Wednesday, December 18, 2013

நவீன சுவிட்ச்.

தொடாமலே மின்சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்ச்.
     கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்ச்சை கண்டுபிடித்துள்ளார், பிராமத்து பொறியாலர் ஹரிராம்சந்தர்.  இவர் வடிவமைத்துள்ள இந்த டச்லெஸ் சுவிட்ச், இன்பிராரெட் ( அகச்சிவப்பு கதிர் ) தொழில்னுட்பத்தில் இயங்குகிறது.
     தண்டவாளத்தில் விரிசலை கண்டுபிடிக்கும் நவீன கருவியை இவர் உருவாக்கினார்.  தண்டவாளத்தில் எங்கேயாவது விரிசல் இருந்தால் ரயிலின் டிரைவருக்கும்,  தகவல் மையத்துக்கும் எச்சரிக்கை அனுப்பக் கூடியது என்பது இந்த நவீன சாதனை.
     ஈரக்கையோடு மின்விளக்கு, மின்விசிறி, மிக்சி போன்ற மின்சாதனங்களுக்கான சுவிட்ச்களை போடும்போது சில நேரம் ஷாக் அடிக்கலாம்.  அப்போது அந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியே  கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்ச்சை கண்டுபிடித்தது என்கிறார்   ஹரிராம்சந்தர்.  இந்த சுவிட்சின் மேல்புறம் 2 செ.மீ. அல்லது 5 செ.மீ. தூரத்தில் இரு விரல்களை காட்டினால் போதும், சுவிட்ச் ஆன் ஆகிவிடும்.
     சுவிட்சில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டரில் இருந்து வெளிவரும் அகச்சிவப்பு கதிர்கள் விரல் பகுதி வரை வந்து பின்னர் கீழே திரும்பும்.  அதை அங்கு உள்ள ரிசீவர் பெற்றுக்கொண்டு சுவிட்சை இயக்கிவிடும்.  பயோ-மெட்ரிக் போன்று முங்கூட்டியே விரல்பதிவை பதிவு செய்யத் தேவையில்லை.  யாருடைய விரல்களைக் காட்டினாலும் சுவிட்ஸ் இயங்கும்.
-- ஜெ.கு. லிஸ்பன் குமார்.  மாநிலம்.
--  ' தி இந்து ' நாளிதழ்.  சனி, நவம்பர் 16, 2013. 

No comments: