Sunday, March 23, 2014

'ஓகே'

'ஓகே'வுக்கு இன்று 175வது வயது!
     உலகில் எல்லோராலும் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை என்று உண்டென்றால் அது 'ஓகே'தான்.  நமது ஒப்புதலை, எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை மிகச் சுருக்கமாக தெரிவிக்க 'ஓகே' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம்.
     தாங்கள் அடைந்த பயனை மிகச் சுருக்கமாக தெரிவிக்கும் வழியாக அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஓகே என்ற வார்த்தை.
     மது அருந்தியபின் ஏற்படும் உனர்வை வெளிப்படுத்தும் 'ஓக்...ஆயே' என்ற சொல்லாடல், கிரேக்க மொழியில் இது நல்லது என்பதை தெரிவிக்க பயன்படும் 'ஓலா காலா' என்ற வார்த்தைகளில் இருந்து ஓகே என்ற வார்த்தை தருவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி உறுதியாக மறுக்கிறது.
     ஒருவரின் ஒப்புதலை, சம்மதத்தை வெளிப்படுத்தும் அர்த்தத்தில் பயன்படுத்தும் ஓகே வார்த்தை 'ஆல் கரெக்ட்' என்ற அர்த்தம் கொடுக்கும் 'ஓர்ல் கொரெக்ட்' என்ற பேச்சுவழக்கு வார்த்தையில் இருந்து உருவாகியிருக்கல்லாம் என்கிறார் அமெரிக்காவின் பேராசிரியர், 'ஓகே' என்ற வார்த்தையின் வரலாறு மற்றும் அர்த்தம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவருமான ஆலென்மெட்கார்ப்.
     1838 மார்ச் 23ம் தேதியில் வெளியான கட்டுரையில் தான் 'ஓகே' என்ற வார்த்தை முதன்முதலில் அச்சிடப்பட்டிருந்தது என்பதை கொலம்பியா பேராசிரியர், ஆலன்வால்கா உறுதி செய்துள்ளார்.
     குழந்தையின் 'ம்மா...' என்ற வார்த்தைக்கு அடுத்த படியாகாதிகம் பயன்படுத்தும் வார்த்தையான 'ஓகே' முதன்முதலில் அச்சானதன் 175வது ஆண்டு தினம் இன்று என்பது மொழியியல் மற்றும் வார்த்தை ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
--- தினமலர் நாளிதழ்.  23-3-2014. 

No comments: