Saturday, February 22, 2014

ஐசா வால் நட்சத்திரம்.

  கடந்த 2012-ம் ஆண்டு விடாலி வெஸ்கி,  ஆர்ட்யோம் என்ற 2 நிபுணர்கள் வான் வெளியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு ராட்சத வால் நட்சத்திரத்தின் நகர்வுகளை கண்டுபிடித்தனர்.  இதற்கு அறிவியல் ரீதியாக ' சி/ 2012 எஸ் 1 ' என பெயர் வைத்தனர்.  இந்த நட்சத்திரமே தற்போது ஐசான் வால்நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
     வால் நட்சத்திரம் என்று கூறுவது, உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல.  சில கி.மீ.குறுக்களவு கொண்ட பனி மற்றும் தூசுகலந்த ஒரு தொகுப்பு.  வால் நட்சத்திரத்தில் நீர், அமோனியா, மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு, உறைபனி மற்றும் கட்டுக்கடங்காத தூசி மற்றும் கடினமற்ற பாறைப்பொருட்களே அடங்கி இருக்கின்றன.  சூரியக் குடும்பத்தில் நெப்டியூன் கோளையும் தாண்டி கியூபியர் பட்டை என்ற பகுதி உள்ளது.  இதையும் தாண்டி ஊர்ட் மேகம் என்ற ஒரு அண்ட வெளி உள்ளது.
     இந்த ஊர்ட் மேகம் பகுதிக்கும் கியூபியர் பட்டை என அழைக்கப்படும் வான்வெளி பகுதிக்களூக்கு இடையே உள்ள பகுதியில்தான் கோடிக்கனக்கான வால் நட்சத்திரங்களின் தொகுப்பு மற்றும் நகர்வுகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இவை சூரிய குடும்பம் உருவான போதே தோன்றியுள்ளதாக அறிவியலார்கள் தெரிவிக்கின்றனர்.
-- தினமலர்.17-11-2013.    

No comments: