Monday, June 16, 2014

நோட்டா என்ற தோட்டா.

   முன்பு சமூக ஆர்வலர்கள் ' 49 ஓ ' என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுவந்த நிராகரிக்கும் உரிமைக்கு இப்போது நீதிமன்ற உத்தரவின்படி புதுப் பெயர்
 ' நோட்டா '.  மின்னனு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியல் வரிசையில் கடைசியாக ' மேற்கண்ட யாரும் இல்லை '  ( நன் ஆஃப் தி அபவ் ) என்ற வரியும் அதற்கான பொத்தானும் இடம்பெறப்கோகிறது.  அதன் சுருக்கமே ' நோட்டா.'  அதாவது, சுருக்கமாகச் சொன்னால் என்னிடம் நோட்டை  நீட்டி,  என் ஓட்டை வாங்க முயற்சிக்கும் வேட்பாளர்களுக்கெல்லாம் நான் ' நோட்டா ' போடலாம்.  ஆக ' நோட்டா ' மக்கள் கையில் கிட்டியிருகும் தோட்டா.
     அ.கி.வேங்கடசிப்பிரமணியன் எனக்கு ' 49 ஓ ' வை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகளுக்கு முன் இதற்காகப் பிரச்சாரத்தில் நான் ஈடுபடத் தொடங்கியபோது இதெல்லாம் என் வாழ்நாளில் நடக்குமா என்ற ஏக்கத்துடனேயேதான் ஈடுபட வேண்டியிருந்தது.  ஆனால்,  இதோ நடந்துவிட்டது.  கூடவே, எல்லாமே 10 ஆண்டுகளில் நடந்துவிடும் என்ற நம்பிக்கையும் இப்போது வந்திருக்கிறது!
-- ஞானி, மூத்த பத்திரிகையாளர்.  தொடர்புக்கு : gnanisankaran@ gmail.com.
--   ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 1, 2013. 

No comments: