Tuesday, March 4, 2014

' ஞாங் ஞாங் நவ்யு '

  நாய்களுக்கான பிரத்யேக பீர் ஐட்டங்களை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சில ஆண்டுகளாகத் தயாரித்து வருகின்றன.  பேருதான் சரக்கு, அதில் ஒப்புக்குக்கூட ஆல்கஹால் கிடையாது.  நாய்கள் சப்புக்கொட்டி சாப்பிடட்டுமே என்று இறைச்சி வாசனையை மட்டும் சேர்ப்பார்கள்.
     ஜப்பானில் செல்லப் பிராணிகளூக்கான ஆகாரங்கள் தயாரிக்கும் பி அண்ட் ஹெச் லைப்ஸ் என்ற நிறுவனம் தற்போது பூனைகளுக்கான ஒயினைத் தயாரித்திருக்கிறது.  ' ஞாங் ஞாங் நவ்யு ' என்று பெயர்.  ஜப்பான் மொழியில் மியாவ் மியாவ் என்று அர்த்தமாம்.  நாய்  பீர் போலவே இதிலும் ஆல்கஹால் கிடையவே கிடையாது. நொதிக்காகத் திராட்சை ஜூஸ் மட்டும் பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.  முதல் கட்டமாக ஆயிரம் பாட்டில்கள் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள்.  பூனைகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து எலி வாசனை, பால் வாசனை, மீன் வாசனை என மேலும் பல நறுமணங்களில் வரக்கூடும்.  இப்போதைக்கு பாட்டில் விலை 245 ரூபாய் !
--   ' தி இந்து ' . நாளிதழ் . சனி, அக்டோபர் 19 ,2013.   

No comments: