Monday, June 30, 2014

எந்த இலையில் சாப்பிடலாம்?

 வாழை,  புன்னை,  புரசு,  குருக்கத்தி,  மா,  தென்னை,  பன்னீர் ஆகியவற்றின் இலைகளில் உண்ணலாம்.
எந்த இலையில் சாப்பிடக்கூடாது?
     அரசு,  தாமரை,  பாதிரி,  தாழை,  அத்தி,  ஆலம்,  ஆமணக்கு,  நாவல்,  முள்முருங்கை,  எருக்கு,  இத்தி ஆகியவற்றின் இலைகளில் உண்ணக்கூடாது.
எந்தெந்த மாதங்களில் வீடு கட்டலாம்,  கிரகப்பிரவேசம் செய்யலாம்?
     சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை எனும் ஐந்து மாதங்களில் வீடு கட்டலாம்;  கிரகப்பிரவேசம் செய்யலாம்.
வீடு கட்டவோ, கிரகப்பிரவேசம் செய்யவோ கூடாத மாதங்களும்,  அதற்கான காரணமும்:
     சிவபெருமானை திரிபுர சங்காரம் செய்த மாதம் - ஆனி.  சீதாதேவி சிறைப்பட்ட மாதம் - ஆடி.  இரணிய சங்காரம் நடந்த மாதம் - புரட்டாசி.
பாரதப்போர் நடந்த மாதம் - மார்கழி.  சிவபெருமான் ஆலால விடமுண்டது - மாசி.  மன்மதனை சிவபெருமான் சங்காரம் செய்தது - பங்குனி.  மேலே சொன்ன ஏழு மாதங்களிலும் வீடு கட்டவோ, கிரகப்பிரவேசம் செய்யவோ கூடாது.
     அறப்பளீசுர சதகம் என்ற நூல் சொல்லும் சாஸ்திர கருத்துகள் இவை.
-- ஸாந்த்ரானந்தா.
-- தினமலர். வாரமலர். செப்டம்பர் 15, 2013.  

No comments: