Monday, April 21, 2014

'நோட்டா ஓட்டு முறை'

  ( சிறப்பு )
இனி அழுத்திச் சொல்லாம் 'நீங்கள் வேண்டாம் என்று !
    " இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருக்கும் என் வாக்கு இல்லை என்று சொல்ல வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது.  இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நல்ல நிர்வாகத்தின் திறவுகோலாக இது பிருக்கும்.  உலகின் 13 நாடுகளில் இந்த முறை உள்ளது.  நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில்கூட யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்ற ஓட்டுரிமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும்போது வாக்காளர்களுக்கும் அந்த உரிமையை வழங்க வேண்டும்!" --
49ஓ என்று பரவலாக அறியப்படும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை அதிகாரபூர்வமாக அமல்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
      அமெரிக்கா தொடங்கி நமது அண்டை நாடான பங்களாதேஷ் வரை 13 நாடுகளில், 'யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' என்பதைப் பதிவு செய்யும் நடைமூறை உள்ளது.  வாக்களிக்கும் உரிமை எப்படி ரகசியமாக உள்ளதோ, அதேபோல வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற நடைமுறையும் ரகசியமாக இருக்கும்.
அந்த 24,591 பேர்...
     கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் முழுக்க 24,501 பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற 49 ஓ - படிவத்தைப் பயன்படுத்த, அவர்களில் சிலரை க்யூ பிராஞ்ச் போலீசார் விசாரித்து இருக்கிறார்கள்.  தேர்தல் ஆணையம், 'வாக்களிக்க விரும்பாதோர் விவரத்தை எப்படி போலீசிடம் க்கொடுக்கலாம்' என்று சத்தியச்சந்திரன் என்கிற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்தார்.  அதை விசாரித்த உயர் நீதிமனறம், 49 ஓ-வைப் பயன்படுத்தியவர்களை, க்யூ பிரிவு போலீசார் விசாரிக்கத் தடை விதித்தது.  தமிழகத்தில் 49-ஓ பரவலாக வெற்றி அளிக்காமல் போனதன் பின்னணி இதுதான்!
-- டி.அருள் எழிலன்.
-- ஆனந்த விகடன்.  9-10-2013. 

No comments: