Friday, January 3, 2014

' பஞ்சேந்திரியம் '

  ' பஞ்சேந்திரியமும் பலத்துத் தெளிவையுரும் '  என்கிறது சித்த மருத்துவம்.  எள்ளின் நெய், ஆமணக்கு நெய், வேம்பு நெய், பசு நெய் இத்தனையும் அந்த நாளில் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்பட்ட எண்ணெய்.
       புனாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், கைக்குழந்தைகளுக்கு தைலம் தேய்த்து மசாஜ் செய்வதால், எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதை உறுதி செய்கிறது என ' Indian Paedatrics ' எனும் மருத்துவ பத்திரிகை தெரிவிக்கிறது.  உடல் எடை, சரும வனப்பு, குழந்தை நன்கு தூங்கி எழும் தன்மை ஆகிய பல நலக்கூறுகளை எண்ணெய் மசாஜ் குளியல் அதிகரிப்பதை சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் உறுதிபடுத்தியுள்ளன.
    ' தினமும் கொஞ்சமே கொஞ்சம் எண்ணெயை தலையில் தேய்த்துக் குளிக்க குளிக்க, தோல் வறட்சி நீங்கும்; உடல் வலி சோம்பல் தீரும்; அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும் சைனஸ் தொல்லை குறைவதோடு, பல் வியாதிகளைக்கூட கட்டுப்படுத்தும் என்கிறது ' பதார்த்த குண சிந்தாமணி ' எனும் மருத்துவ நூல்.
-- ஆறாம் திணை தொடரில்,  மருத்துவர் கு. சிவராமன்.
-- ஆனந்த விகடன். 30 - 10 - 2013.  

No comments: