Monday, January 20, 2014

தெரியுமா உங்களூக்கு !

*  வட இந்தியாவில்,  தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இடையிலான நாட்கள்,  பில்லி சூனியங்கள் செய்ய உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.  இந்த நாட்களில் பில்லி சூனியம் செய்பவர்களும்,  இராஜயோக பூஜை செய்பவர்களும் படுபிஸியாகி விடுகின்றனர்.
*  தீபாவளி நாளிலும் பட்டாசு இல்லை .  வவ்வால்களை நேசிக்கும் அதிசய கிராமம்.  வெடிக்கப்படும் பட்டாசுகளால் வவ்வால்கள் அச்சமடையும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் உள்ள அரசமரம் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்விடமாக உள்ளது.  இந்த வவ்வால்களை கிராம மக்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்துவருவதால், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
*  பிரயண் என்ற பாரசீகச் சொல்லுக்கு வறுத்துச் சமைத்தது என்று அர்த்தம்.  இதுவே பிரியாணியின் மூலச் சொல்.  அது பாரசீகச் சொல் என்பதால், இந்த உணவு பெர்சியாவில் ( இன்றைய ஈரானில் ) தோன்றியிருக்க வேண்டும்.  முகலாயர் காலத்தில் அங்கிருந்து ஆப்கானிஸ்தான வழியாக வட இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
*  உலகிலேயே தொந்தி பெருத்த ஆண்கள் அதிகம் உள்ள நாடாகிவிட்டது மெக்ஸிகோ.  அமெரிக்காவை அவர்கள் மிஞ்சிவிட்டனர்.  மெக்ஸிகோவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 32.8% பேர் தொப்பையர்கள்.  எப்போதும் முன்னனியில் இருக்கும் அமெரிக்கரின் இந்த எண்ணிக்கை 31.8% ஆக உள்ளது.
--  ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி,சனி  நவம்பர் 1,2 ,2013.    

No comments: