Tuesday, March 25, 2014

தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன்.

சில நொடிகளில் தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன்.
     சிலிக்கானில் தயாரிக்கப்பட்ட அதிநவீன சூப்பர் மிந்தேக்கி ( கெபாசிட்டர் )  மூலம், சில நொடிகளில் தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன்
.சாத்தியமாகியுள்ளது
     நுண் மின்னணுச்சுற்றுகளால், இந்த சிலிக்கான் மிந்தேக்கி சக்தியூட்டப்படுகிறது.  இந்த மிந்தேக்கி சோலார் செல்களைப் பயன்படுத்தி ஒரு சில நொடிகளூக்குள் தானாகவே ரீசார்ஜ் ஆகிக்கொள்ளும்.
     மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களில் இது பொருத்தப்படும்.  கட்டுப்படியாகக் கூடிய விலையில் விரைவிலேயே இது சந்தைக்கு வரவுள்ளது.
     சிலிக்கானைக் கொண்டு மின்நோக்கியை உருவாக்க முடியும் என நிபுணர்களிடம் நீங்கள் கூறினால் அது கிறுக்குத்தனாமான யோசனை என்று அவர்கள் கூறுவர்.  ஆனால், நாங்கள் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறோம்.  மின்கலங்களில் வேதிமாற்றங்களின் அடிப்படையில் மின்சக்தி தேக்கப்படுகிறது.  இதற்கு மாற்றாக, நுண்துளைப் பொருள்களில் ( போரஸ் ) மேற்பரப்பில் அயனிச் சேகரத்தின் மூலம் மின்சக்தி சேமிக்கப்படுகிறது.
     இதன் விளைவாக சில நிமிடங்களில் மின்சக்தியைச் சேமிக்கவோ,  செலவிடவோ இயலுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- -' தி இந்து '  நாளிதழ் .. சனி, அக்டோபர் 26, 2013.   

No comments: