Friday, May 2, 2014

டைப்ரைட்டர்.

Vடைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!
லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு !
     ஹென்றி மில் 1714ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார்.  அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது.
நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம்.  மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று ... இன்று நம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களூக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.
     இன்ஸ்டிடியூடுகளில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்லமுடியும்.  பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இப்போதே உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை.  ஏற்கனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள்.  இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ?
     டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!
     அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்கள் பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா.  இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்கள் வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புடின் !
-- குள.சண்முகசுந்தரம். பூச்செண்டு.
--   ' தி இந்து 'நாளிதழ்.வியாழன். அக்டோபர் 10, 2013.  

No comments: