைய பெற்றோருக்கும் இருந்ததுதான் அதிசயம்.  ' சீதம்ம மாயம்ம,  ஸ்ரீராமுடு நாதன்றி ' என்ற பாடலில், சீதம்மா என் தாய், ஸ்ரீராமர் என் தந்தை என்ற பொருள்பட அவர் பாடியிருப்பது,  இரட்டை அர்த்ததில் அழைத்தது.
     சரபொஜி மகாராஜா தன்னைப் போற்றிப்பாட அழைத்த போது போகாத தியாகராஜர்,  ' மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? என்ற அர்த்தம் கொண்ட
' நிதி சால சுகமா ' கீர்த்தனையைப் பாடினார்.  கோபமடைந்த அவரது தமையனார், தியாகராஜர் பூஜித்து வந்த சீதா, ராம, லஷ்மண விக்ரகங்களைத் தூக்கி காவிரியில் எறிந்துவிட்டார்.  அதில் வேதனையுற்ற தியாகராஜர், ' உன்னை எங்கெல்லாம் தேடுவேன்? ' என்ற வேதனை ஒலிக்கும் ' தே நெந்துவெத குதுரா ' கீர்த்தனையைப் பாடினார்.  பின்னர் ராமபிரான் அருளால் அந்த விக்ரகங்களைக் கண்டுபிடித்து மகிழ்ச்சியடைந்தார்.
-- என்.கணேசன் எழுதிய ' சங்கீத மும்மூர்த்திகள் ' என்ற நூலிலிருந்து.  -- பிரபா.
-- தினமலர் ' புத்தக உலகம் ' 18 - 9 - 2013.  

Sunday, July 6, 2014

நாமம் !

நாமம் என்று பெயர் வந்தது ஏன்?
     நாம் ஒருவருக்கொருவர் கலாச்சாரத்தை அனுசரித்து திருநீற்றையோ திருமண்னையோ இடவேண்டும்.  திருமண் இடுவதற்கு ' நாமம் போடுவது' என்கிறார்கள்.
    மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிகம, வாமன, ஸ்ரீதர, ஹிருஷிகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம்.
    இந்த துவாதச நாமங்களைச் சொல்லி 12 இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள்.  இப்படி பகவத் நாமத்தைச் சொல்லி போட்டுக் கொள்வதாலேயே ' நாமம் போடுவது ' என்று பெயர் வந்துவிட்டது.
-- ( காஞ்சி பெரியவர் உபன்யாசத்திலிருந்து... )  அனிதா.
--குமுதம் பக்தி ஸ்பெஷல். செப்டம்பர்  16 -- 30 , 2013.  

Saturday, July 5, 2014

கிருஷ்ணர் வழிபட்ட துர்க்கை !

 ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுயம்புவாக தோன்றிய தேவி, கனகதுர்க்கா என்ற திருநாமத்துடன் அருள் புரிகிறாள்.  கிருஷ்ணர், பரசுராமர், பரத்வாஜர், அகத்தியர், பாண்டவர்கள், ஆதிசங்கரர் என்று பலரும் இவளை வழிபடிருக்கிறார்கள்.  இந்தக் கோயிலின் நான்கு பக்கமும் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரங்களைக் காணலாம்.
-- எஸ்.விஜயசீனிவாசன், திருச்சி - 13.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். செப்டம்பர்  16 -- 30 , 2013. 

Friday, July 4, 2014

சிரஞ்சீவிகள் ஏழு பேர் !

  அஸ்வத்தாமன், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமான், விபீஷணன், மாபலி சக்ரவர்த்தி, வியாசர்  --  இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள்.  இவர்கள் எழுவரும் சிவாலயங்களையும், சிவனையும் பாதுகாப்பவர்கள்.
     நாம் சிவாலய தரிசனம் முடித்ததும், ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம்.  அப்போது அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம்.  அதனால், கோயீலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!
-- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். செப்டம்பர்  16 -- 30 , 2013. 

Thursday, July 3, 2014

நவராத்திரி மாலைகள்!

  நவராத்திரி ஒன்பது நாட்களும் கடவுளர்க்கு அணிவிக்க வேண்டிய .மாலைகள் :
முதல் நாள்  --  மல்லிகை,  இரண்டாம் நாள்  --  முல்லை,  முன்றாம் நாள்  --  சம்பங்கி,  நான்காம் நாள்  --  ஜாதிப்பூ,  ஐந்தாம் நாள்  --  பாரிஜாதம்
( வளமல்லி),,  ஆறாம் நாள்  --  செம்பருத்தி,  ஏழாம் நாள்  --  தாழம்பூ,  எட்டாம் நாள்  --  ரோஜாப்பூ ,  ஒன்பதாம் நாள்  --  தாமரை.
-- ஜி.கே.எஸ். மூர்த்தி,  கோபிசெட்டிபாளையம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். செப்டம்பர்  16 -- 30 , 2013.   

Wednesday, July 2, 2014

இரவிலும் ஓடலாம் !

' இரவில் நடத்தும் பயிற்சி ஓட்டம் எந்தவிதத்திலும் - தூக்கத்தை பாதிப்பதில்லை.  அதோடு தைராப்டோபின் மற்றும் கார்டிசால் ஆகிய ஹார்மோங்களின் சுரப்பு இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கிறது.  இது உடலுக்கு மிக நல்லது.  மேலும், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் நடக்கும் இந்தப் பயிற்சியால் எலும்பு மூட்டுகளும், தசைகளும் நெகிழ் தன்மையை அதிகம் பெறும் எங்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
--  தினமலர். பெண்கள்மலர். . 25-5-2013.  

Tuesday, July 1, 2014

தவளையும், மனிதனும்!

 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு தவளையை போட்டு அடுப்பில் வைத்தார்கள்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது.  தவளை அந்தச் சூட்டை   தாங்கும் வகையில் தன் உடலைக் கொண்டது.  ஆனால், ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் அதனால், தாங்கமுடியவில்லை.
     வெளியே குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என்று முயற்சி செய்தது.  ஆனால், அதனால் குதிக்க முடியவில்லை.  காரணம், தண்ணீர் சூட்டுக்கு ஏற்ப தன் உடலை மாற்றிக் கொள்வதிலேயே தன்னுடைய சக்தி எல்லாவற்றையும் வீணாக்கி விட்டது.  சக்தி இல்லாமல் கொதிக்கும் நீரில் வெந்து இறந்துவிட்டது தவளை.
     தவளை இறந்ததற்கு யார் காரணம்?  கொதிக்கும் தண்ணீரா இல்லை.  அதனுடைய அதிகமான அனுசரித்துப் போகும் குணம்தான்.  தண்ணீரின் சூடு கொஞ்சம் அதிகரிக்கும் போது, தன் சக்தி எல்லாவற்றையும் திரட்டி வெளியே குதிக்க முயன்றிருந்தால் தவளை உயிருடன் இருந்திருக்கும்.  அதுபோலத்தான் மனிதனும் குடும்பத்திற்காக தன்னுடைய வேலைக்காக மனிதன் நிறைய அனுசரித்து போகிறான்.  ஒரு கட்டத்துக்கு மேல் அனுசரிக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்கிறான்.  எதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொள்ள வேண்டும்.  அந்த எல்லையை மீறும் போது வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம்.
-- தினமலர். பெண்கள்மலர். தலையங்கம் .    தோழமையுடன்  ஆசிரியர் ஸ்ரீ. 25-5-2013.