Monday, December 30, 2013

இனியெல்லாம் ருசியே!

*  ஹோட்டலில் செய்யும் கிரேவி போன்று வீட்டிலும் ருசியாக வருவதர்கு என்ன செய்ய வேண்டும்?
    --  கிரேவியை அடுப்பிலிருந்து எடுப்பதற்கு முன்பு சிறிது முந்திரியுடன் தேங்காய்ப் பால் சேர்த்து அரைத்து கிரேவியில் விட்டு கொதிக்கவிட்டு எடுக்கவும்.  
*  தோசை மெல்லியதாகவும், மொறுமொறுவென்றும் வர என்ன செய்ய வேண்டும்?
   --  அரிசி, பருப்பு ஊறவைக்கும் போதே அதனுடன் ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசியை ஊறவைத்து அரைத்தால்... மொறுமொறுவென்று வரும்.
*  திடீர் சட்னி செய்வது எப்படி?
   --  வீட்டில் உள்ள காய்கறிகளை சிறிது எடுத்து வதக்கி, அதனுடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சிறிது புளி, உப்பு சேர்த்து அரைத்தால்... திடீர் சட்னி
       ரெடி.
*  வெளியில் எடுத்துச் செல்லும் தயிர் சாதம் பிளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
   --  அரிசியை வேக வைக்கும்போது ஒரு கப் அரிசிக்கு 3 கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து, நன்றாகக் கலந்து ஆறியவுடன் ஒரு டீஸ்பூன்
       தயிர் சேர்த்து கலந்தால் ... நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.
*   ஜவ்வரிசி வற்றல் போடும்போது, ஜவ்வரிசி வேக அதிக நேரம் எடுக்கிறதே... அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
   --  ஜவ்வரிசி வங்கும்போது மாவு ஜவ்வரிசி என கேட்டு வாங்க வேண்டும்.  இரவே ஜவ்வரிசியை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை தண்ணீர்
       கொதித்ததும் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டுக் கிளரினால்... சீக்கிரமாக வெந்துவிடும்.
-- சாந்தி விஜயகிருஷ்ணன், ( சந்தேகங்களும்... தீர்வுகளும் ).
-- அவள் விகடன்.  21-05-2013  
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால். 

No comments: