Sunday, March 9, 2014

அச்சச்சோ தப்பு...

அச்சச்சோ தப்பு. பண்ணிட்டனே !  மனிதர்களைப் போலவே சிந்திக்கும் எலிகள்.
      வாஷிங்டன் :  ஏதேனும் ஒரு செயல் தவறாக நடந்து விட்டால் அது குறித்து மனிதர்கள் சிந்திக்கும் விதமும்,  எலிகள் சிந்திக்கும் விதமும் ஒரேமாதிரியாக இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
     அத்தவறுகளுக்கு மாற்றாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்வது குறித்து மனிதர்களின் மூளைகளும்,  எலிகளின் மூளைகளும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கின்றன.
     மோட்டார் கார்டெக்ஸ் எனப்படும் மூளையின் இயக்க மேற்பட்டைப் பகுதியில் இச்சயல்பாடுகள் நிகழ்கின்றன.  இந்த  ஆய்வில் மனிதர்களும், எலிகளூம் தவறுகளுக்காகத் தகவமைக்கும்போது எப்படி மிக எளிதாக நேரத்தைக் கணக்கிட்டுச் செயல்படுகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.  மனிதர்களின் தகவமைப்புக் கட்டுப்பாட்டுத் திறன் குறித்து மேலும் அறிவதற்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்லனர்.
     இந்த ஆய்வுகள் ஓசியு, மன அழுத்தம், ஏடிஎச்டி, முடக்குவாதம் போன்ற மூளை சார்ந்த நோய்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--    பி.டி.ஐ.  சர்வதேசம்.
--    ' தி இந்து ' .நாளிதழ் . செவ்வாய்  அக்டோபர் 22  ,2013.  

No comments: