Saturday, April 28, 2012

குப்புறப் படுத்தால்...


தூக்கம் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவசியமானது . மனிதன் ஒரு குறிப்பிட்ட நேரம் தூங்கியாக வேண்டும் . அப்போதுதான் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் .
தூங்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தூங்குவார்கள் . மல்லாந்து படுப்பார்கள் சிலர் . ஒரு பக்கம் திரும்பிப் படுப்பார்கள் இன்னும் சிலர் . சிலருக்கு குப்புறப் படுத்தால்தான் தூக்கம் வரும் . குப்புறப் படுத்துத் தூங்குவதால் ஆபத்தாம் .
குப்புறப்படுத்து பல மணி நேரம் தூங்குவதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது . சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரகக் கற்கள் உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது .
குடலைக் குறைக்கலாமா ...?
உடல் பருமன், கொழுப்புக்கு காரணம் அதிகம் சாப்பிடுவது. அதற்கு காரணம் அடங்காத பசி . அப்படிப்பட்ட ' நோயாளி'க்கு பசியைக் குறைக்க ஆலோசனை சொல்வது உண்டு . அதுபற்றி குடல் நோய் சிகிச்சை நிபுண்ர் கூறியதாவது :-
அதிக குண்டாக இருப்பவர்கள் பசியை குறைக்க பெருங்குடலின் நீளத்தை குறைப்பது உண்டு . அதன் மூலம் அடிக்கடி பசி எடுப்பதும், சாப்பிடுவதும் குறையும் . ஆனால், பெருங்குடலின் நீளத்தைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல . அப்படிச் செய்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமலேயே போய்விடும் . அதனால் உடல் பலவீனம், சோர்வு, தளர்ச்சி ஏற்படலாம் . மேலும் அது விலை உயர்ந்த சிகிச்சை . அதனால் சுயமாக வாயை கட்டுவதும், உடற்பயிற்சியும் போதும் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

No comments: